போகர் சப்தகாண்டம் 3316 - 3320 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3316. நன்றான யோகமதையறியவேண்டும் நாயகனே எந்நாளும் பூசைவேண்டும் 
குன்றான மாய்கைதனை யறுக்கவேண்டும் கொடிதான பொருளாசை நீக்கவேண்டும்
பன்றான சாத்திரத்தை பலவும்பார்த்து பாரினிலே கோளாறுயறியவேண்டும்
சென்றாலும் ராசரிடஞ் செல்லவேண்டும் செயலான பாக்கியத்தை நீக்கநன்றே

விளக்கவுரை :


3317. நீக்கவே பொருளாசை யவர்க்குச்சொல்லி நிதியெலாந் தானழிக்கமதியுஞ்சொல்லி
போக்கவே கர்மானுபவத்தை நீக்கி பொங்கமுடன் எந்நாளும் ஞானமோதி
வாக்கதுஊம் பிசகாமல் வறியோருக்கு வண்மையுடன் தானமது செய்யச்சொல்லி
நோக்கமுடன் அவரவர்க்குத் தக்கபாகம் நுண்மையுடன் கொடுப்பதுவே தர்மமாமே

விளக்கவுரை :

[ads-post]

3318. தருமமாங் காயாதிகற்பமுண்டோர் சதாகாலஞ் சாயுச்சியம் பெறுவதாகும்
கருமமாம் வஷ்டான பீடைதானும் காசினியில் வெறுப்பதுவே யோகமார்க்கம்
கருமமுடன் காயமது பூமிதன்னில் சட்டமுடன் இருந்தாலும் கரிப்பேறாது
மகுமமுடன் சித்தாதி சித்தரெல்லாம் மானிலத்தில் இப்படியே வழங்கினாரே

விளக்கவுரை :


3319. வழக்கமுடன் தானிருந்தார் சித்தாசித்து வையகத்தில் காயாதிகற்பமுண்டு
பழக்கமிது மிகவாகி பாரினிற்குள் பதிங்கிருந்தார் வெகுகோடி காலந்தானும்
முழக்கமுடன் ஆண்டுக்கோர் கோஷ்டிகாட்டும் மூதுலகில் கண்டவர்கள் பிரமிப்பார்கள்
பழக்கமுடன் சீஷவர்க்கம் இதுவேபாகந் தாரிணியில் வெகுசித்து ஆடினாரே

விளக்கவுரை :


3320. ஆடினார் சித்தர்முனி ரிஷியைப்போல அவனிதனில் கோடிமனுதவசியோர்கள்
தேடியே சமாதியிட நிலையைக்கண்டு தேற்றமுடன் பெரியோரை யடுத்துமேதான்
கூடியேகும் பல்கும்பலாய்ச் சேர்ந்து குருவான தவநிலையைக்காணவென்று 
நாடியே சொரூபமென்ற நிலையைக்காண நலமுடனே காத்திருந்தார் அனேகம்பேரே

விளக்கவுரை :



போகர் சப்தகாண்டம் 3311 - 3315 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3311. கணக்கில்லை காலன்வந்தணுக மாட்டான் காசினியில் வெகுகால மிருக்கலாகும்
பிணமாகி மூச்சடங்கி இருந்திட்டாலும் பேருலகில் உன்னையொரு சித்தனென்பார்
ஷணநேரம் வாசியைநீ நடத்திட்டாலும் சதாசிவன்தான் நீயென்று சொல்லுவார்கள்
மணமுடனே பூமிதனில் வாழலாகும் மண்ணுலகில் வேந்தரெல்லாம் நடுங்குவாரே

விளக்கவுரை :


3312. நடுங்குவார் உனைக்கண்ட சீஷவர்க்கம் நாடோறும் உந்தனுக்கு பணியேசெய்து
ஒடுங்கியே உந்தனிட பக்கஞ்சென்று வுபசார வார்த்தைகளும் அதிகம்பேசி
கொடுந்தவசியானதொரு வுந்தனுக்கு கோபமது வாராமல் முன்னேநின்று
படுந்துயர மிகவாகி மனதிலெண்ணி பட்சமுடன் சதாநித்தஞ் சேவிப்பாரே  

