சட்டை முனி சித்தர் பாடல்கள்  196 - 200 of 203 பாடல்கள்
           
196. விருதன்றோ வுலகத்தில் ஆசா னென்று
          வேடமிட்டு வேடமிஞ்சி மோடி யேற்றி
விருதன்றோ பணம்பறித்துப் பிழைப்பா யையோ
          வேதாந்த மொன்றுமில்லை சாங்க மென்பார்
விருதன்றோ கெடுத்துவிட்டா ருலகத் தோரை
          வேடமென்று மயக்காலே மயங்கிப் போனார்          
விருதன்றோ சீடருடைப் பாவ மெல்லாம்
     விளையாட்டுப் போல்வாங்கி விழுந்திட் டாரே.

விளக்கவுரை :
           
197. விழுந்திட்டா ரென்றறிந்து கொங்கண ரேநீர்
          வெகுபிள்ளை பெற்றீர்முந் நூறு பிள்ளை
நழுந்திட்ட பிள்ளையுண்டோ திறந்தா னுண்டோ
          நலமாக வுமைப்போலா னாரு முண்டோ
அழுந்திட்ட சமாதியுண்டோ தியான முண்டோ
          ஆகாத பிள்ளையுண்டோ சொல்லுஞ் சொல்லும்
கொழுந்திட்ட தேவரீர் கருணை யாலே
          கொஞ்சமறப் பிள்ளையிலே கூடி லேனே.

விளக்கவுரை :
           
198. கூடாத நல்லபுத்தி சித்தர் வென்றார்
          கொள்கியே வரங்கள்பூ மியிலே தட்டி
நீடாகத் தெண்டனிட்டே அழைத்துக் கொண்டு
          நிமிடத்திற் குகையினுள்ளே நேர்ந்து போனார்
ஆடானா லதுமாட்டு வன்றே சித்தர்
          ஆனந்த போகமுண்ட ஆண்மை யாண்மை
ஓடானா லோட்டுநிர்க் குணத்தின் விதி
          ஒருமனமாய் நின்றுபுத்தி யுரைப்புத் தானே.

விளக்கவுரை :
           
199. தானென்ற கொங்கணர்போல் பிள்ளை பெற்றால்
          தங்குமடா குட்டென்கை லாய மூர்த்தி
வானென்ற சுந்தரா னந்தன் விந்து
          வரவற்ற பூரணமே தாப மென்னக்
கானென்ற வெளிகடக்க அறிவோம் நாங்கள்
          கரையற்ற போகத்தைப் பானஞ் செய்வோம்
கோனென்ற கைலாய பூரணமே தேவர்
          கொள்கிறதோ ருற்பனமும் லயமும் சொல்லே.

விளக்கவுரை :
          
200. சொல்லுகிறேன் கேளுங்கள் மக்காள் நீங்கள்
          சுகமாக வாரிதியில் மேக நீர்போல்
அல்லுகிற துவலையைப்போற் பிறப்புண் டாச்சே
          அதுவோங்கும் விவரமென்ன சொல்வீ ரையா.
பல்லுகிற சந்திரனாம் நீரை வாங்கு
          பாங்கான ரவியங்கே நன்றாய்ப் பாரு          
சொல்லுகிற கெர்பத்தில் விந்து வுன்னிச்
          சிந்தூளி பரஞ்சத்தாற் சின்ன மாச்சே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர் பாடல்கள்  191 - 195 of 203 பாடல்கள்
           
191. மௌனவித்தை மூலருக்கு முன்னே சொன்னேன்
          மருவியவர் காலாங்கிக் கதுவே சொன்னார்
மௌனவித்தை யகண்டாதி யறிந்து கொள்ளும்
          மகத்தான போகருந்தா னுமக்குச் சொன்னார்
மற்றொன்று மயக்கமற்று மௌனத் தார்க்கு
          மௌனவித்தை யெய்திக்கா லவனே ஞானி
பற்றொன்றும் வையாதே பலருங் காண
          வாய்திறந்து பேசாதே மகாரம் நன்றே.

