போகர் சப்தகாண்டம் 3386 - 3390 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3386. ஏகுமே கண்ணோய்கள் தொண்ணூற்றாறும் எழிலான மண்டையிடி கபாலக்குத்து
போகுமே வாதபித்தந் தலைகெட்டோடும் பொலிவான வாசியது கீழ்நோக்காகும்
வேகுமே யாவியது மயிர்கால்பற்றி வெளிதனிலே காற்றுடனே சேரும்பாரு
பாகுடனே தேகமது கற்றூணாகும் பாலகனே காயாதி கற்பமூழ்கே

விளக்கவுரை :


3387. மூழ்கினபின் பெண்ணாகா மதுபானந்தான் முக்கியமாய் மூன்றுமண்டலந்தானப்பா
மாழ்கியே சேராதே மனங்கொள்ளாதே மன்னவனே மூன்றுமுஆறை யிப்படியேகாரு
தாழவே கற்பமது கொண்டபோது தாரணியில் உன்னைப்போல் ஒருவனுண்டோ
வாழவே கற்பகோடி காலமப்பா வளமையுடன் தானிருந்து கற்பங்கொள்ளே

விளக்கவுரை :

[ads-post]

3388. கொள்ளவே யின்னமொரு கருமானங்கேள் கொற்றவனே யாம்கண்ட வரைக்கும் சொல்வோம்
மெள்ளவே சாரனையா மூலியப்பா மேன்மையுடன் சேரதுதான் கொண்டுவந்து
துள்ளவே பொடியாக்கி மைந்தாநீயும் துரையுடனே நிழல்தனிலுலர்த்திக்கொண்டு
கள்ளவே சூரணமாய் செய்துகொண்டு கற்பனையாய் சுத்தியது செய்யக்கேளே

விளக்கவுரை :


3389. கேளேதான் பிட்டாவி செய்துகொண்டு கிருபையுடன் மூன்றுமுறை சுத்திசெய்து
பாளேதான் போகாமல் சூரணத்தை பாங்குபெற ரவிதனிலே காயவைத்து
வீளேதான் திப்பிலியு மிளகுதானும் விருப்பமுடன் சீரகமு மொன்றாய்க்கூட்டி
நாளேதான் போகாமல் சீனிசேர்த்து நலமுடனே சூரணமாய்க் கொண்டுபாரே

விளக்கவுரை :


3390. கொண்டவுடன் வாயுவென்ற குன்மம்போச்சு கொடிதான சூலையொடு வாதம்போகும்
பண்டுடனே கால்குடைச்சல் பறந்துபோகும் பாரினிலே எந்நூலை வெளியிடாதே
திண்டுடனே சித்துமத்தை யறுத்துப்போடும் திறமான வுளைமாந்தை யேகும்பாரு
அண்டமுடன் காயாதி கற்பமாகும் அப்பனே மூலியிட வேகங்காணே

விளக்கவுரை :



போகர் சப்தகாண்டம் 3381 - 3385 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3381. அற்றுமே பீசமதினின்ற ரோகம் அப்பனே கால்வீக்கம் கைவீக்கம்போம்
முற்றுமே நரம்புகளும் முறுக்குமீறி முனையான தாதுவிர்த்தி யதிகமாகும்
பற்றாது பரையாப்பு கொறுக்குமூலம் படருமே தாமரையு மற்றப்போகும்
வற்றமே தேகமது வலுத்துகாட்டும் வண்மையுடன் மேனியது மின்னுந்தானே

விளக்கவுரை :


3382. தானான யின்னமொரு சூட்சஞ்சொல்வேன் தகமையுடன் மானிடர்கள் பிழைக்கவென்று
கோனான எனதையர் காலாங்கிநாதர் குருபதத்தை யடியேனுந் தாள்பணிந்து
பானான பராபரியை மனதிலெண்ணி பாடினேன் காண்டமேழாயிரந்தான்
தேனான இந்நூல்தான் குருநூலாகும் தேசத்தில் கிட்டாது சிவயோகிக்கே