விளக்கவுரை :

[ads-post]

3313. சேவிப்பார் தவநிலையில் ஒடுங்கிநின்று சேர்வையுடன் காட்சிதனைக்காணவென்று
கோவிப்பு வாராமல் குருவைத்தானும் கொற்றவனு மெந்நாளும் பணிந்துநின்று
தாவிப்பாம் சோடசோபாரத்தோடு தண்மையுடன் ஏவலுக்கு முதலாய்நின்று
சாவிப்பு வாராமல் புனிதவானாய் சதகோடி காலம்வரை பணிசெய்வாரே  

விளக்கவுரை :


3314. பணியான நீயுமொரு சித்தனைப்போல் பாலகனே எந்நாளுமிருப்பதற்கு
அணியான சிவயோகந் தன்னிற்சென்று ஆத்தாளை சதாநித்தம் பூசித்தேதான்
துணிவோடு சமாதிநிலை நின்றுகொண்டு துப்புறவாய் மேல்மூச்சு தனையடக்கி
மணியான பூரகத்தை மேலேநோக்கி மார்க்கமுடன் லனாகதத்தைப் பூட்டிப்பாரே

விளக்கவுரை :


3315. பூட்டிமிகப் பார்க்கையிலே பொலிவு தோன்றும் பொங்கமுடன் கழுத்திதனை மேலிறுத்தி
ஆட்டுமந்தை தனிவோணாய்ப் புகுந்தாற்போல வப்பனே அஷ்டாங்கந் தன்னிற்சென்று
கூட்டுமுறை வகையறிந்து சிவயோகிதானும் குணமுடனே யங்கசித்தி பெற்றுக்கொண்டு
பாட்டுநயமறிந்துமல்லோ பாரின்மீது பாரமுடன் தவசிருத்தல் மெத்தநன்றே

விளக்கவுரை :



போகர் சப்தகாண்டம் 3306 - 3310 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3306. போமேதான் விப்புரிதி ரோகம்போகும் பொலிவான காப்பன் பதினெட்டும்போகும்
வேமேதான் பவுத்திரங்கள் அனைத்தும்போகும் விரப்பமுடன் நேத்திரநோய் தொண்ணூற்றாரும்
நாமேதான் சொன்னபடி வதிரோகங்கள் நாட்டிலுள்ள வதிசூரியெல்லாம்போகும்
தாமேதான் பீநிசங்கள் எட்டும்போகும் தாக்கான சிரசிநோ யனைத்தும்போமே

விளக்கவுரை :


3307. சிரமான நோயுடனே யின்னஞ்சொல்வோம் சீரான தாகமென்ற ரோகம்போகும்
வரமான விக்கல்வலி ரோகம்போகும் வகையான சுவாசமென்ற ரோகம்நீங்கும்
உரமான வாந்தியென்ற ரோகம்போகும் வுத்தமனே மார்புநோய் தனைவிட்டேங்கும்
பரமான கம்மலென்ற ரோகம்போகும் பார்த்திபனே சகலவிஷ ரோகம்போமே  

விளக்கவுரை :

[ads-post]

3308. போமென்று விடுகாதே வின்னஞ்சொல்வோம் பொலிவான வாண்குறியின் ரோகம்போகும்
தாமெனவே பெண்குறியின் ரோகம்போகும் தாக்கான மருந்துவகை வீரும்போகும்
நாமெனவே மலட்டுவலி ரோகம்போகும் நாடாது கசரோகமெல்லாம் நீங்கும்
வேமெனவே காயாதி கற்பமார்க்கம் விருப்பமுடன் செய்கின்ற வீரந்தானே

விளக்கவுரை :


