போகர் சப்தகாண்டம் 136 - 140 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
136. மேலானவிந்துவின்மேல் நாதமொன்று மிக்கவதின்மேல்சத்தி யொன்றுகேளு
மாலானவிதின்மேலே சிவன்தானொன்று உற்றசிவனாரென்னில் வாராட்டியந்தான்
பாலான வதின்மேலே பரைதானொன்று பாருமந்தயெட்டல்லோ புரியஷ்டந்தான்
மாலானவிதினெட்டால் பிறப்பிறப்புமாச்சு வாரான புரியஷ்டமார்க்கந்தானே

விளக்கவுரை :


137. மார்க்கந்தான் புரியஷ்டங் கூத்தேகூத்து கோடிஜென்மமெடுத்து ஆடும்
ஏர்க்கவே புரியஷ்டத்தெழுவகைதோற்றம் எங்குமதுவிரிந்தாடப் பிரபஞ்சமாச்சு
பார்க்கத்தான் புரியஷ்ட பகவான்கூத்து பண்பாகவிதையறிந்து கூர்ந்துபாரு
தீர்க்கந்தான் பார்த்தறிந்த பெரியோர்தாமும் திறந்தோமே தன்னியதில் மேல்நிற்பாரே

விளக்கவுரை :

[ads-post]

138. நிற்பார்கள் பரைமேலே முப்பாழ்கேளு நீங்கியே கடுவெளிப்பாழாம துக்குள்ளே
ஒப்பார்க யொளிபாழாம் நிற்கும்பாரு உமாந்துமேலதைத்தாண்டி யுரைக்கக்கேளு
விப்பான வெளியொளிப்பாழ் விரைந்துபாரு மிதுமூன்றுவரை தாண்டவன் மனத்தாய்நிற்பாள்
கர்ப்பான மொழியுடையாள் தமரின்வாசல் தனிப்பரந்தான் போதமது வொன்றாம்பாரே

விளக்கவுரை :


139. போதமது தானென்று மதற்கேபாரு பேரானவகண்டமென்ற விளக்கேபேரு
மேதமென்ற தவன் கடுக்கவ்வனவேப் பாதம்சேர்ந்ததுகில் தமக்குள்ளே சேரலாகும்
ஆகமதுகண்டவர் கண்டவீதி ஆதியில்லை அந்தமில்லை யறியப்பாகும்
சேதமது போதமது மௌனமாகும் சேசரித மனக்கரலா சேரொட்டாதே

விளக்கவுரை :


மறுபிறவியில்லாமல்

140. சேராதுயென்று சொல்லி சிவயோகிதானும் நிலைத்து உன்னிப்பரையளவு யோடினாலுங்
கானானபிரவிவந்து யெய்தும்யெய்தும் கருவில் பிறந்தாலும் சிவயோகியாவான்
பாரான பிரையளவும் புரியஷ்டமாச்சு பண்பானவரைகடந்து வெளிப்பாழுற்றால்
ஆறான வெளிப்பாழை அண்டமென்று அர்ச்சித்துப் பார்த்தாக்கால் பிறவியொட்டாதே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 131 - 135 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
131. எட்டாதக் கருமண்டல மூட்டிக்கவிழ்ந்து இதமாகக் கைகண்டயோகங்காணும் 
கட்டாகக் கபாலத்தைக்கடந்து மெய்யென்று கதிர்போலே பகையோடி துவாதசாந்தத்தை
உட்டாக உண்டிருந்து அச்சபைதான்மறித்து உயரமாமுகடேத்த கபாலங்கல்லாம்
இட்டாத கருங்கனலே மிகவுமுண்டு எல்லாந்தான் தெரிசனமே யேறுங்காணே

விளக்கவுரை :


132. ஏறுமேலென்றீர்கண் மூக்கலேதாச்சு ஏறியேவாசிகொண்டு மனந்தோடுணு
ஊறுமங்கென்றுன்னினாலுகும்பாழில் ஒளியோடு பூரணந்தான் கோடிபானு
தேறிதீபச்சுடரில் திக்கெல்லாங்காணும் தெவிட்டாதமாலையாகி சிறக்கும்நாலுவீறு
யுரைத்திடு யோகத்தாலேமூட்டி உருக்கடந்த பொருள்தானும் மூலமாமே

