போகர் சப்தகாண்டம் 3166 - 3170 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3166. காணவே வானுலகில் போகுஞ்சித்தர் கண்ணுக்குற்றேற்றுவது மெய்போலாகும்
பூணவே சூரியனும் எதிரேநிற்பான் பொங்கமுடன் சந்திரனும் தூரேநிற்பான்
வேணவே லாகிரிகளுண்டபோது வெகுவான வினோதவகை சொல்லலாகும்
தோணவே நேத்திரங்களி லிருந்துகொண்டு தொல்லுலகில் கண்டதெல்லாம் பினத்துவாரே

விளக்கவுரை :


3167. பினத்துவார் ஆகாசமார்க்கந்தன்னை பெருமையுடன் அதிசயங்கள் மிகவுஞ்சொல்வார்
நினைப்புடனே கண்ணுக்கு தோற்றம்யாவும் நிலையான வதிசயம்போல் கூறுவார்கள்
புனப்புடனே பித்தமது மேலேசொக்கி புகழான கபாலத்தை வரட்சிசெய்யும்
தினப்புடனே சரரிரமெங்கும் தினவுண்டாகும் திரளான தேகமது சொக்கிப்போமே 

விளக்கவுரை :

[ads-post]

3168. சொக்கவே காயாதி பூரணத்தால் தொல்லுலகில் அதிதவகை மெத்தக்கூறும்
சிக்கவே மலைகுகைகள் வனாந்திரத்தில் சிறப்புடனே சித்தர்களைக் கண்டேனென்பார்
ஒக்கவே யவர்களிடம் கூடிருந்து உத்தமனே காயகற்பங் கொண்டேனென்பார்  
தக்கவே கைலங்கிரி கண்டேனென்பார் சாயுச்சிய போதையிலே இருந்தார்பாரே

விளக்கவுரை :


3169. போதையிலே ஞானமுண்டு வருளுஞ்சொல்வார் பொங்கமுடன் அதிசயங்கள் வினோதஞ் சொல்வார்
தீதையிலே கற்பமது வுண்டபோது திரளான தத்துவங்கள் மிகவுஞ்சொல்வார்
பாதையிலே இருந்துகொண்டு கண்ணைமூடி பாரினிலே பரிபாச வார்த்தைசொல்வார்
வாதையிலே யன்னமது தேவையில்லை வைகுண்டபதிதனிலே கேட்பார்பாரே

விளக்கவுரை :


3170. கேட்கையிலே லாகிரிகள் மிகவும்மிஞ்சி கெடிதான வடிதடிகள் மிகவுண்டாகி
மூட்கமுடன் கீழ்விழுந்து பிரண்டெழுந்து முனையான கும்பகத்திலிருப்பேனென்று
தாட்கமல பீடமதில் வீற்றிருக்கும் தாயான மஹேஸ்பரியை காண்பேனென்றும்
சூட்சமுடன் சுந்தரனார் தானென்று சொல்லுவார் பலதுதியுஞ் சொல்லுவாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3161 - 3165 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3161. வாழ்ந்திட்ட காலமது தன்னிலேதான் வாகுடனே மாந்தரெல்லா மொன்றாய்கூடி
தாழ்ந்திட்ட ரிஷிகோடிமுனிவருக்கு தகமையுடன் லேகியத்தை செய்யவென்று
ஆழ்ந்திடவே தம்கருத்தில் மனதிலுண்ணி அப்பனே சீனபதி மார்க்கஞ்சென்று
சூழ்ந்திட்ட போகரைதான் அடிவணங்கி சூட்சமுடன் பாகமதை யறிந்தார்தாமே

விளக்கவுரை :


3162. அறிந்துமே காயகற்ப லேகியத்தை அன்புடனே நாதாந்த ரிஷிகளுக்கு
செரிந்துமே பாகமுடன் செய்துமேதான் சிறப்புடனே யுண்பதற்குக் கற்பமீந்தார்
முறிந்துமே யானந்த கற்பந்தன்னை முப்பொழுதும் உண்டுமல்லோ களித்துமேதான்
வெறிந்துமே சினமதுவும் ஒடுங்கியேதான் வெட்டவெளி தனிலிருந்து கும்பித்தாரே

