சிவவாக்கியம் 151 - 155 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

151. ஓதிவைத்த நூல்களும் உணர்ந்துகற்ற கல்வியும்
மாதுமக்கள் சுற்றுமும் மறக்கவந்த நித்திரை
ஏதுபுக் கொளித்ததோ எங்குமாகி நின்றதோ?
சோதிபுக் கொளித்தமாயம் சொல்லடா சுவாமியே!

விளக்கவுரை :

152. ஈணெருமையின் கழுத்தில் இட்டபொட்ட ணங்கள்போல்
மூணுநாலு சீலையில் முடிந்தவழ்க்கும் மூடர்காள்,
மூணுநாலு லோகமும் முடிவிலாத மூர்த்தியை
ஊணிஊணி நீர்முடித்த உண்மைஎன்ன உண்மையே?

விளக்கவுரை :

[ads-post]

153. சாவல்நாலு குஞ்சதஞ்சு தாயதான வாறுபோல்
காவலான கூட்டிலே கலந்துசண்டை கொள்ளுதே!
கூவமான் கிழநரியக் கூட்டிலே புகுந்தபின்
சாவல்நாலும் குஞ்சதஞ்சும் தான் இறந்து போனவே!

விளக்கவுரை :

154. மூலமாம் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை
காலமே எழுந்திருந்து நாலுகட்டு அறுப்பீரேல்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்;
ஆலம்உண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே!

விளக்கவுரை :

155. செம்பினில் களிம்புவந்த சீதரங்கள் போலவே
அம்பினில் எழுதொணாத அணியரங்க சோதியை
வெம்பிவெம்பி வெம்பியே மெலிந்துமேல் கலந்திட
செம்பினில் களிம்புவிட்ட சேதிஏது காணுமே!

விளக்கவுரை :



சிவவாக்கியம் 146 - 150 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

146. உருத்தரிப்ப தற்குமுன் உடல்கலந்தது எங்ஙனே?
கருத்தரிப்ப தற்குமுன் காரணங்கள் எங்ஙனே?
பொருத்திவைத்த போதமும் பொருந்துமாறது எங்ஙனே?
குருத்திருத்தி வைத்தசொல் குறித்துணர்ந்து கொள்ளுமே!

விளக்கவுரை :

147. ஆதிஉண்டு அந்தம்இல்லை அன்றுநாலு வேதம் இல்.
சோதிஉண்டு சொல்லுமில்லை சொல்லிறந்த தேதுமில்;
ஆதியான மூவரில் அமர்ந்திருந்த வாயுவும்
ஆதிஅன்று தன்னையும் யார்அறிவது அண்ணலே?

விளக்கவுரை :

[ads-post]

148. புலால்புலால் புலால் அதென்று பேதமைகள் பேசுகிறீர்?
புலாலைவிட்டு எம்பிரான் பிரிந்திருந்தது எங்ஙனே?
புலாலுமாய்ப் பிதற்றுமாய் பேருலாவும் தானுமாய்ப்
புலாலிலே முளைத்தெழுந்த பித்தன்காணும் அத்தனே!

விளக்கவுரை :

149. உதிரமான பால்குடித்து ஒக்கநீர் வளர்ந்ததும்
இதரமாய் இருந்ததுஒன்று இரண்டுபட்டது என்னலாம்
மதிரமாக விட்டதேது மாங்கிசப்புலால் அதென்?
சதிரமாய் வளர்ந்ததேது சைவரான மூடரே?

விளக்கவுரை :

150. உண்டகல்லை எச்சில்என்று உள்ளெறிந்து போடுகிறீர்;
கண்டஎச்சில் கையலோ பரமனுக்கும் வேறதோ?
கண்டஎச்சில் கேளடா, கலந்தபாணி அப்பிலே
கொண்டசுத்தம் ஏதடா? குறிப்பிலாத மூடரே!

