அகத்தியர் பன்னிருகாண்டம் 41 - 45 of 12000  பாடல்கள்


41. தானான பராபரமு நீயுமாச்சு
    சத்த சாகரமுந்தான் நீயுமாச்சு
தேனான சத்திசிவம் நீயுமாச்சு
    தெளிவான கோயில்குளம் நீயுமாச்சு
பானான தசவாய்வு நீதானப்பா
    பாருலகி லுன்னைவிட வேறொன்றில்லை
மானான பராபரத்தின் நுட்பங்கண்டோர்
    மானிலத்தி லுண்டோதான் மன்னாகேளே.

விளக்கவுரை :


42. கேளேதான் புண்ணியனே புலஸ்தியனேகேளு
    பூவுலகில் கர்மிகளு மனேகமுண்டு
நாளேதான் நற்குணத்தோ ரதிலுமுண்டு
    நலமான கலைக்கியானங் கற்றோருண்டு
வீளேதான் கலையிரண்டுங் காணவேண்டும்
    வடகலையும் பின்கலையு மறியவேண்டும்
சூளேதான் சூரியனின் லக்கம்வேண்டுஞ்
    சுந்திரனே சந்திரனில் வசியமாமே.

விளக்கவுரை :


43. ஆமேதான் ராசனுக்குச் சந்திரனில்நிற்கும்
    அப்பனுக்கு ப்புருஷனிட சூரியன்றானும்
தாமேதா னிருகலையு மொடுங்கிப்பாயும்
    தாக்கான சூனியத்தி லிருந்துகொண்டு
போமேதான் வாசியைத்தான் வழக்கஞ்செய்து
    பொங்கமுடன் மூலமதி லேறவேண்டும்
நாமேதான் சொன்னபடி யஷ்டசித்தி
    நலம்பெறவே யெப்போதும் பெருகலாமே.

விளக்கவுரை :


44. பெறுகலாம் மும்மூர்த்தி யீடுமல்ல
    பேரான வாசிசித்தி யோகசித்தி
தறுகவே யதஸ்தியனும் சொல்லிப்போட்டேன்
    நயம்பெறவே புலஸ்தியா தெரிந்துகொள்ளு
குறுகியதோர் குருமுனிவர் வாக்குப்பொய்யா (து)
    குவலயத்தில் சித்தர்களுக் குண்மையாகும்
நறுமலர்போல் பெருனூலைப் பார்த்தபேர்கள்
    நாயகனே யெந்நாளுந் தவங்கொள்வாரே.

விளக்கவுரை :


45. தவங்கொள்வா ரிந்நூலைப் பார்த்தபேர்கள்
    தாரணியில் சதாகாலம் வாழ்ந்திருப்பார்
பவமகற்றிப் பாருலகில் பரிசுத்தவானாய்ப்
    பாங்குபெற யெந்நாளும் சிவத்தினின்று
உவமுடனே காயப்ர வேசமாகி
    உத்தமனே கூடுவிட்டுக் கூடுபாய்வார்
சவமதுபோல் இருந்தாலும் பிராணவாய்வைத்
    தன்னுக்குள் தானடக்கி யிருப்பார்தானே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 36 - 40 of 12000  பாடல்கள்


36. காணவென்று மெய்ஞ்ஞானம் வரவேவேண்டும்
    கருவான சிவசக்தி காணவேண்டும்
தோணவே மகாரத்தில் குண்டலியைப்போற்று
    தொந்தமுடன் மகாரத்தின் பொருளைப்போற்றி
வேணவே யைங்காயப் பொருளேயுன்னி
    விண்ணுலகில் சிவபதத்தை மனதிலுன்னி
பூணவே வோங்காராச் சத்தங்கண்டு
    புகழான சத்திநீ மாயம்பாரே.

விளக்கவுரை :


37. பாரேதான் பஞ்சகர்த்தா ளாடுங்கூத்து
    பாங்கான வாறாதார..................கனைநோக்கி
நேரேதான் தொண்ணூற்று வாறுகொச்சம்
    நேர்மையுள்ள தத்துவங்கள் காணவேண்டும்
சீரேதான் முப்பூவைக் காணவேண்டும்
    சிறப்பான பொதிகைமுனி சொன்னேனப்பா
ஆரேதா னுந்தமக்குச் சொல்வாரப்பா
    அப்பனே பட்சம்வைத்துச் சொன்னேன்பாரே.

