போகர் சப்தகாண்டம் 3296 - 3300 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3296. தானான செந்தூர மதீதவித்தை தாரிணியில் ஒருவருந்தான் செய்ததில்லை
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் தம்பதியில் அடியேன்சென்று
வேனான சாத்திரத்தின் உளவுபார்த்து வேகமுடன் சீனபதிசென்றுயானும் 
பானான குளிகைதனை பூண்டுகொண்டு பறந்திட்டேன் சீனபதிதேசங்காணே

விளக்கவுரை :


3297. காணவே சீனபதி சென்றேன்யானும் கமலமுனி சீர்பாதங் கண்டுபோற்றி
வேணவுப சாரமது மிகவுஞ்செய்து வெற்றியுடன் குளிகையது பூண்டுகொண்டு
பாணமது போலெழும்பி யடியேன்தானும் பக்கலென்ற சமாதியது நின்றேன்யானும்
நாணவே தலைகுனிந்து நின்றபோது நாதராங் கமலமுனி விடைசொன்னாரே

விளக்கவுரை :

[ads-post]

3298. விடையொன்று சொல்லுகையில் அடியேன்தானும் விருப்பமுடன் வுத்தாரஞ்சொல்லுற்றேன்
தடையில்லா வாக்கதுவுங் கமலர்தாமும் தாட்சியுடன் எந்தனுக்கு உரைத்ததாலே
மடைபோன்ற செந்தூர காயகற்பம் மகதேவர் மகிட்சியுடன் செய்யலுற்றார்
இடையூறு வாராமல் எந்தனுக்கு எழிலான வாக்கதுவுங் கொடுவென்றேனே

விளக்கவுரை :


3299. கொடுவென்று கேட்கையிலே சித்துதாமும் கொப்பெனவே எந்தனுக்குச் சாபந்தீர்ந்து
படுமுன்னே சரக்கெல்லாம் கட்டிப்போக பாரினிலே காயாதிகற்பந்தானும்
தொடுகுறி போலெந்தனுக்கு வுளவுஞ்சொல்லி தோஷமது போவதற்கு முறையுஞ்சொல்லி
விடுவகலும் பிணிநீங்கக் காயகற்பம் விருப்பமுடன் வாக்களித்தார் முறையுந்தானே

விளக்கவுரை :


3300. தானான கமலமுனிநாதர்தாமும் தகமையுடன் எந்தனுக்கு வாக்களித்தார்
கோனான காலாங்கி நாதர்பாதம் கும்பிட்டு வடியேனுந் தாள்பணிந்து  
தேனான சாத்திரத்தை கண்டாராய்ந்து திரட்டிவைத்தேன் போகரேழாயிரந்தான்
பானான காலாங்கிதனைநினைத்து பாடிவைத்தேன் சத்தகாண்டம் பண்பாய்த்தானே

விளக்கவுரை :



போகர் சப்தகாண்டம் 3291 - 3295 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3291. தாமான கருவெல்லாம் மறைத்துப்போட்டார் தகமையுடன் திருமூல வர்க்கத்தார்கக்
நாமேதான் சொன்னபடி நூலாராய்ந்து நாட்டிலுள்ள வளப்பமெல்லாம் கண்டார்பாதி
தேமேதான் காயாதி கற்பசாங்கம் தெளிவாகச் சொன்னவர்கள் ஒருவரில்லை
பூமானங் காலாங்கிநாதர்தாமும் புகழுடனே பாடிவைத்தார் கோடியாமே

விளக்கவுரை :


3292. கோடியாஞ் சித்தர்களில் ஒருவருண்டு கூறினார் பலபலவாங் கண்டாராய்ந்து
தேடியே மானிடர்கள் பிழைக்கவென்று தெளிவாகப்பாடிவைத்தார் சித்தர்தாமும்
பாடியதோர் நூலெல்லாம் பழுதாராய்ந்து பாரினிலே பலபலவாம் பேதஞ்சொன்னார்
நாடியே போகரிஷி அடியேன்தானும் நயம்பெறவே யுலகமதில் நவின்றிட்டேனே

விளக்கவுரை :

[ads-post]

3293. நவின்றிட்டே னின்னமொரு கருமானங்கேள் நாட்டிலுள்ள மாணாக்கள் பிழைக்கவென்று
நவின்றிட்ட சாத்திரங்கக் யுத்தாயுத்தம் தன்மைபெற வெகுசுளுவாய் ஆராய்ந்தேதான்
புவின்றிட்டேன் பொன்னினூமத்தை தன்னால் கருவாகத் தானரைப்பாய் சாமமெட்டே

விளக்கவுரை :


3294. எட்டான சாமமது செந்தூரத்தை எழிலாக தானரைப்பாய் மைந்தாநீயும்
திட்டமுடன் மைபோலதானரைத்து தீர்க்கமுடன் பில்லையது லகுவாய்த்தட்டி
சட்டமுடன் ரவிதனிலே காயவைத்து சாங்கமுடன் ஓட்டிலிட்டுச் சீலைசெய்து
வட்டமென்ற குழிதனிலே எருவடுக்கி வாகுடனே புடமதுவும் போடுபோடே

விளக்கவுரை :


3295. போட்டவுடன் தீயாறி எடுத்துப்பாரு பொலிவான செந்தூரமென்ன சொல்வேன்
நீட்டமுடன் செந்தூரங்காரமேறி நீனிலத்தில் காயாதிகற்பமாச்சு
வாட்டமுடன் செந்தூரமிந்தபாகம் வன்மையுடன் வைந்துபத்து புடந்தான்போடு
தாட்டிகமாய் செந்தூரம் அருணன்போலாம் தாரிணியில் ஒருவருந்தான் செய்யார்தாமே

