போகர் சப்தகாண்டம் 3051 - 3055 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3051. மூடவே மண்சீலை வலுவாய்ச்செய்து முனிநாதர் சொற்படியே புடமேபோடு
கூடவே கோழியென்ற புடத்தைப்போடு குணமுடனே புடமாறி எடுத்துப்பாரு
வாடவே சூதமது மடிந்துமேதான் வளமாக களங்கமது போலேயாகும்
தேடவே செம்புதனில் நூற்றக்கொன்று தெளிவான களங்கமதை கொடுத்திடாயே

விளக்கவுரை :


3052. கொடுக்கையிலே மாற்றதுவு மெட்டேயாகும் குணமான பொன்னதுவும் சவளைபோலாம்
விடுத்துமே பொன்னதனை வாரடித்து விருப்பமுடன் பூங்காவி புடத்தைப்போடு
கொடுத்திடவே மாற்றதுவும் பத்தேயாகும் தேராமப் பசுமைநிறச் செம்பொன்னேயாகும்
எடுத்துமே சிவாலயங்கள் கட்டநன்று எழிலான சூதமென்ற குருவுமாமே

விளக்கவுரை :

[ads-post]

3053. குருவான சூதமதைப் பின்னுமைந்தா கொப்பெனவே ரவியெடுத்து பானைக்குள்ளே
திருவான பரணைதனில் வைத்துபின்பு திகழுடனே கெந்திதனை களஞ்சிபோடு
மருவான பரணைமூடிப்பின்பு மார்க்கமுடன் புடம்போடக் கட்டிப்போகும்
வுருவான களங்கமது வாரும்பாரு வுத்தமனே களங்கெடுத்து செப்பக்கேளே

விளக்கவுரை :


3054. செப்பவென்றால் நாவில்லை பாவுமில்லை செம்மையுடன் வெள்ளிதனில் நூற்றுக்கொன்று
ஒப்பமுடன் தானுருக்கி கொடுத்துப்பாரு ஓகோகோ நாதாக்கள் வித்தையாகும்
அற்பமென்று நினையாதே மைந்தாகேளு அரசர்களும் இந்தமுறை காணமாட்டார்
சொற்பமுடன் மாந்தருக்கு வுண்மையாக தோற்றவே இந்தமுறை தெளிந்திட்டேனே  

விளக்கவுரை :


3055. தெளியவே இன்னமொரு மார்க்கம்பாரு தோற்றமுடன் நாமுரைப்போம் மாந்தர்க்காக
ஒளுவுடனே சீனபதிமார்க்கத்தார்கள் ஒக்கமுடன் செய்துவரும் வித்தையாகும்
வெளியாக செத்தவரை காண்பதற்கு வெட்கமுடன் ஜாலமொன்று சொல்வேன்பாரு
வளியான வட்டாரந் தன்னிலேதான் வளமுடனே மாளியொன்று செய்தார்தாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3046 - 3050 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3046. வாதியா மின்னமொரு மார்க்கம்பாரு மகத்தான வேதையிது சுளுக்குவேதை
சோதியாங் கேசரத்தின் வித்தையப்பா சுளுக்கிலே எவருந்தான் சொல்லமாட்டார்
நீதியுடன் சூதமென்ற ராஜர்தம்மை நேர்மையுடன் சேரதுதான் கொண்டுசென்று
பாதியுமைதாள்பணிந்து மைந்தாநீயும் பட்சமு னுப்பூவில் ஒருமாபோடே

விளக்கவுரை :


3047. போடயிலே மதயானைவீரங்கி பொங்கமுடன் சூதமது கட்டும்பாரு
கூடயிலே சூதமது குளிகையானால் கோடான கோடிவித்தை ஆடலாகும்
வாடையிலே சீவனத்துக் கில்லாவிட்டால் வளமாக வங்கமதை யுருக்கிக்கொண்டு
மூடயிலே குளிகையது போட்டுப்பாரு முனையான வங்கமது வெள்ளியாச்சே

விளக்கவுரை :

[ads-post]

3048. ஆச்சென்ற வெள்ளியது பூசைக்கப்பா அப்பனே நாதாக்கள் முனிவர்தாமும்
மாச்சப்பா வாதவித்தை செய்துமல்லோ மகதேவாலயங்கள் பூசைசெய்தார்
பாச்சவே தேவாலயங் கட்டுதற்கு பாகமுடன் தங்கமென்ற போக்குசொல்வேன்
காச்சவே செம்புதனையுருக்கிக்கொண்டு கருவான முப்பூவை போட்டிடாயே

விளக்கவுரை :


3049. போடவே செம்பதுவும் ஊறலேகி பொலிவான தங்கமது வாகும்பாரு
நீடவே முன்சொன்ன குருவைத்தானும் நினைவாக நவலோகந்தன்னிலீய
கூடவே மாற்றதுவும் அதிகங்காணும் குணமான யேமம் என்னலாகும்
தேடவே சீவனத்துக் கில்லாவிட்டால் திறமான முப்பூவை அறிந்துகாணே

விளக்கவுரை :


3050. காணவே யின்னமொரு கருமானங்கேள் கருத்துடனே சொல்லுகிறேன் மைந்தாநீயும்
தோணவே பூநாகஞ் சேர்தானப்பா தோற்றமுடன் தானெடுப்பாய் செம்பையல்லோ
பூணவே செம்புதனை பரணைபண்ணி போக்கான சூதமது வுள்ளேவிட்டு  
வேணவே பூநீரில் குன்றிபோடு வேகமுடன் மேற்பரணை கொண்டுமூடே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3041 - 3045 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3041. போடயிலே பற்பமது கடுங்காரந்தான் பொலிவான கண்டர்தமைக் கொல்லும்பாரு
சாடவே முன்போல வுமிழ்நீர்தன்னில் சட்டமுடன்தான்குழைத்து புடத்தைப்போடு
நீடவே கடுங்காரச்சுன்னமாகும் நேர்மையுடன் சத்துருவுக் காலமித்ரன்
வாடவே திரியாதே மைந்தாகேளு வளமுடனே சுண்ணமதை எடுத்துக்கொள்ளே