விளக்கவுரை :


38. சொன்னேனே சஞ்சீவி முதல்கள்யாவும்
    தோற்றமுடன் நாதவித்தை யறியச்சொன்னேன்
மன்னேகேள் திரிமூர்த்தி யானபேர்கள்
    மகத்தான ருத்திரனும் விஷ்ணுபிரம்மா
பன்னவே கமலமென்ற பீடந்தன்னைப்
    பாருலகில் அறியாத சித்துயென்ன
அன்னேதான் நடுமூலம் உள்மூலந்தான்
    அப்பனெ மேல்மூல மென்னலாமே.

விளக்கவுரை :


39. என்னவே அமுர்தமென்ற காட்டைக்கண்டு
    யெழிலான வாலைதனைப் பூசித்தேதான்
பன்னவே நகாரமுடன் வகாரசித்திப்
    பரிவுடனே சிகாரமென்ற அகாரந்தானும்
முன்னவே மகாரமென்று மூலவட்டம்
    முப்பாழுக் கப்பாலு மறியவேண்டும்
சொன்னபடி தப்பாது புலஸ்தியாகேள்
    சொரூபமென்ற பிண்டமதை யறியவென்ற.

விளக்கவுரை :


40. அறியவே பிண்டமென்ற நாதவிந்தை
    அப்பனே வஷ்டாங்கந் தன்னிற்றானும்
முறியவே யாதியந்த முடிவுகண்டு
    முப்பான முப்பூவைக் காணவேண்டும்
குறிபொருளாய் ஆராய்ந்து குவலயத்தில்
    கூர்மையுடன்............தேகத்தின் நிலையைக்கண்டு
வெறிபடவே உலகநடை காணவேண்டும்
    வருமையுட னிருந்தவர்க் கொன்றில்லைதானே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 31 - 35 of 12000  பாடல்கள்



31. சொன்னதொரு மொழியெனக்குங் களவேயாகும்
    சுருதி............வேதமுதல் மறவேயாகும்
நன்னயம்போல் னூலதனை மெய்றெண்ணி
    நாதாந்த சித்துமுதல் காட்டிலுள்ளோர்
பன்னவே பரவி பயன்காணாமல்
    பாரினிலே யென்னூலுங் கிட்டாமற்றான்
கன்ன................தான் கொடுத்த கொடை யென்றெண்ணி
    காசினியிலே மாந்தர்....................மாண்பே.

விளக்கவுரை :


32. மாண்பான சாத்திரத்தை மதிப்பிட்டோங்கி
    மானிலத்தில் வறுமையது மிகக்கொண்டாடி
காண்பான சாகரத்தை விட்டொழித்து
    கருத்துடனே பெருனூலைத் தேடிக்கொண்டார்
சாண்பாம்பே யானாலும்த டிகல்வேணும்
    தப்பாமல் சாத்திரங்கள் அறியாப்பேர்க்கு
வீணான....ம....ருக்கு யென்னூல்வேண்டும்
    விருப்பமுடன் பெருனூலும் வேண்டும்பாரே.

விளக்கவுரை :


33. பாரேதான் புலஸ்தியனே சொல்லக்கேளும்
    பாரினிலே சித்தரெமைக் காணவென்று
நேரே தான் யெந்தனிடம் வந்தபோது
    நேர்மையுடன் கைதனிலே யிருந்தனூலை
சீரே தான் வாதமதை உபதேசித்து
    சிறப்புடனே நூல்கொடுத்து புத்திகூறி
மேரேதான் மேதினியில் பிழைக்கவென்று
    மேன்மையுடன் வாக்களித்த துறுதியாமே.

விளக்கவுரை :


34. உறுதியா மண்டபிண்டங் காணவேண்டும்
    வுத்தமனே கோசபீச மறியவேண்டும்
நிறுதியா மாதாரங் கண்டாலெல்லாம்
    நீணிலத்தில் நினைத்ததெல்லாஞ் சித்தியாகும்
பருதிபோல் மேலான ஆதாரங்கண்டு
    பட்சமுட...................னாயிரத் தண்டங்கண்டு
சுறுதியெனும் கீழ்மேலும் நடுவுங்கண்டு
    சூட்சத்தில் வகாரத்தின் வாசிபோற்றே.