விளக்கவுரை :

[ads-post]

3163. கும்பித்து நிற்கையிலே சிவயோகிதானும் குவலயத்தில் மானிடர்மே லிச்சைகொண்டு
தம்பநங்கள் முதலான வசியமார்க்கம் ஜெகத்திலே வஷ்டவித கர்மம்யாவும்
சும்பனமாம் கொக்கோக லீலையாவும் சூட்சாதி சூட்சமெல்லாம் சுலுவாய்ச்சொல்லி
சம்போகத்தி லிருந்துகொண்டு சதாநிஷ்டையாவும் சட்டமுடன் தாமறிந்தார் பலமாந்தர்தாமே

விளக்கவுரை :


3164. தாமான சித்தர்களும் முனிவர்தாமும் சதகோடி சூரியர்போல் பிரகாசித்து
பூமானாங் கருவாளி யானபேர்க்கு புகழுடனே யிப்பாகஞ் சொன்னாரல்லோ
காமானமாகவேதான் காயகற்பம் கருத்துடனே செய்தார்கள் மனுக்கள்கோடி
நாமேதான் சொல்லிவிட்டோம் மறைப்பையெல்லாம் நலமுடனே நாதாக்கள் செய்வார்பாரே

விளக்கவுரை :


3165. பாரேதான் லேகியத்தின் பெருமைகேளு பாருலகில் அறிந்தமட்டும் சொல்வேன்பாரு
நேரேதான் தூதுளங்காய் பிரமானந்தான் நேர்மையுடன் உண்டவர்க்கு முறைமை சொல்வேன்
சேரேதான் ஆவின்பால் கொள்ளவேண்டும் செம்மையுடன் அவர்தமக்கு காட்சிமெத்த
கூரேதான் கெவனமுடன் குளிகைகொண்டு கொற்றவனே வதிசயங்கள் சொல்வார்காணே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3156 - 3160 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3156. வித்தான கரிமிரட்டி வேறுங்கூட்டி விதமான கரும்பசளை செம்பசளையுமாகும்
முத்தான வெள்ளையென்ற குன்றிதானும் முனையான வாசனிட வித்துதானும்
சித்தான குறிஞ்சாவின் வித்துகூட்டி சிறப்புடனே எட்டியென்ற வித்துமாகும் 
சத்தான வித்தாதி சரக்கையெல்லாம் சூட்சமுடன் களஞ்சியது வெடுத்துக்கொள்ளே

விளக்கவுரை :


3157. எடுக்கவென்றால் சரக்கையெல்லாம் ஒன்றாய்கூட்டி எழிலான சூரணமாய் செய்துகொண்டு
தொடுக்கவே முன்சொன்ன சரக்கோடொக்க துறையோடும் முறையோடும் சேர்வைகண்டு
கொடுக்கவே சீனியது பாவுசெய்து கொற்றவனே சூரணத்தைப் போட்டுமேதான்
விடுக்கவே நெய்தேனும் விட்டுக்கூட்டி விருப்பமுடன் மெழுகுபதந் தன்னிற்கிண்டே

விளக்கவுரை :

[ads-post]

3158. கிண்டையிலே மதுரமாம் திராட்சிதானும் சிளையான கதலியிட தேனுமாகும்
பாண்டுடனே கொடிமுந்திரி ரசமுமாகும் பாங்கான குங்குமப்பூ கஸ்தூரிதானும்
விண்டிடவே வாலுகையாம் அடுப்பிலேற்று வீரான ஜலமதுவும் போகக்கிண்டி
கண்டுமே மெழுகு பதந்தனிலிறக்கி கணபதியைதான்நினைத்து கருத்தில்நில்லே

விளக்கவுரை :


