அகத்தியர் பன்னிருகாண்டம் 376 - 380 of 12000 பாடல்கள்


376. தானான சதுரமது கோட்டையுண்டு
    தருவான ராட்சதர்க ளிருக்குங்கோட்டை
கானாறு குகையுண்டு மலைவளங்கள்
    கடிதான ராட்சதர்கள் தூங்குங்காடு
வேனான வெளிக்காடு மண்டபங்கள்
    வேதமுனி ரிடிக்கூட்ட மனேகமுண்டு
தேனான மணிபோன்ற சித்துதாமும்
    சிறப்புடனே தானிருக்கும் பதியுமாமே.

விளக்கவுரை :


377. பதியான நர்மதா நதிக்குத்தெற்கே
    பாங்கான வக்கினியா றொன்றுவுண்டு
மதியான சூரியரும் காணாநாடு
    மகத்தான வெள்ளானை யிருக்கும்நாடு
துதியான சிவலிங்கம் வளருநாடு
    துப்புரவாய் வகிலமெல்லாம் லிங்கப்பிரேஷ்டை
நிதிவிளையும் காஞ்சனமா மென்னுநாடு
    நிலையான சித்தர்முனி யிருக்கும்நாடே.

விளக்கவுரை :


378.  நாடான டில்லிக்கு வடக்கேயப்பா
    நலமான புலஸ்தியனே சொல்வேன்பாரீர்
காடான காடுவாயிரங் காதந்தான்
    கதீதமுள்ள சிங்கமது உறங்குங்காடு
நீடான வேங்கையது வடர்ந்தகாட்டில்
    நேர்மையுடன் நடுமைய மத்திபத்தில்
கோடான கோடிமுனி ரிடிகள்தாமும்
    குறிப்புடனே வீற்றிருக்கும் விடுதியாமே.

விளக்கவுரை :


379. விடுதியாம் ஆயக்கால் மண்டபந்தான்
    விண்ணுலகை யெட்டுகின்ற கோபுரந்தான்
படுநிலையில் ஒவ்வொரு பீடந்தன்னில்
    பாங்குடனே வீற்றிருப்பார் முனிவர்தாமும்
அடுநிலையில் சிகரம்வரை முடிவுமட்டும்
    அணியணியாய் வீற்றிருப்பார் ரிடிகள்தாமும்
முடியோடே முடிநெருங்கும் நாதர்கூட்டம்
    மூதுலகில் சொல்வதற்கு நாவொண்ணாதே.

விளக்கவுரை :


380. ஒண்ணாது கோபுரத்தை யளவுசொல்ல
    உத்தமனே யாதிசேட னாலுமாகா
அண்ணாந்து பார்த்தாலும் முடிதான்போகும்
    ஆகாகா சித்தருட கோபுரந்தான்
கண்ணாலே பார்ப்பதற்கு முடியாதப்பா
    கைலங்கிரி வாசலது யிதற்கீடுண்டோ
குண்ணான மகம்மேரு விதற்கீடுண்டோ
    கொற்றவனே கோபுரத்தின் பெருமைகாணே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 371 - 375 of 12000 பாடல்கள்


371. ஆமென்ற சித்துமுனி சொல்லும்போது
    அங்ஙனவே மனதுவந்து சந்தோடித்து
நேமமுடன் முனிசொன்ன வார்த்தைதன்னை
    நிட்களமாய் மெய்யென்று மனதிலுன்னி
தாமெனவே நூலதனைக் குகைக்குள்வைத்தேன்
    தாரணியில் சிலசித்தர் பின்னதாக
ஓமமுடன் பெருநூலை வெளியிற்காட்ட
    உத்தமனே வெகுகோடி மனுசெய்தாரே.

விளக்கவுரை :


372. மனுசெய்த படியாலே புலஸ்தியாகேள்
    வையகத்தில் மானிடர்கள் பிழைக்கவென்று
கனுவுடனே யின்னூலை வெளியேவிட்டேன்
    கண்டறிவான் விதியாளி சொல்வான்பாரு
அணுவளவு பாகமது பிசகாவண்ணம்
    அப்பனே யானுரைத்தபெரு நூலப்பா
தணுவுடனே சதுருகத்தி லிருந்தநூலை
    சாற்றினேன் புலஸ்தியர்க்காய்ப் பெருநூல்தானே.

