அகத்தியர் பன்னிருகாண்டம் 306 - 310 of 12000 பாடல்கள்


306. தானான சூதமுனி அன்பத்தொன்று
    தாக்கான பிரம்மமுனி இருபத்தொன்று
கோனான கமலமுனி எண்பத்தொன்று
    கொற்றவனே அஷ்ட சூத்திரந்தான்பாரு
வேணான சட்டமுனி பதானாறும்பார்
    வேகமுடன் தன்வந்திரி பதினாறும்பார்
பானான புலிப்பாணி இருபத்தைந்து
    பாங்குடனே பார்ப்பதுவே மெத்த நன்றே.

விளக்கவுரை :


307. நன்றான புலிப்பாணித் திலர்தமப்பா
    நலமாக விருபத்தி யைந்தும்பாரு
குன்றான சோதிட மைம்பதும்பார்
    குறிப்பான புலிப்பாணி பதினாறும்பார்
தன்றான கோரக்க ரெண்பதும்பார்
    தகையுள்ள வால்மீகர் முப்பத்திரெண்டு
அன்றான வரரிடி அன்பதும்பார்
    அழகான யென்னூலு நூறும்பாரே.

விளக்கவுரை :


308. நூறூன சிவராஜ யோகமப்பா
    நுணுக்கமுள்ள கருவிகர ணாதிதோன்றும்
கூறான மச்சமுனி பாரிசாதங்
    கொப்பெனவே முப்பத்தி ரெண்டுமேபார்
நேரான யென்னூலாம் பதினாறும்பார்
    நேர்மையுடன் உட்கருவு வெளியாய்த்தோன்றும்
பாரான கொங்கணவர் சூத்திரந்தான்
    பாங்குபெற முப்பத்தி ரெண்டும்பாரே.
  
விளக்கவுரை :


309. ரெண்டான கமலமுனி சூத்திரந்தான்
    எழிலான பதினாறு சுருக்கமேபார்
துண்டான சூத்திரமாம் நூறுமேபார்
    துப்புரவாய் சட்டமுனி சூத்திரந்தான்
பண்டான அறுபத்து நாலுமேபார்
    பாங்குபெற தேரையர் நூறும்பாரு
உண்டான அன்பத்தி ரெண்டுசூத்திரம்
    உத்தமனே பார்ப்பதுவும் நன்மையாமே.
       
விளக்கவுரை :


310. ஆமேதான் பஞ்சாட்சரந்தான்
    அப்பனே அன்பது சூத்திரம்பா
தாமேதான் பிரம்மமுனி சிவராஜமப்பா
    தக்கான அறுபத்து நாலுமேபார்
நாமேதான் சொன்னபடி எந்தன்னூலு
    நலமான எமகாண்டம் பதினாறும்பார் 
போமேதான் யூகிமுனி சூத்திரந்தன்
    பொங்கமுடனன்பதுமே பார்த்திடாயே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 301 - 305 of 12000 பாடல்கள்


301. பாரப்பா என்சூத்திரம் பத்தும்பாரு
    பாங்கான கொங்கணவர் முப்புபாரு
சீரப்பா மதிவெண்பா வகாரம்பாரு
    சிறப்பான மதிவெண்பா நூறும்பாரு
கூரப்பா மூலவர்க்கம் பத்தும்பாரு
    குறிப்பான கக்கிஷமும் பத்தும்பாரு
சேரப்பா யெந்தனது சூத்திரந்தான் 
    திறமான அன்பதுதான் பார்க்கநன்றே.

விளக்கவுரை :


302. நன்றான வேதாந்த சூத்திரந்தான்
    நலமான பெருங்குழம்பு யிருபத்தைந்து
குன்றான சொச்ச சூத்திரந்தானப்பா
    கொற்றவனே அன்பத்தி ஒன்றும்பாரு
தன்றான பதினாறு காரசாரம்
    தகைமையுடன் பார்ப்பதுவே மெத்தநன்று
பன்றான வாசமுனி சூத்திரந்தான்
    பாங்குபெற எழுபதுந்தான் பார்த்திடாயே.