விளக்கவுரை :

[ads-post]

133. மூலந்தானாலான பதவெளியுமாச்சுபாரு நலமானவானந்தான் போகமாச்சே
பானந்தான்பாரு மதிநல்லூராகும் பாவுமுப்பாழ்கடந்துமே பாருந் தீயைத்தானந்தா
பார்த்திடவே பரமவெளியாச்சு சாதித்து ஏரிடவே வெறும்பொய்யாச்சு
தேனந்தான் தோத்தரித்து சுருதிமனோன்மணியோ சுக்குற்றபூரணத்தை கண்டிட்டேனே

விளக்கவுரை :


புரியஷ்டம்

134. கண்டிட்ட சழிமுனையில் மன்னமோட்டி கண்மூடிவிழிரெண்டும் நினைவில்நோக்க
பண்டிட்ட நினைகாரம் பளிச்சென்று தோனும் பராபரமாமணித்தாயும் பரியொன்றீய்ந்தாள்
அண்டிடு ஏறுனால் அகண்டவெளிகாட்டும் ஆண்மையாம் போதத்தி லடுத்திவிக்கும்
குண்டிட்டு பரத்தினடி தன்னிற்காட்டுஞ் சுருதி மனோன்மணித்தாயும் வாவென்பாளே

விளக்கவுரை :


135. வாவென்ற சடமெல்லாம் பிரமன்கூறு மறைந்துநின்ற சத்தான மாலின்கூறு
போவெனற திதற்குள்ளே புரியஷ்டந்தான் பேரானசூட்சமென்ற தேகங்கேளு
சேவென்ற நரசிரமாம் சிவன்தானொன்று சேர்ந்ததின் மேலாதாரம் மஹேஸ்பரந்தானொன்று
தாவென்ற யகாரமாம் சதாசிவன்தானென்று சாந்துநின்ற விந்துவதின் மேலுமாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 126 - 130 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
126. தாமென்ற தந்தைதாயை பூசிப்போர்கள் தமையடைந்த பேர்களையே தற்காப்போர்கள்
ஏமென்ற எல்லாவுயிருந் தம்முயிர்போலெண்ணி யிறங்குவோர் வரம்புதப்பி யிகழ்ந்திடாதார்
வாமென்ற வாசியுடன் வாதித்தாடு மகத்தோர்கள் வாமத்தின் வழியில்நிற்பார்
ஆமென்ற அப்புனிடம் வுப்புபோல வடைந்தோர்க்கு மடங்கலும் போதிக்கலாமே

விளக்கவுரை :


127. போதித்து போகத்தின்பொருளைகாட்டி பேரானஞானத்தின் பொருளைசொல்லு
ஆசித்துவமர்ந்தாக்கா லதில்பிழைப்பான் அல்லாவிட்டால் பேய்வனதிஷ்டயீனன்
சோதித்து நால்வகைக்கும் கர்ப்பஞ்சூட்டி துடியான வாதத்தின் சூட்சஞ்சொல்லு
காதித்து கைகாட்டு அருளொடுபொருளும் கைம்முறையாய் குளிகையொன்று சூட்டிநீட்டே

விளக்கவுரை :

[ads-post]

128. நீட்டுகின்ற லச்சையது நிரந்தரமுங்காட்டு நீங்காதபூரணத்தை படுத்துப்பாரு
நாட்டுகின்ற யெட்டுகா லதனில்சேர்ந்து கடித்துமே கண்டத்தை நின்றுகூடி
ஆட்டுகின்ற ஆடிச்சநிறைந்தரத்திலிருக்க ஆனவழியாங்கதிரேது முனைமூக்கில்நின்று
ஊட்டுகின்ற யோகிக்குத் தன்னிடத்தேயோடு முதிக்கின்ற ஞானத்துக்கதுபதமே

விளக்கவுரை :


