பட்டினச் சித்தர் ஞானம் 31 - 35 of 101 பாடல்கள்


31. காணா ததைக்கண்டால் கண்டதெல்லாங்காணாது
வீணாவல் கொண்டுள் மெலியாதே - நாணாதே
இந்திரியத் தோடு பிணங்காதே பாவிநெஞ்சே
செஞ்சொல்மறை அக்கரத்தை தேடு.

விளக்கவுரை :

32. தேடினா லைந்துதிரு வக்கரத்தைச் சென்றுவெளி
நாடினால் நெஞ்சே நலம்பெறலாம் - வாடியே
பொல்லாப் புவிகாணப் போகமதை நம்பாதே
எல்லாம் வெயில் மஞ்சளே.

விளக்கவுரை :


33. மஞ்சனைய கூந்தல் மடவாரைக் கண்டுருகும்
பஞ்சமல நெஞ்சே பகரக்கேள் - மஞ்சள்
மயங்காணும் இந்தவுடல் மாயவாழ் வெல்லாம்
அயன் காணழி சூத்திரம்.

விளக்கவுரை :

34. சூத்திரத்தா லாடும் சுழுமுனையைத் தான்திறந்து
பார்த்திருந்தால் வாராது பாவமெல்லாம் - சூத்திரத்தைப்
பாராமலேயிருந்து பாவிமன மேபிறக்க
வாராம லேயிருக்க வா.

விளக்கவுரை :


35. வாசி தனைப்பிடித்து வண்கனலோ டேசேர்த்துச்
சீசீ யெனவே திரியாமல் - மாசி
இருளா னதைச் சேர்த்து இருந்தாயே நெஞ்சே
பொருளா னதைமறந்து போட்டு.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர் ஞானம் 26 - 30 of 101 பாடல்கள்


26. அச்சத்தால் ஐம்புலனும் ஆங்காரத் தால்மேய்ந்த
கச்சத்தா னியச்சயமாய்க் கள்ளதோ - மெச்சத்தான்
அண்டமெல்லாம் ஊடுருவ ஆகாச முங்கடந்து
நின்ற நிலைதான் நிலை.

விளக்கவுரை :

27. நிலையறிந்து நில்லாமல் நீபாவி நெஞ்சே
அலைமதி போலே தினமும் ஆனாய் - கலையறிந்து
மாரனையுங் கூற்றினையும் மாபுரத்தை யும்புகைத்த
வீரனையும் தேட விரும்பு.

விளக்கவுரை :

28. விரும்பித் தனித்தனியே மெய்யுணரா தேமா
இரும்புண்ட நீர்போல வேகும் - கரும்பதனைத்
தின்றாலல்லோ தெரியும் நெஞ்சே நின் ஐம்புலனை
வென்றாலல்லோ வெளிச்ச மாம்.

விளக்கவுரை :

29. வெளிச்சமில்லா வீடே விளக்கேற் றினதாக்
களிசிறந்து நின்றதைக்கா நெஞ்சே - வெளிச்சமற
தொண்ணூற் றறுதத் துவமொன்றாய்த் தோன்றுங்காண்
எண்ணிலிவை காணா திருட்டு.

விளக்கவுரை :

30. இருட்டனைய மாய்கையா லெவ்வுலகுந் தாய
பொருட்டனையே மூடு ஐம்புலனால் - திருட்டுமன
வண்டருடன் கூடாதே வாழ்மனமே நாமிருவோர்
கண்டுகொள்வோம் காணா தது.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர் ஞானம் 21 - 25 of 101 பாடல்கள்


21. பாலிக்கும் தோல் தனத்தை பாராதே மங்கையர்கள்
காலிடுக்கை நத்திக் கரையாதே - கோலெடுத்து   
வீர மறலி இவருமுன் வினையறுக்கும்
பார வழிஇன்னருளைப்பார்.

விளக்கவுரை :


22. பார்த்த இடமெல்லாம் பரமென் றிருமனமே
காற்றனல் மண்நீர் வெளியாம் கண்டவெல்லாம் - மாத்திரண்ட
ஐம்புலனு நில்லா ஆசைகளும் நில்லாவே
என்புடலும் நில்லாது இனி.

விளக்கவுரை :

23. இனியசுகம் ஐம்புலனென்று எண்ணாதே நெஞ்சே
இனிய சுகமற வாதே - இனியசுகம்
கண்டதெல்லா மெவ்வுலகு காணாத இவ்வுலகில்
நின்றதோ நில்லாததா.

விளக்கவுரை :


24. நில்லாமல் ஓடுகின்ற நெஞ்சே நிலையில்லா
எல்லாம் பகையா யிருக்குங்காண் - பொல்லாக்
கருக்குழியிலே பிறந்த கன்மவினை யானால்
திருக்கறுக்க வேணும் தினம்.

