3316. நன்றான யோகமதையறியவேண்டும்
நாயகனே எந்நாளும் பூசைவேண்டும்
குன்றான மாய்கைதனை
யறுக்கவேண்டும் கொடிதான பொருளாசை நீக்கவேண்டும்
பன்றான சாத்திரத்தை
பலவும்பார்த்து பாரினிலே கோளாறுயறியவேண்டும்
சென்றாலும் ராசரிடஞ்
செல்லவேண்டும் செயலான பாக்கியத்தை நீக்கநன்றே
விளக்கவுரை :
3317. நீக்கவே பொருளாசை யவர்க்குச்சொல்லி நிதியெலாந் தானழிக்கமதியுஞ்சொல்லி
போக்கவே கர்மானுபவத்தை
நீக்கி பொங்கமுடன் எந்நாளும் ஞானமோதி
வாக்கதுஊம் பிசகாமல்
வறியோருக்கு வண்மையுடன் தானமது செய்யச்சொல்லி
நோக்கமுடன் அவரவர்க்குத்
தக்கபாகம் நுண்மையுடன் கொடுப்பதுவே தர்மமாமே
விளக்கவுரை :
[ads-post]
3318. தருமமாங் காயாதிகற்பமுண்டோர்
சதாகாலஞ் சாயுச்சியம் பெறுவதாகும்
கருமமாம் வஷ்டான பீடைதானும்
காசினியில் வெறுப்பதுவே யோகமார்க்கம்
கருமமுடன் காயமது
பூமிதன்னில் சட்டமுடன் இருந்தாலும் கரிப்பேறாது
மகுமமுடன் சித்தாதி
சித்தரெல்லாம் மானிலத்தில் இப்படியே வழங்கினாரே
விளக்கவுரை :
3319. வழக்கமுடன் தானிருந்தார்
சித்தாசித்து வையகத்தில் காயாதிகற்பமுண்டு
பழக்கமிது மிகவாகி
பாரினிற்குள் பதிங்கிருந்தார் வெகுகோடி காலந்தானும்
முழக்கமுடன் ஆண்டுக்கோர்
கோஷ்டிகாட்டும் மூதுலகில் கண்டவர்கள் பிரமிப்பார்கள்
பழக்கமுடன் சீஷவர்க்கம்
இதுவேபாகந் தாரிணியில் வெகுசித்து ஆடினாரே
விளக்கவுரை :
3320. ஆடினார் சித்தர்முனி
ரிஷியைப்போல அவனிதனில் கோடிமனுதவசியோர்கள்
தேடியே சமாதியிட
நிலையைக்கண்டு தேற்றமுடன் பெரியோரை யடுத்துமேதான்
கூடியேகும் பல்கும்பலாய்ச்
சேர்ந்து குருவான தவநிலையைக்காணவென்று
நாடியே சொரூபமென்ற
நிலையைக்காண நலமுடனே காத்திருந்தார் அனேகம்பேரே
விளக்கவுரை :