விளக்கவுரை :



சிவவாக்கியம் 141 - 145 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

141. நூறுகோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம்
நூறுகோடி நாள்இருந்து ஓதினால் அதுஎன்பயன்?
ஆறும்ஆறும் ஆறுமாய் அகத்தில்ஓர் எழுத்துமாய்
ஏறுசீர் எழுத்தைஓத ஈசன்வந்து பேசுமே!

விளக்கவுரை :

142. காலைமாலை தம்மிலே கலந்துநின்ற காலனார்
மாலைகாலை யாச்சிவந்த மாயம்ஏது செப்பிடீர்?
காலைமாலை அற்றுநீர் கருத்திலே ஒடுங்கினால்
காலைமாலை ஆகிநின்ற காலன்இல்லை இல்லையே.

விளக்கவுரை :

[ads-post]

143. எட்டுமண்ட லத்துளே இரண்டுமண்டலம் வளைத்து
இட்டமண்ட லத்துளே எண்ணிஆறு மண்டலம்
தொட்டமண்ட லத்திலே தோன்றிமூன்று மண்டலம்
நட்டமண்ட லத்துளே நாதன்ஆடி நின்றதே!

விளக்கவுரை :

144. நாலிரண்டு மண்டலத்துள் நாதன்நின்றது எவ்விடம்?
காலிரண்டு மூலநாடி கண்டதங்கு உருத்திரன்;
சேலிரண்டு கண்கலந்து திசைகள் எட்டுமூடியே
மேலிரண்டு தான்கலந்து வீசிஆடி நின்றதே.

விளக்கவுரை :

145. அம்மைஅப்பன் உப்புநீர் அறிந்ததே அறிகிலீர்;
அம்மைஅப்பன் உப்புநீர் அரிஅயன் அரனுமாய்
அம்மைஅப்பன் உப்புநீர் ஆதியாதி ஆனபின்
அம்மைஅப்பன் நின்னைஅன்றி யாரும்இல்லை ஆனதே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 136 - 140 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

136. தூமைஅற்று நின்றலோ சுதீபமுற்று நின்றது?
ஆண்மைஅற்று நின்றலோ வழக்கமற்று நின்றது?
தாண்மைஅற்று ஆண்மைஅற்று சஞ்சலங்கள் அற்றுநின்ற
தூமைதூமை அற்றகாலம் சொல்லும்அற்று நின்றதே!

விளக்கவுரை :

137. ஊறிநின்ற தூமையை உறைந்துநின்ற சீவனை
வேறுபேசி மூடரே விளைந்தவாறது ஏதடா?
நாறுகின்ற தூமையல்லோ நற்குலங்கள் ஆவன?
சீறுகின்ற மூடனே அத்தூமைநின்ற் கோலமே.

விளக்கவுரை :

[ads-post]

138. தீமைகண்டு நின்றபெண்ணின் தூமைதானும் ஊறியே
சீமைஎங்கும் ஆணும்பெண்ணும் சேர்ந்துலகம் கண்டதே.
தூமைதானும் ஆசையாய் துறந்திருந்த சீவனை
தூமைஅற்று கொண்டிருந்த தேசம்ஏது தேசமே?

விளக்கவுரை :

139. வேணும்வேணும் என்றுநீர் வீண்உழன்று தேடுவீர்?
வேணும்என்று தேடினும் உள்ளதல்லது இல்லையே,
வேணும் என்று தேடுகின்ற வேட்கையைத் துறந்தபின்
வேணும்என்ற அப்பொருள் விரைந்துகாணல் ஆகுமே!

விளக்கவுரை :

140. சிட்டர்ஓது வேதமும் சிறந்ததாக மங்களும்
நட்டகார ணங்களும் நவின்றமெய்மை நூல்களும்
கட்டிவைத்த போதகம் கதைக்குகந்த பித்தெலாம்
பொட்டதாய் முடிந்ததே பிரானையான் அறிந்தபின்!

விளக்கவுரை :
Powered by Blogger.