சிவவாக்கியம் 476 - 480 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

476. கள்ளவுள்ள மேயிருக்கக் கடந்தஞானம் ஓதுவீர்
கள்ளம்உள் அறுத்தபோது கதிஇதன்றிக் காண்கிலீர்?
உள்ளமே விளக்கிநித்தம் ஒளியணுக வல்லீரேல்
தெள்ளு ஞானம் உம்முளே சிறந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

477. காணவேண்டும் என்றுநீர் கடல்மலைகள் ஏறுவீர்
ஆணவம் அதல்லவோ அறிவில்லாத மாந்தரே?
வேணும் என்று அவ்வீசர்பாதம் மெய்யுளே தரிப்பிரேல்
தாணுவாக நின்ற சீவன் தான்சிவம் அதாகுமே.

விளக்கவுரை :

[ads-post]

478. அணுவினோடு அகண்டமாய் அளவிடாத சோதியைக்
குணமதாக உம்முளே குறித்துநோக்கின் முத்தியாம்
மிணமிணென்று விரலைஎண்ணி மீளொணா மயக்கமாய்த்
துணிவிலாத படியினால் தொடர்ந்து பூசை செய்குவீர்.

விளக்கவுரை :

479. எச்சில்எச்சில் என்றுநீர் இடைந்திருக்கும் ஏழைகாள்
துச்சில்எச்சில் அல்லவோ தூயகாயம் ஆனதும்
வைத்தெச்சில் தேனலோ, வண்டின்எச்சில் பூவலோ?
கைச்சுதாடல் வைத்துடன் கறந்தபாலும் எச்சிலே!

விளக்கவுரை :

480. தீர்த்தலிங்க மூர்த்திஎன்று தேடிஓடும் தீதரே
தீர்த்தலிங்கம் உள்ளில்நின்ற சீவனைத் தெளியுமே
தீர்த்தலிங்கம் உம்முளே தெளிந்துகாண வல்லீரேல்
தீர்த்தலிங்கம் தான்அதாய்ச் சிறந்ததே சிவாயமே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 471 - 475 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

471. என்அகத்தில் என்னைநான் எங்கும்ஓடி நாடினேன்
என்அகத்தில் என்னைஅன்றி ஏதும்ஒன்று கண்டிலேன்
மின்எழுப்பி விண்ணகத்தின் மின்ஒடுங்கு மாறுபோல்
என்அகத்துள் ஈசனோடு யானும்அல்ல தில்லையே.

விளக்கவுரை :

472. இடங்கள்பண்ணி சுத்திசெய்தே இட்டபீட மீதிலே
அடங்கநீறு பூசல்செய்து அருந்தவங்கள் பண்ணுவீர்
ஒடுங்குகின்ற நாதனார் உதிக்கும்ஞானம் எவ்விடம்?
அடங்குகின்றது எவ்விடம்? அறிந்துபூசை செய்யுமே.

விளக்கவுரை :

[ads-post]

473. புத்தகங் களைசுமந்து பொய்களைப் பிதற்றுவீர்.
செத்திடம் பிறந்திடம் அதுஎங்ஙன்என்று அறிகிலீர்
அத்தனைய சிந்தனை அறிந்துநோக்க வல்லீரேல்
உத்தமத்துள் ஆயசோதி உணரும்போகம் ஆகுமே.

விளக்கவுரை :

474. அருளிலே பிறந்துநின்று மாயைரூபம் ஆகியே
இருளிலே தயங்குகின்ற ஏழைமாந்தர் கேண்மினோ.
பொருளிலே தவம்புனைந்து பொருந்திநோக்க வல்லீரேல்
மருள்அதுஏது? வன்னியின் மறைந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

475. தன்மசிந்தை ஆம்அளவும் தவமறியாத் தன்மையாய்க்
கன்மசிந்தை வெயில்உழன்று கருத்தழிந்த கசடரே,
சென்மம்சென்மம் தேடியும் தெளிவொணாத செல்வனை
நன்மையாக உம்முளே நயந்துகாண வேணுமே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 466 - 470 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