விளக்கவுரை :


303. பார்த்திடவே போதமென்ற சூத்திரந்தான்
    பளிங்குபோல் முப்பத்தி ரெண்டும்பாரு
சேர்த்திடவே ஞான முப்பத்திரெண்டும்
    செவ்வையுடன் பார்ப்பதுவே மெத்தநன்று
பூர்த்தியாய்க் கொங்கணவர் சூத்திரந்தான்
    புகழான முப்பத்தி ரெண்டும்பாரு
நேர்த்தியாய்க் கொங்கணவர் சரக்குவைப்பு
    நேர்மையுடன் நூறுகவி பார்க்கநன்றே.
           
விளக்கவுரை :


304. நன்றான கொங்கணவர் காயகற்பம்
    நலமுடனே இருபத்தி யைந்தும்பாரு
குன்றான கருவூரார் நொண்டியப்பா
    கொற்றவனேழ் நூறுமது பார்க்கவேண்டும்
சென்றதொரு சுந்தரா நந்தர்தாமும்
    சிறப்பான நூறுகவி பின்னும்பாரு
வென்றிடவென் சூத்திரமு மைம்பதுபார்
    வெற்றியுடன் செயகண்டி நூறும்பாரே.

விளக்கவுரை :


305. நூறான சிவவாக்கியர் நொண்டிபத்து
    நுட்பமுள்ள நந்திபதி னாறும்பாரு
கூறான யென்தன்னூல் பதினாறும்பார்
    குறிப்புடனே வாசியது யெட்டும்பாரு
தேறவே யூர்வசி பதினாறும்பார்
    தெளிவான வாசமுனி யெட்டும்பாரு
மீறவே கொங்கணவ ரிருபத்தைந்து
    மேன்மையுள்ள முப்பூவும் பதினாறுதானே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 296 - 300 of 12000 பாடல்கள்


296. எட்டான  குளிகையது அறியவேண்டும்
    எழிலான என்னூலில் ஞானமப்பா
திட்டமுடன் பதினாறு ஞானந்தானும்
    தீரமுடன் யானுறைத்தேன் புலஸ்தியாகேள்
வட்டமுடன் வான்மூகர் பத்தும்பாரு
    வாகன சிவயோகம் பதினாறும்பார்
சட்டமுடன் யென்னூலாஞ் சுத்தஞானம்
    சதுரான நவநீதம் ஒன்பதாமே.

விளக்கவுரை :


297. ஒன்பதாம் வயித்தியக் கும்மிதானும்
    ஒப்பான அண்டக்கல் சுண்ணம்பத்து
அன்பதாம் மச்சமுனி சொச்சம்பாரு
    அப்பனே சூத்திரமும் எட்டும்பாரு
துன்பகற்றுந் திருமூலர் கிரந்தியெண்ணை
    துப்புரவாய் எட்டுடனே ரெண்டும்பாரு
இன்பமுடன் ரோமரிடி கருமானந்தான்
    எழிலாக அன்பத்தி யொன்றும்பாரே.

விளக்கவுரை :


298. பாரேதான் கௌபால சித்தரப்பா
    பண்புடனே ஆணியென்ற கோர்வைதானும்
நேரேதான் அன்பத்தி யொன்றுதானும்
    நேர்மையுடன் சூத்திரத்தைப் பார்க்கவேண்டும்
சீரேதான் சட்டமுனி நாதர் தாமும்
    சிறப்பான கற்பவிதி நூறும்பாரு
கூரேதான் கேசரிநூல் அன்பத்தொன்றும்
    குற்றமில்லா சூத்திரமும் பத்தும்பாரே.

விளக்கவுரை :


299. பத்தான குளிகையது எட்டும்பாரு
    பாங்கான குருக்கிடை சூத்திரந்தான்சொச்சம்
முத்தான சூத்திரமும் முப்பத்தாறு
    முடிவான பச்சைவெட்டு பதினாறும்பார்
சித்தான வாதமது ஆறும்பாரு
    சிறப்பான பதஞ்சலியார் இருபதும்பார்
மத்தான யென்னூல்முன் னெண்பதும்பார்
    மகத்தான பின்னூல் எண்பதுதான்பாரே.

