சிவவாக்கியம் 431 - 435 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

431. ஆகும் ஆகும் ஆகுமே அனாதியான அப்பொருள்
ஏகர்பாதம் நாடிநாடி ஏத்திநிற்க வல்லீரேல்
பாகுசேர்மொழி உமைக்குப் பாலனாகி வாழலாம்
வாகுடன் நீர்வன்னியை சமருவியே வருந்திடீர்.

விளக்கவுரை :

432. பாலகனாக வேணும்என்று பத்திமுற்றும் என்பிரேல்
நாலுபாதம் உண்டதில் நினைந்திரண்டு அடுத்ததால்
மூலநாடி தன்னில்வன்னி மூட்டிஅந்த நீருண
ஏலவார் குழலியூடே ஈசர்பாதம் எய்துமே.

விளக்கவுரை :

[ads-post]

433. எய்துநின்னை அன்பினால் இறைஞ்சி ஏத்தவல்லீரேல்
எய்தும் உண்மைதன்னிலே இறப்பிறப்பு அகற்றிடும்
மைஇலங்கு கண்ணிபங்கள் வாசிவானில் ஏறிமுன்
செய்தவல் வினைகளும் சிதறும்அஃது திண்ணமே.

விளக்கவுரை :

434. திண்ணம்என்று சேதிசொன்ன செவ்வியோர்கள் கேண்மினோ
அண்ணல் அன்புளன்புருகி அறிந்து நோக்கலாயிடும்
மண்ணும் அதிரவிண்ணும் அதிரவாசியை நடத்திடில்
நண்ணிஎங்கள் ஈசனும் நமதுகடலில் இருப்பனே.

விளக்கவுரை :

435. இருப்பன் எட்டெட்டுஎண்ணிலே இருந்துவேற தாகுவன்
நெருப்பவாயு நீருமண்ணும் நீள்விசும்பும் ஆகுவன்
கருப்புகுந்து காலமே கலந்தசோதி நாதனைக்
குருப்புனலில் மூழ்கினார் குறித்துணர்ந்து கொள்வரே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 426 - 430 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

426. ஓட்டுவைத்துக் கட்டிநீர் உபாயமான மந்திரம்
கட்டுபட்ட போதிலும் கருத்தன்அங்கு வாழுமோ?
எட்டும்எட்டும் எட்டுளே இயங்குகின்ற வாயுவை
வட்டம்இட்ட யவ்விலே வைத்துணர்ந்து பாருமே.

விளக்கவுரை :

427. இந்தஊரில் இல்லைஎன்று எங்குநாடி ஓடுறீர்?
அந்தஊரில்ஈசனும் அமர்ந்து வாழ்வது எங்ஙனே?
அந்தமான பொந்திலாறில் மேவிநின்ற நாதனை
அந்தமான சீயில்அவ்வில் அறிந்துணர்ந்து கொள்ளுமே.

விளக்கவுரை :

[ads-post]

428. புக்கிருந்த தும்முளே பூரியிட்ட தோத்திரம்
தொக்குசட்சு சிங்குவை ஆக்கிராணன் சூழ்ந்திடில்
அக்குமணியும் கொன்றைசூடி அம்பலத்துள் ஆடுவார்
மிக்கசோதி அன்புடன் விளம்பிடாது பின்னையே.

விளக்கவுரை :

429. பின்னெழுந்த மாங்கிசத்தைப் பேதையர் கண்பற்றியே
பின்புமாங்கி சத்தினால் போகமாய்கை பண்ணினால்
துன்புறும் வினைகள்தாம் சூழ்ந்திடும்பின் என்றலோ
அன்பராய் இருந்தபேர்கள் ஆறுநீந்தல் போல்வீடே.

