போகர் சப்தகாண்டம் 3331 - 3335 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3331. தாமான யின்னமொரு கருமானங்கேள் தகமையுள்ள சித்தர்முனி கொங்கணவரப்பா
சாமான்யமானதொரு சாத்திரத்தை சதுரான சங்கமதிற் கொண்டுசென்று 
பூமான்கள் சித்துவகை இருக்குங்கூட்டம் புகழ்ச்சியுடன் வழிபாடு சென்றுமங்கே
சாமான்ய மானதொரு கொங்கணவர்தாமும் மதிப்புடனே சபைநடுவே சென்றிட்டாரே

விளக்கவுரை :


3332. சென்றிட்ட கொங்கணவர் சித்தர்தாமும் சிறப்புடனே சித்தர்முனிதம்மைக்கண்டு
வென்றிட்ட சாத்திரத்தை வாதுபேசி விருப்பமுடன் சத்துவகை மிகவும்பேசி
கன்றிட்ட கருங்குருவைத் தெரிந்துகொண்டு கருத்துடனே கருமுடிக்க மனதிலெண்ணி
பன்றிட்ட சாத்திரத்தை தோஷஞ்சொல்ல பாரினிலே சத்துவகை முடித்தார்காணே

விளக்கவுரை :

[ads-post]

3333. காணவே பத்துவகை யெடுக்குமார்க்கம் நடந்ததோர் ஞானிமுதல் சித்தர்தாமும்
தோணவே பாஷாணம் முப்பத்திரண்டும் துறையோடும் முறையோடும் செப்பக்கேளு
பூணவே வகைவகைக்கு பலமதாக புகழுடனே தேனுதனில் நாலுசாமம்
வேணவே தானரைப்பாய் மைந்தாகேளு விருப்பமுடன் வெண்ணெயது போலேயாட்டே

விளக்கவுரை :


3334. ஆட்டியே ரவிதனிலே காயவைத்து அப்பனே மூசைதனிலடைத்து மைந்தா
பூட்டியே வாலுகையா மேந்திரத்தில் புகழாக தானரைப்பாய் மைபோலாக
நாட்டியே மூசைதனிலடைத்துமைந்தா நலம்பெறவே சில்லிட்டுச் சீலைசெய்து
நீட்டமுடன் சரவுலையில் வைத்துவூது சேறான சரக்கெல்லாம் புகைந்துபோமே

விளக்கவுரை :


3335. போகுமே சரக்கெல்லாஞ் சத்தேயாகி பொங்கமுடன் ஈயமதுபோலேயாகும்
சாகுமே பாஷாணம் புகைந்துமல்லோ சத்துபோல் சத்தாகி களங்குமாகி 
வேகுமே சரவுலையில் புகையுண்டாகி வேகமுடன் அஞ்சனத்தின் கல்போலாகும்
பாகுடனே உருக்கியதோர் மூசைதன்னை பதமுடனே தானெடுத்து வுடைத்துப்பாரே

விளக்கவுரை :



போகர் சப்தகாண்டம் 3326 - 3330 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3326. பழியான செந்தூரங் காயகற்பம் பாருலகிலுண்டவர்க்குக் காயம்போகா
வழியான செந்தூரம் யார்தான்செய்வார் வண்மையுள்ள சிவயோகி தானேசெய்வான்
மொழிவான கருவாளி யானமாந்தர் மோசமின்றி காசுதனை செலவுசெய்து
கழியான செந்தூரப்போக்குதன்னை கனமுடனே செய்பவனே புனிதனாமே

விளக்கவுரை :


3327. புனிதனாம் இன்னமொரு மார்க்கம்பாரு புகழான செந்தூரஞ் செப்பக்கஏளும்
வனிதமுடன் வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று வாகுடனே தானுருக்கி குருவொன்றீய
கனிவான கரியோட்டிலூதிப்போடு கருவான செம்பதுவும் கொஞ்சம்நீங்கி
தனியான வெள்ளியது வரணமேறி தகமையுடன் பொன்னென்ற மாற்றுமாச்சே

