அகத்தியர் பன்னிருகாண்டம் 226 - 230 of 12000 பாடல்கள்


226. சொன்னதொரு வழலைக்குக் கருமானத்தை
    சூட்சமுடன் சொல்லாமல் மறைத்துப்போட்டீர்
வின்னமுடன் அண்டமென்னும் விஷக்கல்தன்னை
    வெட்டவெளி யாகவல்லோ சொல்லாமல்தான்
நன்னயமாய் நாதாக்கள் மறைப்பைப்போல
    நலமாகத் தானுமல்லோ சொல்லிவிட்டீர்
சின்னமுள்ள பரிபாஷை வைநூறுந்தான்
    சிறப்பில்லை காசினியில் வியர்த்தந்தானே.
    
விளக்கவுரை :


227. வியர்த்தமாம் பரிபாஷை நூலையெல்லாம்
    விருதாவாய்த் துறைசொல்லி முறைசொல்லாமல்
நியர்த்தமுடன் சாத்திரத்தில் சாபஞ்சொல்லி
    நிலையான வழிதனையே காணாமற்றான்
தயர்த்தமுடன் நூலாதி நூல்களெல்லாம்
    சாங்கமுடன் பரிபாஷை மரவுசொல்லி
சுயர்த்தமுடன் அண்டமென்னும் விஷக்கல்தன்னை
    சூட்டியே போக்குவழி மறைத்தீர்தாமே.
   
  

விளக்கவுரை :


228. மறைத்ததொரு வண்மையெல்லாஞ் சொன்னார்பாரு
    மகத்தான சாத்திரத்தின் முப்புமார்க்கம்
குறைத்துமே தன்மனதின் போலேதானும்
    கூரான விஷக்கல்லு பிறந்தமார்க்கம்
நிறைத்ததெரு வேதைநெறி சாத்திரங்கள்
    நீடாழி யுலகத்தி லுறதிப்போக்கு
பறைத்ததொரு அண்டக்கல் விஷக்கல்லப்பா
    பாருலகில் சித்தருக்குள் பான்மையாமே.
                
விளக்கவுரை :


229. பான்மையாஞ் சித்தருட விஷக்கல்தன்னை
    பாரினிலே மறைத்துவைத்த தோஷத்தாலே
மேன்மையுடன் விஷக்கல்லு போக்குமார்க்கம்
    மெய்யான சித்தரெல்லாம் மறைத்துப்பேசி
கான்மையா மிருக்குமிட ஸ்தானங்கண்டு
    கருத்துடனே யறியாத படியினாலே
வான்மையுடன் யுகந்து பரிபாஷைதன்னில்
    வளமாகச் சொல்லாத தர்க்கம்பாரே.

விளக்கவுரை :


230. பாரேதான் கண்டவிட மார்க்கமெல்லாம்
    பரிவாகப் பூர்த்திருக்கும் பூவைக்கண்டீர்
நேரேதான் பூவல்லவென்றுசொன்னீர்
    நிலையான இடந்தோரு மிருக்கும்பாரு
ஊரேதான் பூபூர்த்தா லுலகழியும்
    வப்பல்லால் வேறொன்றுந் தப்போயில்லை
சீரான முப்பாலே வப்பூவாகும்
    சிறப்பான வப்பாலே முப்பூவாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 221 - 225 of 12000 பாடல்கள்


221. தானான புலஸ்தியரே சொல்லக்கேளும்
    தகைமையுள்ள பதினெண்பேர் சித்தர்தாமும்
கோனான சித்துமுனி கூட்டத்தோடு
    கொற்றேவ யென்முன்னே வாதுபேச
தேனான வவரவர்கள் செய்த நூலை
    திரட்டியே யான்செய்த நூலுக்காக
பானான காவியம் பன்னீராயிரத்தை
    பாரினிலே செய்ததொரு கற்பம்பாரே.

விளக்கவுரை :


222. பாரேதான் மடைக்கூட்டம் ரிடிகளோடு
    பாலகன வென்முன்னே யெதிர்த்துவந்து
நேரேதான் நானிருக்குஞ் சமாதிமுன்னே
    நேரான கல்லாலின் மரத்தின்கீழே
கூரேதான் கூட்டமிட்டு வாயிரம்பேர்
    குடித்தனமாம் பதினெண்பேர் வர்க்கத்தோர்கள்
சீரேதான் நூல்தனையே பெயத்துக்காட்டி
    சிறப்புடனே வாதுமுகங் கூறினாரே.

விளக்கவுரை :


223. கூறினார் அகஸ்தியனார் முன்னதாக
    குறிப்பான சாத்திரத்தின் தொகுப்பையெல்லாம்
மீறியதோர் கருமான முட்கருவையெல்லாம்
    மிக்கான மாணாக்க னறியவென்று
தூறியே மறைபொருளை வெளிதாக்கிய
    துப்புரவாய் செய்ததொரு தன்மையாலே
கோறியே நாங்களெல்லாங் கூட்டமிட்டு
    குருமுனியே நாங்களெல்லாம் வந்தோம்பாரே.