விளக்கவுரை :



போகர் சப்தகாண்டம் 3286 - 3290 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3286. நாலான சாமமது வரைத்தபோது நயமுடனே வெண்ணையது போலேயாகும்
பாலகனே வெண்ணையது இதற்கொவ்வாது பாலகனே சித்தர்முகம் வேதையாச்சு
சேலான வனமூலிதன்னையப்பா செம்மையுடன் தான்கூட்டியரைத்தபோது
மாலான சத்தெல்லாம் மடிந்துமேதான் மகத்தான செந்தூரம் மடியலாச்சே

விளக்கவுரை :


3287. ஆச்சென்று விடுகாதே மைந்தாகேளு வப்பனே பில்லையது தட்டியேதான்
காச்சலென்ற ரவிதனிலே காயப்போடு கருவான ஓட்டிலிட்டுச் சீலைசெய்து
பாச்சலுடன் கெஜபுமாய்போட்டுத்தீரு பாலகனே யாறியபின் எடுத்துப்பாரு
மூச்சடங்கலிப் புடமதுதான் வெந்துதானால் மோசமில்லை வாராதன்றே

விளக்கவுரை :

[ads-post]

3288. வாராது தோஷமது நேராதல்லோ வகுப்பான செந்தூர முறுதிகாணும்
நேரான செந்தூரந் தனையெடுத்து நேர்மையுடன் கல்வமதிலிட்டுபின்னும்
சேரான பொன்னினாவாரை மூலிசேரவேதான் விட்டுவரைத்துமேதான்
நீரான மைபோலரைத்துமல்லோ நிஷ்களமாய்ப் பில்லையது தட்டிப்போடே

விளக்கவுரை :


3289. போடவே ரவிதனிலே காய்ந்தபின்பு பொங்கமுடன் ஓட்டிலிட்டுச் சீலைசெய்து
நீடவே கெஜபுடமாய் போட்டாயானால் நீரான செந்துரமென்னசொல்வேன்
கூடவே இப்படியாய் ஐந்துபத்து கொற்றவனே புடமதுதான் தீர்ந்தாயானால்
நாடவே செந்தூர மென்னசொல்வேன் நாதாக்கள் கைமறைப்பு கண்டுபாரே

விளக்கவுரை :


3290. பாரேதான் சித்தர்முனி ரிஷிகள்தாமும் பாருலகில் செய்வதுதான் அதீதமார்க்கம்
நேரேதான் பலநூலுங் கண்டாராய்ந்து சிறப்புடனே அனேகவித காயகற்பம்
சீரேதான் தான்முடித்தார் லக்கோயில்லை
வேரேதான் வனேகநூல் யானுங்கண்டேன் வுற்பனத்தை யுளவறிந்து சொல்லார்தாமே

விளக்கவுரை :



போகர் சப்தகாண்டம் 3281 - 3285 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3281. தேடயிலே செந்தூரம் ஐம்பதாகும் தேற்றமுடன் புடிமதுவும் அதிகங்கொண்டால்
கூடயிலே செந்தூரங்காரமேறி குறிப்புடனே காயாதிக்குறுதியாச்சு
நீடயிலே இப்படியே தீர்ந்தாயானால் நீனிலத்தில் நீயுமொரு சித்தனாவாய் பாடயிலே
ஒருவருந்தான் சொல்லவில்லை பாரினிலே இந்நூல்போல் ஒருநூலுண்டோ

விளக்கவுரை :


3282. உண்டேதான் வையகத்தில் பலநூலுண்டு உத்தமனே சாத்திரங்கள் கோடியுண்டு
கண்டேனே நானும்வெகு நூல்கள்தன்னை கவடமற்ற நூலிதுதான் மெய்நூலாகும்
திண்டான வேதமுனி நூல்கள்சொன்னார் திகழுடனே காசினியி லனேகமுண்டு
கொண்டான கொண்டபடி வினோதஞ்சொன்னார் குவலயத்தில் இந்நூல்போலில்லைதாமே

விளக்கவுரை :

[ads-post]

3283. தானான செந்தூரஞ் சாற்றக்கேளு தகமையுடன் புளியாரைச் சாற்றினாலே
பானான செந்தூர மறைத்துமேதான் பதமுடனே பில்லைதட்டிக் காயவைத்து 
வேனான வோட்டிலிட்டுச் சீலைசெய்து விருப்பமுடன் கெஜபுடத்தில் போட்டாயானால்
கோனான குருநாதர் சொன்னவாக்கு குவலயத்தில் பொய்யாது மெய்யாம்பாரே  

விளக்கவுரை :


3284. பாரேதான் செந்தூரங் காரமேறி பாகமுடன் காயாதிகற்பமாகும்
வேரேதான் வைத்து பத்துபுடமேபோடு நெறியான புடமதுவுந் தப்பாவண்ணம்
கூரேதான் சொன்னபடி செந்தூரிக்கும் கூர்பான காரமது சொல்லப்போமோ
வேரேதா னின்னமொரு மார்க்கம்சொல்வோம் வேதாந்தத் தாயினது வருள்தான்காணே

விளக்கவுரை :


3285. காணவென்றால் இன்னமொரு மார்க்கம்பாரு கருவான செந்தூரப்போக்குசொல்வேன்
தோணவே செந்தூரந் தனையெடுத்து துறையுடனே கல்வமதிலிட்டு மைந்தா
பூணவே பூநீறு முப்புச்சுண்ணம் புகழாகத் தான்போட்டு எட்டிலொன்று
வேணவே பொன்னினாவாரையாலே விருப்பமுடன் தானரைப்பாய் சாமம்நாலே

விளக்கவுரை :


Powered by Blogger.