சிவவாக்கியம் 431 - 435 of 525 பாடல்கள்
431. ஆகும் ஆகும் ஆகுமே அனாதியான அப்பொருள்
ஏகர்பாதம் நாடிநாடி ஏத்திநிற்க
வல்லீரேல்
பாகுசேர்மொழி உமைக்குப் பாலனாகி
வாழலாம்
வாகுடன் நீர்வன்னியை சமருவியே
வருந்திடீர்.
விளக்கவுரை :
432. பாலகனாக வேணும்என்று பத்திமுற்றும் என்பிரேல்
நாலுபாதம் உண்டதில் நினைந்திரண்டு
அடுத்ததால்
மூலநாடி தன்னில்வன்னி மூட்டிஅந்த
நீருண
ஏலவார் குழலியூடே ஈசர்பாதம்
எய்துமே.
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
433. எய்துநின்னை அன்பினால் இறைஞ்சி ஏத்தவல்லீரேல்
எய்தும் உண்மைதன்னிலே இறப்பிறப்பு
அகற்றிடும்
மைஇலங்கு கண்ணிபங்கள் வாசிவானில்
ஏறிமுன்
செய்தவல் வினைகளும் சிதறும்அஃது
திண்ணமே.
விளக்கவுரை :
434. திண்ணம்என்று சேதிசொன்ன செவ்வியோர்கள் கேண்மினோ
அண்ணல் அன்புளன்புருகி அறிந்து
நோக்கலாயிடும்
மண்ணும் அதிரவிண்ணும் அதிரவாசியை
நடத்திடில்
நண்ணிஎங்கள் ஈசனும் நமதுகடலில்
இருப்பனே.
விளக்கவுரை :
435. இருப்பன் எட்டெட்டுஎண்ணிலே இருந்துவேற தாகுவன்
நெருப்பவாயு நீருமண்ணும்
நீள்விசும்பும் ஆகுவன்
கருப்புகுந்து காலமே கலந்தசோதி
நாதனைக்
குருப்புனலில் மூழ்கினார்
குறித்துணர்ந்து கொள்வரே.
விளக்கவுரை :