விளக்கவுரை :

[ads-post]

3328. ஆச்சப்பா குடவனிலே பத்துக்கொன்று அப்பனே பாச்சிடவே மாற்றெட்டாகும்
மாச்சப்பா செம்புதனில் பத்துக்கொன்று பாங்குபெற மாற்றதுவும் எட்டதாகும்
பேச்சப்பா பிசகொன்று மில்லைதானும் பேரான தங்கமது பத்துக்கொன்று
மூச்சப்பா விடுகாமல் உருக்கியேதான் முதன்மையுடன் தானெடுக்கக் கலங்குமாமே

விளக்கவுரை :


3329. களங்கான தங்கமதை எடுத்துக்கொண்டு கருணையுடன் வெள்ளிதனில் பத்துக்கொன்று
விளங்கவே தானுருக்கி யெடுத்துக்கொண்டு வேகமுடன் வாரடித்துப் புடத்தைப்போடு
அளங்கமுடன் தங்கமது விளையும்பாரு அப்பனே சிவத்துக்கு வுருக்கித்தங்கம்
நளங்கமுடன் சிவராஜயோகஞ்சென்று நாட்டிலே தாமிருந்தார் கோடியாமே

விளக்கவுரை :


3330. கோடியாந் தவகோடி ரிஷிகள்கோடி குவலயத்தில் சத்துவகை யறியாமற்றான்
கோடியே சுட்டலைந்து கெட்டார்கோடி தெரிசனங்கள் காணாமல் மாண்டார்கோடி
வாடியே மனந்தளர்ந்து வழிகாணாமல் வகைகெட்டு நூல்பார்த்து மறந்தார்கோடி
கூடியே யொருவரிடம் முறைகள்கேட்டு கூர்மையுடன் பாராமல் கெட்டார்தாமே

விளக்கவுரை :



போகர் சப்தகாண்டம் 3321 - 3325 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3321. பேரான வழிதனிலே வதீதம்பூண்டு பேருலகில் நீயுமொரு சித்தனைப்போல்
தூரான கெட்டவழி சொல்லாமற்றான் துரைராஜ் சுந்தரன்போலிருந்துகொண்டு
வாரான சாத்திரத்தின் வண்மைபார்த்து வண்மையுடன் வாதமதை யறிந்துகொண்டு
தேரான யோகமதை நிலைநிறுத்தி தேற்றமுடன் யோகநிலை திடமுந்தேடே

விளக்கவுரை :


3322. தேடையிலே விட்டகுறை நேர்ந்துதானால் தெளிவுடனே யுந்தனுக்கு லபிக்கும்பாரு
கூடயிலே வாசன்தானில்லாவிட்டால் கொற்றவனே காயாதிகற்பம்போதும்
பாடையிலே சென்றாலும் திரேகம்போமோ பாரினிலே தெரியாமலிருந்தார்கோடி
நீடையிலே காயாதிசெந்தூரந்தான் நிலைத்துதடா தேகமது கற்றூணாச்சே

விளக்கவுரை :

[ads-post]

3323. கற்றூணாம் பொற்றூணாம் கருங்கல்லாகும் காசினியில் காயாதி கற்பமாச்சு
நற்றூணாம் காயாதி செந்தூரந்தான் நாயகனே முக்கோடி தவஞ்செய்தாலும்
சற்குணனாம் வீராதிவீரன்போலும் பாரினிலே சதகோடிசூரியன்போல்
துற்குணங்கள் தானகன்று சித்தனாவாய் துரைராஜ சிவயோகி நீயாவாயே

விளக்கவுரை :


