போகர் சப்தகாண்டம் 3051 - 3055 of 7000 பாடல்கள்
3051. மூடவே மண்சீலை
வலுவாய்ச்செய்து முனிநாதர் சொற்படியே புடமேபோடு
கூடவே கோழியென்ற
புடத்தைப்போடு குணமுடனே புடமாறி எடுத்துப்பாரு
வாடவே சூதமது மடிந்துமேதான்
வளமாக களங்கமது போலேயாகும்
தேடவே செம்புதனில்
நூற்றக்கொன்று தெளிவான களங்கமதை கொடுத்திடாயே
விளக்கவுரை :
3052. கொடுக்கையிலே மாற்றதுவு
மெட்டேயாகும் குணமான பொன்னதுவும் சவளைபோலாம்
விடுத்துமே பொன்னதனை
வாரடித்து விருப்பமுடன் பூங்காவி புடத்தைப்போடு
கொடுத்திடவே மாற்றதுவும்
பத்தேயாகும் தேராமப் பசுமைநிறச் செம்பொன்னேயாகும்
எடுத்துமே சிவாலயங்கள்
கட்டநன்று எழிலான சூதமென்ற குருவுமாமே
விளக்கவுரை :
[ads-post]
3053. குருவான சூதமதைப்
பின்னுமைந்தா கொப்பெனவே ரவியெடுத்து பானைக்குள்ளே
திருவான பரணைதனில்
வைத்துபின்பு திகழுடனே கெந்திதனை களஞ்சிபோடு
மருவான பரணைமூடிப்பின்பு
மார்க்கமுடன் புடம்போடக் கட்டிப்போகும்
வுருவான களங்கமது வாரும்பாரு
வுத்தமனே களங்கெடுத்து செப்பக்கேளே
விளக்கவுரை :
3054. செப்பவென்றால் நாவில்லை
பாவுமில்லை செம்மையுடன் வெள்ளிதனில் நூற்றுக்கொன்று
ஒப்பமுடன் தானுருக்கி
கொடுத்துப்பாரு ஓகோகோ நாதாக்கள் வித்தையாகும்
அற்பமென்று நினையாதே
மைந்தாகேளு அரசர்களும் இந்தமுறை காணமாட்டார்
சொற்பமுடன் மாந்தருக்கு
வுண்மையாக தோற்றவே இந்தமுறை தெளிந்திட்டேனே
விளக்கவுரை :
3055. தெளியவே இன்னமொரு
மார்க்கம்பாரு தோற்றமுடன் நாமுரைப்போம் மாந்தர்க்காக
ஒளுவுடனே
சீனபதிமார்க்கத்தார்கள் ஒக்கமுடன் செய்துவரும் வித்தையாகும்
வெளியாக செத்தவரை காண்பதற்கு
வெட்கமுடன் ஜாலமொன்று சொல்வேன்பாரு
வளியான வட்டாரந் தன்னிலேதான்
வளமுடனே மாளியொன்று செய்தார்தாமே
விளக்கவுரை :