விளக்கவுரை :


300. எண்ணான சுந்தரா நந்தர்தானும்
    யெழிலாகத் தானுறைத்த நூல்தானப்பா
கண்ணான பூஜாவிதி முன்பின்பாரு
    கருவான வென்னூல் பட்சணிதான்பாரு
குண்ணான ஞான முப்பதுவுங்பாரு
    கூறான வூத்தமுறை தன்னைப்பாரு
தண்ணமுடன் வள்ளுவனார் நூறும்பாரு
    தாக்கான குறுநூல் எண்பதுதான்பாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 291 - 295 of 12000 பாடல்கள்


291. எண்ணையாம் பதினாறு சூத்திரம்பாரு
    யெழிலான கருணை வாகடமும்பாரு
திண்ணமுடன் பால வாகடந்தானப்பா
    சூத்திரமாம் இருபதும் முன்னேபாரு
தண்ணமுடன் காவியமாஞ் சுருக்கந்தானும்
    தகைமையுடன் பதினாறும் பார்க்கவேண்டும்
வண்ணமுடன் சோதிமணிக் குளிகையெட்டு
    வாகான திருமந்திர மெட்டுமாமே.

விளக்கவுரை :


292. எட்டான திருமந்திர மஞ்சும்பாரு
    யெழிலான ரோமரிடி பதினாறுபார்
கட்டான யென்நூலில் பதினாறுதன்னில்
    கருவான கெந்தகத்தின் தைலம்பாரு
திட்டான சரக்குசுத்தி முழுதும்பாரு
    திறமான ராசாங்க நாடிபாரு
வட்டான அகஸ்தியர் ஞானமப்பா
    வளமுடனே பதினாறு பார்ப்பாய்தானே.

விளக்கவுரை :


293. பார்க்கவே சூதமுனி நாடிபாரு
    பாங்கான ஞானமது எட்டும்பாரு
ஏர்க்கவே சுருக்கம் பன்னிரண்டும்பாரு
    எழிலான வாத சூத்திரந்தான்பாரு
ஆர்க்கவே திருமூலர் இருபதப்பா
    அப்பனே உபதேசம் பாருபாரு
ஊக்கமுடன் அகஸ்தியனார் முப்புபாரு
    முப்பதிலே முப்பூவின் வழிசொன்னேனே.

விளக்கவுரை :


294. சொன்னேனே தட்சணா மூர்த்தியைப்பார்
    சுத்தமுள்ள வகாரமது பத்தும்பாரு
முன்றான தீட்சையது பதினாறும்பார்
    முதலான சுருக்கமது வொன்றும்பாரு
பன்னவே கொங்கணவர் முக்காண்டந்தான்
    பாகமுடன் கண்டறிவாய் புலத்தியா நீ
வின்னமில்லா முக்காண்டத் திருமந்திரந்தான்
    வேகமுடன் பார்ப்பதுதான் மெத்தநன்றே.

விளக்கவுரை :


295. நன்றான பதினைந்து சூத்திரந்தான்
    நலமுடனே பூசாவிதி பார்க்கவேண்டும்
குன்றான் ரோமரிடி சூத்திரங்கள்
    குறையாம லிருபதுதான் பார்க்கவேண்டும்
நன்றுள்ள பதினாறு வகாரசூத்திரம்
    தாக்குடனே கொங்கணவர் குளிகையப்பா
வென்றிடவே யெட்டுமது பார்க்கவேண்டும்
    வேதாந்த நந்தீசர் குளிகையெட்டே.
    
விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 286 - 290 of 12000 பாடல்கள்


286. நன்றான புலஸ்தியனே இன்னங்கேளு
    நாதாந்த சித்தொளிவின் நூல்களெல்லாம்
குன்றான மலைபோல இருக்குதப்பா
    கூறவுந்தான் என்னாலு முடியாதல்லோ
என்றாலும் எந்தனால் அறிந்தமட்டும்
    எழிலாக எடுத்துரைப்பேன் இன்னங்கேளு
பன்றான பலகோடி சாத்திரங்கள்
    பாலித்தார் பாரினிலே உண்மையாமே.

விளக்கவுரை :


287. உண்மையாம் கொங்கணவர் காண்டம்பார்
    உத்தமனே ஐநூறு தானும்பாரு
நண்மையாம் செகசால மெண்ணூறும்பார்
    நலமான நாற்காண்ட சாலம்பாரு
திண்மையாற் தன்வந்திரி ஆயிரம்பாரு
    திறமான நிகண்டு முன்னூறும்பாரு
வண்மையாம் புலிப்பாணி ஐநூம்பாரு
    வாகான சாலமது முன்னூறுபாரே.


