3296. தானான செந்தூர மதீதவித்தை
தாரிணியில் ஒருவருந்தான் செய்ததில்லை
கோனான எனதையர் காலாங்கிநாதர்
கொற்றவனார் தம்பதியில் அடியேன்சென்று
வேனான சாத்திரத்தின்
உளவுபார்த்து வேகமுடன் சீனபதிசென்றுயானும்
பானான குளிகைதனை
பூண்டுகொண்டு பறந்திட்டேன் சீனபதிதேசங்காணே
விளக்கவுரை :
3297. காணவே சீனபதி சென்றேன்யானும் கமலமுனி சீர்பாதங் கண்டுபோற்றி
வேணவுப சாரமது மிகவுஞ்செய்து
வெற்றியுடன் குளிகையது பூண்டுகொண்டு
பாணமது போலெழும்பி
யடியேன்தானும் பக்கலென்ற சமாதியது நின்றேன்யானும்
நாணவே தலைகுனிந்து நின்றபோது
நாதராங் கமலமுனி விடைசொன்னாரே
விளக்கவுரை :
[ads-post]
3298. விடையொன்று சொல்லுகையில்
அடியேன்தானும் விருப்பமுடன் வுத்தாரஞ்சொல்லுற்றேன்
தடையில்லா வாக்கதுவுங்
கமலர்தாமும் தாட்சியுடன் எந்தனுக்கு உரைத்ததாலே
மடைபோன்ற செந்தூர காயகற்பம் மகதேவர்
மகிட்சியுடன் செய்யலுற்றார்
இடையூறு வாராமல் எந்தனுக்கு
எழிலான வாக்கதுவுங் கொடுவென்றேனே
விளக்கவுரை :
3299. கொடுவென்று கேட்கையிலே
சித்துதாமும் கொப்பெனவே எந்தனுக்குச் சாபந்தீர்ந்து
படுமுன்னே சரக்கெல்லாம்
கட்டிப்போக பாரினிலே காயாதிகற்பந்தானும்
தொடுகுறி போலெந்தனுக்கு
வுளவுஞ்சொல்லி தோஷமது போவதற்கு முறையுஞ்சொல்லி
விடுவகலும் பிணிநீங்கக்
காயகற்பம் விருப்பமுடன் வாக்களித்தார் முறையுந்தானே
விளக்கவுரை :
3300. தானான கமலமுனிநாதர்தாமும்
தகமையுடன் எந்தனுக்கு வாக்களித்தார்
கோனான காலாங்கி நாதர்பாதம்
கும்பிட்டு வடியேனுந் தாள்பணிந்து
தேனான சாத்திரத்தை
கண்டாராய்ந்து திரட்டிவைத்தேன் போகரேழாயிரந்தான்
பானான காலாங்கிதனைநினைத்து
பாடிவைத்தேன் சத்தகாண்டம் பண்பாய்த்தானே
விளக்கவுரை :