விளக்கவுரை :


373. பெருநூலாங் காவியமாம் பன்னிரெண்டு
    பேரான வொவ்வொரு முறைகளப்பா
அருமையாய் வொவ்வொரு முறைகளப்பா
    அனந்தம்வகை சொல்லிவிட்டேன் லக்கோயில்லை
குருவான யெனதையர் சொற்படிக்கு
    கோடான கோடிமுறை சொற்படிக்கு
திருவான மனோன்மணிதாய் கடாட்சத்தாலே
    தீரமுடன் பாடிவைத்த பெருனூலாமே

விளக்கவுரை :


374. நூலான யின்னமொரு மார்க்கங்கேளு
    நுணுக்கமுடன் புலஸ்தியனே சொல்வேனப்பா
தாலமாம் பதினெண்பேர் சித்தர்தாமும்
    தகைமையுட னவரவர்க ளிருந்தநாடு
கோலமாஞ் சமாதிகள் பூண்டநாடு
    கொற்றவனே நூல்பாடி வைத்ததேசம்
சீலமாம் அவரவர்கள் சீடவர்க்கம்
    சிறப்புடனே ஆராய்ந்து சொல்வேன்பாரே.

விளக்கவுரை :


375. பாரேதான் காசிக்கு மேற்கேயப்பா
    பாங்கான காயத்திரி பிரம்மநாடு
நேரேதான் டில்லிக்குக் கிழக்கேயப்பா
    நேர்மையுடன் பனிமூடி யிருக்கும்நாடு
ஆரான வசுவனியாம் நதியொன் றுண்டு
    அன்னதிக்கு நடுமையந் திட்டொன்றுண்டு
நூறான காதவழி யகலமுண்டு
    நுணுக்கமுடன் சதுர மவ்வளவுதானே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 366 - 370 of 12000 பாடல்கள்


366. தண்மையா மவரவர்கள் செய்தபாகம்
    தகைமையுடன் இன்நூலில் காணலாகும்
பண்மையாம் பண்டிதங்கள் மெத்தவுண்டு
    பாரினிலே செய்ததொரு மகிமையாவும்
உண்மையாம் பலநூலுங் கண்டாராய்ந்து
    உத்தமனே யானுரைத்தேன் காவியந்தான்
வண்மையாம் ரிடிமுனிவர் சொன்னனூலில்
    வளமையுடன் பெருமருந்து யில்லைதானே.

விளக்கவுரை :


367. தானான யென்னூல்போல லனேகஞ்சித்தர்
    தாட்சியுடன் பாடிவைத்தார் சிலநூல்கள்
கோனான வசுவனியாந்தேவர்தானும்
    கூறினார் துவாபர யுகத்திலப்பா
பானான பராபரியாள் மனோன்மணித்தாய்
    பாங்குடன் தானுரைத்த குருநூல்தன்னை
மானான வையகத்தி லெந்தனுக்காய்
    மனதுவந்து சொன்னதொரு குருநூலாமே.
          

விளக்கவுரை :


368. குருநூலாம் அசுவனியாந் தேவர்தானும்
    குறிப்புடனே தானுரைத்த வடநூல்தன்னை
சிறுநூலா யெந்தனுக்கு தேவர்தாமும்
    சிறப்புடனே உபதேசஞ் சொன்னார்பாரு
பெருநூலா யடியேனுங் காவியமாய்ப்
    பிரியமுடன் பாடிவைத்த காண்டமப்பா
ஒருநூலும் பன்னீரா யிரத்துக்கொப்பாய்
    உலகுதனி லுவமைசொல்ல முடியாதன்றே.

விளக்கவுரை :


369. அன்றான சாத்திரத்தைப் பிரித்துப்பார்த்து
    அருமையுள்ள பனிரெண்டு காண்டஞ்சொன்னேன்
குன்றான மலைபோன்ற காண்டந்தன்னை
    குருவான ரிடிமுனிவர் சித்தர்தாமும்
தென்றிசையில் வாழுகின்ற ரிடிமுனிவர்தாமும்
    தேர்ந்தெடுத்துக் கொண்டதொரு குருநூலாகும்
பன்றான காவியத்தை முனிவர்மெச்சி
    பட்சமுள்ள காவியத்தை வையென்றாரே.

