சிவவாக்கியம் 396 - 400 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

396. அவ்வுதித்த அட்சரத்தின் உட்கலந்த அட்சரம்
சவ்வுதித்த மந்திரம் சம்புளத்து இருந்ததால்
மவ்வுதித்த மாய்கையால் மயங்குகின்ற மாந்தர்காள்,
உவ்வுதித்தது அவ்வுமாய் உருத்தரித்தது உண்மையே.

விளக்கவுரை :

397. அகாரமென்னும் அக்கரத்தில் அக்கரம் ஒழிந்ததோ?
அகாரமென்னும் அக்கரத்தில் அவ்வுவந்து உதித்ததோ?
உகாரமும் அகாரமும் ஒன்றிநன்று நின்றதோ?
விகாரமற்ற ஞானிகாள், விரிந்துரைக்க வேணுமே.

விளக்கவுரை :

[ads-post]

398. சத்தியாவது உன்னுடல், தயங்குசீவன் உட்சிவம்
பித்தர்காள் இதற்குமேல் பிதற்றுகின்றது இல்லையே.
சுத்திஐந்து கூடம்ஒன்று சொல்லிறந்த தோர்வெளி
சத்திசிவமும் ஆகிநின்று தண்மையாவது உண்மையே.

விளக்கவுரை :

399. சுக்கிலத் துளையிலே சுரோணிதக் கருவுளே
முச்சதுர வாசலில் முளைத்தெழுந்த மேட்டினில்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்
உச்சரிக்கும் மந்திரம் ஓம்நம சிவாயமே.

விளக்கவுரை :

400. அக்கரம் அனாதிஅல்ல ஆத்துமம் அனாதிஅல்ல
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதிஅல்ல
தக்கமிக்க நூல்களும் சாத்திரமும் அனாதிஅல்ல
ஒக்கநின்று உடன்கலந்த உண்மைகாண் அனாதியே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 391 - 395 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

391. வாயிலிட்டு நல்லுரிசை அட்சரத் தொலியிலே
கோயிலிட்டு வாவியும் அங்கொம்பிலே உலர்ந்ததும்
ஆயிலிட்ட காயமும் அனாதியிட்ட சீவனும்
வாயுவிட்ட வன்னியும் வளர்ந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

392. அட்சரத்தை உச்சரித்து அனாதியங்கி மூலமாய்
அட்சரத்தை யும்திறந்து அகோரமிட்டு அலர்ந்ததும்
மட்சரத்தில் உட்கரம் அகப்படக் கடந்தபின்
அட்சரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

[ads-post]

393. கோயிலும் குளங்களும் குறியினிற் குருக்களாய்
மாயிலும் மடியிலும் மனத்திலே மயங்குறீர்,
ஆயனை அரனையும் அறிந்துணர்ந்து கொள்விரேல்
தாயினும் தகப்பனோடு தான்அமர்ந்தது ஒக்குமே.

விளக்கவுரை :

394. கோயில் எங்கும் ஒன்றலோ, குளங்கள்நீர்கள் ஒன்றலோ?
தேயுவாயு ஒன்றலோ, சிவனும்அங்கே ஒன்றலோ?
ஆயசீவன் எங்குமாய் அமர்ந்துதவாரது ஒன்றலோ?
காயம்ஈதறிந்த பேர்கள் காட்சியாவர் காணுமே.

விளக்கவுரை :

395. காதுகண்கள் மூக்குவாய் கலந்தவாரது ஒன்றலோ?
சோதியிட்டு எடுத்ததும் சுகங்கள்அஞ்சும் ஒன்றலோ?
ஓதிவைத்த சாத்திரம் உதித்தவாரது ஒன்றலோ?
நாதவீடு அறிந்தபேர்கள் நாதர்ஆவர் காணுமே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 386 - 390 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

386. வாடிலாத பூமலர்ந்து வண்டுரிசை நாவிலே
ஓடிநின்று உருவெடுத்து உகாரமாய் அலர்ந்ததும்
ஆடிஆடி அங்கமும் அகப்படக் கடந்தபின்
கூடிநின்று உலாவுவமே குருவிருந்த கோலமே.

விளக்கவுரை :

387. விட்டடி விரைத்ததோ அவ்வேர்உருக்கி நின்றதோ
எட்டிநின்ற சீவனும் ஈரேழ்லோகம் கண்டதோ?
தட்டுருவம் ஆகிநின்ற சதாசிவத்து ஒளியதோ
வட்டவீடு அறிந்தபேர்கள் வானதேவர் ஆவரோ.

விளக்கவுரை :

[ads-post]

388. வானவர் நிறைந்தசோதி மானிடக் கருவிலே
வானதேவர் அத்தனைக்குள் வந்தடைவர் வானவர்
வானகமும் மண்ணகமும் வட்டவீடு அறிந்தபின்
வானெலாம் நிறைந்தமன்னு மாணிக்கங்கள் ஆனவே.

விளக்கவுரை :

389. பன்னிரண்டு கால்நிறுத்தி பஞ்சவண்ணம் உற்றிடின்
மன்னியே வெளிக்குள்நின்று வேறிடத்து அமர்ந்ததும்
சென்னியாம் தலத்திலே சீவன்நின்று இயங்கிடும்
பன்னிஉன்னி ஆய்ந்தவர் பரப்பிரம்மம் ஆனதே.

விளக்கவுரை :

390. உச்சகண்டு கண்கள்கட்டி உண்மைகண்டது எவ்விடம்?
மச்சுமாளி கைக்குளே மானிடம் கலப்பிரேல்
எச்சிலான வாசலும் ஏகபோகம் ஆய்விடும்
பச்சைமாலும் ஈசனும் பரத்ததே சிவாயமே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 381 - 385 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

381. கருத்தரித்து உதித்தபோது கமலபீடம் ஆனதும்
கருத்தரித்து உதித்தபோது காரணங்கள் ஆனதும்
கருத்தரித்து உதித்தபோது காண்இரண்டு கண்களாய்க்
கருத்தினின்று உதித்ததே கபாலம் ஏந்தும் நாதனே.

விளக்கவுரை :

382. ஆனவன்னி மூன்றுகோணம் ஆறிரண்டு எட்டிலே
ஆனசீவன் அஞ்செழுத்து அகாரமிட்டு அலர்ந்ததும்
ஆனசோதி உண்மையும் அனாதியான உண்மையும்
ஆனதாய் தானதாய் அவலமாய் மறைந்திடும்.

விளக்கவுரை :

[ads-post]

383. ஈன்றெழுந்த எம்பிரான் திருவரங்க வெளியிலே
நான்றபாம்பின் வாயினால் நாலுதிக்கும் ஆயினான்
மூன்றுமூன்று வளையமாய் முப்புரம் கடந்தபின்
ஈன்றெழுந்த அவ்வினோசை எங்குமாகி நின்றதே.

விளக்கவுரை :

384. எங்கும்எங்கும் ஒன்றலோ ஈரேழ்லோகமும் ஒன்றலோ?
அங்கும்இங்கும் ஒன்றலோ அனாதியானது ஒன்றலோ?
தங்குதாபரங்களும் தரித்தவாரது ஒன்றலோ?
உங்கள்எங்கள் பங்கினில் உதித்ததே சிவாயமே.

விளக்கவுரை :

385. அம்பரத்தில் ஆடும்சோதி யானவன்னி மூலமாம்
அம்பரமும் தம்பரமும் அகோரமிட்டு அலர்ந்ததே
அம்பரக் குழியிலே அங்கமிட்டு ருக்கிட
அம்பரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே.

விளக்கவுரை :
Powered by Blogger.