சிவவாக்கியம் 456 - 460 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

456. கருக்கலந்த காலமே கண்டுநின்ற காரணம்
உருக்கலந்த போதலோ உன்னைநான் உணர்ந்தது
விரக்கில்என் மறைக்கில்என் வினைக்கிசைந்த போதெலாம்
உருக்கலந்து நின்றபோது நீயும்நானும் ஒன்றலோ?

விளக்கவுரை :

457. ஞானநூல்கள் தேடியே நவின்றஞான யோகிகாள்,
ஞானமான சோதியை நாடிஉள் அறிகிலீர்
ஞானம்ஆகி நின்றதோர் நாதனை அறிந்தபின்
ஞானம்அல்லது இல்லைவேறு நாம் உரைத்த துண்மையே

விளக்கவுரை :

[ads-post]

458. கருத்தரிப்ப தற்குமுன் காயம்நின்றது எவ்விடம்?
உருத்தரிப்ப தற்குமுன் உயிர்ப்புநின்றது எவ்விடம்?
மருட்பொதிந்த சிந்தையில் மயக்கம்நின்றது எவ்விடம்?
விருப்புணர்ந்த ஞானிகாள் விரிந்துரைக்க வேணுமே.

விளக்கவுரை :

459. கருவினில் கருவதாய் எடுத்தஏழு தோற்றமும்
இருவினைப் பயத்தினால் பிறந்திறந்து உழன்றிடும்
மறுவினைப் பிறவிமூன்று காலமும் வகுத்தபின்
உறுவினைப்பயன் இதென்று உணர்ந்தஞானி சொல்லுமே.

விளக்கவுரை :

460. வாயில்எச்சில் போகவே நீர்குடித்துத் துப்புவீர்
வாயிருக்க எச்சில்போன வாறதென்ன எவ்விடம்?
வாயில்எச்சில் அல்லவோ நீர்உரைத்த மந்திரம்?
நாயினை அறிந்தபோது நாடும்எச்சில் ஏதுகொல்?

விளக்கவுரை :


சிவவாக்கியம் 451 - 455 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

451. அல்லதில்லை என்றுதான் ஆவியும் பொருளுடல்
நல்லஈசர் தாள்இணைக்கும் நாதனிக்கும் ஈந்நிலை
என்றும்என்னுள் நேசமும் வாசியை வருந்தினால்
தொல்லையாம் வினைவிடென்று தூரதூரம் ஆனதே.

விளக்கவுரை :

452. ஆனதே பதியது உயிர் அற்றதே பசுபாசம்
போனவே மலங்களும் புலன்களும் வினைகளும்
கானகத்தில் இட்டதீயில் காற்றுவந்து அடுத்ததோ?
ஊனகத்தில் வாயுஉன்னி ஒன்றியே உலாவுமே.

விளக்கவுரை :

[ads-post]

453. உலாவும் உவ்வும் அவ்வுமாய் உதித்தடர்ந்து நின்றதும்
உலாவிஐம் புலன்களும் ஒருதலத்து இருந்திடும்
நிலாவும்அங்கு நேசமாகி நின்றும் அமுதம்உண்டுதாம்
உலாவும் எங்கள் ஈசனைக் குறித்துணர்ந்து கும்பிடே.

விளக்கவுரை :

454. கும்பிடும் கருத்துளே குகனைஐங் கரனையும்
நம்பியே இடம்வலம் நமக்கரித்து நாடிட
எம்பிரானும் அம்மையும் இருத்தியே நடுவனைத்
தும்பிபோல வாசகம் தொடர்ந்துசோம்பி நீங்குமே.

விளக்கவுரை :

455. நீங்கும்ஐம் புலன்களும் நிறைந்தவல் வினைகளும்
ஆங்காரமாம் ஆசையும் அருந்தடந்த பாதமும்
ஓங்காரத்தின் உள்ளிருந்து ஒன்பதொழிந் தொன்றிலத்
தூங்காஈசர் சொற்படி துணிந்திருக்க சுத்தமே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 446 - 450 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

446. பாரும்எந்தை ஈசன்வைத்த பண்பிலே இருந்துநீர்
சேருமே நடுவறிந்து செம்மையான அப்பொருள்
வேரையும் முடியையும் விரைந்துதேடி மால்அயன்
பார்இடந்து விண்ணிலே பிறந்தும்கண்டது இல்லையே.

விளக்கவுரை :

447. கண்டிலாது அயன்மால்என்று காட்சியாகச் சொல்லுறீர்
மிண்டினால் அரசனும் மேவலாய் இருக்குமோ?
தொண்டுமட்டும் அன்புடன் தொழுதுநோக்க வல்லீரேல்
பண்டுமுப் புரம்எரிந்த பத்திவந்து முற்றுமே.

விளக்கவுரை :

[ads-post]

448. முற்றுமே அவன்ஒழிந்து முன்பின்ஒன்றும் காண்கிலேன்
பற்றிலாத ஒன்றுதன்னை பற்றிநிற்க வல்லது
கற்றிதாலோ ஈசர்பாதம் காணலா யிருக்குமோ?
பெற்றபேரை அன்புடன் பிரியமாகக் கேளுமே.