விளக்கவுரை :


25. தினந்தினைப் போதாகிலுந்தான் தீதறநில் லாமல்
இனம்பிரிந்த மான்போல் இருந்தாய் - தினந்தினமும்
ஓங்காரத் துள்ளொளியை உற்றுணர்ந்த நீமனமே
ஆங்கார அச்சம் அறு.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர் ஞானம் 16 - 20 of 101 பாடல்கள்


16. பாக்கியத்தைக் கண்டு பரிந்து மகிழாதே
தாக்குமிடி வந்தால் சலியாதே - நோக்குமே
ஒருவத்தன் திருவிளையாட் டென்று உணரு நெஞ்சே
கருத்தாலே நின்று கருது.

விளக்கவுரை :

17. கருதாதே மங்கையர் காமவலைக் கேங்கி
உருகாதே நெஞ்சே ஒருவன் - இருகாலைக்
காத்தயர்ந்து சேர்த்துக் கனலைக்கண் காட்டினகண்
போற்றிப்பார், ஒத்தநல் பொன்.

விளக்கவுரை :

18. பொன்னாசை மண்ணாசை பூங்குழலா ராசையெனச்
சொன்னாசை யென்றறிந்து சோராதே - எந்நாளும்
ஈசன் அமைத்தாங் கிருக்குங்கா ணிம்மூன்றும்
பாசமது நெஞ்சே பரிந்து.

விளக்கவுரை :

19. பரிந்து திரியாதே பார்வினைக்கும் அஞ்சாதே
அறிந்துருகிச் சிந்தித் தலையேல் - வருந்தி
நடந்துசித்ர நாடியிலே நாதமறி நெஞ்சே
உடைந்திடு முன்னே உடம்பு.

விளக்கவுரை :

20. உடம்பழிந்த பின்மனமே ஒன்றுங் கிடையாது
உடம்பழியு முன்கண் டுணராதே - உடம்பிற்
கருநிறத்தைச் சேர்ந்து கருமலச் சிற்றற்றுப்
பருகு கலைமதியப் பால்.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர் ஞானம் 11 - 15 of 101 பாடல்கள்


11. கருத்து வேறாகாதே கண்டிடத்து ஓடாதே
விரித்துப் பலவேடம் மேவாய் - பெருத்ததொரு
சஞ்சலத்தை விட்டுச் சலமறிந்து காண்மனமே
அஞ்செழுத் தாலொன் பது.

விளக்கவுரை :

12. ஒன்பது வாய்க்கூட்டை உறுதிஎன்று நம்பாதே
ஐம்புல னேயென் றணுகாதே - இன்பமுடன்
சிற்பரத்தி னுள்ளே தெளிந்தபர மானந்தத்
துட்பொருளே மெய்யென் றுணர்..

விளக்கவுரை :

13. மெய்யுணர்ந்து பாராமல் விரிந்தகன்று போகாதே
அய்யன் திருவிளையாட்டா நெஞ்சே - செய்யதோர்
ஆணெழுத்தும் பெண்ணெழுத்துமாகி நடுநின்ற
காணும் பொருளுரைக்குங் கல்.

விளக்கவுரை :

14. கல்லான நெஞ்சே கவலைக் கருத்தாகிப்
பொல்லாப் பவக்கடலில் போகாதே - எல்லாம்
செலக்குமிழி யென்று நினை செம்பொன்னம்ப லத்தை
கலக்கமறப் பார்த்தே கரை.

விளக்கவுரை :


15. கரைதெரியா இன்பக் கடலில் மூழ்காதே
வரைகடந்த வாழ்வைநத் தாதே - உரையிறந்த
ஓசைவிந்து வேமனமே உற்றசபை யாலறிந்து
நேசமுள்ள பாக்கியத்தில் நில்.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர் ஞானம் 6 - 10 of 101 பாடல்கள்


6. இருவினைக்கு உளாகாதே என்னுடமைஎண்ணாதே
பெருகுசினங்கொண்டு பினத்தாதே - மருவுமலக்   
கள்ளமெலாம் விட்டுக் கரைந்து கரைந்துருகி
உள்ளுணர்ந்து நெஞ்சேபார் ஒன்று.

விளக்கவுரை :
    
7. ஒன்றும் அறியாதே ஓடி அலையாதே
சென்று மயங்கித் திரியாதே - நின்ற
நிலை பிரியா தேநெடிய னெஞ்சே கொடிய
புலைவினையும் மாற்றும் பொருள்.

விளக்கவுரை :

8. பொருளுடைமை நம்பாதே பொய்வாழ்வை நத்தாதே
இருளுறவை நம்பி இராதே - பொருளுறவு
கொண்டறிவி னாலே குறித்து வெளியதனைக்
கண்டுபிடித் தேறுநெஞ்சே காற்று.

விளக்கவுரை :
    
9. காற்றுடனே சேர்ந்து கனலுருவைக் கண்டவழி
மாற்றி இனிப்பிறக்க வாராதே - ஏற்றபடி
ஓடி அலையாதே ஓங்காரத் துள்ளொளியை
நாடியிருப் போம்மனமே நாம்.