விளக்கவுரை :


288. பார்ப்பதற்கு சிவஜால முன்னூறும்பார்
    பாங்கான பூரணம் ஆயிரந்தான்பாரு
சேர்க்கவே வொட்டியமா யிரந்தான்பாரு
    சிறப்பான சல்லியமுங் கூடப்பாரு
ஏர்க்கவே பஞ்சகாவியந்தான் பாரு
    எழிலான சம்பூர்ண காவியம்பார்
மார்க்கமுடன் பிரணவமாம் லட்சணகாவியந்தான்
    மயங்காமல் சிறுகாவிய முழுதும்பாரே.

விளக்கவுரை :


289. முழுதுமே பார்க்கையிலே மோசமில்லை
    மூதுலகி லின்னம்வெகு நூல்கள்சொல்வேன்
பழுதுபடாப் பெருநூல்கள் பார்த்தபின்பு
    பாகமுடன் சிறு நூல்கள் பார்க்கவேண்டும்
வழுதுறவே சிறுநூலில் அனந்தஞ்சொல்வேன்
    வாகான சூத்திரங்கள் மிகவுஞ்சொல்வேன்
தொழுகைபட சூத்திரங்கள் கோடாகோடி
    தொல்லுலகில் கண்டமட்டுஞ் சொல்வேனே.

விளக்கவுரை :


290. சொல்லுவேன் சுப்பிரமணியர் முப்பத்திரெண்டு
    சொச்சமாங் கொங்கணவர் எட்டும்பாரு
வெல்லவே ராமதேவர் பத்தும்பாரு
    வேதாந்த வழலை சூத்திரந்தான்பாரு
கொல்லவே சுடலை சூத்திரந்தான்பாரு
    கொற்றவனே சஞ்சீவி யெண்ணைபாரு
புல்லவே நந்தி பதினாறும்பாரு
    புகழான சித்தாதி யெண்ணைபாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 281 - 285 of 12000 பாடல்கள்


281. ஆமேதான் மாந்திரிய காவியந்தான்பாரு
    அப்பனே ஞான காவியந்தான்பாரு
நாமேதான் சொன்னபடி யெழுநூறும்பார்
    நயமுடன் வதிற்சேர்ந்த வெண்ணூறும்பார்
போமேதான் காயசித்தி வெண்ணூறும்பார்
    பொங்கமுடன் வறுநூறு நொண்டிபாரு
வேமேதா னுபதேசம் ஆயிரம்பார்
    வெளியான பரிபாஷை பாருபாரே.

விளக்கவுரை :


282. பார்க்கையிலே பதினெண்பேர் பாடிவைத்த
    பாகமுடன் பரிபாஷை யறியவேண்டும்
சேர்க்கையிலே சௌமிய மாயிரந்தான்பாரு
    சிறப்பான கருக்கிடையு மைநூறும்பார்
ஏர்க்கவே யெழுனூறுத் திரட்டுபாரு
    யெழிலான வைநூறு சுருக்கம்பாரு
வார்க்கவே நந்தீசர் ஆயிரம்பார்
    வளமுடனே கருக்கிடையு முன்னூறுபாரே.

விளக்கவுரை :


283. முன்னூறாம் நந்தீசர் பெருநூல்பாரு
    முயலான நந்திமுன்னூற் நிகண்டுபாரு
நன்னூலாம் பஞ்ச காவியந்தான்பாரு
    நலமான திருமூல ரறுநூறுபாரு
பன்னூலில் சிறந்ததோர் நூல்தானாகும்
    பளிங்கான கடைக்காண்டம் பார்க்கவேண்டும்
துன்னூலாம் தீட்சைவிதி வாயிரம்பார்
    துறையான நிகண்டு வாயிரந்தான்பரே.

விளக்கவுரை :


284. பாரான நந்திமுன்னூறு நிகண்டும்பாரு
    பாங்கான போகரது நிகண்டும்பாரு
காரான திருமூல ராயிரம்பார்
    கருவான கருக்கிடயு மறுநூறும்பார்
தூரான பெருநூலாம் பலகாண்டாம்
    துறையான பாலவாகடம் முன்னூறு
தாரான லக்க சௌமியந்தான் பாரு
    தகைமையுள்ள செகஜால மாயிரந்தான்காணே. 

