போகர் சப்தகாண்டம் 3136 - 3140 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3136. தாக்கவென்றால் கிரதங்கள் லேகியங்கள் தகமையுள்ள செந்தூரம் பற்பம்யாவும்
நோக்கமுடன் குளிகைகள் பாடம்யாவும் நுணுக்கமுடன் மாத்திரைகள் கட்டுவகையாகும்
சூட்சமுடன் தயிலங்கள் எண்ணைமுதல்யாவும் சுளுவான சூரணங்கள் முதலாய்
தூக்கமுடன் கடுகளவு பட்டால்போதும் துரையான மருந்தெல்லாம் வீறுமாமே

விளக்கவுரை :


3137. வீறான வவுஷதங்கள் முப்பூபட்டால் விடுபட்டுப்போகுமடா பிணிகளேது
கூறான வவுஷதங்கள் காரமெத்த குடிலமுடன் நோயெல்லாஞ் சுன்னம்பாரு
நீரான நேத்திரங்கள் சிவந்துகாட்டும் நெடிதான மேனியது கறுப்புமாகும்
தூரான நோயெல்லாங் காடேபோகும் துப்புறவாய் முப்பூவின் மகிமைதானே

விளக்கவுரை :

[ads-post]

3138. தானான முப்பூவின் மகிமையாலே சட்டமுடன் சரக்கெல்லாங் கட்டும்பாரு
பானான சூதமது துள்ளியோடும் பாங்கான கெந்தியது நீறிப்போகும்
தேனான லிங்கமது செந்தூரிக்கும் தேற்றமுடன் பூரமதை பொருமிக்கொல்லும்
கோனான வீரமது பற்பமாகும் கெடிதான பாஷாணம் சாகும்பாரே

விளக்கவுரை :


3139. பாரேதான் நவதாது முப்பத்திரண்டும் படுமுன்னே சரக்கெல்லாம் மடிந்துகொல்லும்
நேரேதான் லவணவகை இருபத்தைந்தும் நேரான கற்பவகை முன்னூற்றுச்சொச்சம்
கூரேதான் சொன்னபடி சூட்சமுப்பு குன்றியிடை பட்டாக்கால் எல்லாமாளும்
வீரேதான் சரக்குக்கு நெடுங்காலனாகும் மிக்கான துருசுக்கு குருவுமாமே

விளக்கவுரை :


3140. குருவான கண்ரது குருவுமானால் குவலயத்தில் கோடிவித்தை யாடலாகும்
திரிவான வாமியவள் முன்னேநிற்பாள் திக்கெல்லா மெச்சுதற்கு சித்தனாவாய்
மருவான நாதாக்கள் ரிஷிகள்தாமும் மதிப்புடனே யுந்தனுக்கு வரமுமீவார்
கருவான வுளவறிந்த சித்தனாவாய் காசினியில் உன்னைப்போல் சித்தனுண்டோ

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3131 - 3135 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3131. போடேதான் பில்லையது காய்ந்தபின்பு பொங்கமுடன் பேரண்டஞ் சுத்திசெய்து
நீடேதான் வகல்தனிலே கீழ்பரப்பி நேர்மையுடன் பில்லைதனை மேலேவைத்து
தூடேதான் மேலுமந்த பொடியைப்போட்டு துப்புறவாய் மெல்மூடி சீலைசெய்து
காடேதான் ரவிதனிலே காய்ந்தபின்பு கனமாகக் கோழியென்ற புடந்தான்போடே

விளக்கவுரை :


3132. புடமதுதான் தீயாறி எடுத்துப்பாரு பொங்கமுடன் சுண்ணாம்பு மட்டிபோலாம்
திடமுடனே பத்துமுறை இப்படியேபோடு திறமான சுண்ணமது வாகும்பாரு
தடமான சுன்னமது எடுத்துக்கொண்டு தகமையுடன் பேரண்டம் சிற்றண்டத்தோடு
கடமான சிப்பியொடு நண்டுதானும் கருவான நத்தையொடு சமனவாமே