விளக்கவுரை :

[ads-post]

3383. சிவயோகி யானவர்க்கு எல்லாங்கிட்டும் தேசத்தில் மற்றவர்க்குக் கிட்டாதப்பா
தவயோகி என்றாலே கற்பங்கொல்வான் தாரணியில் மற்றவர் கொள்ளமாட்டார்
நவயோகம் பெற்றவரும் சிவயோகியாவார் நாட்டிலே மற்றவருமாவாரோதான்
பவமகற்றும் புண்ணியற்கு எல்லாமெய்தும் பாரினிலே சித்தனைப்போல் வாழலாமே

விளக்கவுரை :


3384. வாழலாம் வெகுகோடி காலமப்பா வரிபெறத் தலைமுழுக விபரங்கேளு
நீழவே நெல்லியுன் மிளகுதானும் நெடிதான கடுக்காயும் மஞ்சள்கூட்டி
காழவே பரிசிவைந்துங்கூட்டி கருவாக சமயெடையாய் எடுத்துக்கொண்டு
தாழவே கையாஞ்சாற் பாலுங்கூட்டி சாங்கமுடன் தானரைப்பாய் சாமம்நாலே

விளக்கவுரை :


3385. நாலான சாமமது வரைத்து மைந்தா நலமுடனே ஸ்தானமது செய்யும்போது
காலான காலனுக்கு இடமேயில்லை கண்ணிரண்டுங் குளிர்ச்சியது மிகவேயாகும்
பாலான விழியிரண்டு மெரிச்சல்நீங்கி பாலகனே சிரசுவலி தானேபோகும்
மாலான மண்டையிடி கபாலத்துக்கு மார்க்கமுடன் சடலம்விட்டேகும்பாரே

விளக்கவுரை :



போகர் சப்தகாண்டம் 3376 - 3380 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3376. ஆவாரே யின்னமொரு கருமானங்கேள் அப்பனே சூதமென்ற ராசன்தன்னை
சாவான கள்ளியென்ற மரத்தில்தானும் சட்டமுடன் தான்குடைந்து சொல்லக்கேளும்
பூவான சூதமதை வதனில்விட்டு துப்புரவாய் அதின்நூலை மேலேகொட்டி
நாவான சீலையது வலுவாய்ச்செய்து நலமாக வாறுதினங்கள் கழித்துப்பாரே

விளக்கவுரை :


3377. பார்க்கையிலே சூதமது காரமேறி பாலகனே வெண்ணையது போலேயாகும்
தீர்க்கமுடன் வெண்ணையது எடுத்துக்கொண்டு திறமுடனே கல்வமதிலிட்டுக்கேளு
ஏர்க்கவே முன்சொன்ன முப்பூதானும் எழிலாகக் களஞ்சியது கூடப்போட்டு
நீக்கவே சூதமென்ற வெண்ணைதன்னில் நிலையான துருசுபலந் தன்னைப்போடே

விளக்கவுரை :

[ads-post]

3378. போடவே பற்பமது கூடச்சேர்த்து பொங்கமுடன் கெந்தியென்ற செயநீர்தன்னால்
நீடவே தானரைப்பாய் சாமம்நாலு நீட்கமுடன் வெண்ணையது போலேமைந்தா
கூடவே பில்லையது தெல்லுபோலே குணமாகத்தான்செய்து ரவியில்வைத்து
தேடவே வோட்டிலிட்டுச் சீலைசெய்து தெளிவுடனே புடம்போடப் பற்பமாமே

விளக்கவுரை :


