சிவவாக்கியம் 331 - 335 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

331. ஆகிகூவென் றேஉரைத்த அட்சரத்தின் ஆனந்தம்
யோகியோகி என்பர்கோடி உற்றறிந்து கண்டிடார்
பூகமாய் மனக்குரங்கு பொங்கும்மங்கும் இங்குமாய்
ஏகம்ஏக மாகவே இருப்பர்கோடி கோடியே.

விளக்கவுரை :

332. கோடிகோடி கோடிகோடி குவலயத்தோர் ஆதியை
நாடிநாடி நாடிநாடி நாளகன்று வீணதாய்த்
தேடிதேடி தேடிதேடித் தேகமும் கசங்கியே
கூடிகூடி கூடிகூடி நிற்பர்கோடி கோடியே.

விளக்கவுரை :

[ads-post]

333. கருத்திலான் வெளுத்திலான் பரன்இருந்த காரணம்
இருத்திலான் ஒளித்திலான் ஒன்றும்இரண்டும் ஆகிலான்
ஒருத்திலான் மரித்திலான் ஒழிந்திடான் அழிந்திடான்
கருத்தில்கீயும் கூவும்உற்றோன் கண்டறிந்த ஆதியே.

விளக்கவுரை :

334. வாதிவாதி வாதிவாதி வண்டலை அறிந்திடான்
ஊதிஊதி ஊதிஊதி ஒளிமழுங்கி உளறுவான்
வீதிவீதி வீதிவீதி விடைஎருப் பொறுக்குவான்
சாதிசாதி சாதிசாதி சகாரத்தைக் கண்டிடான்.

விளக்கவுரை :

335. ஆண்மைஆண்மை ஆண்மைஆண்மை ஆண்மைகூறும் அசடரே
காண்மையான வாதிரூபம் காலகால காலமும்
பாண்மையாகி மோனமான பாசமாகி நின்றிடும்
நாண்மையாகி நரலைவாயில் நங்குமிங்கும் அங்குமே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 326 - 330 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

326. ஓடுகின்ற ஐம்புலன் ஒடுங்கஅஞ் செழுத்துளே
நாடுகின்ற நான்மறை நவிலுகின்ற ஞானிகாள்
கூடுகின்ற பண்டித குணங்கள்மூன்று எழுத்துளே
ஆடுகின்ற பாவையாய் அமைந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

327. புவனசக்க ரத்துளே பூதநாத வெளியிலே,
பொங்குதீப அங்கியுள் பொதிந்தெழுந்த வாயுவைத்
தவனசோமர் இருவரும் தாம்இயங்கும் வாசலில்
தண்டுமாறி ஏறிநின்ற சரசமான வெளியிலே.

விளக்கவுரை :

[ads-post]

328. மவுனஅஞ் செழுத்திலே வாசிஏறி மெள்ளவே
வானளாய் நிறைந்தசோதி மண்டலம் புகுந்தபின்
அவனும்நானும் மெய்கலந்து அனுபவித்த அளவிலே
அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே.

விளக்கவுரை :

329. வாளுறையில் வாளடக்கம் வாயுறையில் வாய்வடக்கம்
ஆளுறையில் ஆளடக்கம் அருமைஎன்ன வித்தைகாண்!
தாளுறையில் தாளடக்கம் தன்மையான தன்மையும்
நாளுறையில் நாளடக்கம் நானும் நீயும் கண்டதே.

விளக்கவுரை :

330. வழுத்திடான் அழித்திடான் மாயரூபம் ஆகிடான்
கழன்றிடான் வெகுண்டிடான் காலகால காலமும்
துவண்டிடான் அசைந்திடான் தூயதூபம் ஆகிடான்
சுவன்றிடான் உரைத்திடான் சூட்சசூட்ச சூட்சமே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 321 - 325 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

321. திருத்திவைத்த சற்குருவைச் சீர்பெற வணங்கிலீர்
குருக்கொடுக்கும் பித்தரே கொண்டுநீந்த வல்லீரோ?
குருக்கொடுக்கும் பித்தரும் குருக்கொள்வந்த சீடனும்
பருத்திபட்ட பாடுதான் பன்னிரண்டும் பட்டதே.