விளக்கவுரை :


370. வையென்றார் குகைதனிலே ரிடியார்தாமும்
    வையமெல்லாஞ் சித்தாகிப் போகுமென்றார்
கைதவமாய் மீறுகின்ற கர்மிதாமும்
    காசினியில் வெகுகோடி மாண்பருண்டு
மெய்பேசி நூலதனை வாங்கிக்கொண்டு
    மேதினியில் வெகுசித்து ஆடுவார்கள்
பொய்யான தோடிகட்கு யிந்தநாலு
    பொருக்குமோ பூமிதனில் பொருக்காதாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 361 - 365 of 12000 பாடல்கள்


361. காணலா மின்னூலி லனந்தங்கோடி
    கடிதான சூரணமும் ரசாயனங்கள்
தோணவே லேகியங்கள் கிருதமார்க்கம்
    தொகுப்பான யெண்ணையுடன் தயிலம்யாவும்
பூணவே செந்தூரம் பற்பம்யாவும்
    புகழான கட்டுவகை மெழுகுதானும்
வேணவே மாத்திரைகள் கபாடந்தானும்
    மிக்கான புகையுடனே வஞ்சனமுமாமே.

விளக்கவுரை :


362. அஞ்சான சற்பத்து பிளாஸ்திரிமார்க்கம்
    அப்பனே கப்புவகை யாவுந்தானும்
தஞ்சமுடன் சற்பத்து திராவகங்கள்
    தகைமையுடன் செயநீர்க ளனந்தம்போக்கு
கஞ்சமலர் மனோண்மணியாள் திலர்தப்போக்கும்
    கருவான மையினிட யெட்சணிமார்க்கம்
துஞ்சான வஷ்டாங்க யோகமார்க்கம்
    துறையான செகசால முழுதும்பாரே.

விளக்கவுரை :


363. பாரேதான் சாலமுட னிந்திரசாலம்
    பாங்கான மயேந்திரமாஞ் சாலத்தோடு
நேரேதான் விபூதியின் மார்க்கந்தானும்
    நிலையான கோட்டை முதல்காணலாகும்
வேரேதான் மசானத்தின் கிரியையெல்லாம்
    மேதினியி லிதிலடக்கஞ் சொல்லப்போமோ
சீரேதான் காயாதி கற்பம்யாவும்
    சிறப்புடனே பாடிவைத்தே னின்னுல்தானே.

விளக்கவுரை :


364. தானான சாத்திரங்க ளிதிலடக்கம்
    தகைமையுள்ள வேதமது யிதிலடக்கம்
பானான மனோன்மணியா ளுபதேசங்கள்
    பாடிவைத்தேன் இந்நூலி லடக்கமப்பா
கோனான புலஸ்தியனே யின்னஞ்சொல்வேன்
    குவலயத்தி னதிசயங்கள் மிகவாய்க்கேளும்
தேனான சித்தர்முனி ரிடிகள்தாமும்
    தேடிவைத்த திரவியங்கள் செப்புவேனே.

விளக்கவுரை :


365. செப்புவேன் சித்தருட மரபுமார்க்கம்
    செயலாக சமாதியிட மார்க்கந்தானும்
ஒப்பமுடன் சீடவர்க்கக் கூட்டத்தார்கள்
    ஓகோகோ நாதாக்கள் பெருமைசொல்வேன்
இப்புவியி லிருந்தசித்து கோடியுண்டு
    யெழிலான விவரவர்கள் செய்தமார்க்கம்
தப்பிதங்க ளில்லாம லின்நூலிற்றான்
    தகைமையுடன் யானுரைப்பேன் தண்மைபாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 356 - 360 of 12000 பாடல்கள்


356. போற்றுவார் பதினெண்பேர் சிவராசயோகி
    பொங்கமுடன் பாடிவைத்த நூலையெல்லாம்
மார்க்கமுடன் கண்டுமிக வாராய்ந்தேதான்
    மானிலத்தில் மயக்கமது தெளியாமற்றான்
தீர்க்கமுடன் யென்னூலைப் பார்த்தபேர்கள்
    திறமான நூலிதுதான் பெருநூலென்பார்
ஆற்கமுடன் யெனதைய்ய ரசுவனியாந்தேவர்
    அவருடைய புசபலந்தா லறைந்திட்டேன்.