விளக்கவுரை :


285. காணவென்றால் மச்சமுனி யெண்ணூறும்பார்
    கருவான பெருனுலா யிரந்தான்பாரு
பூணவென்றால் கருவூரா ராயிரம்பார்
    புகழான முன்னூற்றுச் சொச்சம்பாரு
ஆணவே ராமதேவ ராயிரம்பார்
    அப்பனே கருக்கிடையு மைனூறும்பார்
தோணவே சட்டமுனி ஆயிரம்பார்
    சொச்சமுடன் இருநூறும் பார்க்கநன்றே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 276 - 280 of 12000 பாடல்கள்


276. தாமான நசகாண்டங் கண்டபின்பு
    சார்பான அசுவகாண்ட மறியவேண்டும்
வாமென்ற பூரண சூத்திரந்தா நூறு
    வண்மையுள்ள யிருநூறு மறிவேண்டும்
தாமென்ற பெருநூ லாயிரந்தானப்பா
    தாக்கான கருக்கிடையு மைநூறுமாகும்
மேமென்ற கரிசலையு முன்னூறு வேண்டும்
    வியர்வான சொந்தூர முன்னூறும்பாரே.

விளக்கவுரை :


277. பாரேதான் கருக்கிடையா மைநூறுமாகும்
     பாங்கான பாண்டுவைப்பு வறுநூறும்பார்
நேரேதான் செனகாறு நூறும்பாரு
    நேரான கமலம் ஆயிரம்பார்
கூரேதான் சட்டமுனி யெண்ணூறும்பார்
    குறிப்பான கபிலரது காவியம்பார்
சீரேதான் சிந்தாமணி ஆயிரம்பார்
    சிறப்பான யந்நூலாம் வேதமாமே.

விளக்கவுரை :


278. வேதமாம் ஆயுறு வேதந்தானும்
    வீணாக வாயிரத்தி யிருநூறுபார்
போதமாம் போதரிடி பெருநூலப்பா
    பொங்கமுடன் காவியமா யிரந்தான்பாரு
நீதமென்ற கற்பமது வெண்ணூறும்பார்
    நிலையான கருக்கிடையு மைநூறும்பார்
வாதமென்ற காவியமா யிரந்தான்பாரு
    வளமையுள்ள திராவகமு மெண்ணூர்தானே.

விளக்கவுரை :


279. தானான வெண்ணூறு பார்த்தபின்பு
    தகைமையுள்ள பற்பமது வெண்ணூறும்பார்
தேவான மணிநாலா யிரந்தான்பாரு
    தெளிவான திருமந்திர மாயிரம்பார்
பானான கருக்கிடையும் முன்னூறும்பார்
    பாங்கான பள்ளு நாடகமும்பாரு
மானான பிறையோக காரமென்னும்
    மகத்தான காவிய மாயிரந்தான்காணே.

விளக்கவுரை :


280. காணவே செயகண்டி வாயிரம்பார்
    கருவான வாகடிய மைநூறும்பார்
பூணவே பெருனூ லாயிரத்தைன்னூற
    புகழான காவியமும் பார்க்கவேண்டும்
தோணவே யூகிமுனி பெருங்காவியந்தான்
    துப்புரவாய்ப் பார்த்தபின்பு சொச்சம்பாரு
வேணவே பெருந்திரட்டு குறுந்திரட்டுதானும்
    மிக்கான மாந்திரிய காவியந்தானாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 271 - 275 of 12000 பாடல்கள்


271. வைத்தாரே நூல்களின்மேல் தோஷஞ்சொல்லி
    வளமையுடன் யென்னூலைக் குருநூலென்று
கைத்ததொரு சீஷாக்கள் நூலைத்தானும்
    கடினமுடன்  குகைமுன்னே வைத்தபோது
வைத்ததொரு நூலெல்லாம் பிரளயத்தில்
    தாரணியில் மிதந்துவிடக் கண்டோர்தாமும்
தைத்ததொரு பெருநூல்கள் கருவியெல்லாம்
    நலமாக மிகுந்துவிடக் கண்டிட்டோமே.