3309. வீரமாஞ் சிலவிஷங்க ளற்றுப்போகும் வேகமென்ற பிளவையென்னும் கட்டிபோகும்
சாரமாம் ரத்தவிஷ மற்றுப்போகும் சதாகாலம் மேலிளைப்பு தேர்ந்துபோகும்
தூரமாங் காதவழி நடக்கலாகும் நடந்தாலும் வாசியது கீழேநோக்கும்
பாரமாந் தேகமது கற்றூணாகும் பாரினிலே வெகுகால மிருக்கலாமே

விளக்கவுரை :


3310. இருக்கலாம் கோடியுக கற்பகாலம் இருந்தாலும் நரைதிரையும் ஒன்றுமில்லை
சுருக்கமுடன் மேனியது தளர்ந்திடாது தளர்ந்தாலும் நரம்புக்கு வலுவுமுண்டு
பெருக்கமுடன் காயாதிகற்பகாலம் பேருலகில் நீயுமொரு சித்தனாவாய்
உருக்கமுடன் செந்தூரங் கொண்டபேர்க்கு வுலகத்தில் வயது கணக்கில்லைதாமே

விளக்கவுரை :



போகர் சப்தகாண்டம் 3301 - 3305 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3301. தானேதான் செந்தூரப் பெருமைதன்னை சாத்துகிறேன் மாணாக்கள் பிழைக்கவென்று
மானேகேள் வனுபான மினமறிந்து மயங்காமல் மானிடர்கள் கொள்வதற்கு
தேனேதான் பசும்வெண்ணை நெய்யுமாகும் தேற்றமுடன் பாலாகுஞ்சூரணந்தான்
ஊனான லேகியங்கள் கிரதமாகும் வுத்தமனே இஞ்சிரசம் முலைப்பாலாமே  

விளக்கவுரை :


3302. ஆமேதான் சக்கரையு மெழுகுமாகும் அப்பனே இந்தவித வனுபானங்கள்
நாமேதான் சொன்னபடி சிகிச்சைசெய்தால் நாடாதுதேகம் வலுபிணிகள்போகும்
போமேதான் பொல்லாத நோய்கள்போகும் பொலிவான ரோகத்தின் மார்க்கஞ்சொல்வேன்
வேமேதான் பிணிக்குறிப்பு வுளவுசொல்வேன் வேகமுடன் காயாதிகற்பங்கேளே

விளக்கவுரை :

[ads-post]

3303. கேளேதான் வாயுவென்ற தெண்பதும்போம் கெடிதான பித்தமது நாற்பதும்போம்
நாளேதான் கிரந்தி பதினெட்டும்போகும் நாடாது ஜன்னி பதின்மூன்றும்போகும்
பாளேதான் பாண்டுவகை யாறுந்தீரும் பாலகனே மூலமிருபதுவும்போகும்
வீளேதான் அதிசார ரோகம்போகும் வீரான கிராணியென்ற தாறும்போமே

விளக்கவுரை :


3304. ஆரான வாதமென்ற ரோகம்போகும் அப்பனே சிலேத்துமது தொண்ணூற்றாரும்
காரான கொடியரோகம் பதினெட்டும்போம் கருவான காசமென்ற ரோகமெட்டும்
வேறான வுளமாந்தை ரோகம்போகும் விருப்பமுடன் பிரமியங்கள் அனைத்தும்போகும்
கூறான மேகமென்ற இருபத்தொன்றும் கொற்றவனே சடலம்விட்டு யேகும்பாரே

விளக்கவுரை :


3305. பாரேதான் குட்டமது பதினெட்டும்போம் பாங்கான சோகையென்ற ரோகம்போகும்
நேரேதான் மகோதரங்கள் எட்டும்போகும் நெடிதான விஷபாக மாறும்போகும்
சேரேதான் சூலைபதினெட்டும்போகும் செழிப்பான குன்மமென்ற தெட்டும்போகும்
நேரேதான் பெரும்பாடு ரோகம்போகும் மேலான கல்லடைப்பு வாரும்போமே

விளக்கவுரை :


Powered by Blogger.