விளக்கவுரை :

10. நானென தென்றுவினை நாடி அலையாதே
தானவனே யென்று தரியாய்நீ - ஏன்மனமே
வீணாவல் கொள்ளாதே மேலாம் பழம்பொருளைக்
காணாவல் கொள்ளாய் கருத்து.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர் ஞானம் 1 - 5 of 101 பாடல்கள்


காப்பு

நேரிசை வெண்பா

   
1. நண்பான நெஞ்சுக்கே ஞானத்தால் நல்லபுத்தி
வெண்பாவாய் நூறும் விளம்பவே - பண்பாக்
ககனப் பதமுறவக் கன்ம மருகக்
ககனகதிர் வேல்முருகன் காப்பு.

விளக்கவுரை :
    
2. நெஞ்சுட னே தான்புலம்பி நீலநிறத்தாளீன்ற
குஞ்சரத்தை ஆதரித்துக் கும்பிட்டால் - கஞ்சமுடன்
காமமுதல் மும்மலத்தின் கட்டறுத்து ஞானமுடன்
பூமிதனில் வாழ்வ ரெப்போதும்.

விளக்கவுரை :
    
3. எப்போதிறைவன் எழுத்தைவிட்டுத் தப்புவோம்
எப்போது எழுத்திரெண்டை ஏத்துவோம் - எப்போது
காமன்வலையறுப்போம் காரொளியைக் கண்டுநெஞ்சே
ஏமன்வலை அறுப்ப தென்று.

விளக்கவுரை :
    
4. என்றும் பயமறவே ஈரெழுத்தும் ஓரெழுத்தாய்
நின்றசிவ லிங்கத்தை நெஞ்சேகள் - உண்டுறங்கித்
தேசமெல்லாம் நின்றசைந்த தீயெழுத்தே லிங்கங்காண்
ஆசைவிந்தே ஆவுடையாள்.

விளக்கவுரை :    
5. ஆவுடையா ளோடிருந்தேன் அருளானந் தம்பெறவே
கோவுடையாள் நின்றதினம் கூடிய - பூவுடையாள்
கட்டழகி யைத்தான் கடந்து பெருவெளியில்
இட்டமுடன் நெஞ்சேஇரு.

விளக்கவுரை :

காகபுசுண்டர் குறள் 11 - 16 of 16 பாடல்கள்

    
11. உலகி லறிந்தோ ரொருநாளும் மாளார்
பல நினைவை விட்டுநீ பார்.   

விளக்கவுரை :
   
12. கண்டோருஞ் சொல்லார் கருத்தாற் பெரியோரைத்
தொண்டுசெய்து பெற்ற சுகம்.   

விளக்கவுரை :
   
13. ஆதியிற் சொன்னவிய ரண்ட மதையெடுத்து
மாதுசிவன் பூசைசெய்து வை.   

விளக்கவுரை :   
14. முப்பொருளைச் சுட்டு முழுதழுது நீறாக்கித்
தப்பாம லுண்டுநிலை சார்.   

விளக்கவுரை :
   
15. யோகமுடன் கற்ப முரைத்தேனீ ரெட்டினில்
வேகமுடன் கண்டுணரு வீர்.   

விளக்கவுரை :
   
16. வாசிமுனி மைந்தா மருவு பிரமத்தில்
மோசம்வா ராகுறள்முற் றும்.   

விளக்கவுரை :

காகபுசுண்டர் குறள் 6 - 10 of 16 பாடல்கள்

    
6. சித்தர் பதினெண்மர் செய்கையிற் றோன்றாத
அத்தனரு ளும்புசுண்டன் யான்.   

விளக்கவுரை :

   
7. சொன்னே னறிந்து சுகமா யுலகோருக்
கெந்நாளும் வாழ்கவென்றே யான்.   

விளக்கவுரை :
   
8. கண்ணுள் மணியாகிக் காரணமாய் நின்றான்
மண் முதிர்பதயு மாறு.   

விளக்கவுரை :

   
9. விண்டனே ஞானம் வெளியாக முப்பத்தி
ரண்டி லறிவீர் நலம்.   

விளக்கவுரை :
   
10. நேத்திரத்தைக் காகம்போல் நிச்சய மாய்நிற்க
ஆத்துமத்தி லானந்த மாம்.   

விளக்கவுரை :

காகபுசுண்டர் குறள் 1 - 5 of 16 பாடல்கள்


குறள் வெண்பா

1. சின்மயத்தைப் போற்றிச் சிவராச யோகத்தில்
நன்மை பராபரத்தை நாடு

விளக்கவுரை :


2. அண்ட முடிமீதி லங்கிர விமதியைக்
கண்டுதரி சித்தல் கதி.   

விளக்கவுரை :

   
3. வலமிடமாய் நின்ற மதிரவியை மாறி
விலகா தடியினிற்பின் வீடு.   

விளக்கவுரை :
   
4. அறுபத்து நால்யோக மவ்வளவுந் தள்ளி
ஒருபொழுது முண்டுநிலை யோர்.   

விளக்கவுரை :
   
5. உலகமே மாயமென வுன்மனதிற் கண்டு
நலமாக நாதனடி நம்பு   

விளக்கவுரை :
Powered by Blogger.