விளக்கவுரை :


272. கண்டிட்ட நூல்களெல்லாம் பார்த்தாராய்ந்து
    கருவான காண்டமது பனிரெண்டாய்ச் சொன்னேன்
பண்டிதங்கள் பொய்யாமல் மெய்யாய்த்தானும்
    பாருலகில் பெருநூலாய்ச் சொல்லிவிட்டேன்
துண்டிதமாய் சில நூல்கள் சாகரத்தில்
    சுருதிசொரு ளானதுவும் மறைந்துபோச்சு
அண்டியே கடலோர மிதந்தநூல்கள
    வகுப்பட்ட மட்டுமல்லோ வறிந்தோம்யாமே.

விளக்கவுரை :


273. அறிந்ததொரு நூலையெல்லாஞ் சித்தர்தாமும்
    அன்புடனே மாறாட்ட மிகவுஞ்செய்து
செறிந்ததொரு குகைக்குள்ளே கொண்டுசென்று
    சிறப்புடனே தான்மறைத்தார் ரிடிகள்தாமும்
வறிந்ததொரு நூல்களிலே வுட்கருவையெல்லாம்
    மறைப்புடனே காட்டாமல் வொளித்தார்தாமும்
குறிந்ததொரு மூலமுத லனைத்தும்யாவுங்
    கொப்பெனவே வெளியிட்டார் சித்துதாமே.

விளக்கவுரை :


274. சித்தான சித்துமுனி புலஸ்தியாகேள்
    சீருடனே நூல்பார்க்க விதியுஞ்சொன்னேன்
பத்தியுடன் மாணாக்கள் பிழைக்கவென்று
    பாலித்தேன் நூல்விபரம் பண்பதாக
முத்திபெற வழிநூலாங் கண்டாராய்ந்து
    முனையான நூல்தொகுப்பு விபரஞ்சொல்வேன்
சத்தியென்ற மனோன்மணியாள் காமரூபி
    சட்டமுட னுறைத்தபடி சாற்றுவேனே.

விளக்கவுரை :


275. சாற்றுவேன் முந்நூல்தான் சிமிட்டுரத்தினம்
    சார்பான பின்னூல்தான் பூரணந்தானாகும்
போற்றுவேன் பின்னூல்தான் பூரணந்தானாகும்
    பொங்கமுடன் பின்னூல்தான் திருமந்திரமாகும்
ஆற்றவே வறுநூறும் பார்க்கவேண்டும்
    அப்பனே யெண்ணூறில் பெருநூலப்பா
சீற்றமுடன் முந்நூறில் சதுர்காண்டமப்பா
       சிறப்பான நசகாண்டம் முன்னூர்தாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 266 - 270 of 12000 பாடல்கள்


266. இருந்தேனே வடிவேல ருபதேசங்கள்
    யெழிலுடனே பெற்றுமல்லோ பொதிகைசென்றேன்
திருத்தமுடன் பொதிகைதனில் கோடிசித்தர்
    திறமுடனே யெந்தனையும் எதிர்தான்கொண்டு
வருந்தியே வணக்கமது மிகவுஞ்செய்து
    வளமுடனே யாசீர்மங் கொண்டுசென்றார்
பொருந்தவே குகைக்குள்ளே வடியேன்றானும்
    பொங்கமுடன் சமாதிதனி லிருந்தேன்பாரே.

விளக்கவுரை :


267. பாரப்பா சமாதிதனி லிருந்தேன்யானும்
    பாங்குடனே பதினெண்பேர் சித்தர்தாமும்
நேருடனே யவரவர்கள் செய்தநூலை
    நேர்மையுட னெந்தனது குகையின்முன்னே
சீருடனே மூன்றுபத்து லட்சநூலை
    சிறப்புடனே பாடிவைத்தார் பதினெண்பேர்கள்
ஆருடைய நூல்பார்த்து வறிந்திட்டாலும்
    அப்பனே வெளிப்படைதா னொன்றுங்காணே.

விளக்கவுரை :


268. காணவே யித்தாதி நூல்களெல்லாம்
    கைலாச பொதிகையின் குகைமுன்னாக
வேணபடி சித்தரெல்லாங் கூட்டமிட்டு
    விருப்பமுடன் நூலதனையே கொண்டுசென்றார்
பூணவே நூலெல்லாம் பார்த்துமேதான்
    புகழாகத் தோஷமது சொல்லியல்லோ
மாணவே சித்தமுனி ரிடிகள்தாமும்
    மானிலத்தில் மதிப்பதற்கு நூல்செய்தேனே.