விளக்கவுரை :


35. போற்றவே வாசியைத்தான் காணவேண்டும்
    பொங்கமுடன் வழலையுப்பு அறியவேண்டும்
ஏற்றவே பூரகத்தை மனதிலுன்னி
    எழிலான தேவியுட பாதங்கண்டு
மாற்றவே குண்டலியின் பொருளைக்கண்டு
    மகத்தான வல்லபையை மனதிலுன்னி
தூற்றியே அண்டபிண்ட நிலையைக்கண்டு
    துப்புரவாய் சிவகாமி தன்னைக்காணே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 26 - 30 of 12000  பாடல்கள்




26. பாழான சாத்திரத்தைச் சாபஞ்சொல்லிப்
    பாருலகில் மதிமயங்கிக் கெட்டார்கொடி
வாழலா மென்றுசொல்லி யவர் நூல்பார்த்து
    வளமை.....................பழிதனக்கு வாளுமாக
சாழவே சாத்திரத்தின் சூட்சங்காணார்
    சதகோடி சூரியன்போல் மனதிலெண்ணி
வீழவே சாத்திரத்தைப் பார்த்தாராய்ந்து
    விருதாவில் கெட்டலைந்தார் மாண்பர்தாமே.

விளக்கவுரை :


27. மாண்பான சித்தரெல்லாங் கூட்டங்கூடி
    மதிப்புடனே இமயகிரி வந்தாரங்கே
தாண்மையுடன் நாமிருக்குங் குகையைத்தேடி
    சட்டமுட னெந்தனையும் ஆராய்ந்தேதான்
ஆண்மையுடன் வந்தெதிரே நின்றுகொண்டு
    அப்பனே வசுவனியை வணங்கிப்போற்றி
பாண்மையுடன் தலைமீதிற் கையைவைத்து
    பட்சமுடன் அஞ்சலிகை செய்திட்டாரே.

விளக்கவுரை :


28. செய்திட்ட சித்தர்தமைக் கண்டபோது
    செம்மையுட னவர்தனக்காசன ங்களிட்டு
வைதிட்ட தேவர்முனி ரிடிகள்தம்மை
    வளமையுடன் நாதாந்த சித்துகேளு
பைதிட்ட சுனைமுகமும் விட்டுநீங்கி
    பாருலகில் வந்தென்னைக் காணவென்று
துய்திட்ட சித்தர்களே கூட்டங்கூடி
    துறைமுகமாய் வந்ததென்ன சொல்லென்றேனே.

விளக்கவுரை :


29. சொல்லென்ற வேளையிலே முனிவர்தாமும்
    சுத்தமுடன் புகலுகிறார் நந்தமக்கு
வெல்லவே வேதாந்தக் குருவேயென்று
    விருப்பமுடன் கேள்வியது மிகவுங்கேட்டு
அல்லலுடன் சாத்திரத்தை யுருகியல்லோ
    அப்பனே சாகரத்தில் விட்டெறிந்தார்
கல்லுடனே ஜலமதிலே மிதந்துகொண்டு
    காற்றுடனே கரையோரம் ஒதுக்கலாச்சே.

விளக்கவுரை :


30. ஒதுக்கியதோர் குருனூல்கள் அழிந்துப்போச்சு
    ஓகோகோ நூல்கள் மிதக்கலாச்சு
சதுரான கருமானஞ் சாகரத்தில்
    சட்................ந்தியல்லோப் பாழாய்போச்சு
மெதுவாக மிதந்ததோர் சாத்திரங்கள்
    வளமையுடன் பாடிவைத்தார் வெகுநூல்தாமும்
முதுமடையர்......................த் தலைகீழாக
    மூர்க்கமுடன் படித்துமல்லோ மொழிசொன்னானே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 21 - 25 of 12000  பாடல்கள்


21. அதிதமுடன்  அஷ்டமா  சித்துயாவும் 
    அப்பனே  யாமுரைத்தோம்  புலஸ்தியாகேள்
கதிதமுள்ள  செகஜால  குளிகைமார்க்கம்
    கருவான  மோகனங்கள்  வசியந்தானும்
துதிதமுள்ள  செப்பிடுநல்  வித்தைதானும்
    துறையான பேதனங்கள்  உச்சாடனங்கள்
பதிதமுள்ள  ஸ்தம்பனங்கள் ................ சைமூலி
    பகருவேன்  இன்னம்வெகு  கோடிதானே.