விளக்கவுரை :


357. அறையவே பெருநூல் காவியத்திலப்பா
    அப்பனே யான்சொன்ன முறைகளெல்லாம்
குறையாமல் செய்துமல்லோ முடிப்பாரானால்
    குவலயத்தி லவருமொரு சித்தனாவார்
முறைபோல செய்பவனே சிவராசயோகி
    மூதுலகில் கறைகண்ட சித்தனப்பா
திறைகடலுஞ் சத்த சாகரமுமான
    திறமான காண்டமிது பெருநூலாமே.

விளக்கவுரை :


358. ஆமேதா னின்னூலி லடக்கஞ்சொல்வோம்
    அப்பனே யஷ்டசித்து மிதிலடக்கம்
நாமேதான் சொன்னபடி கருவனந்தம்
    நாதாக்கள் கைமறைப்பு யனந்தமுண்டு
போமெனவே கூடுவிட்டுக் கூடுபாய்தல்
    பொருங்கமுடன் கருவிகர ணாதியெல்லாம்
தாமேதான் சிவயோக மிதிலேதோன்றும்
    சட்டமுடன் அஷ்டமா சித்துபாரே.

விளக்கவுரை :


359. பார்க்கையிலே மோகனமு மிதிலடக்கம்
    பாங்கான பேதனமு மிதிலேதோயும்
ஏர்க்கவே வித்வேஷணம் இதிலேகாட்டும்
    யெழிலான வுச்சாடன மிதிலடக்கம்
தீர்க்கவே வசியமுத லாக்குருஷணமாகும்
    திறமான மாரணமும் ஸ்தம்பனமுமாகும்    
மார்க்கமுடன் ஞானமுதல் யோகமிதுபாரும்
    மகத்தான கிரியையெல்லா மிதறகுள்ளாச்சே.

விளக்கவுரை :


360. ஆச்சப்பா வாதமுதல் வயித்தியபாகம்
    அருமையுள்ள சாலமுதல் சிமிட்டுப்போக்கு
நீச்சப்பா கருவித்தை யனேகங்கோடி
    நிலையான கைமசக்கு மாதுதந்திரம்
காச்சப்பா சொக்குபொடி பிரணவமந்திரம்
    கருவான நோக்குவித்தை குறளிசாலம்
மாச்சலென்ற மூலியிட வசியப்போக்கு
    மகத்தான டமகரங்கள் காணலாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 351 - 355 of 12000 பாடல்கள்


351. பார்த்தபின்பு திருமூல வர்க்கத்தார்கள்
    பாடிவைத்த மரபுநூ லாயிரந்தான்
நேர்த்தியுடன் ஆயிரத்துச் சொச்சமப்பா
    நேரான சுருக்கமது நூறும்பாரு
பூர்த்தியாய்ப் பதினெண்பேர் ஜாதிவர்க்கம்
    பூட்டினார் திருமூல வர்க்கத்தார்கள்
சாத்திரங்கள் பலநூலுங் கண்டாராய்ந்து
    சட்டமுடன் நூல்தனையே பாடினாரே.

விளக்கவுரை :


352. பாடினார் பதினெண்பேர் சித்தர்தாமும்
    பாருலகில் சமாதியது பூண்டவண்ணம்
தேடியே பார்க்கும்மந்தக் காலந்தன்னில்
    தெளிவாக போகரே ழாயிரத்தில்
கூடியே பதினெண்பேர் சமாதியெல்லாம்
    கொப்பெனவே போக ரேழாயிரத்தில்
நாடியே காலாங்கி நாதர்தம்மால்
    நயமுடனே பாடிவைத்தார் போகர்தாமே.

விளக்கவுரை :


353. தாமான போகரே ழாயிரந்தான்
    தாரணியில் பெருநூலாம் மற்றொன்றில்லை
பூமான மானதொரு காலாங்கிநாதர்
    புண்ணியனார் வரம்பெற்ற போகநாதர்
நேமமுடன் தானுரைத்த சத்தகாண்டம்
    நேர்மையுடன் வையகத்தில் பெருநூலப்பா
ஆமெனவே கண்டவர்கள் யோகவானாம்
    அவனியிலே யவனுமொரு சித்தனாமே.