விளக்கவுரை :

322. விழித்தகண் துதிக்கவும் விந்துநாத ஓசையும்,
மேருவும் கடந்தஅண்ட கோளமும் கடந்துபோய்
எழுத்தெலாம் அழிந்துவிட்ட இந்திரசால வெளியிலே
யானும்நீயு மேகலந்த தென்னதன்மை ஈசனே.

விளக்கவுரை :

[ads-post]

323. ஓம்நமோ என்றுமுளே பாவையென்று அறிந்தபின்,
பானுடல் கருத்துளே பாவையென்று அறிந்தபின்,
நானும்நீயும் உண்டடா நலங்குலம் அதுஉண்டடா,
ஊணும்ஊணும் ஒன்றுமே உணர்ந்திடாய் உனக்குளே.

விளக்கவுரை :

324. ஐம்புலனை வென்றவர்க்கு அன்னதானம் ஈவதால்
நன்புலன்க ளாகிநின்ற நாதருக்கது ஏறுமோ
ஐம்புலனை வென்றிடாது அவத்துமே உழன்றிடும்
வம்பருக்கும் ஈவதும் கொடுப்பதும் அவத்தமே.

விளக்கவுரை :

325. ஆணியான ஐம்புலன்கள் அவையும்மொக்குகள் ஒக்குமோ?
யோனியில் பிறந்திருந்த துன்பமிக்கு மொக்குமோ?
வீணர்காள் பிதற்றுவீர் மெய்மையே உணர்திரேல்
ஊண்உறக்க போகமும் உமக்கெனக்கும் ஒக்குமே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 316 - 320 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

316. ஓதுவார்கள் ஓதுகின்ற ஓர்எழுத்தும் ஒன்றதே
வேதம் என்ற தேகமாய் விளம்புகின்றது அன்றிது,
நாதம்ஒன்று நான்முகன் மாலும்நானும் ஒன்றதே!
ஏதுமின்றி நின்றதொன்றை யான்உணர்ந்த நேர்மையே

விளக்கவுரை :

317. பொங்கியே தரித்தஅச்சுப் புண்டரீக வெளியிலே
தங்கியே தரித்தபோது தாதுமா துளையதாம்
அங்கியுள் சரித்தபோது வடிவுகள் ஒளியுமாய்க்
கொம்புமேல் வடிவுகொண்டு குருஇருந்த கோலமே.

விளக்கவுரை :

[ads-post]

318. மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறது எங்கெனில்
மண்ணினோடு சோதிபோல் கலந்தநாத விந்துவும்
அண்ணலோடு சத்தியும் அஞ்சுபஞ்சு பூதமும்
மண்ணினோடு கொடுத்தழிப் பாரொடேழும் இன்றுமே.

விளக்கவுரை :

319. ஒடுக்குகின்ற சோதியும் உந்திநின்ற ஒருவனும்
நடுத்தலத்தில் ஒருவனும் நடந்துகாலில் ஏறியே
விடுத்துநின்ற இருவரோடு மெய்யினோடு பொய்யுமாய்
அடுத்துநின்ற அறிமினோ அனாதிநின்ற ஆதியே.

விளக்கவுரை :

320. உதித்தமந் திரத்தினும் ஒடுங்கும் அக்கரத்தினும்
மதித்தமண் டலத்தினும் மறைந்துநின்ற சோதிநீ,
மதித்தமண் டலத்துளே மரித்துநீ இருந்தபின்
சிரித்தமண் டலத்துளே சிறந்ததே சிவாயமே.

விளக்கவுரை :
Powered by Blogger.