3379. பற்பமாங் கெஜபுடத்தில் நீறும்பாரு பாலகனே சிமில்தனிலே பதனம்பண்ணு
அற்பமென்று விடுகாதே புண்யவானே வன்புடனே வெண்ணைதனில் குன்றியுண்ண
கெற்பமே ரோகமதிலிருக்கும்நோய்கள் குலையோடே போகுமடா பின்னுங்கேளு
துற்பலத்தை நீக்கியல்லோ வலுவைக்காட்டும் துடியான பற்பத்தின் நேர்மைதானே

விளக்கவுரை :


3380. நேர்மையாம் மேகமென்ற ரோகம்போகும் மேனியது பளபளக்கும் சிவந்துகாட்டும்
கூர்மையாம் கபரோகம் சில்விஷங்கள் கொடிதான வயிற்றுவலி மேலிளைப்பு
தீர்மையாம் பௌத்திரமாம் முளைமூலங்கள் தீமைசெய்யும் கண்டத்தின் மாலைபோகும்
வார்மையுடன் கைன்னோசை கன்னக்குத்து தனமான கிரந்திமுத லற்றுப்போமே

விளக்கவுரை :



போகர் சப்தகாண்டம் 3371 - 3375 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3371. கிழங்கென்றால் கிழங்கதுவும் கொல்லன்கோவை கெடியான சாரதனை பிழிந்துகொண்டு
பழக்கமுடன் தானரைத்து பில்லைதட்டி பாகமுடன் ரவிதனிலே காயவைத்து
மழங்கவே வோட்டிலிட்டுச் சீலைசெய்து புகழாக கெஜபுடத்தில் போட்டாயானால்
விழங்கவே பற்பநிறம் கோக்குபோலாம் விண்ணுலகில் செய்பவரும் அருமைதானே

விளக்கவுரை :


3372. அருமையாம் பற்பமதை எடுத்துக்கொண்டு அப்பனே சிமிழ்தனிலே பதனம்பண்ணு
பெறுமையுடன் பணவிடைதான் சர்க்கரையில்கொள்ள பேரான நவமூல மொன்பதும்போம்
சிறுமைபட செயரோகமெல்லாம்போகும் சேர்மான மானதொரு கசரோகம்போம்
ஒருமையுடன் தேகமது கற்றூணாகும் வுத்தமனே வுனக்கீடு சொல்வாருண்டோ

விளக்கவுரை :

[ads-post]

3373. உண்டோதான் வையகத்தில் வுனக்கீடுண்டோ வுத்தமனே ராஜாதிராஜபதியும்நீதான்
கண்டபடி பலபலவாஞ் சாத்திரத்தை கருத்திலே சற்றேனும் நினையாமற்றான்
விண்டபொருள் ஒன்றிருக்க ஒன்றைக்கொண்டு விட்டகுறை தொட்டகுறை யில்லையென்று
சண்டியென்னும் மானிடரைப்போலேநீயும் சதாகாலமிருப்பது நன்கல்லதாமே

விளக்கவுரை :


3374. நன்கல்லா சாத்திரத்தை தாறுமாறாய் நலமுடனே பாராமற்கெட்டலைந்து
புன்கவிகளொன்றிருக்க வொன்றைப்பார்த்து புராதனத்தின் பொருளறியார் மட்டிமாண்பர்
வன்கொடுமை செய்பவரோடு இணங்கிச்சென்று வாதாடி பலகாலும் வார்த்தைபேசி
தென்பொதிகை தனிலிருக்கும் சித்தர்நூலைத் தெளிவாகப் பாராத மட்டிமாடே

விளக்கவுரை :


3375. மாடான மாடிதுதான் சென்மமாடு மானிலத்தில் நூலறியா மட்டிமாடு
கூடான கூடழியுஞ் சண்டிமாடு குவலயத்தில் மெத்தவுண்டு கூறப்போமோ
தேடான பாக்கியமும் இங்கிருக்க தேசத்தில் சுட்டலைந்தோர் கோடாகோடி
பாடான வழியறிந்து காணமற்றான் பாரினிலே விட்டகுறைக்காளாவாரே

விளக்கவுரை :


Powered by Blogger.