காகபுசுண்டர் காவியம் 1 - 5 of 33 பாடல்கள்
காப்புகணபதியே அடியாகி அகில மாகிக்
காரணத்தின் குருவாகிக் காட்சி யாகிக்
குணபதியே கொங்கைமின்னாள் வெள்ளை ஞானக்
குருநிலையாய் அருள் விளங்கும் கொம்பே ஞானக்
கனவினிலும் நினைவினிலும் ஒளியாய் நின்ற
காரணத்தின் வடிவாகிக் கருத்துள் ளாகிப்
பணியரவம் பூண்ட சிவ வாசி நேர்மை
பாடுகின்றேன் காவியந்தா னெண்ணிப் பாரே.
விளக்கவுரை :
நூல்1. எண்ணியெண்ணிக் காவியத்தை எடுத்துப் பாராய்;
எந்நேரங் காமசிந்தை யிதுவே நோக்கும்
பண்ணிபன்றி பலகுட்டி போட்டா லென்ன
பதியானைக் குட்டியொரு குட்டி யாமோ?
சண்ணியுண்ணி யிந்நூலை நன்றாய்ப் பாரு
சக்கரமும் மக்கரமும் நன்றாய்த் தோணும்;
தண்ணி தண்ணி யென்றலைந்தால் தாகம் போமோ?
சாத்திரத்தி லேபுகட்டித் தள்ளி யேறே.
விளக்கவுரை : 2. புகட்டினாள் தசதீட்சை மகிமை தன்னைப்
பூரிப்பா லெனக்களித்தே அகண்டந் தோறும்
சகட்டினாள் சகலசித்து மாடச் சொன்னாள்
சந்திரபுட் கரணிதனில் தானஞ் சொன்னாள்
பகட்டினா ளுலகமெல்லாம் முக்கோணத்திற்
பரஞான சிவபோதம் பண்பாய்ச் சொன்னான்
அகட்டினா லைவர்களை யீன்றா ளம்மன்
அந்தருமை சொல்லவினி அடியாள் கேளே.
விளக்கவுரை : 3. கேளப்பா ஈசனொரு காலந் தன்னிற்
கிருபையுடன் சபை கூடியிருக்கும் போது
வாளப்பா மாலயர் தம் முகத்தை நோக்கி,
வந்தவா றெவ்வகையோ சென்ற தேதோ
கோளப்பா செயகால லயந்தா னெங்கே?
குரு நமசி வாயமெங்கே? நீங்க ளெங்கே?
ஆளப்பா ஐவர்களு மொடுக்க மெங்கே?
அறுத்தெனக்கு இன்னவகை யுரைசெய் வீரே.
விளக்கவுரை : 4. இன்னவகை ஈசரவர் கேட்கும் போதில்
எல்லோரும் வாய்மூடி யிருந்தா ரப்போ
சொன்னவகை தனையறிந்து மார்க்கண் டேயன்
சொல்லுவான் குழந்தையவன் கலக லென்ன
அன்னைதனை முகம்பார்த்து மாலை நோக்கி
அரிகரி! ஈசர்மொழிக் குரைநீர் சொல்வீர்;
பின்னைவகை யாருரைப்பார் மாயை மூர்த்தி
பேசாம லிருந்துவிட்டால் மொழிவா ரெங்கே?
விளக்கவுரை : 5. எங்கென்று மார்க்கண்ட னெடுத்துச் சொல்ல
என்ன சொல்வா ரேகவெளிச் சிவனை நோக்கிக்
கங்கைதனைப் பூண்டானே! கடவு ளோனே!
காரணமே! பூரணமே! கண்ணே! மின்னே!
சங்கையினி யேதறிவேன் மகுடச் சோதி
சந்திரனைப் பூண்டிருந்து தவம்பெற் றோனே!
மங்கையிடப் பாகம்வைத்த மகுடத் தோனே!
மாமுனிகள் ரிஷிசித்தர் அறிவார் காணே.
விளக்கவுரை :