விளக்கவுரை :

449. கேட்டுநின்ற உன்னிலை கிடைத்த காலந்தன்னுளே
வாட்டமுள்ள தத்துவ மயக்கமும் அகற்றிடும்
வீட்டிலே வெளியதாகும் விளங்கவந்து நேரிடும்
கூட்டிவன்னி மாருதம் குயத்தைவிட்டு எழுப்புமே.

விளக்கவுரை :

450. எழுப்பி மூலநாடியை இதப்படுத்த லாகுமோ
மழுப்பிலாத சபையைநீர் வலித்துவாங்க வல்லீரேல்
சுழுத்தியும் கடந்துபோய் சொப்பனத்தில் அப்புறம்
அழுத்திஓர் எழுத்துளே அமைப்பதுஉண்மை ஐயனே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 441 - 445 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

441. ஊன்றிஏற்றி மண்டலம் உருவிமூன்று தாள்திறந்து
ஆன்றுதந்தி ஏறிடில் அமுதம்வந்து இறங்கிடும்
நான்றிதென்று தொண்டருக்கு நாதனும் வெளிப்படும்
ஆன்றியும் உயிர்ப்பரம் பொருந்திவாழ் வதாகவே.

விளக்கவுரை :

442. ஆகமூல நாடியில் அனல்எழுப்பி அன்புடன்
மோகமான மாயையில் முயல்வதும் ஒழிந்திடில்
தாகமேரு நாடியே அனேகமான வாறுபோல்
ஏகர்பாதம் அன்புடன் இறைஞ்சினார் அறிவரே.

விளக்கவுரை :

[ads-post]

443. அறிந்துநோக்கி உம்முளே அயந்தியானம் உம்முளே
பிறந்திராமல் ஏகர்பாதம் பெற்றிருப்பது உண்மையே
அறிந்துமீள வைத்திடா வகையுமரணம் ஏத்தினார்
செறிந்துமேலை வாசலைத் திறந்துபாரும் உம்முளே.

விளக்கவுரை :

444. சோதியாக உம்முளே தெளிந்துநோக்க வல்லீரேல்
சோதிவந்து உதித்திடும் துரியகீதம் உற்றிடும்
ஆதி சக்கிரத்தினில் அமர்ந்துதீர்த்தம் ஆடுவன்
பேதியாது கண்டுகொள் பிராணனைத் திருத்தியே.

விளக்கவுரை :

445. திருவுமாகிச் சிவனுமாகித் தெளிந்துளோர்கள் சிந்தையில்
மருவிலே எழுந்துவீசும் வாசனைய தாகுவன்
கருவிலே விழுந்தெழுந்த கந்மவாத னைஎலாம்
பரிதமுன் இருளதாய் பரியும்அங்கி பாருமே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 436 - 440 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

436. கொள்ளுவார்கள் சிந்தையில் குறிப்புணர்ந்த ஞானிகள்
அள்ளுவார்கள் பக்குவத்தில் வேண்டிவேண்டி ஏத்தினால்
உள்ளுமாய்ப் புறம்புமாம் உணர்வதற்கு உணர்வுமாய்த்
தெள்ளிதாக நின்றசோதி செம்மையைத் தெளிந்திடே.

விளக்கவுரை :

437. தெளிந்தநற் சரியைதன்னில் சென்று சாலோகம்பெறும்
தெளிந்தநற் கிரியைபூசை சேரலாம் சாமீபமே
தெளிந்தநல்ல யோகம் தன்னில் சேரலாகும் சாரூபம்
தெளிந்தஞானம் நான்கிலும் சேரலாம் சாயுச்யமே.

விளக்கவுரை :

[ads-post]

438. சேருவார்கள் ஞானம்என்று செப்புவர் தெளிவுளோர்
சேருவார்கள் நாலுபாதச் செம்மைஎன்ற தில்லையே
சேருவார்கள் சிவகதி திருவருளைப் பெற்றபேர்
சேருமாறு கண்டுநாலும் செய்தொழில் திடப்படே.

விளக்கவுரை :

439. திறமலிக்கு நாலுபாதம் செம்மையும் திடப்படார்
அறிவிலிகள் தேசநாடி அவத்திலே அலைவதே
குறியதனைக் காட்டிஉள் குறித்துநோக்க வல்லீரேல்
வெறிகமழ் சடையுடையோன் மெய்ப்பதம் அடைவரே.

விளக்கவுரை :

440. அடைவுளோர்கள் முத்தியே அறிந்திடாத மூடரே,
படையுடைய தத்துவமும் பாதகங்கள் அல்லவோ?
மடைதிறக்க வாரியின் மடையில் ஏறு மாறுபோல்
உடலில்மூல நாடியைஉயர ஏற்றி ஊன்றிடே.

விளக்கவுரை :
Powered by Blogger.