விளக்கவுரை :


22. கோடியாம்  கற்பமுதல்  முப்புமார்க்கம்
    கொடிதான  விஷமூலி  ............  க்கு
நாடியே  மலைவளமும்  நதிகள்யாவும்
        நலமுடனே  பா ....... னட  ந்தன்னில்
தேடியே  காண்டமது  கிடைத்துதானால்
    .................. நீயுமொரு  சித்தனாவாய் 
கூடியே  மனோன்மணித்தாய்  அருளிருந்தால்
    குவலயத்தி  லுந்தனுக்கு  வாய்க்கும்பாரே.

விளக்கவுரை :


23. வாய்க்குமே  சித்தர்களு  முனிவர்தாமும்
    வரைகோடி  முறைகோடி  துறைகள்கோடி
தாய்க்கமலம்  வீற்றிருக்கும்  தாயார்தாமும்
    தகமையுடனுந்தனுக்கு  முன்னே  நிற்பாள்
காய்க்குமே  யவரவர்கள்  செய்தநூல்கள்
    கடலாகுமடா  வாதமது  கோடாகோடி
சாய்க்கவே  சாத்திரங்கள்  அனந்தஞ் 
    சதிரான  உட்கருவை  மறைத்தார்பாரே.

விளக்கவுரை :


24. மறைத்தாரே சாத்திரங்கள் மிகவுஞ்செல்லி
    மானிலத்தில் சாபம்......தாச்சு
நிறைத்தாரே தங்கள்தங்கள் மனதின்நேர்மை
    நினைத்தபடி சாத்திரத்தைப் பாடிப் போட்டார்
குறைத்தாரே நூலதனை மாராட்டங்கள்
    குறிப்புடனே பாடிவைத்தா ரனேகநூல்கள்
முறைப்படியே பெருநூலுஞ் சிறுநூல்தன்னை
    முயற்சியுடன் பாடிவிட்டா ரனந்தமாமே.

விளக்கவுரை :


25. ஆமேதான் பலரிடிகள் செய்தநூலை
    அப்பனே மெய்யென்று சொல்லியேதான்
போமேதான் சுட்டலைந்து கெட்டார்கோடி
    பூதலத்தில் பலகோடி மாந்தரப்பா
நாமேதான் சொன்னபடி நீதியில்லை
    நலமான இந்நூல்போல் யாருஞ்சொல்லார்
தாமேதான் அவரவர்கள் செய்தநூலில்
    தப்பாமல் சாபத்தால் முறைபாழாச்சே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 16 - 20 of 12000  பாடல்கள்

agathiyar-panniru-kandam

16. நன்றான வார்த்தையது மிகவேபேசி
    நயமான விசுவாசக் காட்சியோடு
பன்றான பழிமுறைகள் விகற்பஞ்சொல்லி
    பட்சமுடன் நூலதனைப்பறிக்கவென்று
குன்றான மலையருகே வந்துநின்று
    கோடான கோடிமுறைகள் வாதுபேசி
வென்றான முகதாவில் விருப்பஞ்சொல்லி
    வேண்டியே சாத்திரத்தைக் கேட்பார்காணே.

விளக்கவுரை :

17. காணவே புலஸ்தியனே சொல்லக்கேளும்
    கருவான நூலிதனைக் கண்டாராய்ந்து
பூணவே மனதுவர நடந்தவா்க்கு
    புண்ணியனே இந்நூலைக் கொடுக்கவேண்டும்
வேணவே ஆசாரமது மிகவும்சொல்லி
    விருப்பமுடன் புத்திமதி பலவுங்கூறி
தோணவே அவா்தனக்கு நூலைஈய்ந்தால்
    தொல்லுலகில் நோ்ந்தகுறை விட்டதென்னே.

விளக்கவுரை :

18. என்னவே விட்டகுறை நோ்ந்துதானால்
    யெழிலான நூல் இதுவும் வாய்க்கும்பாரு
பன்னவே பல நூலைப் பார்த்திட்டாலும்
    பாரப்பா எந்தனுக்குப் பலியாதொன்றும்
சொன்னதொரு நூலிதிலே யாவும்காண்பாய்
    சுந்தரனே சிவராஜ யோகங்கிட்டும்
மன்னவனே பூலோக மிருந்துவாழ்வாய்
    மார்க்கவுடன் அஷ்டசித்தி பெறலாம்பாரே.

