3331. தாமான யின்னமொரு
கருமானங்கேள் தகமையுள்ள சித்தர்முனி கொங்கணவரப்பா
சாமான்யமானதொரு சாத்திரத்தை
சதுரான சங்கமதிற் கொண்டுசென்று
பூமான்கள் சித்துவகை
இருக்குங்கூட்டம் புகழ்ச்சியுடன் வழிபாடு சென்றுமங்கே
சாமான்ய மானதொரு
கொங்கணவர்தாமும் மதிப்புடனே சபைநடுவே சென்றிட்டாரே
விளக்கவுரை :
3332. சென்றிட்ட கொங்கணவர் சித்தர்தாமும்
சிறப்புடனே சித்தர்முனிதம்மைக்கண்டு
வென்றிட்ட சாத்திரத்தை
வாதுபேசி விருப்பமுடன் சத்துவகை மிகவும்பேசி
கன்றிட்ட கருங்குருவைத்
தெரிந்துகொண்டு கருத்துடனே கருமுடிக்க மனதிலெண்ணி
பன்றிட்ட சாத்திரத்தை
தோஷஞ்சொல்ல பாரினிலே சத்துவகை முடித்தார்காணே
விளக்கவுரை :
[ads-post]
3333. காணவே பத்துவகை யெடுக்குமார்க்கம் நடந்ததோர் ஞானிமுதல் சித்தர்தாமும்
தோணவே பாஷாணம்
முப்பத்திரண்டும் துறையோடும் முறையோடும் செப்பக்கேளு
பூணவே வகைவகைக்கு பலமதாக
புகழுடனே தேனுதனில் நாலுசாமம்
வேணவே தானரைப்பாய்
மைந்தாகேளு விருப்பமுடன் வெண்ணெயது போலேயாட்டே
விளக்கவுரை :
3334. ஆட்டியே ரவிதனிலே காயவைத்து
அப்பனே மூசைதனிலடைத்து மைந்தா
பூட்டியே வாலுகையா
மேந்திரத்தில் புகழாக தானரைப்பாய் மைபோலாக
நாட்டியே
மூசைதனிலடைத்துமைந்தா நலம்பெறவே சில்லிட்டுச் சீலைசெய்து
நீட்டமுடன் சரவுலையில்
வைத்துவூது சேறான சரக்கெல்லாம் புகைந்துபோமே
விளக்கவுரை :
3335. போகுமே சரக்கெல்லாஞ்
சத்தேயாகி பொங்கமுடன் ஈயமதுபோலேயாகும்
சாகுமே பாஷாணம்
புகைந்துமல்லோ சத்துபோல் சத்தாகி களங்குமாகி
வேகுமே சரவுலையில்
புகையுண்டாகி வேகமுடன் அஞ்சனத்தின் கல்போலாகும்
பாகுடனே உருக்கியதோர்
மூசைதன்னை பதமுடனே தானெடுத்து வுடைத்துப்பாரே
விளக்கவுரை :