3301. தானேதான் செந்தூரப்
பெருமைதன்னை சாத்துகிறேன் மாணாக்கள் பிழைக்கவென்று
மானேகேள் வனுபான மினமறிந்து
மயங்காமல் மானிடர்கள் கொள்வதற்கு
தேனேதான் பசும்வெண்ணை
நெய்யுமாகும் தேற்றமுடன் பாலாகுஞ்சூரணந்தான்
ஊனான லேகியங்கள் கிரதமாகும்
வுத்தமனே இஞ்சிரசம் முலைப்பாலாமே
விளக்கவுரை :
3302. ஆமேதான் சக்கரையு
மெழுகுமாகும் அப்பனே இந்தவித வனுபானங்கள்
நாமேதான் சொன்னபடி
சிகிச்சைசெய்தால் நாடாதுதேகம் வலுபிணிகள்போகும்
போமேதான் பொல்லாத
நோய்கள்போகும் பொலிவான ரோகத்தின் மார்க்கஞ்சொல்வேன்
வேமேதான் பிணிக்குறிப்பு
வுளவுசொல்வேன் வேகமுடன் காயாதிகற்பங்கேளே
விளக்கவுரை :
[ads-post]
3303. கேளேதான் வாயுவென்ற
தெண்பதும்போம் கெடிதான பித்தமது நாற்பதும்போம்
நாளேதான் கிரந்தி
பதினெட்டும்போகும் நாடாது ஜன்னி பதின்மூன்றும்போகும்
பாளேதான் பாண்டுவகை
யாறுந்தீரும் பாலகனே மூலமிருபதுவும்போகும்
வீளேதான் அதிசார ரோகம்போகும்
வீரான கிராணியென்ற தாறும்போமே
விளக்கவுரை :
3304. ஆரான வாதமென்ற ரோகம்போகும்
அப்பனே சிலேத்துமது தொண்ணூற்றாரும்
காரான கொடியரோகம்
பதினெட்டும்போம் கருவான காசமென்ற ரோகமெட்டும்
வேறான வுளமாந்தை ரோகம்போகும்
விருப்பமுடன் பிரமியங்கள் அனைத்தும்போகும்
கூறான மேகமென்ற
இருபத்தொன்றும் கொற்றவனே சடலம்விட்டு யேகும்பாரே
விளக்கவுரை :
3305. பாரேதான் குட்டமது
பதினெட்டும்போம் பாங்கான சோகையென்ற ரோகம்போகும்
நேரேதான் மகோதரங்கள்
எட்டும்போகும் நெடிதான விஷபாக மாறும்போகும்
சேரேதான்
சூலைபதினெட்டும்போகும் செழிப்பான குன்மமென்ற தெட்டும்போகும்
நேரேதான் பெரும்பாடு
ரோகம்போகும் மேலான கல்லடைப்பு வாரும்போமே
விளக்கவுரை :