விளக்கவுரை :

19. பாரேதான் புலஸ்தியனே சொல்லக்கேளும்
    பட்சமுடன் நூலினது மார்க்கஞ்சொல்வேன்
நேரேதான் வாதமது வயித்தியமார்க்கம்
    நிசமான குளிகையது மெழுகுமார்க்கம்
சீரேதான் லேகியங்கள் பற்பமெல்லாம்
    சிறப்பான செந்தூரங் கபாடமெந்திரம்
கூரேதான் மாத்திரைகள் குளிகைகள்யாவும்
    குறிப்புடனே ஆக்கிராணஞ் செப்பக்கேளே.

விளக்கவுரை :

20. செப்பவென்றால் சூரணங்கள் எண்ணெய்யாவும்
    தெளிவான தயிலமுதல் திராவகங்கள்
ஒப்பமுடன் பிளாஸ்திரிகள் கிஷாயபாகம்
    உரிமைபெற அஞ்சனமுந் திலதப்போக்கும்
கொப்பெனவே கற்கங்கள் மெழுகுமார்க்கம்
    கொடிதான செயநீா்கள் உருக்குமார்க்கம்
தப்பிதங்கள் நேராமல் தரணியோர்க்கு
    சாற்றினேன் இன்னம்வெகு அதீதந்தானே.


விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 11 - 15 of 12000  பாடல்கள்


agathiyar-panniru-kandam

11. காண்டமாம் பன்னீராயிந் தானிந்நூல்
    காணாத காட்சியெல்லா மிதற்குள்ளாகும்
வேண்டியதோர் கருமான மிதற்குள்ளுண்டு
    விருப்பமுடன் சூட்சாதி மிதற்குள்ளுண்டு
தாண்டவம்போல் லட்சுமியாள் மனோன்மணித்தாய்
    சதாகாலம் வீற்றிருப்பார் பெருநூல்தன்னில்
நீண்டதொரு சாகரமும் இதுவேயாகும்
    நிலையான காவியம் பன்னிரண்டுமாமே.

விளக்கவுரை :

12. ஆமேதான் காவியத்துக்  கோயிரந்தான்
           அப்பனே பாடிவைத்தேன் பெருநூலப்பா
தாமேதான் காண்டத்துக் காயிரந்தான்
            சாற்றினேன் காவிய மாயிரந்தானாகும்
நாமேதான் சொன்னபடி பன்னிரெண்டுகாண்டம்
           நலமுடனே பன்னிராயிரக் காவியந்தான்
போமேதான் பெருநூலைப் பார்த்தபேர்க்குப்
           பொங்கமுடன் பதவிகளுங் கிட்டுந்தானே.

விளக்கவுரை :

13. தானான சாலோக சாயுச்சியந்தானும்
    தகைமையுடன் பதவிகளுக் கிடமுண்டாகும்
வேனான பதவியதுக் கிட்டும்போது
    வேகமுடன் மோட்சமென்ற வீடுதானும்
பானான சொர்க்கபதிக் காணியாகும்
    பரலோக மென்னாளும் பலிக்கும்பாரு
மானான சாத்திரத்தை மதிப்பிட்டேதான்
    மானிலத்தில் பார்த்தவா்க்கு மகிமைகேளே.

விளக்கவுரை :

14. கேளேதான் மடலவிழும் தாமரையாள்தானும்
    கிருபையுடன் என்னாளும் வாசமுண்டாம்
நாளேதான் மகிமையுண்டாங் கீர்த்தியுண்டாம்
    நலமான வாழ்நாளும்  மிகவுண்டாகும்
பாளேதான் போகாமல் இடமுண்டாகும்
    பாரினிலே யெந்நாளும் வெற்றியுண்டாகும்
வீளேதான் சின்மயத்தின் வெண்ணீருண்டாம்
    வீரமுட னென்போக மிகவுண்டாமே.

