அகத்தியர் பன்னிருகாண்டம் 181 - 185 of 12000 பாடல்கள்


181. செல்லுகையில் மனோன்மணியாள் முன்னேநிற்பாள்
    சுந்தரம் போலுந்தனுக்கு உருவந்தோன்றும்
வெல்லவே யம்பாளின் பாதம்தொட்டு
    விருப்பமுட னஞ்சலிகள் மிகவுஞ்செய்து
கொல்லவே யமனுக்கு விடங்கொடாமல்
    கொப்பெனவே முப்பூவைக் கண்டுதேறு
புல்லவே முப்பூவைக் கண்டபோது
    புகழான வஷ்டசித்தி கைக்குள்ளாச்சே.

விளக்கவுரை :


182. ஆச்சப்பா புலஸ்தியனே யின்னங்கேளு
    ஆகாகா நாதாக்கள் மார்க்கஞ்சொல்வேன்
பேச்சுமுன்னே முப்பூவைக் சொல்லிசொல்லி
    ........................காட்டகத்தைக் கொண்டுசென்று
மாச்சலுடன் முப்பூவைப் ................சொல்லி
    மறையநின்று பட்சமுடன் வார்த்தைபேசி
ஏச்சியே மு.............ன் கதிரையெல்லாம்
    யெழிலாக வாரியல்லோ போவார்தாமே.

விளக்கவுரை :


183. போவாரே சித்தர்முனி ரிடிகள்தாமும்
    பொங்கமுடனுந்தனுடன் நேதஞ்செய்து
சாவார்போல் தாமிருந்து வேடம்பூண்டு
    தாரணி வொன்றறியாச் சித்தன்போல
ஆவலுடன் காத்திருந்து கதைகள்பேசி
    அன்பாக யேவலுக்கு ஆளதாக்கி
நாவதனில் பிசகாத வார்த்தைகூறி
    ...............நன்மையுடன் வழிபேசி யேகுவாரே.

விளக்கவுரை :


184. ஏகவே சித்தருட மோசங்கண்டு
    யெழிலுடனே யவர்வலையிற் சிக்கவேண்டாம்
பாகமுடன் முன்சொன்ன பதத்தைப்போல
    பட்சமுடன் தானெடுத்து விதியறிந்து
சோகமுடன் வழலையது பூர்க்கும்போது
    சுத்தமுடன் நடுச்சாம வேளைதன்னில்
ஆகமங்கள் சொன்னபடி முறைதப்பாமல்
    அப்பனே முப்பூவை யெடுக்கநன்றே.   

விளக்கவுரை :


185. நன்றான முப்பூவை யெடுக்கும்போது
    நாதாந்த சித்தர்களு...................
.... ..... ...... .......மனதிற்பூண்டு
    பட்சமுடன் ...............யெடுக்கும்போது
தன்றான சித்தர்களு மொதிங்கிநிற்பார்
    சார்பான வழலைதனை யெடுத்துக்கொண்டு
பன்றான சீசாவில் பதனம்பண்ணு
    பக்குவமாய்ச் சொல்லுகிறேன் பண்பாய்க்கேளே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 176 - 180 of 12000 பாடல்கள்


176. காணவே புலஸ்தியா யின்னங்கேளு
    காசினியில் பண்டிதற்கு நேரானகூர்மை
தோணவே விட்டகுறை யிருக்குமானால்
    தோன்றுமே யவருக்கு யிந்தபூமி
வீணான வீணனுக்கு வாய்க்குமோசொல்
    விட்டகுறை யிருந்தாலே வாய்க்கும்பாரு
பூணவே பிடகனுக்கு வாய்க்காதப்பா
    பொலிவான புண்ணியர்க்கு வாய்க்கும்பாரே.

விளக்கவுரை :


177. வாய்க்கவே பூனீறு யெடுக்குங்காலம்
    வளமையுடன் மாதமது சொல்லக்கேளும்
மேய்க்கவே பங்குனியாம் பருவமாகும்
    மேன்மையுள்ள ...............எல்லாம் பருவந்தன்னில்
தாய்க்கமலம் வீற்றிருக்கும் மனோன்மணியாள்தாமும்
    சற்பனையா ய்வந்துறையும் பூநீறப்பா
காய்க்கவே பூநீறு................வளறுமார்க்கம்
    காணவே தெரிவித்தார் சித்தர்தாமே.
          
விளக்கவுரை :


178. தாமான பூநீறு யெடுக்குங்காலஞ்
    சாற்றுகிறேன் நடுச்சாம வேளைதன்னில்
நாமான நமதையர் அசுவனிதேவர்
    நாதரவர் தானுரைத்த முறைபோல்தாமும்
போமேதான் முறைதனையே புகல்வேன்கேளு
    புலஸ்தியனே யொருவருக்கும் புகலவேண்டாம்
வேமேதான் பள்ளமது ஆள் ...................டு
    விருப்பமுடன் றானெடுக்க விபரங்கேளே.

விளக்கவுரை :


179. கேளேதான் பள்ளமது மிகவாய்ச்செய்து
    கெவனமுடன் மண்தனை சலித்துக்கொண்டு
நாளேதான் சுனையருகின் தன்னிற்சென்று
    நளினமுடன் ஜலமதனைக் கொண்டுவந்து
பாளேதான் போகாமல் மண்ணைத்தானும்
    பக்குவமாய்ப் பிசறியல்லோப் பள்ளந்தன்னில்
தாளேதான் கெட்டணைகள் மிகவுஞ்செய்து
    தண்மையுடன் வரவுகோல் மேலேதூவே.
             
விளக்கவுரை :


180. தூவியே மூன்றுநாள் பொறுத்தபின்பு
    தூரமதாய்த் தானிருந்து பார்க்கும்போது
ஆவிபோல் புகையெழும்பிச் சுடருண்டாகும்
    அப்பனே கண்கொள்ளா வேகம்பாரு
காவியத்தில் சொன்னபடி கணக்கதாக
    கருவாகப் பூசைநை வேத்தியங்கள்
மேவியே பராபரியைப் பூசித்தேதான்
    மேன்மையுடன் முப்பூவி னருகிற்செல்லே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 171 - 175 of 12000 பாடல்கள்


171. கேளே நீ புலஸ்தியனே கெணிதவானே
    கெவனமுடன் பூநீறு எடுக்கவேதான்
தாளான பூமிவளந் தன்னைக்காண
    தாரணியில்................தலத்தைக்காண
பாளான பூமியது அளதுபூமி
    பாங்கான பூமியினி லுண்டாமல்லோ
நாளான மல்லிக்கார்ச் சுனையின்பக்கல்
    நாத...............ருக்குந் தலங்கண்டாரே
    
விளக்கவுரை :


172. கண்டாரே சுனையோர மளர்பூமிதன்னை
    காவணத்....... ....... ........ ........ ....................
கொண்டாரே சமாதியிடம் வெகுகாலம்
    ....... ....... ........ .......... ......... ......................
....... ........ ..... ..... ....... ........ .......................
    ...... .... ....வெகுகால மிருப்பாரங்கே
வண்டுடனே கூட்டமதுக் கதண்டுக்கூட்டம்
    வகுப்பான யானைபோல் கதண்டுதானே.  

 விளக்கவுரை :


173. தானான கதண்டுகளு மெத்தவுண்டு
    தாக்கான புலிகரடி சிங்கம்யாளி
கோனான மிருகவகைக் கூட்டமெல்லாம்
    குன்றருகே சுனையோரம் மெத்தவுண்டு
தேனான கதண்டுகளும் தேனையுண்டு
    தெளிமையுடன் வனாந்தரத்தை சுற்றிருக்கும்
பானான மனோன்மணித்தாய்ப் பூர்க்குங்காலம்
    பாங்கான இடம்பதவி நல்லிடமுமாமே.

விளக்கவுரை :


174. நல்லான இடமதுவும் வஞ்சிநாடு
    நலமான பூனீறு விளையும்நாடு
தல்லான பூனீறு விளையுமார்க்கம்
    கானகத்தில் ஆளுயர மாகப்பூர்க்கும்
புல்லான பூவெடுக்க நாள்தான் சொல்வோம்
    புத்தியுள்ள புலஸ்தியனே சொல்லக்கேளும்
சொல்லாதே யொருவருக்கு மிந்ததேசம்
    சொன்னாலே தலைதறித்துப் போகும்பாரே.

விளக்கவுரை :


175. பாரேதான் பாவமது மெய்தும்பாரு
    பாங்கான பூநீறு கோட்டைதன்னை
நேரான தலைவாசல் காட்டவேண்டாம்
    நேர்மையுடன் கண்டாலே மோசமோசம்
தூரான பழிபாவந் தலைமேற்கொள்ளும்
    துன்பமென்ற சாகரத்தில் அழிந்துபோவாய்
சீரான இருப்பிடத்தைச் சொல்லவேண்டாம்
    சொல்லாமல் மவுனமதா யிருப்பீர்காணே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 166 - 170 of 12000 பாடல்கள்


166. எய்யவே நரகத்துக் கேதுவாகி
    யெழிலான கோத்திரங்கள்...............வேம்
நய்யவே ரோகத்துக்காளு மாகி
    ........... .......................போதும்
செய்யவே மதியூகி பண்டிதங்கள்
    செகதலத்தில் ....... ....... .....புண்ணியவானாய்
மெய்வருந்த பாடுதனைப் பட்டானாகில்
    வே........ ........ .......லியது மேவுந்தானே.
  
விளக்கவுரை :


167. மேவுமே மோட்சமென்ற கூலிதானும்
    மேன்மையுடன் கிடைக்குமது தப்பேயில்லை
தாவுமது மோட்சமென்ற வீடுதானும்
    சதாகாலம் காணிக்கை யென்னலாகும்
சாவுமென்ற மரணமது வெகுநாட்செல்லும்
    சாவுமில்லை கோடிவரை யிருப்பான்பாரு
பாவுமென்ற புராணங்களிதிகாச மெல்லாம்
    பாடிவைத்தார் லோகத்து சித்தர்தானே.
    
விளக்கவுரை :


168. தானான சித்தர்முனி ரிடிகள்போலே
    தகைமையுட னெப்போதும் இருக்கலாகும்
மானான மானிலத்தி லிருந்துகொண்டு
    மதிப்புடனே வளைந்து சிவராஜயோகம்
வேனான விதிப்படியே முறைகள்பார்த்து
    விபரமுடன் செய்பவனே யோகவானாம்
கோனான குருசொன்ன வாக்குபோல
    குவலயத்தில் பண்டிதங்கள் செய்யநன்றே.

விளக்கவுரை :


169. செய்யவே முழுமக்கள் பண்டிதற்கு
    செயலான பாக்கியமும் பெருகலாகும்
மெய்யாக மோட்சமென்ற வீடுதானும்
    மேன்மையுட னெப்போதுங் காணியாகும்
பையவே பரிகாரஞ் செய்யாதாற்கு
    பாரினிலே யாதொரு பலனுமில்லை
துய்யவே துன்ப சாகரத்தைவிட்டு
    துறையோடு முறையோடு மிருப்பார்தானே.

விளக்கவுரை :


170. இருப்பாரே புலஸ்தியனே யின்னங்கேளும்
    யெழிலான பண்டிதத்திற் குருமுடிக்க
பொருப்பான தேசங்கள் நதிகள்தேடி
    பொலிவான காடுமலை வனாந்திரங்கள்
குருப்பான யிடமெல்லா மாராய்ந்தேதான்
    குவலயத்தில் பூனீறு யெடுக்கவல்லோ
விருப்பான பூமிதனைக் கண்டாராய்ந்து
    வேகமுடன் வழலைதனை முடிக்கக்கேளு.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 161 - 165 of 12000 பாடல்கள்


161. நன்றான குருமொழியைக் கொள்ளவேண்டும்
    நலமில்லாப் பலவழியைத் தள்ளவேண்டும்
அன்றாடங் குருபூசை செய்யவேண்டும்
    அப்பனே மறுபூசைக் கொள்ளலாகா
பன்றான நதிக்கரையில் முழுகவேண்டும்
    பாலான வபிஷேகஞ் செய்யவேண்டும்
வென்றிடவே வினையகற்றி நீங்கவேண்டும்
    வேதாந்தச் சற்குருவை நண்ணவொப்பே.

விளக்கவுரை :


162. ஒப்பான பிராணாயன் தன்னினின்று
    வோங்கார முள்ளடக்கி முனையில்நின்று
தப்பாமல் ரேசக பூரகத்தைக் கொண்டு
    தகைமையுடன் வாசிதனை நடத்தவேண்டும்
செப்பமுடன் பூரணத்திலிருந்து கொண்டு
    ஜெபமாலைக் கைதனிலே பூண்டுகொண்டு
எப்போதுஞ் சதாநிஷ்டை தனிலிருந்து
    யெழிலான குடும்பத்தி லிருக்கநன்றே.

விளக்கவுரை :


163. இருக்கவே யனாகதத்தை வாசியிலேமாட்டி
    யெழிலான ரேசகத் தைசுழித்தியிலேகொண்டு
பெருக்கமுடன் சதாகாலஞ் சிவயோதந்தான்
    பேரான வெட்டவெளி காண்பதற்கு
விருப்பமுடன் செகஜோதி தன்னைக்கண்டு
    வீரான சுவாசமதை மடக்கிக்கொண்டு
சுருக்கமுடன் லாடமதில் விபூதிபூண்டு
    துப்புறவா யிருப்பவனே சித்தனாமே.

விளக்கவுரை :


164. சித்தருடன் மொழிதனையே மனதிலெண்ணி
    சிதாபாசத் தன்னுடனே யிருக்கவேண்டும்
மெத்தநல்ல வேதாந்தி பெரியோர்போலே
    மேன்மையுடன் செகதலத்தி லிருக்கவேண்டும்
செத்தாலுங் கீர்த்தியது கொள்ளவேண்டும்
    செம்மையுடன் பலபேரும் துதிக்கவேதான்
வெத்திபெற வுலகமதில் யிருப்பவன்றான்
    வேதாந்த சிவத்தொளிவு யென்னலாமே.

விளக்கவுரை :


165. ஆமேதான் புலஸ்தியனே யின்னங்கேளு
    அப்பனே யுலகமதில் பண்டிதங்கள்
தாமேதான் செய்வதற்கு வினயங்கொண்டு
    தண்மையுட..........னுமந்த வயித்தியோர்க்கு
நாமேதான் சொன்னபடி பலநூல்கற்று
    நலமுடனே பரிகாரஞ் செய்யவேண்டும்
போமேதான் சிவயோகஞ் செய்யாராகில்
    பூதலத்தில் நகரமதுக் கெய்துவாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 156 - 160 of 12000 பாடல்கள்


156. உண்டான மாந்தர்களில் நிதிகள்கோடி
    வுத்தமனே சொல்வதற்கு லக்கோயில்லை
பண்டான பாக்கியமு மிகுதியுண்டு
    பண்புடனே சொல்வதற்கு முடியாதப்பா
திண்டான பொருளிருந்து மறைத்துச்சொல்வார்
    திறமுடனே கருமிகட்கு நோயும்போகா
சண்டாள மானதொரு பாவிகட்கு
    சட்டமுடன் மருந்ததுவும் பலியாதென்னே.

விளக்கவுரை :


157. என்னவே பண்டிதற்குப் பொய்யைக்கூறி
    யென்னிடத்தில் திரவியங்க ளில்லையென்று
உன்னவே மெய்மொழிபோல் தாமுறைத்து
    உத்தமனே சத்தியங்கள் மிகவேசெய்து
சொன்னதொரு சத்தியமு மெய்யென்றேதான்
    சுந்தரனே யுண்மையுள்ளா னென்றுசொல்லி
நன்னயமாய்க் குளிர்ந்தமுகம் வார்த்தைகூறி
    நாட்டினிலே கருமிகளு மிருப்பார்தானே.

விளக்கவுரை :


158. இருப்பாரே வெகுகோடி கருமியப்பா
    எழிலான கருமிகளின் மனத்தைத்தானும்
பொறுப்பான மனதுடனே யறியவேண்டும்
    பொலிவாக..............மருமிகளும் தருமியுண்டு
வெறுப்பகல யவர்மனதை யறிந்துநன்றாய்
    விருப்பமுடன் வயித்தியங்கள் செய்யவேண்டும்
கருப்புலவும் பூந்துமையாய்ப் புலஸ்தியாகேள்
    கண்மணியே யின்னமுனக் கறைவோன்பாரே.
 
விளக்கவுரை :


159. அறையவே பண்டிதங்க ளின்னஞ்சொல்வேன்
    அப்பனே மருந்தினது வேகங்கண்டு
நிறையவே நாடியின்றன் பலமுங்கண்டு
    நிறையான வயததுவும் லக்குகண்டு
குறையவே மருந்தினது சுறுக்குகண்டு
    குற்றமறப் பத்தியங்கள்..... ..................
முறைபோலப் பண்டிதங்கள்..... ..... பேர்க்
    ...... ........ ...... ......... .....யென்னலாமே.

விளக்கவுரை :


160. என்னவே பலநூலும் பார்க்கவேண்டும்
    யெழிலான நாடிகண் டுணரவேண்டும்
சொன்னமொழி தவறாது நடக்கவேண்டும்
    சுந்தரனே வார்த்தையது கூறவேண்டும்
நன்னயமா யிதம்பெறவே வார்த்தைவேண்டும்
    நலம்பெறவே பண்டிதங்கள் சொல்லவேண்டும்
தன்னலமாம் சாகரத்தை யொழிக்கவேண்டும்
    துலையாத பாவத்தை நீக்கநன்றே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 151 - 155 of 12000 பாடல்கள்


151. ஆமேதான் பண்டிதற்குக் கல்வம்சொல்வேன்
    அப்பனே புலஸ்தியனே புத்திவானே
தாமேதான் நீளமது சொல்லக்கேளும்
    சாற்றுகிறேன் அங்குலந்தான் பதினாறாகும்
நாமேதான் அகலமது வாறதாகும்
    வலமான ..............யாமது வாழஞ்சொல்வேன்
போமே தான் வங்குலமு மிரண்டதாகும்
    பொலிவான நன்னியென்ற கல்லுமாமே.
    
விளக்கவுரை :


152. கல்லான கல்லதுதான் சொல்லக்கேளும்
    கருக்குருந்தை செங்குருத்தை நன்னியாகும்
சொல்லுவேன் சாற்றோரம் வரம்புகம்பி
    திரண்ட வங்குலமதுதான் வொன்றேயாகும்
வல்லசித்தர் சொற்படியே புலிமுகமும் வைத்து
    வளமையுடன் சித்தரித்து வண்மையாக
புல்லறிவால் கல்லமைத்துச் செய்யும்யோகம்
    பூதலத்தில் தேவவயித்த தியனாம்பாரே.

விளக்கவுரை :


153. பாரேதான் வயித்தியனும் யோகவானாய்
    .....................................................................................
யோசனைக ளுள்ள ......................................
    .......................................................................................
சீரேதான் ..................க்கவல்லான்
    சிறப்பான சீஷனுக்கு கந்தவல்லான்
கூரே ........................................
    குவலயத்தில் கீர்த்தியுள்ளோன் வயித்தியவானே.

விளக்கவுரை :


154. வானான தேவதா வயித்தியனாயும்
    வண்மையுள்ள சாத்திரத்தில் சித்தனாயும்
கோனான குருவணக்கம் பெற்றோனாயும்
    குவலயத்தில் ரிடிகளின்மேல் இரக்கவானாய்
தேனான கற்பமது கொண்டவானாய்
    தேசத்தில் மாய்கைதனை விட்டவானாய்
பானான பராபரத்தை நினைக்கும்வானாய்
    பட்சமுட னிருப்பவனே வயித்தியனாமே.


விளக்கவுரை :


155. ஆமேதான் புவஸ்தியனே இன்னஞ்சொல்வேன்
    அப்பனே பண்டிதவான் திறமைகேளும்
தாமேதா வைரவர்கள் மனதின்பாகம்
    தக்கபடி யறிவதற்கு மதியும்வேண்டும்
நாமேதான் சொன்னபடி யுலகுதன்னில்
    நன்மையுள்ள புண்ணியரும் பாவியுண்டு
வேமேதான் கருவிகளு மெத்தவுண்டு
    வேகமுள்ள யின்னம்வெகு மாந்தருண்டே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 146 - 150 of 12000 பாடல்கள்


146. காணவே சிவயோகம் வேடம்பூண்டு
    கனமான யோகத்தில் வுறுதிபூண்டு
பூணவே சிவயோக வேஷ்டிதண்டு
    புகழான மாத்திரைக்கோல் பிரம்புதானும்
வேணபடி ருத்திராட்ச மாலைகையில்
    விருப்பமுடன் றானணிந்து லாடமிதில்
தோணவே தளமாக பூசிக்கொண்டு
    தொல்லுலகில் பாசமற்று இருப்பார்தாமே.

விளக்கவுரை :


147. இருப்பாரே லோகபரி பூரணராக
    எழிலாகத் தானிருந்து நிர்த்தமாகி
பொருப்புடனே தபயோகிக் குறுதியாகிப்
    பொங்கமுடன் தட்சணா மூர்த்தியாக
வெருப்பகவு மகத்துவராய் யோகவானாய்
    மிக்கான சிவயோகி வேடம்கண்டு
துருப்புநிகர் தனைநிகர்த்த மெய்யனாகி
    துன்ப சாகரத்தைவிட்டு துயில்வார்தாமே.
          
விளக்கவுரை :


148. தானான பண்டிதற்கு நிறையேதென்றால்
    சாற்றுகிறேன் மாணாக்கள் பிழைக்கவென்று
நாமான புலஸ்தியனே மைந்தாபாரு
          நலமான பண்டிதனும் யோகவானாய்
காமான பரிசுத்த வாளனாகக்
          காசினியி லிருந்துமேயோகம் பார்த்து
பாமான மானதொரு கருமானத்தைப்
          பட்சமுடன் கண்டறிந்து பாலிப்பானே.

விளக்கவுரை :


149. பாலிப்பான் சிவயோகம் பூண்டுகொண்டு
    பாரினிலே வயித்தியங்கள் செய்வதற்கு
வாலிபமு மூப்பகற்றிப் புத்திவானாய்
    வல்லமையில்...................டியினா லறியவானாய்
மூலியுட வளமைகளுங் கண்டாராய்ந்து
    மூப்பகற்றும் மருந்துவகை தெளியவல்ல
சாலியனா யிருந்தாலுங் குற்றமில்லை
    சாற்புடனே புத்திவான் வயித்தியனாமே.

விளக்கவுரை :


150. வயித்தியனில் சிறந்ததோர் பேரும்பெற்று
    வானுலகத் தேவர்கட்கும் வயித்தியவானாய்
சைத்திய நோயதனை யகற்றும் புனிதனாக
    சர்வத்திராள் மெய்ச்சுவதற்கு பான்மைவானாய்
பைத்திய ரோகங்கள் தனை தரணிமீது
    பறப்பதற்கு வுறுதியுள்ள பாலனாக
நைத்தியமும் பூசையுட மார்க்கவானாய்
    நானிலத்தி லிருப்பவனே வயித்தியனாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 141 - 145 of 12000 பாடல்கள்


141. கூறுவான் நீதானே நற்சீஷனப்பா
    குவலயத்தி லுன்னைவிட சீஷனுண்டோ
மாறுடைய மாண்பர்களுக் கன்னமிட்டால்
    வன்கொடுமை மிகச்செய்வா னென்னல்போலும்
ஆறுகுளம் நதிமுதலும் தீர்த்தமாடி
    அப்பனே சமாதிதனி லிருந்துகொண்டு
கூறுமுனி யகஸ்தியன்போல் வுருவம்கொண்டு
    குவலயத்தில் ஞானிகள்போ லிருப்பான்தானே.

விளக்கவுரை :


142. தானான புலஸ்தியனே சொல்லக்கேளும்
    சாற்றுகிறேன் மாணாக்கள் பிழைக்குந்தன்மை
கோனான யென்தேவர் தலைவணங்கி
    கொற்றவனே கூறுகிறேன் வேடமார்க்கம்
பானான பாருலகில் சிலதுமாண்பர்
    பகல்வேடம் போட்டதொரு கதையுங்கண்டேன்
தேனான மெய்யான சித்துசெய்கைத்
    திறமுடனே யானுரைப்பேன் திண்ணம்பாரே.

விளக்கவுரை :


143. திண்ணமாம் மெய்ஞானி மார்க்கம்சொல்வேன்
    திறமுடனே நாதாக்கள் தம்மைப்போல
வண்ணமுடன் சகலநூல் எல்லாங்கற்று
    வளமுடனே மாயா சம்பந்தம்நீக்கி
எண்ணமுடன் தொல்லை சாகரத்தைவிட்டு
    எழிலான சின்மயத்தின் சோதிகண்டு
நண்ணமுடன் ஞான சாகரத்தினேர்மை
    நாட்டமுடன் தானறிந்து நவில்வார்தாமே.

விளக்கவுரை :


144. நவிலவே வெகுநூல்கள் பார்த்துமேதான்
    நலமான தத்துவத்தின் நேர்மைபூண்டு
குவியவே ஞான சாகரத்தைக்கண்டு
    குவலயத்தில் பாசமென்ற கயிறைநீக்கி
தவிலமுடன் பெரியோர்கள் ரிடிகள்தேவர்
    தகைமையுடன் கண்டறிந்து கேள்விகேட்டு
புவிலமுன் காயாதி கற்பமுண்டு
    பூதலத்தி லென்னாளு மிருந்தார்தாமே.

விளக்கவுரை :


145. இருந்தாரே கோடியுகம் சமாதியில்தானும்
    யெழிலாக சரிதைகிரி யோகமெல்லாம்
திருந்தமுடன் கற்றுணர்ந்து சிவயோகிபோலும்
    திறமான ஞானமுள்ளான் தீரன்போலும்
பொருந்தவே அட்சரமா ஞானிபோலும்
    பொங்கமுடன் தத்துவக் கியானிபோலும்
அருந்தவத்தி லுற்றவித்து வண்ணலார்போல்
    அவனியிலே பேருண்டா யிருப்பார்காணே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 136 - 140 of 12000 பாடல்கள்



136. கூறுவான் வாய்ஞான மிகவும்பேசி
    குவலயத்தில் காவி காஷாயம்பூண்டு
தூறுவான் மூடரிட வித்தைபேசி
    துடியான வார்த்தையது மிகவுங்கூறி
சீறியே பேச்சுகளா லடித்துருட்டி
    சிறப்பான தத்துவ வழிபோலேதானும்
மீறியே வரங்கடந்து யதிகம்பேசி
    மிக்காகி கலையில் நின்று வழிசொல்வானே.

விளக்கவுரை :


137. சொல்லவே அவரிட சீஷவர்க்கம்
    துறையான வழிபாடு யிதுதானென்று
வெல்லவே காவி காஷாயம்பூண்டு
    வேகமுடன் லக்கோடா ய்த்தானணிந்து
புல்லவே பதாம்புயத்தை முகவும்நண்ணி
    புகழான வட்சரத்தைக் கற்றோர்போலும்
நல்லதொரு கியானிபோல் இருந்துகொண்டு
    நவமான வரட்சரத்தை யோதுவானே.

விளக்கவுரை :


138. ஓதுவான் திரிமுர்த்தி சொரூபன்போலும்
    ஓகோகோ நாதாக்கள் தன்மைபோலும்
நீதமுடன் லபிகடந்த சித்தபோலும்
    நிலையான தம்பனத்தின் சித்துபோலும்
தீதமுடன் ஞானவா னாகவேதான்
    திறமான குளிகைகொண்ட சித்துபோலும்
சாதமது நீக்கினதோர் சற்குருவைப்போலும்
    சட்டமது வெகுநெடுவாய்ப் பேசுவானே.
 
விளக்கவுரை :


139. பேசுவான் குவலயத்தில் ஆசைதன்னை
    பேருலகில் மறந்தவன்போல் வாதுகூறி
மாசுடைய மூச்சதனை வுள்ளடக்கி
    மகத்தான வனாகதத்தை கீழேநோக்கி
மாசுடைய பற்றதுவும் நீங்கியேதான்
    மகத்தான சற்குருவின் பாதம்போற்றி
ஆசுடைய சீடவர்க்கம் நீதானென்று
    அப்பனே யுபதேசம் செய்வான்பாரே.

விளக்கவுரை :


140. பாரேதான் சண்முகத்தின் பூசையப்பா
    பாருலகி லெப்போதுஞ் செய்யவேண்டும்
நேரேதான் திரிபுரைதான் பூசையப்பா
    நெடிதான பராபரியாள் பூசைவேண்டும்
சீரேதான் அஷ்டமா சித்துவேண்டும்
    சிறப்பான சோடசமு மறியவேண்டும்
கூரேதான் அஷ்டவர்க்கந் தன்னைக்கண்டு
    கொற்றவனு முபதேசங் கூறுவானே.
       
விளக்கவுரை :

Powered by Blogger.