விளக்கவுரை :


354. சித்தனா மவர் நூல்போல் மறுநூலில்லை
    செகதலத்தில் பதினெண்பேர் சொன்னதில்லை
சத்தமுடன் காண்டமது யேழாயிரத்தில்
    சாற்றினார் லோக வதிசயங்களெல்லாம்
புத்தியுடன் போகரிடி யனேகநூல்கள்
    புகழாகப் பாடிவைத்தார் சீஷருக்கு
முத்தியுடன் பெருநூ லேழாயிரந்தான்
    முதன்மையாம் நூலென்று சொல்லலாமே.

விளக்கவுரை :


355. சொல்லலாம் அந்நூலுக் கெந்நூலப்பா
    தோறாத பெருநூல் காவியந்தானாகும்
வெல்லவே பனிரெண்டு காண்டமப்பா
    விருப்பமுடன் பாடிவைத்தே னின்னூல்தானும்
பல்லவே பன்னீராயிரக் காவியந்தான்
    புகட்டினேன் லோகத்தின் மார்க்கமெல்லாம்
நல்லதொரு சிவராச யோகிமார்கள்
    நண்புபெற யென்னூலைப் போற்றுவாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 346 - 350 of 12000 பாடல்கள்


346. தானேதான் சௌமியந்தான் சுருக்கமப்பா
    தகைமையுள்ள பதினாறும் பாருபாரு
மானேதான் சோடசமாந் தன்னைப்பாரு
    மகத்தான யெட்டுடனே நாலுமேபார்
நானேதான் சொன்னபடி கருவுமேபார்
    நாயகனே வாதார மெட்டுமேபார்
மோனேதான் முப்பத்தி ரெண்டுமேபார்
    உத்தமனே கோசபீசம் பத்துதானே.

விளக்கவுரை :


347. பத்தான வேதமுனி யெட்டுமேபார்
    பாகமுடன் சோடசமும் பதினாறும்பார்
முத்தான கலைக ளிறுபதுவுமேபார்
    முனையான தீட்சையது சுருக்கமேபார்
சித்தான காயகற்ப மைன்பதும்பார்
    சிறப்பான வுடற்கூறு யெட்டுமேபார்
சுத்தமுடன் ஞானமது முப்பதுவும்பார்
    சுருக்கமாய் ஞானமது யெட்டுதாமே.

விளக்கவுரை :


348. எட்டான திலர்துமது ரெண்டுமேபார்
    யெழிலான வஞ்சனமு முப்புபத்து
கட்டான சமாதியது சுருக்கம்பத்து
    கருவான மாற்றமது பத்தும்பார்
திட்டமுடன் சகாதேவன் காவியந்தான்
    திறமான வழகான சுருக்கமப்பா
வட்டமுடன் பதினாறு பார்த்தபின்பு
    வளமான தீட்சையது பாருபாரே.        

விளக்கவுரை :


349. பாரேதான் ஞானமது நூறும்பாரு
    பாங்கான காயகற்பம் பத்துபாரு
நேரான முக்காண்டம் பார்க்கவேண்டும்
    நேர்மையுடன் காண்டமது சுருக்கந்தானும்
சீரேதா னன்பதுமே பார்க்க வேண்டும்
    திறமான தருக்க நூல் பதினாறும்பார்
தீரேதான் முப்பூவின் தீ்ட்சைமார்க்கம்
    திறமுடனே பதினாறும் பார்க்கநன்றே.

விளக்கவுரை :


350. நன்றான தருமநூல் பதினாறும்பார்
    நலமான சித்தருட மரபுநூலாம்
குன்றான காவியந்தா னாயிரமப்பா
    குருவான நந்திசொன்ன நூல்தானாகும்
தென்றிசையாம் பொதிகைதனில் யானுரைத்த
    திறமான மரபுநூ லாயிரந்தான்
சென்றிடவே பாடிவைத்த சுருக்கமப்பா
    செவ்வையுடன் நூறதுவும் பார்க்கநன்றே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 341 - 345 of 12000 பாடல்கள்


341. ரெண்டான டமரகனார் தீட்சையப்பா
    யெழிலுடனே பதினாறும் பார்க்கவேண்டும்
கண்டுமே சிவயோகம் யெட்டும்பார்த்து
    கருவான வுட்கருவை யறியவேண்டும்
வண்டுறைந்து மதுவையுண்ணுங் கதையைப்போல
    மானிலத்தில் நூலதனை யறியவேண்டும்
உண்டான வுட்கருவை யறியாவிட்டால்
    உத்தமனே சாத்திரம் பார்த்தொன்றுங்காணே.