3159. நிற்கையிலே கணபதியஞ் கந்தன்தானும் நிருவாணி மஹேஸ்பரியும் எதிரில்நிற்பாள்
துற்கையெனும் பத்ரகாளியம்மன் துரைமுகமாய் நின்றுகொண்டு காட்சியீவாள்
பற்குணனாம் அர்ச்சுனனர்க்கு தந்தகாட்சி பாலகனே யுந்தனுக்கு மீவாள்பாரு
விற்பிடித்த மன்னரெல்லாம் காளிக்கல்லோ விண்ணுலகில் தான்நடுங்கி விடுபட்டாரே

விளக்கவுரை :


3160. பட்டாரே ராஜர்முடி மன்னரெல்லாம் பத்திரகாளியம்மன் சாபத்தாலே
கெட்டலைந்து மாண்டதொரு வேந்தரெல்லாம் கெடியான எந்தனது குருவினாலே
விட்டகுறை இருந்ததொரு நேர்மையாலே வேதாந்த காலாங்கி நாதர்தம்மால்
பட்டமுடி மன்னரெல்லாம் மீண்டுதாம் பாரினிலே நெடுங்காலம் வாழ்ந்திட்டாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3151 - 3155 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3151. தானான பட்டையுடன் யிம்புராவும் தாக்கான மாசிக்காய் தான்றிக்காயும்
மானான கடுக்காயும் மகரப்பூவும் மாசற்ற ஏலமுடன் நெல்லிக்காயும் 
கோனான குமட்டியின் விரையினோடு கொடிதான வூமத்தின் விரையுந்தானும்
பானான கெஞ்சாவின் விரையுந்தானும் பளிங்கான கொடிவேலிமஊலியாமே

விளக்கவுரை :


3152. ஆமேதான் மூலியொடு சூரைவித்து அப்பனே வேலியென்ற பருத்திதானும்
தாமேதான் வலம்புரியு மிடம்புரியுமாகும் தாக்கான வவமுக்கராவின் தோல்தானும்
வேமேதான் தாதுமாதுளையின்வேறும் மிக்கான வாத்தலரிசரளிதானும்
நாமேதான் சொன்னபடி யிருவேலிகூட்டி நயம்பெறவே சூரணமாய் செய்துகொள்ளே

விளக்கவுரை :

[ads-post]

3153. கொள்ளவே கற்கவகை யின்னஞ்சொல்வேன் கோளாறுநேராமல் குருபதத்தால்
விள்ளவே தக்கோலம் பரங்கிப்பட்டை விருப்பமுடன் வாலுளுவை திப்பிலியுமாகும்
மெள்ளவே யிருசீரங் காட்ச்சீரம் மேலானவாய்விளங்கம் ஓமந்தானும்
அள்ளவே ரோஜனையும் பூவாலாகும் அப்பனே பூமிசக்கரையுமாமே

விளக்கவுரை :


3154. சக்கரையுந் சீந்தியொடு சதாவேலிதானும் தாக்கான பெருவாகை சிறுவாகையாகும்
ஒக்கவே தண்ணீரின் மிட்டானாகும் உற்பனமாம் தம்பலப்பூச்சிதானும்
சிக்கவே பாதிரிமுல்லைத்தானும் சீராவாஞ் செங்கழுநீர் பூண்டுமாகும்
தக்கவே சிவகரந்தை விஷ்ணுகரந்தை சட்டமுடன் சாட்டாணைக் கூடச்சேரே

விளக்கவுரை :


3155. சேரவே வசுவாசி மிளகுதானும் சிறப்பான வேரமுடன் ரேவல்சின்னி
தீறவே விச்சியுடன் ஆலம்வித்து திறமான பேயத்தி விரையுமாகும் 
பாரமுடன் கடலாஞ்சி யட்டைதானும் பாங்கான நடுவன்னாகள் பட்டைகூட்டி
வாரவே விளாம்பழத்தின் வித்துகூட்டி வகுப்பான எலுமிச்சைவித்துமாமே

விளக்கவுரை :


Powered by Blogger.