போகர் சப்தகாண்டம் 2971 - 2975 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2971. வாழ்வுதான் வையகத்தில் பொய்யேவாழ்வு வாழ்நாளும் வீழ்நாளும் பாழ்நாளாகும்
தாழ்வுடனே சாத்திரத்தை மிகவாராய்ந்து சாங்கமுடன் ஞானோபமிகவுஞ்சொல்வார்
கேழ்மையுடன் மாசானவைராக்கியம்சொல்வார் கேடுவரும் பாவவினை யறியார்தாமும்
ஊழ்வினைகள் தாமறிந்து நடந்துகொள்வார் உத்தமனே லோகத்துமாந்தராமே

விளக்கவுரை :


2972. மாந்தராம் சடலத்தை மெய்யென்றெண்ணி மானிலத்தில் வெகுகோடி பாடுபட்டு
சாந்தமுடன் தேகமதை நிறுத்தவென்று சதாகாலம் வையகத்திலிருப்பதாக
போந்தமுடன் காயாதி கற்பந்தன்னை பொங்கமுடன் உண்டுமல்லோ கற்பங்கொண்டு
வேந்தர்களும் இதிகாசவித்தை எல்லாம்வேண்டியே விருப்பமுடன் படித்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

2973. படிக்கவே வஷ்டாங்கம் காணவென்றும் பாருலகில் வசியனாயாகவென்றும்
துடிக்கவே வாதமதை யறியவென்றும் துப்புறவாய் முப்பூவைமுடிக்கவென்றும்
மடிக்கவே சரக்குக்கு சத்ருதானும் மார்க்கமுடன் கண்டறிந்த சித்தனென்றும்
வெடிக்கவே சமாதிக்கு ளிருப்பேனென்றும் வேதாந்தம் பேசியல்லோ விழலாய்ப்போச்சே

விளக்கவுரை :


2974. போச்சென்று விடுகாதே யின்னங்கேளு புதுமையுடன் கண்டவரை யாமுஞ்சொல்வோம்
மாச்சலுடன் மோகனங்களறியவேண்டும் மாறாட்டமானதொரு வெழுத்தைப்பாரு
கூச்சலின்றி சமாதிதனிலிருந்துமென்ன கோடான கோடியுகங்கண்டுமென்ன
மூச்சடங்கி போனபின்பு ஒன்றுமில்லை முனிகோடி தவசிகளு மாண்டார்தாமே

விளக்கவுரை :


2975. தாமான கோடியுக மதுவேயாகும் தாக்கான சித்துகளுமிப்படியேயுண்டு
நாமான படியாலே சத்தலோகம் நாதாக்கள் போக்குமுதல் யாவயஞ்கண்டோம்  
நேமமுடன் சித்ரெல்லாம் இப்படியே தானும் நேர்மையுடன் நிஷ்டையிலே இருந்துமாண்டார்
வாமமுடன் பூலோக வதிசயங்கள் வகுத்துரைத்தார் வண்மைகளு மனேகந்தானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 2966 - 2970 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2966. சொற்பமாய் எமதர்மராஜன்தானும் தொல்லுலகில் ஒருவரையும் விட்டதில்லை
அற்பமாம் ஆக்கினைகள் செய்ததுண்டு அவனியிலே யாருந்தான் மீண்டதில்லை
கற்பழிந்த மாதருக்குமிந்தநீதி கர்த்தனது வைகுண்டபதியில்தானும் 
முற்பவத்தில் செய்தவினை பாவத்தாலே மூளுமே வைகுண்ட நீதிதானே

விளக்கவுரை :


2967. காணவென்றால் பரபஞ்ச மாய்கையப்பா கண்டவர்கள் விண்டவர்கள் ஆருமில்லை
வேணபடி சாத்திரத்தை மிகவறிந்து வேகமுடன் காலாங்கி பாதம்போற்றி
நாணவே சித்தர்முனி தானடுங்க நாதாந்த குளிகையது பூண்டுகொண்டு
கோணவே சொர்க்கபதி யானுஞ்சென்று தோற்றமுடன் கண்சிவந்தேன் போகர்தாமே