விளக்கவுரை :


3042. கொள்ளவே சூதமதுக் கணுவுபோடு கொடிதான யேமரசந் துள்ளிப்போகும்
விள்ளவே சூதமது மடிந்துதானால் வேகமுடன் கெவனமென்ற குளிகையாச்சு
மெள்ளவே குளிகையது கொண்டபேர்க்கு மேதினியில் சதாகாலம் சாவேயில்லை
உள்ளபடி காலாங்கி நாதர்பாதம் உத்தமனே நாம்வணங்கி பாடினோமே

விளக்கவுரை :

[ads-post]

3043. பாடினோம் போகரிஷி சொன்னமார்க்கம் பாருலகில் பொய்யாது மெய்யேயாகும்
தேடியே யிவ்வேதை முப்பின்மார்க்கம் தெளிவுறவே பாடிவிட்டேன் சத்தகாண்டம்
நீடவே நான்காவ திந்தகாண்டம் நீடவே சாகரம்போலிதுவேயாகும்
கூடவே ஏழாயிரங் காண்டமப்பா கூறவே முடியாது திண்ணந்தானே

விளக்கவுரை :


3044. திண்ணமுடன் இப்பாகம் யாருஞ்சொல்லார் திறமையில்லா சுந்தரனார் மறைந்தார்தாமும்
வண்டமுடன் கொங்கணவர் கரிதிசொல்லி வளமையுடன் தாமறைத்தார் பிண்டப்போக்கை
சுண்ணமுடன் செய்வதற்கு கொங்கணவர்பாதம் சுத்தமுடன் செயநீரை மறைத்துச் சொன்னார்
எண்ணமுடன் இடைக்காடர் தமராநந்தர் ஏத்தமுட னென்போலே சொன்னார்பாரே

விளக்கவுரை :


3045. சொன்னதினால் விதிமுறைகள் காணாதப்பா துரைகோடி முகங்கோடி தொந்தங்கோடி
வின்னமிலா செய்வதற்கு ரிஷிகள்தாமும் விட்டகுறை வெட்டவெளி என்றுவிட்டார்
நன்மையாய் நாதாக்களடிபணிந்து நலமுடனே பாடிவைத்தேன் முப்பூதிட்சை 
பன்னவே இந்நூலின் தீட்சைபார்த்து பாகமுடன் செய்பவனே வாதியாமே
விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3036 - 3040 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3036. பேரான சுக்காங்கல் பிரம்மக்கல்லாம் பெருமையுள்ள மூதண்டக்கல்லுமாகும்
சீரான படிகக்கல் லென்றும்பேரு சிறப்பான குழியானை யென்றும்பேரு
தாரான குடுகுக்கல் என்னும்பேரு தாக்கான கண்ணகக்கல் என்றும்பேரு
பாரான பச்சையென்ற கன்னக்கல்லு பாங்கான உதகமென்ற கல்லுமாச்சே

விளக்கவுரை :


3037. கல்லான கல்லதனைக் காணவேண்டும் காசினியில் ஆருந்தான் காணமாட்டார்
புல்லான பூநீரை யறியமாட்டார் புகழான சோனக்கல் கண்ணமப்பா  
மல்லான மண்கட்டி யென்பார்பாரு வையகத்தில் தாமறியார் மகிமைதன்னை
செல்லான புத்துக்குள் இருக்குங்கல்லாம் ஜெகஜோதி மகிமைதனை காணார்தாமே

விளக்கவுரை :

[ads-post]

3038. காணாரே கருவாளி காண்பானானால் காசினியில் விண்டிடுவான் கருத்துளோர்க்கு
தோணவே பூவுலகில் தொட்டாலுந்தான் தொல்லுலகில் மாண்டிடுவார் மாந்தர்தாமும்
நாணவே சாத்திரத்தை மிகவாராய்ந்து நாதாக்கள் சொல்லுதையும் மிகவுங்கேட்டு
நீணவே கற்பாந்திர மிருப்பதற்கு நீணிலத்தில் கைமறைப்பு யாவுங்கேளே

விளக்கவுரை :


3039. கேட்கையிலே சாத்திரமாம் யுகாந்தகால மிருப்பதற்கு வாசிநோக்கு
நீட்கமுடன் வாசியிலே இருந்துகொண்டு நீடாழி யுலகத்தை வெறுக்கப்பண்ணி
சூட்சமுடன் சின்மயத்தை யறிந்துபோற்றி சுருதியுள்ள கருவிகருணாதியெல்லாம்
தாட்கமல பீடமதை பணிந்துபோற்றி சதாகாலம் சமாதியிலே இருக்கநன்றே

விளக்கவுரை :


3040. நன்றான சரக்குதனைக் கொல்லவென்று நாட்டமுடன் சத்துரு மித்துருவுங்கண்டு
குன்றான மலைகளிலே பாஷாணமுண்டு கொப்பெனவே கொண்டுவந்து பூநீர்ச்சுண்ணம்
பன்றான வுமிழ்நீரால் மத்தித்தேதான் பாலகனே சுண்ணமென்ற பாஷாணத்தில் 
தன்றான கட்டிக்கு வங்கிபூட்டி தகைமையுடன் கோழியென்ற புடத்தைப்போடே

விளக்கவுரை :


Powered by Blogger.