129. பதமான லோகத்தாரீந்தமுறைகேளு மதியான அம்புவியில் முழங்குஞ்சீவன்
நிதமான நித்திரையில் கெடுவீதியோடல் நிறைந்தசையோகங் கொட்டாவியேக்கத்தால்
இதமான முப்பத்துயறுபத்துமாயாடும் இயலானபுரியஷ்ட மொவ்வொன்றாக
நலமாக நாளுக்குநாள் சீரணிக்கநாடியே சமன்பதிக்கு யெய்துவாரே

விளக்கவுரை :


130. காடுமிரந்தோடியே நமதுக்கெய்வார் நலமானவாசிநிறைந் துள்ளேவாங்கில்
ஆடுதிருகடனமும் அம்பலமும் காணும் ஆட்டத்தின் குறிப்புதான் மேலோகீழோ
நாடுமூலதாரஞ் சபைநந்தோமென்றே நாட்டியே தலமாறு முருகிச்சுழியோடேபூட்டு
கபாலம்புகுந்து குருபதத்தில்மேவிபுகுந்த மண்டலத்திதழ்தான் ஆயிரத்தினெட்டே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 121 - 125 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
121. உண்மையாய்ப் பவியாது யோகந்தானும் உறதியாம்பலவான நீசருக்கு
பண்மையாம் பாவமென கோபிக்குந்தான் பலியாது கொலைசெய்த பாவிக்கேற்கே
வண்மையாம் மத்திபமாம் புத்தியானோன் மருவான காமோகி மகத்தன்மூடன்
எண்மையாய் தாட்சிகளும் ஏற்றம்பொய்யோன் இடும்பனாம் அனியனொடு சோம்பர் தானே

விளக்கவுரை :


122. தானான பெண்ணைப்பார்த்தேங்கிப் பின்செல்வோன் தாக்கான கர்ம்மவரை தப்புமாபாவி
தானான சோகவிகாரந்தான் சோம்பன் துனையான மூத்தோரை தந்தைதாயை
ஆனான சங்மில்லாதேதான் வைவோனதிகமாம் வீணார்ப்பரானதூரன்
வேயூன வெறுங்கைவெகுதுஷ்டன் மூர்க்கன் வெகுபுல்லன் குருதோகிக்கும் பொய்யாமே

விளக்கவுரை :

[ads-post]

123. ஆமேயா காமியத்தா னடங்காக்காமன் அளம்பனான் எரிமுகத்தான் அதியபாண்டி
தூமைதுடைக்கின்ற சுகியில்லாச் சண்டாலன் சிவவேடந்தரிசிக்கில் தூஷிப்போன்தான்
வாமேவு கோன்பொய்யன் கோவியீனன் மகத்தானயீனாக்கன் வாதிதர்க்கன்
மாமேவு மாமிசத்தை வருந்தித்தின்போன் மதுவாகியிவர்களுக்கு யோகம்பொய்யோ

விளக்கவுரை :


124. ரோகத்தால் யிவர்களுக்கு நீந்தால்பாவம் உடனேதான் நரகெய்தி உழுதுவான்பார்
யாகதூவிவர்களர்ச்சிக்கலாகா அதிசயமாய் பிர்மத்தி யனுகும்பாரு
காகநூல்கர்ப்பத்தைச் சூட்டலாகா கண்காணா தூரத்தே சயமாய்நில்லு  
நாகநூல் ஞானத்தை விழித்தலாகா நாட்டினால் நரகெய்து நலங்குவாரே

விளக்கவுரை :


125. நலங்கவே யாருக்குக் கொடுப்பதென்றால் நாதாந்தவேதாந்த பிரமசாரி
மலங்கவே பலதூதிகர்மிகூர்மி மகத்தான சிவயோகிபதி மார்க்கத்தார்
துலங்கவே சுத்தசைதன்னியத்தோர் சொல்மொழிமதிவாத தூய்மையானார்
கலங்கவே தர்மமனுஷ்டித்தோர் சார்ந்தோர் கர்ப்புடைய மங்கையரைக் கருதார்தானே

விளக்கவுரை :


Powered by Blogger.