விளக்கவுரை :

[ads-post]

2968. தாமான வையகத்தில் மாண்டமாண்பர் தாரிணியில் வைகுண்டபதியில்தானும்
கோமானாம் அரசர்குதல் குருக்கள் தாமும் கோலமுடன் ராஜாதிராஜர்தாமும்
பூமானாம் சீமான்களெவரையுந்தான் பொன்னுலகப்பதிதனிலே காணலாகும்
நாமான சடலமது மண்ணேயாகும் நாதாந்தக் காற்றதுதான் அழியாதென்றே

விளக்கவுரை :


2969. அழியாது மாண்டவர்கள் எல்லாருந்தான் அப்பனுட பதிதனிலே காணலாகும்
அழியாது வாதமந்தான் எந்தநாளும் அமரரது பதிதனிலே காணலாகும்
அழியாது மாண்டவர்கள் ஒருகாலந்தான் அப்பனே ஒருகாலம் எழுந்திருப்பார்
அழியாது ஒருகாலு மவர்தமக்கு அப்பனே நீதியுண்டு கேள்வியுண்டே   

விளக்கவுரை :


2970. கேள்விக்கு உத்தாரஞ்சொல்லவேண்டும் சொல்லாவிட்டால் நீதியுடனாக்கினையுண்டு
தாழ்மையுடன் எமதர்மராஜனுக்கு சாங்கமுடன் நீதிமொழி யுரைக்கவேண்டும்
ஏழ்மையுடன் போலிருந்து நீதிபேசி நீதியுடன் அவர்பாதம் பணியவேண்டும்
வாழ்மையுடன் உன்மீதில் கிருபைவைப்பார் வாழலாம் சொர்க்கபதி வாழலாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 2961 - 2965 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2961. தோஷித்து சிவன்தன்மேல் தோஷஞ்சொல்லி தோராயமாகவல்லோ நூலைமாற்றி
பாஷியங்கள் தோருமல்லோ பரமன்தன்மேல் பாடிவைத்தார் தூஷனைகள் மெத்தவுண்டு
காசினியி லாயிரத்தெட்டு சிவாலயங்கள் கட்டினார் வெகுகோடி மாந்தரப்பா
பூசிதமாம் திருப்பதி நூற்றேயெட்டு பொங்கமுடன் கட்டினார் சூட்சந்தானே

விளக்கவுரை :


2962. தானான சூட்சாதி தேவஸ்தானம் தாரிணியில் சொற்பதாய் கண்டதுண்டு
பானான பரமசிவன் சிவாலயங்கள் பார்க்கவென்றால் கணக்கில்லை லக்கோயில்லை
தேனான வாதிசேடந்தன்னாலும் தெளியாது நாவில்லை பாவுமில்லை
மானான பரமபதி மெத்தவுண்டு மானிலத்தில் வாழாது மாந்தர்கேளே

விளக்கவுரை :

[ads-post]

2963. கேளேதான் சிவன்தனையே பழித்தாலும் கீர்த்தியுடன் சாத்திரத்தைக் கூறலானும்
நீளேதான் வைகுண்ட பதியிலப்பா நேர்ந்துதே வெகுகோடி தெண்டந்தானும்
மீளவே சொற்பனமாம் வாக்கினையும் மீண்டுதே துள்வார்கை சீஷவர்க்கம்
சூளவே யவர்பக்கல் யானிருந்து சுந்தரனே யதிசயங்கள் பார்த்திட்டேனே

விளக்கவுரை :


2964. பார்த்திட்டேன் வைகுண்டபதியில்தானும் பாங்குடனே வதிசயத்தை சொல்லப்போனால்
பூர்த்திட்ட பாரினிலே பொய்யென்பார்கள் பொய்யென்பார் மெய்யென்பார் ஆருமில்லை
சாத்திட்ட வைகுண்ட சரிதைதானும் தேர்ந்தவரை யானுரைத்தேன் தெளிவதாக
மார்த்திட்ட மாகவேதான் கைலைதன்னில் மகாகோடி வாக்கினைகள் மெத்தவுண்டே