விளக்கவுரை :
           
192. நன்றான மௌனத்திற் கடிகை சேர
          நல்வினையுந் தீவினையும் நாச மாகும்
நன்றான மௌனமென்று நினைக்க முத்தி
          நல்லோர்கள் நினைப்பார்கள் மற்றோர் காணார்.
நன்றான மௌனமல்லோ ரிஷிகள் சித்தர்
          நாலுதிக்குஞ் சொருபமல்லோ ஞானி யானார்          
நன்றான மௌனத்தைக் கண்டார் முன்னே
          நலமாகக் கூப்பிடுதல் கண்டி லாரே.

விளக்கவுரை :
           
193. கண்டிலார் மோனத்தி லனேக சித்தி
          காணுமப்பா சொல்லுகிறேன் நன்றாய்க் கேளே
அண்டிலார் மந்திரங்கள் செபிக்கும் போது
          அப்பனே மௌனமென்றே தீட்சை கேளு;
ஒண்டியாய் வாய்மூடிப் பேச்சு மற்றே
          ஒருசேரச் சமைத்துண்ணு ஒருபோ தப்பா
விண்டிலா தெந்நேரஞ் செபித்தா யானால்
          விளங்கியதோ ரேழுலட்ச மந்த்ரஞ் சித்தே.

விளக்கவுரை :
           
194. சித்தாகுஞ் சித்தியுமா மெட்டெட் டாகுந்
          திறமாக நின்றவர்க்கு மந்த்ரஞ் சித்தி
சத்தாகும் வேதமந் திரத்தைப் பாவி
          சலசலெனப் பசிச்சே விப்பார் கோடி
கத்தாதும் நாய்போல கத்தி யென்ன
          காசுக்கு மாகாது சித்தி யில்லை
முத்தான மௌனம்விட்டால் மனம்பா ழாச்சு
          மோசமிந்த வேதமெல்லாம் பொய்யென் பாரே.

விளக்கவுரை :
           
195. பொய்யென்றே யெண்ணியெண்ணி யுலகங் கெட்டுப்
          போச்சதனா லேயுகத்தின் பேத மாச்சு;
கையென்று யோகத்தில் மௌன முட்டக்
          கடுஞ்சித்தி யறிவுமட்டுங் கலந்து தாக்கு
சையென்ற நிர்த்தமப்பா ஆறிற் காணுஞ்
          சாதகமாய் மேல்மூலந் தாண்டிக் காணும்
மெய்யென்று பிடித்தக்கா லவனே யோகி
          விரைந்திதனை யறியாட்டால் விருதா மாடே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர் பாடல்கள்  186 - 190 of 203 பாடல்கள்
           
186. மேவுமென்கை லாயபரம் பரையா மாணா
          வெகுகோடி ரிஷிகளுக்கு முபதே சித்தார்
மேவுமென்று சித்தரிலே யனேகங் கோடி
          மேருவிலே யிருந்தார்க்கு முபதே சித்தார்
மேவுமென்றேன் னோடுபதி னாறு பேர்க்கு
          விளங்கியவர் பதம்பிடிக்க வுபதே சித்தார்
மேவுமென்றே யெழுவருடன் திருமூ லர்க்கு
          விளம்பினார் மெய்ஞ்ஞானம் விளம்பி னாரே.

விளக்கவுரை :
           
187. விளம்பியநா மெல்லாங்கை லாய வர்க்கம்
          மேருவிலே யெடுத்தவுட லெமக்கு மக்காள்
அளம்பினதோர் சனகாதி யையர் விட்டே
          அரைக்கணமும் பிரியார்க ளடியை விட்டுத்
தளம்பினதோர் கொடிக்குக்கொழு கொம்பு போலே
          சதாநித்தங் காத்திருந்தோ மையா கிட்டக்
கிளம்பினதோர் பந்துபோ லனேகம் பிள்ளை
          கெடியிட்டு மாட்டியங்கே கிட்டி னாரே.