விளக்கவுரை :

[ads-post]

3133. நத்தையுடன் இவையெல்லாம் ஒன்றாய்க்கூட்டி நலம்பெறவே சிற்றண்டக் கருவாலாட்டி
முத்திபெற மூசையிட்டு வூதிப்பாரு உத்தமனே சுண்ணாம்பா யிருக்கும்பாரு
பத்தியுடன் வுலையில்வைத்து வூதும்போது பாங்கான சுண்ணாம்பாயிருக்கும்பாரு
வெத்தியுடன் சுன்னமதை எடுத்துக்கொண்டு வேதாந்தத் தாயினது வருளைப்போற்றே

விளக்கவுரை :


3134. போற்றியே சுண்ணாம்பைத்தானெடுத்து புகழாக மூசையொன்று பிடித்துமேதான்
ஆற்றியே முன்சொன்ன முப்புசுன்னம் அப்பனே தானெடுத்து மூசையிட்டு
தூற்றியே தேவதைக்குப் பூசைசெய்து துறைபோல முறைபோல சீலைசெய்து
மாற்றியே சுண்ணாம்புச் சீலைசெய்து மயங்காமல் புடம்போட நீறிப்போமே

விளக்கவுரை :


3135. நீறியதோர் பற்பத்தை எடுத்துக்கொண்டு நினைவாக இப்படியே பத்துமுறைபோடு
கூறியதோர் பற்பமது குருபற்பமாச்சு குணமான காரமென்ற காலனாகும்
மீறியதோர் சரக்கெல்லாங் கொல்லுங்காலன் மிக்கான பற்பமது குருவுமாகும்
தேறியதோர் பற்பமதில் எந்தபாகம் தெளிவாகச் செய்தாலும் தாக்கிடாயே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3126 - 3130 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3126. காச்சிடவே சாம்பலது செப்பக்கேளு கருவான சாம்பலது எருச்சாம்பலப்பா
நீச்சென்ற வெருச்சாம்பல் கொண்டுவந்து நிசமான குழம்பதுவைத்தானெடுத்து
பாச்சியே சல்லாவை மேலேபோட்டு பாகமுடன் குழம்பதுவை மேலேயூத்து
ஏச்சலென்ற வுண்டைதனை எடுத்துக்கொண்டு எழிலான ரவிதனிலே காயப்போடே

விளக்கவுரை :


3127. காய்ந்தபின்பு பாண்டமதிலிட்டு மைந்தாகவனமுடன் வரைப்பாண்டம் போட்டுமேதான்
தோய்ந்திடவே மல்லியென்ற யிலையைமைந்தா சுத்தமுடன் வதன்மேலே வைத்துக்கொண்டு
தோய்ந்திடவே மேற்சட்டி கொண்டுமூடி தெளிவாக சீலையது வலுவாய்ச்செய்து
பாய்ந்திடவே தீயெரிப்பாய் நாலுசாமம் பதமுடனே தானெடுப்பாய் பின்னுங்கேளே

விளக்கவுரை :

[ads-post]

3128. பின்னுங்கேள் ஏரியிலே வளர்ந்த பிண்டம் பாரான இறைச்சியுடன் அதிகங்கொண்டு
வின்னமுடன் துவாரமது விட்டுமைந்தா விவரமுடன் வீரமது வொன்றேயாகும்
கன்னலுடன் பச்சையென்ற பூரந்தானும் கருவான பூநீரும் சரியாய்ச்சேர்த்து
பன்னவே சிப்பிக்குத் துவாரமிட்டு பாலகனே இம்மருந்தில் குன்றிபோடே

விளக்கவுரை :