விளக்கவுரை :


269. செய்தேனே பதினெண்பேர் நூல்கள்தன்னை
    செப்பவே பெருநூலாங் காண்டமாக
உய்யதொரு காண்டமது பனிரெண்டுமாகும்
    உத்தமனே வாயிரத்துக் கொருகாண்டந்தான்
நையவே காவியம் பன்னீராயிரந்தான்
    நலமுடனே பாடிவைத்தேன் மாந்தர்க்காக
பையவே பாடியதோர் காவியத்தை
         பார்த்துமே பதினெண்பேர் கோபித்தாரே.

விளக்கவுரை :


270. கோபித்து யென்பேரில் சீறல்கொண்டு
    கொப்பெனவே சாத்திரத்தில் தர்க்கஞ்சொல்லி
சாபித்து குகைக்குள்ளே வைத்துமேதான்
    சட்டமுடன் குகைதனிலே வைத்துப்பின்பு
தூபிதங்க ளர்ச்சனைகள் மிகவுஞ்செய்து
      துறையோடும் முறையோடு மஞ்சலித்து
நேவித்து அஷ்டாங்க வர்ச்சனைகள்செய்து
    நிலையான சமாதியிடம் நூல்வைத்தாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 261 - 265 of 12000 பாடல்கள்


261. முன்னின்ற  வகஸ்தியரை வேலர்பார்த்து
    மோனமென்ற ஞானவுப தேசந்தன்னை
தன்மனையில் தேடிவந்த அகஸ்தியர்க்குத்
       தாஷ்டிகமாய் தானுரைப்பார் வேலர்தாமும்
கன்மவினை முன்னகற்றி கர்த்தாதானும்
    கைலகிரி நாதரைத் தொழுதுபோற்றி
தன்மனது யெந்நாளும் பூணவேதான்
    சட்டமுடன் வாக்கதுவு மளித்தார்தாமே.

விளக்கவுரை :


262. தாமான வடிவேலர் முருகன்றானும்
    சாற்றலுற்றா ரகஸ்தியர்க்கு மின்னஞ்சொல்வேன்
நாமான யிதிகாச புராணமெல்லாம்
    நலமுடனே கற்றறிந்த வகஸ்தியர்க்கு
கோமான்போல் தென்பொதிகை வீற்றிருந்த
    குருபரனாம் அகஸ்தியனார் முனிவருக்கு
பூமாது மனோன்மணியாள் கடாட்சத்தாலே
           புகழுடனே உபதேசஞ் சொன்னார்பாரே.

விளக்கவுரை :


263. பரேதான் நாலுயுக அதிசயங்கள்
    பாலகனே எந்தனுக்குச் சொன்னாரப்பா
நேரேதான் துவாபர யுகத்தில்தானும்
    நேரான யெந்தனுக்குச் சமைந்தசாபம்
கூராகத் தீர்த்தத்தின் கரையினோரம்
         குறிப்பான சடாயுவென்ற பட்சிதன்னால்
வீரமுடன் நேரிட்ட சாபந்தன்னை
    விருப்பமுட னெந்தனுக்கு தீர்த்தார்காணே.

விளக்கவுரை :


264. காணவே சடாயுவின்றன் சாபந்தன்னை
    காசினியில் தீர்த்ததோரு கதைகள்தன்னை
பூணவே கலியுகத்தில் சித்துதாமும்
    புகழாய்ச் சாத்திரத்தில் சொல்லவில்லை
வேணவே யான்றானும் யிந்தநூலில்
    விபரமுடன் சொல்லிவிட்டே னுந்தனுக்காய்
வாணர்முதல் யின்னூலைக் கண்டிட்டாலும்
    வளமான சாபமதை யறியார்தாமே.
            
விளக்கவுரை :


265. அறியாதே யிந்நூலில் தோஷஞ்சொல்லி
        வப்பனே யநேகம்பேர் வரமும்பெற்றார்
குறிபோலே வடிவேலர் உபதேசத்தைக்
    கொற்றவனே புலஸ்தியனே அடியேன்றானும்
முறிபடவே ஞானோப தேசந்தன்னை
    முதன்மையாய் எந்தனுக்கு உபதேசித்தார்
நெறியுடனே யானுமுப தேசம்பெற்று
    நேர்மையுடன் வெகுகால மிருந்தேன்தாமே.

விளக்கவுரை :

Powered by Blogger.