விளக்கவுரை :


342. காணார்க ளசுவனியாந் தீட்சையப்பா
    கருவான வறுபத்து நாலும்பாரு
தோணாத கருவெல்லா மதற்குள்தோணும்
    தொல்லுலகில் நூல்பார்க்க வொன்றுமில்லை
வேணபடி நசகாண்ட மாயிரந்தான்
    விருப்பமுடன் சுருக்கமது நூறும்பாரு
ஊணாத கருவெல்லா மதிலேதோற்றும்
    உத்தமனே பஞ்சகர்த்தா ளாடுங்கூத்தே.

விளக்கவுரை :


343. கூத்தான பஞ்சகர்த்தா ளொடுங்குமார்க்கம்
    குறிப்பான நசகாண்டச் சாத்திரம்
மாத்தானக் கிடமில்லா காயகற்பம்
    மகத்தான ஓருநூறு சொன்னாரப்பா
தீத்தமுடன் காயாதிக் கொண்டோர்தாமும்
    திறமுடனே வெகுகால மிருப்பாரென்று
சாத்தமுனி யாழ்வாரும் பிரபந்தத்தில்
    சாற்றினார் காயத்திரி நூலில்தாமே.

விளக்கவுரை :


344. தாமான சௌமிய மாயிரந்தான்
    தாக்கான சுருக்கமது நூறும்பாரு
நாமேதான் சொன்னபடி பத்தும்பாரு
    நலமான சுருக்கம் பதினாறும்பாரு
போமேதான் சோடசமும் முப்பத்திரெண்டு
    பொங்கமுடன் கைமறைப்பு யிருபத்தினாலு
ஆமோதான் பஞ்சபூத ரகசியங்கள்
    அப்பனே பதினாறில் யெட்டில்பாரே.

விளக்கவுரை :


345. எட்டான பஞ்ச காவியந்தானப்பா
    யெழிலான யேமதத்துவ மெண்ணூறாகும்
கட்டான காவியத்துச் சுருக்கமப்பா
    கருவான யெண்பதும் பாருபாரு
திட்டமுள்ள முப்பூவின் வழலைமார்க்கம்
    சிறப்புடனே கூட்டிவைத்தார் பெருமைமெத்த
மட்டியென்னு முழுமக்க ளறிவாரோசொல்
    மகிழ்ச்சியுடன் விதியாளி யறிவான்றானே. 

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 336 - 340 of 12000 பாடல்கள்


336. எட்டான சோடசமாம் பதினாறும்பார்
    யெழிலான நந்தி பதினாறும்பாரு
மட்டான சோடசமாம் ரெண்டுபாரு
    மகத்தான கலைகள் பதினாறும்பாரு
திட்டமுடன் நந்திபதி னாறும்பாரு
    திறமான வழலையது முப்பத்திரெண்டு
சட்டமுடன் பார்த்தவர்க்குச் சிவயோகங்கிட்டும்
    சதாகாலஞ் சாயுச்சிய மெட்டுந்தானே.

விளக்கவுரை :


337. தானான சிவயோகம் பதினாறும்பார்
    தாக்கான சோடசமு முப்பத்திரெண்டு
வேனான தன்வந்திரி யிருபத்தினாலு
    மிக்கான கக்கிஷமு மொன்பதும்பார்
பானான பரம ரகசியந்தானெட்டு
    பாரினிலே பார்த்தவனுஞ் சித்தனாவான்
மோனான மோட்சவழி யறியலாகும்
    மூதுலகில் துறைகண்ட சித்தனாமே. 

விளக்கவுரை :


338. ஆமேதான் தன்வந்திரிக் காவியத்துக்
    காயிரத்துச் சுருக்கமது யிருபதாகும்
நாமேதான் சொன்னபடி யாராதாரம்
    அப்பனே சுருக்கமது பார்க்கவேண்டும்
தாமேதா னவரவர்கள் சொன்னவாக்கு
    தப்பாது ஒவ்வொரு கோர்வைதானும்
மோமேதான் வீண்காலம் போக்காமாற்றான்
    பொங்கமுடன் பார்ப்பவனே சொரூபனாமே.