விளக்கவுரை :

15. உண்டான சாத்திரத்தை மிகவும்பார்த்து
    உத்தமனே புலஸ்தியனே செப்பக்கேளும்
கண்டுமே யாராய்ந்து பலனூல்பார்த்து
    கவனமுடன் பாடிவைத்த பெருனூலப்பா
விண்டதிலை கண்டவா்கள் மகிமையப்பா
    விருப்பமுடன் தனையறிந்த பெருநூலப்பா
தெண்டனிட்டுப் பணிவுடனே காத்திருந்து
    தொந்தமுட னின்னூலை வாங்கநன்றே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 6 - 10 of 12000 பாடல்கள்



agathiyar-panniru-kandam

6. வந்தித்தேன் கோடிமுறை அஞ்சலித்து
    வாகுடனே அவா்மனதுக்கிசையவென்றூ
சிந்தித்தேன் பலகாலும் நாதா்தம்மை
    சிறப்புடனே நவகோ டிரிடிகள்மெச்ச
தொந்தித்த யான்செய்த பெருநூல்தன்னை
    தொல்லூலகில் சித்தா் முனிமாந்தா்யாவும்
நிந்தித்த தோஷங்கள் கூறொண்ணாதூ
    நீணிலத்தில் சாபமதை நீக்கவென்ற.

விளக்கவுரை :

7. நீக்கவென்றூ கேட்கையிலே அசுவனிதாமும்
    நிட்சயமா யெந்தனூக்கு வுண்மைகூறி
அக்கமுடன் குகைக்குள் யேயிருந்த நூலை
    அவனியிலே யாவருக்கும் போதித்தேதான்
தாக்கமுடன் சதாகாலந் தரணிமீதில்
    சதகோடி யுகவருஷம் அழியாவென்று
நோக்கமுடன் வரமொன்றுங் கொடுத்தாரப்பா
    நுணுக்கமுடன் பாரினிலே நிறைத்திட்டேனே.

விளக்கவுரை :

8. நிறைத்திட்ட நூலதுதான் குருநூலாகும்
    நீடாழி யுலகமெல்லாம் இதற்குள்ளாச்சு
வறைத்திட்டேன் மூன்றுலட்சங் கிரந்தத்தன்னை
    வாகுடனே ஆராய்ந்து உளவுகண்டு
பறைத்திட்ட பலுநுலும் பார்த்தாராய்ந்து
    பாரினிலே சிவயோகி மாந்தருக்கு
மறைத்திட்ட சாத்திரத்தின் மார்க்கமெல்லாம்
    மதிப்புடனே புவியோர்க்கு விரித்திட்டேன்.

விளக்கவுரை :

9. விரித்திட்டேன் மூன்றுலட்சங் கிரந்தந்தன்னை
    விவரமுடன் பெருநுலாய்க் குருநூலாக
குரித்திட்டேன் சூத்திரங்கள் கருக்கிடையாவும்
    கூறினேன் கெடுக்கிடைக ளனந்தங்கண்டேன்
தரித்திட்டேன் பெருநுல்கள் சிறுநுல்கள்யாவும்
    தகமையுடன் ஒன்றுமுதல் பதினாறுமாகும்
முரித்திட்டைன் கோர்வைகளு மனந்தங்கோடி
    முசியாமல் பார்த்துமல்லோ மொழிந்திட்டேனே.

விளக்கவுரை :

10. மொழிந்திச்டேன் யான் செய்த நூலங்கண்டு
            முதன்மையுடன் பதினெண்பேர் நூலும்பார்த்து
வழிந்திட்டேன் நவகோடிரிகள் நூலும்
             வண்மையுடன் கண்டுமே மிகவராய்ந்து
வழிந்திட்ட நாற்பத்தி யெட்டுபேர்கள்
             அன்புடனே செய்ததொரு நூலையெல்லாம்
பழிந்திட்ட சாபமதுவும் நீக்கியேல்லோ
             பாரினிலே பாடிவிட்டேன் காண்டந்தானே,

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 1 - 5 of 12000  பாடல்கள்

agathiyar-panniru-kandam



காப்பு

1. ஆதியென்ற கணேசருட பாதம்போற்றி
    அப்பனே மனோன்மணியாள் கமலம்போற்றி
சோதியெனுஞ் சுடரொளியே சொரூபாபோற்றி
    சொற்கபதி நான்முகன்றன் பாதம்போற்றி
விதியெனும் வயித்தியர்கள் பிழைக்கவென்று
    வகுத்திட்டேன்பன்னிரெண்டு காண்டந்தன்னை
நீதியுடன் ஆயிரத்துக்கொரு காண்டந்தான்
    நிகழ்த்தினேன் மாணாக்கள் பிழைக்கத்தானே.