3324. ஆகையிலே செந்தூர முண்ணபேர்க்கு அவனிதனில் நரையில்லை திரையுமில்லை
சாகையிலே சேத்துமங்கள் அணுகிடாதே செத்தாலும் ஆவியது வெளிபோகாது
போகையிலே தவஞ்செயினும் சிரசுக்குள்ளே பொங்கமுடன் தான்வசித்து கற்பகாலம்
வேகையிலே தீயதின் வெந்திட்டாலும் வெகுசுறுக்காய் தேகமது துள்ளும்பாரே

விளக்கவுரை :


3325. பாரேதான் தேகமது துள்ளும்போது பாரினிலே ஜெகஜால வித்தையென்பார்
நேரேதான் சவமுகத்தில் நிற்கும்போது நெருப்பான தணலதுவு மவிந்துபோகும்
கூரான மானிடர்கள் சொல்வதென்றால் குவலயத்தில் ஜெகஜால வித்தையென்பார்
தூரேதான் மசானமதிலிருந்துகொண்டு துப்புறவாய் சவமதனை பழிசொல்வாரே

விளக்கவுரை :



போகர் சப்தகாண்டம் 3316 - 3320 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3316. நன்றான யோகமதையறியவேண்டும் நாயகனே எந்நாளும் பூசைவேண்டும் 
குன்றான மாய்கைதனை யறுக்கவேண்டும் கொடிதான பொருளாசை நீக்கவேண்டும்
பன்றான சாத்திரத்தை பலவும்பார்த்து பாரினிலே கோளாறுயறியவேண்டும்
சென்றாலும் ராசரிடஞ் செல்லவேண்டும் செயலான பாக்கியத்தை நீக்கநன்றே

விளக்கவுரை :


3317. நீக்கவே பொருளாசை யவர்க்குச்சொல்லி நிதியெலாந் தானழிக்கமதியுஞ்சொல்லி
போக்கவே கர்மானுபவத்தை நீக்கி பொங்கமுடன் எந்நாளும் ஞானமோதி
வாக்கதுஊம் பிசகாமல் வறியோருக்கு வண்மையுடன் தானமது செய்யச்சொல்லி
நோக்கமுடன் அவரவர்க்குத் தக்கபாகம் நுண்மையுடன் கொடுப்பதுவே தர்மமாமே

விளக்கவுரை :

[ads-post]

3318. தருமமாங் காயாதிகற்பமுண்டோர் சதாகாலஞ் சாயுச்சியம் பெறுவதாகும்
கருமமாம் வஷ்டான பீடைதானும் காசினியில் வெறுப்பதுவே யோகமார்க்கம்
கருமமுடன் காயமது பூமிதன்னில் சட்டமுடன் இருந்தாலும் கரிப்பேறாது
மகுமமுடன் சித்தாதி சித்தரெல்லாம் மானிலத்தில் இப்படியே வழங்கினாரே

விளக்கவுரை :


3319. வழக்கமுடன் தானிருந்தார் சித்தாசித்து வையகத்தில் காயாதிகற்பமுண்டு
பழக்கமிது மிகவாகி பாரினிற்குள் பதிங்கிருந்தார் வெகுகோடி காலந்தானும்
முழக்கமுடன் ஆண்டுக்கோர் கோஷ்டிகாட்டும் மூதுலகில் கண்டவர்கள் பிரமிப்பார்கள்
பழக்கமுடன் சீஷவர்க்கம் இதுவேபாகந் தாரிணியில் வெகுசித்து ஆடினாரே

விளக்கவுரை :


3320. ஆடினார் சித்தர்முனி ரிஷியைப்போல அவனிதனில் கோடிமனுதவசியோர்கள்
தேடியே சமாதியிட நிலையைக்கண்டு தேற்றமுடன் பெரியோரை யடுத்துமேதான்
கூடியேகும் பல்கும்பலாய்ச் சேர்ந்து குருவான தவநிலையைக்காணவென்று 
நாடியே சொரூபமென்ற நிலையைக்காண நலமுடனே காத்திருந்தார் அனேகம்பேரே

விளக்கவுரை :


Powered by Blogger.