விளக்கவுரை :

430. விட்டிருந்த தும்முளே விசனமற்று இருக்கிறீர்
கட்டிவைத்த வாசல்மூன்று காட்சியான வாசல்ஒன்று
கட்டிவைத்த வாசலும் கதவுதாள் திறந்துபோய்த்
திட்டமான ஈசனைத் தெளியுமாங் கிசத்துளே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 421 - 425 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

421. அம்மையப்பன் அப்பன்நீர் அமர்ந்தபோது அறிகிலீர்
அம்மையப்பன் ஆனநீர் ஆதியான் பாசமே
அம்மையப்பன் நின்னைஅன்றி யாருமில்லை ஆனபின்
அம்மையப்பன் நின்னைஅன்றி யாருமில்லை இல்லையே.

விளக்கவுரை :

422. முந்தஓர் எழுத்துளே முளைத்தெழந்த செஞ்சுடர்
அந்தஓர் எழுத்துளே பிறந்துகாயம் ஆனதும்
அந்தஓர் எழுத்துளே ஏகமாகி நின்றதும்
அந்தஓர் எழுத்தையும் அறிந்துணர்ந்து கொள்ளுமே.

விளக்கவுரை :

[ads-post]

423. கூட்டம்இட்டு நீங்களும் கூடிவேதம் ஓதுறீர்
ஏட்டகத்துள் ஈசனும் இருப்பதென்ன எழுத்துளே?
நாட்டம் இட்டு நாடிடும் நாலுமூன்று தன்னுளே
ஆட்டகத்துள் ஆடிடும் அம்மைஆணை உண்மையே.

விளக்கவுரை :

424. காக்கை மூக்கை ஆமையார் எடுத்துரைத்த காரணம்
நாக்கை ஊன்றி உள்வளைத்து ஞானநாடி ஊடுபோய்
ஏக்கைநோக்க அட்சரம் இரண்டெழுத்தும் ஏத்திடில்
பார்த்தபார்த்த திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆனதே.

விளக்கவுரை :

425. ஓசைஉள்ள கல்லைநீர் உடைத்திரண்டாய் செய்துமே
வாசலில் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசைக்கு வைத்தகல்லில் பூவும்நீரும் சாத்துறீர்
ஈசனுக்கு உகந்தகல் எந்தக்கல்லு சொல்லுமே?

விளக்கவுரை :



சிவவாக்கியம் 416 - 420 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

416. தந்தையாய் தருமம்நீ சகலதே வதையும்நீ
சிந்துநீ தெளிவும்நீ சித்திமுத்தி தானும்நீ
விந்துநீ விளைவுநீ மேலதாய் வேதம்நீ
எந்தைநீ இறைவன்நீ என்னை ஆண்ட ஈசனே.

விளக்கவுரை :

417. எப்பிறப்பி லும்பிறந்து இறந்துஅழிந்த ஏழைகாள்
இப்பிறப்பி லும்பிறந்து என்னநீறு பூசுறீர்
அப்புடன் மலம்அறுத்தே ஆசைநீக்க வல்லீரேல்
செப்புநாத ஓசையில் தெளிந்துகாணல் ஆகுமே.

விளக்கவுரை :

[ads-post]

418. எட்டுயோகம் ஆனதும் இயங்குகின்ற நாதமும்
எட்டுஅக்க ரத்துளே உகாரமும் அகாரமும்
விட்டலர்ந்து மந்திரம் வீணாதண்டின் ஊடுபோய்
அட்ட அட்சரத்துளே அமர்ந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

419. பிரான்பிரான் என்றுநீர் பிதற்றுகின்ற மூடரே
பிரானைவிட்டு எம்பிரான் பிரிந்தவாறது எங்ஙனே?
பிரானுமாய்ப் பிரானுமாயப் பேருலகந் தானுமாய்
பிரானிலே முளைத்தெழுந்த பித்தர்காணும் உம்முடல்.

விளக்கவுரை :

420. ஆதியில்லை அந்தமில்லை ஆனநாலு வேதமில்லை
சோதியில்லை சொல்லுமில்லை சொல்லிறந்த தூவெளி
நீதியில்லை நேசமில்லை நிச்சயப் படாததும்
ஆதிகண்டு கொண்டபின் அஞ்செழித்தும் இல்லையே.

விளக்கவுரை :
Powered by Blogger.