சிவவாக்கியம் 166 - 170 of 525 பாடல்கள்
166.
நீரைஅள்ளி நீரில்விட்டு
நீர்நினைந்த காரியம்
ஆரைஉன்னி நீரெல்லாம் அவத்திலே இறைக்கிறீர்?
வேரைஉன்னி வித்தைஉன்னி வித்திலே முளைத்தெழும்
சீரைஉன்ன வல்லீரேல் சிவபதங்கள் சேரலாம்!
விளக்கவுரை :
167.
நெற்றியில் தயங்குகின்ற
நீலமாம் விளக்கினை
உய்த்துணர்ந்து பாரடா, உள்ளிருந்த சோதியைப்
பத்தியில் தொடர்ந்தவர் பரமயம் அதானவர்
அத்தலத்தில் இருந்தபேர்கள் அவர்எனக்கு நாதரே.
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
168.
கருத்தரிக்கு முன்னெலாம்
காயம்நின்றது எவ்விடம்?
உருத்தரிக்கு முன்னெலாம் உயிர்ப்புநின்றது எவ்விடம்?
அருள்தரிக்கு முன்னெலாம் ஆசைநின்றது எவ்விடம்?
திருக்கறுத்துக் கொண்டதே சிவாயம்என்று கூறுவீர்.
விளக்கவுரை :
169.
கருத்தரிக்கு முன்னெலாம்
காயம்நின்றது தேயுவில்,
உருத்தரிக்கு முன்னெலாம் காயம்நின்ற தேயுவில்
அருள்தரிக்கு முன்னெலாம் ஆசைநின்றது வாயுவில்
திருக்கறுத்துக் கொண்டதே சிவாயம் என்று கூறுவீர்.
விளக்கவுரை :
170.
தாதரான தாதரும்
தலத்தில்உள்ள சைவரும்
கூதரைப் பறைச்சிமக்கள் கூடிசெய்த காரியம்
வீதிபோகும் ஞானியை விரைந்துகல் எறிந்ததும்
பாதகங்கள் ஆகவே பலித்ததே சிவாயமே.
விளக்கவுரை :