விளக்கவுரை :


2965. உண்டான வதிசயங்க ளின்னஞ்சொல்வேன் உம்பர்பிரான் பதியினது காவையாவும்
திண்டான கிருஷ்ணாவதாரந்தானும் திகழுடனே வெகுகோடி மாதர்தம்மை
பாண்டான வையகத்தில் கற்பழிந்து பாவையரை லீலையது செய்ததாலும்
கண்டேனே வைகுண்ட பதியில்தம்மை கரியமால் ஆக்கினைகள் சொற்பமாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 2956 - 2960 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2956. தானான யின்னம்வெகு வதிசயங்கள் தன்மையுடன் சொல்லுகிறேன் தரணியோர்க்கு
வேனான விலாடரிஷி தன்னைக்கண்டேன் வியாசமுனி சூதமுனி தன்னைக்கண்டேன்
கோனான குருமுனி தன்னைக்கண்டேன் கொற்றவனார் போகரிஷி தன்னைக்கண்டேன்
தேனான திருமூலக் கூட்டத்தார்கள் தெய்வபுற பதிதனிலே கண்டேன்பாரே

விளக்கவுரை :


2957. பார்த்தேனே சிவாக்கியர் தன்னைக்கண்டேன் பாலகனாம் இடைக்காட்டார் தன்னைக்கண்டேன்
மூர்த்தவனாம் அகப்பேய்சித்துதம்மை முடியோடுஞ் சடையோடும் யானுங்கண்டேன்
தீர்த்தகிரி தனிலிருந்த காசிநாதர் திறமுடன் கொண்டுவரர்கண்டேன்யானும்
ஏர்த்திடவே வரரிஷிதன்னைக்கண்டேன் எழிலான சுந்தரரைக் கண்டேன்தானே

விளக்கவுரை :

[ads-post]

2958. கண்டேனே யின்னம்வெகு சித்துதம்மை கைலாயபர்வதமாம் வைகுண்டத்தில்
அண்டமுனி ராட்சதர்கள் கோடாகோடி அவனியிலே இருந்துவந்தோர் சொல்லொணாது
கொண்டல்வண்ணன் மைத்துனனாம் தருமராசன் கொற்றவனாம் தம்பிமுதல் யாவுங்கண்டேன்
பண்டுலவமாலையணி சத்துருசங்காரன் பாவையெனும் சீதைதனைக் கண்டேன்தானே

விளக்கவுரை :


2959. கண்டேனே ராவணனார் சூர்ப்பனகைதானும் கைலங்கிரி வைகுண்டப்பதியிலோரம்
தொண்டரெனும் அறுபத்து மூன்றுபேர்கள் தோராத பரவநாச்சியாருங்கண்டேன்
விண்டேனே விண்ணுலகில் சேதியெல்லாம் விருப்பமுடன் நானறிந்தேன் சிலதுகாலம்
கொண்டல்வண்ண னச்சுதனுமங்கிருக்க கோபாலன் தாயாரும் கண்டிட்டேனே 

விளக்கவுரை :


2960. கண்டிட்டேன் வைகுண்டப்பதியில்தானும் கரியமால் சேனையது கூட்டந்தன்னை
தொண்டிட்ட ஆழ்வார்கள் கூட்டந்தன்னில் தொடர்ந்துமே யவரிடமாய் பக்கஞ்சென்றேன்
விண்டிட்ட ஆழ்வாதி சாத்திரங்கள் வெகுமோசம் திகுவனுடன் பின்பின்னாக  
துண்டிட்ட சாத்திரத்தில் தோஷமுண்டு தூராதி சிவன்தனை தோஷித்தாரே

விளக்கவுரை :


Powered by Blogger.