விளக்கவுரை :


339. சொரூபமாங் கமலர்சொன்ன தீட்சையப்பா
    சுத்தமுட னறுபத்து நாலும்பாரு
அரூபமென்ற தன்வந்திரி கலைதான்பாரு
    அப்பனே பதினாறுக் குள்ளடக்கம்
உரூபமாம் நடராசர் சொன்னநீதி
    உகந்த தொருதீட்சையது யெட்டும்பாரு
நிரூபமென்ற காயாதி கற்பந்தானும்
    நிட்சையுடன் பார்த்தவனே புனிதனாமே.

விளக்கவுரை


340. புனிதனாம் சுப்பிரமணியர் தீட்சையப்பா
    புகழான மார்க்கமது பதினாறும்பார்
வனிதமுடன் கௌதம ரிடியார்தாமும்
    வாக்குறைத்த காயகற்ப மெட்டும்பாரு
கனிவுடனே யேகாந்தம் பதினாறும்பாரு
    காட்சியுடன் மாட்சிமைகள் பெறவேயாகும்
துணிதமுள்ள சுந்தரனார் தீட்சையப்பா
    சுத்தமுடன் முப்பத்தி ரெண்டும்பாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 331 - 335 of 12000 பாடல்கள்


331. சுருக்கமாம் பஞ்சரகசியஞ் சுருக்கமப்பா
    சொரூபமென்ற ஞானமது முப்பத்திரண்டு
சருக்கமாஞ் சட்டமுனி முன்ஞானம்பார்
    சதுரான சட்டமுனி பின்ஞானம்பார்
பொருக்கமுடன் ஞானமது வைன்பதாகும்
    போகருட யிருதலைக் கொள்ளியப்பா
பெருக்கமுடன் நடன சாத்திரந்தான்பத்து
    பேரான தீட்சாவிதி பத்தும்பாரே.

விளக்கவுரை :


332. பாரப்பா புண்ணாக்கர் சுருக்கம்பத்து
    பாங்குடனே மச்சமுனிக் காயகற்பம்
நேரப்பா வன்பதுமே பாருபாரு
    நிலையான சாத்திரமு மாறும்பாரு
ஆரப்பா மச்சமுனி சொன்னாற்போல
    அப்பனே காயகற்பஞ் சொன்னதில்லை
பேரப்பா பெருனூல்தான் வால்மூகர்தானும்
    பெருமையுள்ள சுருக்கமது முப்பதுவும்பாரே.

விளக்கவுரை :


333. பார்த்திடவே கமலமுனி நொண்டியப்பா
    கருவான யெண்பதுமே பாருபாரு
சேர்த்திடவே சிவவாக்கியர் நொண்டிதானும்
    சிறப்புடனே யெண்பதுவும் பாருபாரு
கோர்த்திடவே கொங்கணவர் நொண்டியப்பா
    கொற்றவனே நாற்பதுவும் பார்க்கவேண்டும்
ஏர்த்திடவே புண்ணாக்கர் நொண்டிதானும்
    எழிலாக வன்பதுமே கண்டிடாயே.

விளக்கவுரை :


334. கண்டிடவே ராமதேவர் நொண்டியப்பா
    கருவான செயகண்டி முப்பதுவும்பாரு
பண்டிதவான் பலமுனிவர் நொண்டிபார்க்க
    பாரிலே கண்டவனே யோகவானாம்
துண்டரிக மானதொரு தீட்சையப்பா
    துரையான யாக்கோபு சொன்னார்பாரு
கொண்டபடி வேதமுனி சொன்னவாக்கு
    குவலயத்தில் கூறவுந்தான் முடியாதன்றே.

விளக்கவுரை :


335. அன்றான பிரம்மமுனி நொண்டிதானும்
    அப்பனே யெண்பதுவும் பாருபாரு
நன்றான யிடைக்காடார் நொண்டிதானும்
    தாக்கான வறுபதுவும் பார்க்கநன்று
குன்றான ரோமரிடி தீட்சையப்பா
    குறிப்புடனே பார்ப்பதுவும் மெத்தநன்று
பன்றான புண்ணாக்கர் தீட்சையப்பா
    பதமுடனே பார்த்தவர்க்கு காட்சியெட்டே.

விளக்கவுரை :

Powered by Blogger.