3129. குன்றியா மருந்ததுதான் போட்டபின்பு குமுறவே தளவாயாஞ் சட்டிதன்னில்
வென்றிடவே யடுக்கடுக்காய் பரப்பிமைந்தா மேல்மூடி காற்றில்லா ஒடுக்கந்தன்னில்
பன்றிடவே வைத்தவுடன் சலமிரங்கும் பட்சமுடன் ஜெயநீரை எடுத்துபாலா
தான்றிடவே மேற்சொன்ன பூநீர்சேர்த்து சாங்கமுடன் தானரைப்பாய் சாமம்நாலே

விளக்கவுரை :


3130. நாலான சாமமது வரைக்கும்போது நலமான வுரவண்டு குழியானைதானும்
காலான சூதமுடன் பச்சைபூரம் கருவான வாறுபுள்ளி தண்டுஞ்சேர்த்து
பாலான சீனமுடன் காரஞ்சேர்த்து பாகமுடன் தானரைப்பாய் லகுவதாக
வேலான பில்லையது தட்டிமைந்தா வேகமுடன் ரவிதனிலே காயப்போடே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3121 - 3125 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3121. போக்கான காலாங்கி நாதர்பாதம் பொங்கமுடன் யான்வணங்கி சீனதேசம்
நோக்கமுடன் காடுமலை வனாந்திரங்கள் நொடிக்குள்ளே சென்றுமல்லோ வேதைபார்த்தேன்
தாக்கவே சீனபதி தேசத்தார்கள் சட்டமுடன் எந்தனையும் குருவாயெண்ணி
வாக்குடனே குருமொழியாஞ்சீஷனென்று வசனித்தார் கோடியுகம் வசனித்தாரே

விளக்கவுரை :


3122. வசனித்தார் சீனபதி மாந்தரெல்லாம் வறைகோடி திசைகோடி வகுக்கக்கோடி
நிசமுடனே என்வாக்கு மெய்யென்றெண்ணி நீடாழி யுலகமெலாம் வசனிப்பார்கள்
தசமுடனே தாரிணியிலஞ்சனத்தை தாக்குடனே வெகுமாந்தர் செய்துபார்த்து   
பிசகில்லா பிரணவத்தை மெய்யென்றெண்ணி பேருலகில் மாந்தரெல்லாம் துதித்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

3123. துதித்தாரே காலாங்கி நாதர்தம்மை தோற்றமுடன் எந்நாளும் வாசீர்மித்து
மதிப்புடனே யவர்பாதம் தான்வணங்கி வகையுடனே எப்போதும் கருணைகூர்ந்து
கதிப்புடனே சமாதிதனிலிருந்துகொண்டு சதாகாலம் லாடமதில் மையேபூண்டு
விதிப்பயனை தானெண்ணி விண்ணின்மீதல் வெகுகாலம் தானிருந்தார் மாந்தர்தாமே

விளக்கவுரை :


3124. தாமான வின்னமொரு மார்க்கம்பாரு தயவுடனே மாணாக்கள் பிழைக்கவென்று
கோமானாம் பங்குனி சித்திரையிலப்பா கொற்றவனே பூநீறு விளையுங்காலம்
மானான பூநீரை தானெடுத்து மார்க்கமுடன் செப்புகிறேன் மைந்தாகேளு
பானான பூநீரை படிதான்ரண்டு பாகமுடன் வாரிவந்து செப்பக்கேளே

விளக்கவுரை :


3125. செப்பவென்றால் கற்சுன்னம் படிதான் நான்கு தெளிவான வமுரியது படிதான்பத்து
ஒப்பமுடன் நல்லெண்ணை படிதானைந்து உத்தமனே இரண்டையுந்தான் கலக்கிக்கொண்டு
நெப்பமுடன் தெளிவிருத்தி பின்னுங்கேளு நேர்ப்புடனே தான்காய்ச்ச வுப்பேயாகும்
துப்புறவே யுப்பதுவும் மிகவேபூக்கும் துறையாக வுப்பதுவை பத்துமுறை காச்சே

விளக்கவுரை :


Powered by Blogger.