விளக்கவுரை :
           
188. கிட்டினங்கை லாயபரம் பரையி னாலே
          கேளுமாச் சரியங்கொங் கணர்தாம் சென்று
கிட்டினோ மென்று சொல்லி யீசா னத்தே
          கெடியான ரசமுண்டு சட்டை போக்கிக்
கிட்டினோ மீசானந் துதித்தோ மென்று
          கெடியாகத் தவசிருந்து முத்த ராகிக்          
கிட்டினோ மென்றுசொல்லித் தட்சிணா மூர்த்தி
          கெடியான பதம்பிடித்துப் பணித்திட் டாரே.

விளக்கவுரை :
           
189. பணிந்திட்ட கொங்கணரைப் பார்த்து நாதன்
          பாருலகிற் பிறந்தவனிப் படிதா னானால்
பணிந்திட்ட சடம்போக்கிக் கைலாயத் தேக
          மானதுதான் வெகுகடின மதிக மெத்தக்
கனிந்திட்ட கனிவாலே வீரத் தாலே
          கலங்காமற் சமாதியுற்றுக் கயிலா யத்திற்
றணிந்திட்ட புத்திகொண் டிங்கே வந்தாய்
          சாதகமா யொருவரையுங் கண்டி லேனே.

விளக்கவுரை :

190. கண்டிலே னாச்சரியங் குமார னேபார்
          கலந்தநற் சென்மமிவர் கைலாய மானார்
ஒண்டிலே நாலதுக்கு மகத்வ மென்ன
          உற்றசிவ விந்துவிலப் படிதா னாச்சு;
கண்டிலே னிவரைப்போற் சித்தர் காணேன்
          காரணமா யிவனுக்குத் தீட்சிப் பேனான்
பண்டிலேன் கொங்கணரே மயங்க வேண்டா
          பரம்பரமாய் வயதுதந்த மௌனந் தானே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர் பாடல்கள்  181 - 185 of 203 பாடல்கள்

181. பாரப்பா சித்தரென்றார் குளிகை போட்டுப்
          பகுத்தறிவா ருள்மனையைப் பரிந்து போற்றி
நேரப்பா தம்மொடுபூ ரணத்தி நின்று
          நேராக வோடம்போல் நீஞ்சி யாடிச்
சேரப்பா திரும்பிவந்து புகுது வார்கள்
          செகத்திலுள்ள சித்தருக்கே அடுத்த வாறு
கூறப்பா பூரணத்தில் நாதந் தாண்டிக்
          கொங்கணர்தாம் சிலம்பொலியைக் கூடி னாரே.

விளக்கவுரை :
           
182. கூடினார் மூலகுரு பேர னென்று
          கோடானு கோடிசித்த ராடிப் பார்த்தார்
ஆடினா ராடினா ரேற மாட்டார்
          ஆச்சரியங் கொங்கணர்தா மகண்டில் சித்தர்
ஓடினா ரோடினா ரனேகங் கோடி
          ஓங்கிநின்ற காகத்தி லொன்றிப் போட்டுத்
தேடினார் தேடினார் குளிகை தன்னைச்
          சித்தருக்குச் சொருபனிது கிட்டும் வாறே.

விளக்கவுரை :
           
183. வாறான சுருபமணி யாரின் வர்க்கம்
          மகத்தான தெட்சிணா மூர்த்தி வர்க்கம்
கூறான தொன்றாய்நிட் களங்க மாகிக்
          குவிந்துநின்ற பொருளாகிக் கூறொ ணாத்
தாரான தற்பதமாய் அதுவு மற்றுச்
          சச்சிதா னந்தத்தில் நின்ற ஆசான்
பேரான பிள்ளைகட்கு மணியு மீந்து
          பெரும்பாதை மகாரமென்று பேசி னாரே.

விளக்கவுரை :
           
184. பேசியதுர்க் கந்தமென்ன வென்று கேட்டால்
          பெருவிரலே நீயாய்மெய் விரலே போத
மாசியது வற்றக்காற் கவிக்கு முன்னே
          மக்களே யிந்தப்பா ரென்று காட்டித்
தேசியது மகாரவித்தை சென்று கூட்டித்
          செப்பாதே மகாரவித்தை குளிர்ந்த ஞானம்          
வாசியதுக் கருகாகுங் கண்டு கொள்ளும்
     மக்களே சின்முகத்தில் நடுப்பா லாமோ.

விளக்கவுரை :
           
185. நடுவென்ன வெட்டவெளி யொன்று மில்லை
          நானுமில்லை நீயுமில்லை மகண்ட வீதி
கடுவென்ன லகுவென்ன மனஞ் செவ் வானால்
          கண்டுகொள்ளு மென்றுசொல்லிக் கரத்திற் காட்டிச்
சுடுவென்ன தாபமென்ற முளையை முந்திச்
          சுடுகின்ற துத்தியென்ன மௌனத் தீதான்
விடுவென்ன இந்திரியப் பாம்பை நீயும்
          விட்டகன்றே யறிவோடோ மேவு மேவே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர் பாடல்கள்  176 - 180 of 203 பாடல்கள்
           
மாயை யுத்தி
176. ஆச்சப்பா மாயையுத்தி சொல்ல வென்றால்
          அனேக முண்டு; சூட்சுமமாய்ச் சொல்லக் கேளு;
வாச்சப்பா தேசத்திற் பேதா பேதம்
          மருவியதோர் கிராமத்தில் கிராம பேதம்
ஓச்சப்பா திறங்களிலே திறங்கள் பேதம்
          ஓகோகோ சனங்களிலே யனேக பேதம்
வீச்சப்பா புத்திகளிற் பேதா பேதம்
          வெகுமோக மாயத்தாற் றோன்றுங் காணே.

விளக்கவுரை :

ஞானவான்

177. காணப்பா வின்னமய மாகி நின்று
          கலந்துநின்ற புராணமய கோச மாச்சே
ஊணப்பா விக்யான மயமு மாகி
          உத்தமனே மனோமயமாங் கோச மாச்சு
பூணப்பா ஆனந்த மயமு மாகப்
          பொங்கிற்றே யஞ்சுதிறை போதத் துக்குத்
தோணப்பா திறையஞ்சு மாயை மாயை
          சொல்லுகிறேன் சூட்சத்தைப் பூட்டிப் பாரே.

விளக்கவுரை :
           
178. பூட்டியதோர் விசிட்டனென்றும் விராடனென்றும்
          புகழ்பெரிய ஏமகற்பப் போக்கே தென்றும்
நீட்டியதோ ரண்டமென்றும் புவன மென்றும்
          நேரான பதங்களென்றும் மாயை யாச்சே
ஆட்டியதோ ராட்ட மெல்லாம் மாயை யாட்டே
          அறிந்துகொள்ளு முன்மனமே மட்டை மாயை
மூட்டியதோர் மனமும்வந்த வரைக்கே நிற்கும்
          மூதண்ட மனங்கடக்க முடியா வாறே.

விளக்கவுரை :
           
179. வாறான வுலகத்திற் சுத்த வீரன்
          மனத்தோடே போராடி யருவில் மாள்வான்
கூறான ஞானியென்றால் லிங்கம் புக்குக்
          குறியான அம்பலத்தில் சேர்வா னப்பா
தாறான வுலகத்தோர்க் கடுத்த ஞானஞ்
          சகத்திரமாங் கோடியிலே யொருவர் சொல்வார்
வீறான சிலபேய்கள் சாங்கம் பேசி
          விழித்திறந்து விழித்திறந்து திரிவர் தானே.

விளக்கவுரை :
           
180. தானென்ற பிரமருமோ ரறிவிற் சென்றார்
          சாதகமாய் மாலென்றால் அறிவிற் றோன்றும்
கோனென்ற ருத்திரனோ ரருவி லந்தங்
          கொள்கின்ற மகேச்சுரனோ ரறிவிற் றோன்றும்
வானென்ற சதாசிவனோ மணியைக் காண்பான்
          மகத்தான ஐவருந்தா னாக்கிப் பீடம்          
வேனென்ற பஞ்சகர்த்தாள் மட்டுஞ் சென்றால்
          வேதாந்தி யெனமட்டுஞ் சொல்வார் பாரே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர் பாடல்கள்  171 - 175 of 203 பாடல்கள்
           
171. எண்ணியல்லோ மனத்துள்ளே படாதே நீக்கி
          ஏக்கமாய் நிருவிகற்ப மாகி நின்றே
அண்ணியல்லோ பிரபஞ்ச விகற்பந் தள்ளி
          அனுபோக நிருவிகற்பச் சமாதி யாச்சே
ஒண்ணியல்லோ சொரூபத்தில் லயிச்சு நின்றே
          உற்றிருந்த அகண்ட விர்த்தி காற்றில் தீபந்
தண்ணியல்லோ வுப்புண்டாற் போலே மைந்தா
          சாதகமா யுன்னுருவங் கெட்டுப் போச்சே.

விளக்கவுரை :
           
172. போச்சதுவுங் கடிகையென்று தானாய் நின்றாற்
          புகழான பெருமை சொல்ல வென்றாற் கூடா
ஆச்சதுவு மவுனமுற்று வாயை மூடி
          ஆசையற்றே இருந்தல்லோ அகண்ட வீதி
வாச்சதும்ப்ர பஞ்சத்திற் கண்ட தெல்லாம்
          வாலையுட னுரைபோலும் மலைபோற் காணும்
கோச்சதுவுஞ் சிலந்தியுடை நூலும் போலக்
          கூறுமத னங்கம்போற் குறியைக் காணே.

விளக்கவுரை :
           
173. குறியன விண்ணுதித்த மேகம் போலுங்
          கோதியதோர் சொப்பனப்ர பஞ்சம் போலும்
நெறியான அகண்டம் நம் மிடத்தே மைந்தா!
          நேராக வுண்டாகில் இற்றுப் போற்று          
பறியான வெவ்வேறு நாம மாகிப்
          பாழுலகு நம்மிடத்தே தோன்றுந் தோறும்
மறியாக வழிந்துபோம் நாமே பிரமம்
          மற்றொன்று மில்லையென்று மயக்கந் தீரே.

விளக்கவுரை :
           
174. மயக்கமற்று நானொருவ னெனக்கு ளெல்லாம்
          மற்றொன்று மில்லையென்று தீர னாகித்
தியக்கமற்றெந் நேரமுமுள் ளிட்டுக் கொண்டு
          சேர்ந்துவருஞ் சந்தோடந் துக்கந் தள்ளி
முயக்கமற வருட்பெய்து முன்னே வந்து
          முன்னின்று விகற்பங்கள் பண்ணி னாலும்
அயக்கமற்று மனதிடமாய்ச் சதமாய்த் தள்ளி
          ஆராதி கொண்டகறித் தானாய் நில்லே.

விளக்கவுரை :
           
175. நில்லப்பா சஞ்சாரத் தாலத் துள்ளும்
          நேராகச் சமாதியிலே யிருக்கும் போதே
அல்லப்பா தொய்தம்வந்தா லாதரவு பண்ணி
          அசையாத மலைபோல விருக்க நன்று
சொல்லப்பா கற்பமது கண்டத் தெய்துஞ்
          சுட்டிநின்று திடப்படுதல் மெத்த நன்று
வெல்லப்பா வாசனையை விண்டா யானால்
          மேவியதோ ராரூடச் சமாதி யாச்சே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர் பாடல்கள்  166 - 170 of 203 பாடல்கள்
           
166. ஆச்சப்பா மாயையொடு மாய வின்பம்
          அப்பனே சுத்தசை தன்ப மூன்றும்
போச்சப்பா ஆகாயம் போலே எங்கும்
          ஓடியெங்கும் மறைந்திருக்குங் கண்டா லுந்தான்
ஆச்சப்பா அவர்களைத்தான் தீர்த்த மூர்த்தி
          யாகநனி தோத்திரமாய்த் தியானம் பண்ண
வீச்சப்பா பிரமமென்றே தியான மாச்சு
          விளம்புகிறேன் ஐந்துவகைச் சமாதி தானே.

விளக்கவுரை :
          
167. தானென்ற அதிட்டான சைதன் யத்தைத்
          தனையளித்து நிலவறையில் தீபம் போல
ஆனென்ற அலைவற்றுத் திடம தாக
          அப்பனே அகண்டமது தானாய் நின்று
வேனென்ற தோற்றமற்றே யிருந்தா யானால்
          விளங்கியதோர் தத்வலயச் சமாதி யாச்சு
வானென்ற சவ்விகற்பச் சமாதி கேளு
          மருவியதோர் தத்வலயச் சமாதிக் குள்ளே.

விளக்கவுரை :
           
168. உள்ளாக இருக்கையிலே பேசுஞ் சுற்றம்
          உறவாகக் கேட்டாக்கந் தாணு வித்தை
தள்ளாகச் சவ்விகற்பச் சமாதி யென்று
          தாமுரையார் பெரியோர்கள் கேளு கேளு
விள்ளாகத் திரிசாணு வித்தை மார்க்கம்
          விரவியந்தச் சமாதியிலே நிற்கும் போது
தள்ளாகத் தன்னையனு சந்தா னித்துத்
          தலமான சந்தானந் திரிசான மாச்சே.

விளக்கவுரை :
           
169. ஆச்சப்பா இதன்பேர்சவ் விகற்ப மென்பார்
          அருளியதோர் நிருவிகற்பச் சமாதி கேளு!
ஓச்சப்பா தத்வலயச் சமாதி முத்தி
          உத்தமனே சாத்தனுத்தங் கேம றந்த          
ஆச்சப்பா துக்கமுற்று மிருகம்போல
          ஆச்சரியஞ் சத்தமெல்லாங் கேளா விட்டால்
கூச்சப்பா சித்தமது சொரூபத் துள்ளே
          கொண்டாற்பூ ரணத்தில்நிரு விகற்ப மாமே.

விளக்கவுரை :
           
170. ஆமப்பா சமாதிவிட்டுச் சரிக்கும் போதும்
          அப்பனே சாத்திரங்கள் பார்க்கும் போதும்
ஒமப்பா காலமென்ற நிறையு மில்லை
          உத்தமனே பிரபஞ்ச மில்லை யென்று
சோமப்பா விகாரந்தோற் றும்ப்ர பஞ்சஞ்
          சொப்பனம்போல் பாசமென்ற மதிய டக்கில்
ஆமப்பா தீவிரமாம் பிறவி யார்க்கும்
          அகத்தான காரணனா மென்றே யெண்ணே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர் பாடல்கள்  161 - 165 of 203 பாடல்கள்
           
161. கலங்காமல் தாப்பிரம மென்றே யெண்ணிக்
          கவடற்று நிரந்தரம்வே தாந்தம் பார்த்தே
மலங்காமல் நிற்கிறதே விரத மப்பா
          மகத்தான நேமமென்ற பத்து மாச்சே          
இலங்காம லிருப்பதையும் மனுட்டித் தக்கால்
          என்மகனே மனந்திடமா யில்லா விட்டால்
துலங்காத சுவரில்சித் திரம்போ லாகும்
          சுழியதுதா னடிப்படைமூன் றொன்றும் வாறே.

விளக்கவுரை :
           
162. வாறாகச் சுகாசனமா யிருந்து கொண்டு
          மருவியதோர் மூலத்தில்வங் கென்று பூரி
கூறாகக் கும்பித்துமாத் திரையை யேற்றிக்
          குறியோடே சிகாரத்தால் ரேசி ரேசி
சாறாக விப்படியாங் கென்று கும்பி
          சாதகமா யிவைமூன்றும் தீர்ந்த பின்னே
ஆறாக அகாரமுத லுகாரங் காட்டி
          அப்பனே மவுனத்தாற் கும்பித் தேறே.

விளக்கவுரை :
           
163. கும்பித்து மௌனந்தான் குவிந்த பின்பு
          கொள்கியதோர் மூலத்தை விட்டு நீயுந்
தம்பித்துக் கண்டத்தே நின்றே யூது
          தாலடங்கி யுரைத்தபின்மேல் மூலம் நின்று
சொம்பித்தே யறிவோடே மௌனம் பூரி
          சுகமாகப் பூரணத்தை யதற்குட் கும்பி
தம்பித்து மனத்தொடுரே சகத்தைப் பண்ணு
          தலமான பிரமமென்று பிராண னாச்சே.

விளக்கவுரை :
           
164. ஆச்சப்பா இதுவல்லோ பிராணா யாமம்?
          அறிந்தவனார் சிவயோகி யறியார் மற்றோர்
ஓச்சப்பா பிரபஞ்ச வாசை விட்டே
          ஒன்றையுந்தான் மனத்தினுள்ளே சங்கி யாமல்
வாச்சப்பா வந்ததென்ற காரண மாக
          மருவியதோர் ஞானமென்ற மார்க்கத் தூடிக்
கூச்சப்பா காமியத்தை நரகென் றெண்ணக்
          கூறான கர்மமெல்லாம் விடுக்க நன்றே.

விளக்கவுரை :
           
165. நன்றாக வேதாந்த சாத்தி ரத்தால்
          நாம்சாட்சி யென்று நித்த முரைத்து நின்று
பன்றான மற்றவைநாம் அல்ல வென்று
          பரவிநின்றே யுலகமெல்லாம் மித்தை யென்று          
கன்றாக வுரைப்புநிரந் தரமு நினைவாய்க்
          காரணகா ரியங்களெல்லாந் தவிர்ந்து போட்டு
ஒன்றான வொருபொருளாய் நின்றா யானால்
          உத்தமனே பிரத்தியா கார மாச்சே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர் பாடல்கள்  156 - 160 of 203 பாடல்கள்
           
156. நோக்கப்பா பிரமமதி லோகத் துள்ளே
          நுகர்ந்துநின்ற காமியத்தை நரகென் றெண்ணி
வாக்கான வெறுப்பதுசொப் பனம்போ லெண்ணி
          மசகமிது வென்றுதள்ளி மனமீ தேறித்
தாக்கான பொருளல்லோ சச்சிதா னந்தம்
          தடைபெறவே தானானார் சந்தோட மாச்சு
போக்கான வேதாந்தப் பிரம சாரம்
          புகட்டுகிற குருச்சொல்பூ ரணமென் றெண்ணே.

விளக்கவுரை :
           
157. எண்ணியதோர் மூன்றையுந்தா னுண்மை யென்றே
          எண்ணியிருக் கிறதாரென் றியம்பு வார்கள்
தண்ணியதோர் குருவுரைத்த வுபதே சத்தைத்
          தானறிந்து பூரணமாய் முத்த னாகிப்          
பண்ணியதோ ரபராதம் குருவுக் கீந்து
          பராபரத்தைத் தன்தேகம் போலே யெண்ணி
அண்ணியதோர் சுகமுடனே துக்க மெல்லாம்
          ஆர்செய்துந் தனக்குவரம் போலுங் காணே.

விளக்கவுரை :
           
158. காணப்பா விப்படியே தீர்த்தி யானால்
          கைகடந்த சிவபூசை யென்று சொல்வார்
வீணப்பா சகலநூ லென்று தள்ளி
          விரைந்து நின்ற விரத்தியெல்லாம் விட்டே யோடி
ஊணப்பா குருபிறகே நிழலைப் போலே
          உத்தமனே சச்சிதா னந்த னானாய்
ஆணப்பா தேவிக்குப சரித்து வென்று
          அறிகிறதே சிரவணமென் றறிந்து கொள்ளே.

விளக்கவுரை :
           
159. அறிந்திந்த வேதநிலை விட்டு நீயும்
          அப்பனே வாசனைப்ர பஞ்சந் தாண்டி
மறிந்திந்த புத்ராதி பாசத் தாலே
          மாயம்வந்து முட்டையிலே கலச்சை யாக்கிச்
செறிந்தவதை யடிச்சகவே தாந்தம் பார்த்துச்
          சீராக நிற்கிறதே செம்மை யாகும்
நெறிந்து நின்ற வேதாந்தப் பிரமந் தன்னில்
          நினைவோடு வருகிறதே யாசை தானே.

விளக்கவுரை :
           
160. ஆசையென்றும் மதியென்றும் அதற்கு நாமம்
          அப்பனே தாம்பிரம மென்றே ஆசான்
நேசையென்ற வுபதேசப் படியே யென்றும்
          நேராக வேதாந்தப் பொருளென் றெண்ணிப்
பூசையென்று மற்றதெல்லாந் தள்ளி விட்டால்
          உத்தமனே சிவமென்று சொல்லு வார்கள்
காசையென்றே என்னென்ன கார்யம் வந்தும்
          கைவிட்ட துக்கம்வந்துங் கலங்கி டாரே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர் பாடல்கள்  151 - 155 of 203 பாடல்கள்
           
151. பாரப்பா பிரமமது சுபாவ மாகப்
          பரவியது நிரந்தரமுஞ் சரித்தா லன்று
நேரப்பா பிரமசரிய மிதுவாங் கண்டால்
          நிரந்தரமுந் தயவினுடை நினைவு கேளு
தாரப்பா சரீரத்தில் வருத்தம் நீங்கிச்
          சகலசனம் நம்மைபோ லென்றே யெண்ணி
ஆரப்பா சுபானுபவ போதஞ் செய்வார்
          அவரல்லோ தயவுடையோ ரறிந்து காணே.

விளக்கவுரை :

152. காணப்பா வேதாந்த சாத்திரம் செம்மை
          கரைகற்ற சமயம்பொய் யென்று தள்ளி
ஆணப்பா திடப்பட்டாடட் சேப மென்பார்
          வீட்சணமுஞ் சீதளமுஞ் சுகதுக் கத்தால்
வீணப்பா மானாபி மானம் வந்து
          வெறும்வெளிபோற் சொப்பனமா மென்று தள்ளித்
தோணப்பா தாங்காம லகண்டத் துள்ளே
          சொக்குவது சமயமென்று சொல்ல லாமே.

விளக்கவுரை :
           
153. சொல்லலாம் வேதாந்தத் துள்ளே முத்தி
          தொடுகுறியாஞ் சாத்திரத்தின் முத்தி யில்லை
வெல்லலா மதனாலே சொன்ன வெல்லாம்
          வேறில்லை நாமதுதான் எனலே முத்தி          
அல்லெலாஞ் சொப்பனம்போ லவத்தை யாண்டு
          அகிலபிர பஞ்சமெல்லா மடுத்து மூழ்கி
நில்லலா மற்புதமாய் நிற்பிட மற்று
          நிர்மலமாய் நிற்கிறபூ ரணந்தா னென்னே.

விளக்கவுரை :
           
154. தானென்ற பூரணந்தான் நாமென் றெண்ணிச்
          சதாநித்தம் மறவாம லிருந்தா னாகில்
வானென்ற கலிதகரி யாச்சு தாச்சு
          மருவியதோர் சாத்திரத்தி னாலே யப்பா
கோனென்ற தன்னிடத்தே யொன்று மில்லை
          கூடிநின்று போனதில்லை யென்றே யெண்ணி
வேனென்ற நிர்க்குணமும் வேறொன் றில்லை
          வேதாந்தசித் தாந்தமென்றார் கௌச மாச்சே.

விளக்கவுரை :
           
155. ஆச்சப்பா நேமத்தைச் சொல்லக் கேளு
          அறைகுவேன் நன்றாகப் பூர ணந்தான்
வாச்சப்பா சத்யமென்ன மித்தை யென்ன
          மருவியதோர் நானேதான் என்ற தாரு
வீச்சப்பா நமக்குவந்த பந்த மேது
          வேதாந்த சாத்திரத்தில் விளங்கப் பார்த்துக்
கூச்சப்பா திடப்பட்டார் தவசென் பார்கள்
          குலாமரிட்ட விடவெல்லாங் குருட்டு நோக்கே.

விளக்கவுரை :
Powered by Blogger.