விளக்கவுரை :

2. தானான புலத்தியனே சாற்றக்கேளும்
    தகைமையுள்ள குருநூலாம் பெருநூலாகும்
பானான பராபரியை மனதிலெண்ணி
    பாடினேன் பன்னிரெண்டு காண்டமப்பா
தேனான காண்டமது வொன்றுக்கேதான்
    செப்பினேன் காவிய மாயிரந்தானாகும்
மானான வசுவனியை வணங்கியானும்
    மகிழ்ச்சியடன் பாடிவைத்த காண்டமாமே.

விளக்கவுரை :

3. காண்டமாம் பன்னீராயிரந் தானாகும்
    காசினி லிதைப்போலொரு நூலுண்டோ
தூண்டியதோர் காவியமாம் பன்னீராயிரம்
    துறையோடு முறையோடு செப்பினோம்யாம்
மீண்டதொரு யின்னூலை திரட்டியேதான்
    மேதினியில் குகைக்குள்ளே வைத்தேன்யானும்
ஆண்டகையாம் அசுவனியாந் தேவர்யானும்
    அடியேனுக் கோராணை செப்பினாரே.

விளக்கவுரை :

4. செப்பியதோ ராணையென்றால் சொல்லக்கேளும்
    செகமதிலே பாவிகளும் கர்மியுண்டு
ஒப்பியதோர் நூலதனைக் கொடுத்தாலப்பா
    என்மகனே லோகமெல்லாஞ் சித்தாய்ப்போகும்
தப்பியே தலைதெறித்துப் போகுமென்று
    சாற்றினா ரெந்தனுக்குச் சாபமப்பா
இப்புவியி லின்நூலைக் கொடாதேயென்று
    யெழிலுடனே வாக்குரைத்தார் தேவர்காணே.

விளக்கவுரை :

5. காணவே அடியேனுந் தாள்வணங்கி
    கருத்துடனே நாதாக்கள் சொற்படிக்கு
வேணவே அடியேனும் மனதுவந்து
    விருப்பமுடன் அசுவினியை மிகவும்வேண்டி
தோணவே சாபமதை நிவர்த்திசெய்ய
    தொன்மையுடன் அடியேனுந் தாள்பணிந்து
ஊணவேயவர் பாதங்கரத்தால் வேண்டி
    உத்தமனே பலகாலும் வந்தித்தேனே.

விளக்கவுரை :

சித்த வைத்திய தொகையகராதி 2601 - 2650 மூலிகைச் சரக்குகள்


வெண்டைவகை

வெண்டை
சுனைவெண்டை
வெள்ளைவெண்டை
காட்டுவெண்டை          ஆக 4

வெந்தயம்

வெல்லவகை

கரும்புவெல்லம்
பனைவெல்லம்          ஆக 2

வெள்ளரிவகை

வெள்ளரி
கக்கரிவெள்ளரி
கசப்புவெள்ளரி
சுனைவெள்ளரி          ஆக 4

வெற்றிலைவகை

வெற்றிலை
கற்பூரவெற்றிலை
மஞ்சள்வெற்றிலை
மலைவெற்றிலை
கருப்புவெற்றிலை         ஆக 5

வே

வேங்கைமரவகை

வேங்கைமரம்
உதிரவேங்கைமரம்
உரோமவேங்கைமரம்
மணிமுத்துவேங்கைமரம்       ஆக 4

வேப்பமரவகை

வேம்பு
கருவேம்பு
சருக்கரைவேம்பு
சிவனார்வேம்பு
நிலவேம்பு
மலைவேம்பு           ஆக 6

வேர்வகை

வெட்டிவேர்
விலாமிச்சைவேர்         ஆக 2

வேலாவகை

கருவேலா
வெள்வேலா
குடைவேலா
பிவேலா             ஆக 4

வேளைச்செடிவகை

தைவேளை
வயல்வேளை
தூதுவேளை
வெண்தூதுவேளை
நாய்வேளை           ஆக 5

வை

வைம்புரசமரம்

தொகையகராதி முற்றிற்று.

Powered by Blogger.