போகர் சப்தகாண்டம் 3311 - 3315 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 3311 - 3315 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3311. கணக்கில்லை காலன்வந்தணுக மாட்டான் காசினியில் வெகுகால மிருக்கலாகும்
பிணமாகி மூச்சடங்கி இருந்திட்டாலும் பேருலகில் உன்னையொரு சித்தனென்பார்
ஷணநேரம் வாசியைநீ நடத்திட்டாலும் சதாசிவன்தான் நீயென்று சொல்லுவார்கள்
மணமுடனே பூமிதனில் வாழலாகும் மண்ணுலகில் வேந்தரெல்லாம் நடுங்குவாரே

விளக்கவுரை :


3312. நடுங்குவார் உனைக்கண்ட சீஷவர்க்கம் நாடோறும் உந்தனுக்கு பணியேசெய்து
ஒடுங்கியே உந்தனிட பக்கஞ்சென்று வுபசார வார்த்தைகளும் அதிகம்பேசி
கொடுந்தவசியானதொரு வுந்தனுக்கு கோபமது வாராமல் முன்னேநின்று
படுந்துயர மிகவாகி மனதிலெண்ணி பட்சமுடன் சதாநித்தஞ் சேவிப்பாரே  

விளக்கவுரை :

[ads-post]

3313. சேவிப்பார் தவநிலையில் ஒடுங்கிநின்று சேர்வையுடன் காட்சிதனைக்காணவென்று
கோவிப்பு வாராமல் குருவைத்தானும் கொற்றவனு மெந்நாளும் பணிந்துநின்று
தாவிப்பாம் சோடசோபாரத்தோடு தண்மையுடன் ஏவலுக்கு முதலாய்நின்று
சாவிப்பு வாராமல் புனிதவானாய் சதகோடி காலம்வரை பணிசெய்வாரே  

விளக்கவுரை :


3314. பணியான நீயுமொரு சித்தனைப்போல் பாலகனே எந்நாளுமிருப்பதற்கு
அணியான சிவயோகந் தன்னிற்சென்று ஆத்தாளை சதாநித்தம் பூசித்தேதான்
துணிவோடு சமாதிநிலை நின்றுகொண்டு துப்புறவாய் மேல்மூச்சு தனையடக்கி
மணியான பூரகத்தை மேலேநோக்கி மார்க்கமுடன் லனாகதத்தைப் பூட்டிப்பாரே

விளக்கவுரை :


3315. பூட்டிமிகப் பார்க்கையிலே பொலிவு தோன்றும் பொங்கமுடன் கழுத்திதனை மேலிறுத்தி
ஆட்டுமந்தை தனிவோணாய்ப் புகுந்தாற்போல வப்பனே அஷ்டாங்கந் தன்னிற்சென்று
கூட்டுமுறை வகையறிந்து சிவயோகிதானும் குணமுடனே யங்கசித்தி பெற்றுக்கொண்டு
பாட்டுநயமறிந்துமல்லோ பாரின்மீது பாரமுடன் தவசிருத்தல் மெத்தநன்றே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar