போகர் சப்தகாண்டம் 2991 - 2995 of 7000 பாடல்கள்
2991. பாரேதான் சீஷவர்க்கம்
கேட்கும்போது பலபலவாம் துறையோடு முறைமையெல்லாம்
நேரேதான் குருவான
கமலர்தாமும் நேர்மையுடன் சமாதிக்குள் செல்லுமுன்னே
கூரேதான் அவரவர்க்கு
தக்கபாகம் குறிப்புடனே தாம்கொடுத்தார் கமலர்தாமும்
ஆரேதான் சீஷவர்க்கமான போக்கு
உகமையுடன் ஞானோப மோதிட்டாரே
விளக்கவுரை :
2992. ஓதவே யுகங்கோடி காலந்தானும்
வுத்தமனும் சமாதிதனில் இருந்தாரங்கே
நீதமுடன் சமாதிக்கு
பூசைமார்க்கம் நேர்மையுடன் நாள்தோறும் செய்திருந்தார்
காதமெனும் சீனபதிமூன்று
காதம் கமலமுனிதன்னை யவர்மாந்தரெல்லாம்
வேதமுடன் சிவபூசை
மார்க்கத்தோடு வேள்விகளு மனேகமதாய் நடத்துவாரே
விளக்கவுரை :
[ads-post]
2993. நடத்துகையில் சீனபதி
சென்றபோது நாதாந்த காலாங்கி நாதர்தம்மை
திடத்துடனே குருதனையே
காணவென்று தீரமுடன் சமாதிக்கு சென்றேன்யானும்
மடபதியா மாயிரம்பேர்
சீஷவர்க்கம் மகத்தான குருதனையே காணவென்று
வடகோடி கானகத்தில்
மாந்தரெல்லாம் வளமுடனே சமாதிபக்க லிருந்தார்காணே
விளக்கவுரை :
2994. காணவென்றால் அவர்பெருமை
யாருக்குண்டு காசினியில் இவரல்லால் ஒருவர்க்குண்டோ
வேணபடி மகிமையது
யாருக்குண்டு வேதாந்த காலாங்கிநாதர்க்குண்டு
நீணமுடன் சமாதிதனைக்
காணவென்று நேர்மையுடன் அங்கிருந்தேன் சிலதுகாலம்
தோணவே எனதையர் காலாங்கிக்கு
சோடசமாம் உபசாரம் சொல்லொணாதே
விளக்கவுரை :
2995. சொல்லவென்றால் ராஜாதிராசர்கில்லை சூரியாதி சந்திராதி யவருக்கில்லை
வெல்லவென்றால் இவர்போலும்
சித்துமுண்டோ மேதினியில் கண்டதில்லை சமாதிசித்து
புல்லவே திரியாமல்
பூசைமார்க்கம் போற்றவார் காலாங்கி தம்மைத்தானும்
அல்லவே யவர்கிருபை
வேண்டுமென்று வனேகமாம் கோடிப்பேர் வருணிப்பாரே
விளக்கவுரை :