3306. போமேதான் விப்புரிதி
ரோகம்போகும் பொலிவான காப்பன் பதினெட்டும்போகும்
வேமேதான் பவுத்திரங்கள்
அனைத்தும்போகும் விரப்பமுடன் நேத்திரநோய் தொண்ணூற்றாரும்
நாமேதான் சொன்னபடி
வதிரோகங்கள் நாட்டிலுள்ள வதிசூரியெல்லாம்போகும்
தாமேதான் பீநிசங்கள்
எட்டும்போகும் தாக்கான சிரசிநோ யனைத்தும்போமே
விளக்கவுரை :
3307. சிரமான நோயுடனே
யின்னஞ்சொல்வோம் சீரான தாகமென்ற ரோகம்போகும்
வரமான விக்கல்வலி
ரோகம்போகும் வகையான சுவாசமென்ற ரோகம்நீங்கும்
உரமான வாந்தியென்ற
ரோகம்போகும் வுத்தமனே மார்புநோய் தனைவிட்டேங்கும்
பரமான கம்மலென்ற ரோகம்போகும்
பார்த்திபனே சகலவிஷ ரோகம்போமே
விளக்கவுரை :
[ads-post]
3308. போமென்று விடுகாதே
வின்னஞ்சொல்வோம் பொலிவான வாண்குறியின் ரோகம்போகும்
தாமெனவே பெண்குறியின்
ரோகம்போகும் தாக்கான மருந்துவகை வீரும்போகும்
நாமெனவே மலட்டுவலி
ரோகம்போகும் நாடாது கசரோகமெல்லாம் நீங்கும்
வேமெனவே காயாதி
கற்பமார்க்கம் விருப்பமுடன் செய்கின்ற வீரந்தானே
விளக்கவுரை :
3309. வீரமாஞ் சிலவிஷங்க ளற்றுப்போகும் வேகமென்ற பிளவையென்னும் கட்டிபோகும்
சாரமாம் ரத்தவிஷ
மற்றுப்போகும் சதாகாலம் மேலிளைப்பு தேர்ந்துபோகும்
தூரமாங் காதவழி நடக்கலாகும்
நடந்தாலும் வாசியது கீழேநோக்கும்
பாரமாந் தேகமது கற்றூணாகும்
பாரினிலே வெகுகால மிருக்கலாமே
விளக்கவுரை :
3310. இருக்கலாம் கோடியுக
கற்பகாலம் இருந்தாலும் நரைதிரையும் ஒன்றுமில்லை
சுருக்கமுடன் மேனியது
தளர்ந்திடாது தளர்ந்தாலும் நரம்புக்கு வலுவுமுண்டு
பெருக்கமுடன்
காயாதிகற்பகாலம் பேருலகில் நீயுமொரு சித்தனாவாய்
உருக்கமுடன் செந்தூரங்
கொண்டபேர்க்கு வுலகத்தில் வயது கணக்கில்லைதாமே
விளக்கவுரை :