466. தீட்டம்தீட்டம் என்றுநீர் தினமும்மூழ்கும் மூடரே
தீட்டமாகி அல்லவோ திரண்டுகாயம் ஆனதும்
பூட்டகாயம் உம்முளே புகழுகின்ற பேயரே
தீட்டுவந்து கொண்டலோ தெளிந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

467. உந்திமேலே நாலுமூன்று ஓம்நமசி வாயமாம்
சந்திசந்தி என்றுநீர் சாற்றுகின்ற பேயரே
மூந்தவந்து நம்முளே மூலநாடி ஊடுபோய்
அந்திசந்தி அற்றிடம் அறிந்துணர்ந்து பாருமே.

விளக்கவுரை :

[ads-post]

468. வன்னிமூன்று தீயினில் வாழும்எங்கள் நாதனும்
கன்னியான துள்ளிருக்கக் காதல்கொண்டது எவ்விடம்
சென்னிநாலு கையிரண்டு சிந்தையில் இரண்டிலொன்று
உன்னியுன்னி நம்முளே உய்த்துணர்ந்து பாருமே.

விளக்கவுரை :

469. தொண்டுசெய்து நீங்களும் சூழஓடி மாள்கிறீர்
உண்டுஉழன்று நும்முளே உற்றுணர்ந்து பார்க்கிலீர்
வண்டுலாவு சோலைசூழ வாழும்எங்கள் நாதனும்
பண்டுபோல நும்முளே பகுத்திருப்பன் ஈசனே.

விளக்கவுரை :

470. பரம்உனக்கு எனக்குவேறு பயம்இல்லை பாரையா
கரம்உனக்கு நித்தமும் குவித்திடக் கடமையாம்
சிரமுருக்கி அமுதளித்த சீருலாவும் நாதனே
உரம்எனக்கு நீஅளித்த உண்மைஉண்மை உண்மையே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 461 - 465 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

461. தொடக்கதென்று நீர்விழத் தொடங்குகின்ற ஊமர்காள்
தொடக்கிருந்தது எவ்விடம்? சுத்தியானது எவ்விடம்?
தொடக்கிருந்த வாறறிந்து சுத்தபண்ண வல்லீரேல்
தொடக்கிலாத சோதியைத் தொடர்ந்துகாண லாகுமே.

விளக்கவுரை :

462. மேதியோடும் ஆவுமே விரும்பியே புணர்ந்திடில்
சாதிபேத மாம்உருத் தரிக்கும்ஆறு போலவே
வேதம்ஓது வானுடன் புலைச்சிசென்று மேவிடில்
பேதமாய்ப் பிறக்கிலாத வாறதென்ன பேசுமே.

விளக்கவுரை :

[ads-post]

463. வகைக்குலங் கள்பேசியே வழக்குரைக்கும் மாந்தர்காள்
தொகைக்குலங் கள்ஆனநேர்மை நாடியே உணர்ந்தபின்
மிகைத்த சுக்கிலம் அன்றியே வேறுஒன்று கண்டிலீர்
நகைக்குமாறு மனு எரிக்கநாளும்நாளும் நாடுவீர்.

விளக்கவுரை :

464. ஓதும்நாலு வேதமும் உரைத்த சாத்திரங்களும்
பூதத்தத்து வங்களும் பொருந்தும் ஆகமங்களும்
சாதிபேத உண்மையும் தயங்குகின்ற நூல்களும்
பேதபேதம ஆகியே பிறந்துஉழன்று இருந்ததே.

விளக்கவுரை :

465. அங்கலிங்கம் பூண்டுநீர் அகண்டபூசை செய்கிறீர்
அங்கலிங்கம் பூண்டுநீர் அமர்ந்திருந்த மார்பனே
எங்கும்ஓடி எங்கும்எங்கும் ஈடழிந்து மாய்கிறீர்
செங்கல்செம்பு கல்லெலாம் சிறந்துபார்க்கும் மூடரே.

விளக்கவுரை :
Powered by Blogger.