விளக்கவுரை :


224. வந்தோமே யென்றுசொல்ல சித்தர்தாமும்
    வளமையுள்ள கல்லாலின் மரத்தின்கீழே
அந்தமுடன் புஷ்கரணி தீர்த்தமுன்னே
    அகஸ்தியரும் யெல்லவர்க்கும் வரவுசொல்லி
சொந்தமுடன் வாதுமிகப் பேசிவெல்ல
    சுந்தரரைத் தானழைத்து வதிதம்பூண்டு
இந்ததொரு கல்லாலின் மரத்தின்கீழே
    இன்பமுடன் பேசியல்லோ கெலிப்போம்தாமே. 


விளக்கவுரை


225. கெலிக்கவே அகஸ்தியரும் வாதுபேசி
    கெடியான நூலெல்லாங் கேட்கும்போது
சொலிக்கவே ரோமரிடி யாரெழுத்து
    சொரூபமென்னும் அகஸ்தியர்முன் னெதிரதாக
கலிப்பான பரிபாஷை யானுஞ்செய்தேன்
    கருவான பரிபாஷைத் தாமுஞ்செய்தீர்
வலிப்பான வழலையென்ற வண்டந்தன்னை
    வாகுடனே மாறாட்டம் மிகச்சொன்னீரோ.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 216 - 220 of 12000 பாடல்கள்


216. தந்தாளே யின்னமொரு மார்க்கம்பாரு
    தாடாண்மை யாகவல்லோ காத்துறேன்கேள்
சிந்தனையாய் அகஸ்தியரும் புலஸ்தியருக்கு
    திறமுடனே தானிருந்த ஸ்தானபாரம்
சொந்தமுடன் தானுரைக்கும் வளமையாவும்
    சுந்தரருந் தான்கேட்டு மகிட்சிகொண்டு
தொந்தமுடன் நாதாக்கள் கூட்டத்தோடு
    துரையான அகஸ்தியரும் மலைசொன்னாரே.
    
விளக்கவுரை :


217. சொன்னாரே அகஸ்தியரும் மலைதானப்பா
    தோற்றமுடன் அதிசயங்கள் மெத்தவுண்டு
நன்னயமாய் அகஸ்தியனார் மலையோரத்தில்
    நடுவான மத்தியத்தில் சுனையொன் றுண்டு
மன்னவர்கள் தேவாதி ரிடிகள்தாமும்
    வருகுவதும் போகுவதும் மெத்தவுண்டு
பன்னயமாய் வுதகமொன்ற தங்கேயுண்டு
    பாரினிலே வெகுகோடி சித்தருண்டே.

விளக்கவுரை
 218. உண்டான வாயக்கால் மண்டபத்தில்
    உத்தமனே வெகுகோடி சித்தரப்பா
அண்டாத சேனையுடன் ரிடிக்கூட்டங்கள்
    அப்பனே தான்வருவார் மெத்தவுண்டு
திண்டான அசுவனியாந் தேவர்தன்னால்
    தீரமுடன் அகஸ்தியனார் சமாதியுண்டு
கண்டாரே புலஸ்தியரும் சமாதிகண்டு
    களிப்புடனே சிலகால மிருந்தார்காணே.

விளக்கவுரை :


219. இருந்தாரே சிலகாலம் புலஸ்தியருமப்பா
    யெழிலான சமாதியது பக்கல்தன்னில்
பொருந்தமுடன் சிவபூசை நமஸ்காரங்கள்
    புகழாக செய்துமல்லோ இருக்குங்காலம்
வருந்தியே சித்தரிடம் வருவாரப்பா
    வளம்பெரிய வாயக்கால் மண்டபத்தில்
குருந்தமென்னு மரமதிலே அகஸ்தியர்தாமும்
    கூட்டமுடன் எந்நேர மிருப்பார்தாமே.

விளக்கவுரை :


220. தாமான சித்தருடக் கூட்டத்தோடும்
    சாங்கமுடன் அகஸ்தியரு மிருப்பார்கண்டீர்
நாமான குகைக்குள்ளே முனிவர்தாமும்
    நாட்டமுடன் சிவயோகஞ் செய்யும்போது
பாமான ரிடிக்கூட்டம் முனிவர்தாமும்
    பக்கலிலே வந்து அஞ்சலிகள் செய்வார்
வேகமான வேதரிடிபோதரிடிதானும்
    வெகுக்கூட்ட மாகவேதான் இருந்தார்தானே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 211 - 215 of 12000 பாடல்கள்


211. கொண்டபின்பு காயாதி கற்பமாச்சு
    கோடான கோடிவரை யிருக்கலாகும்
கண்டவர்கள் யிப்பாகஞ் சொல்லமாட்டார்
    காசினியில் வெகுகோடி மாந்தரப்பா
விண்டபடி யாமுரைத்த நூலையெல்லாம்
    விருப்பமுடன் தான்மறைத்து குகைக்குள்வைத்து
மண்டலத்தில் நூலில்லை யென்றுசொல்லி
    மறைத்தாரே நாதாக்கள் சித்துதாமே.

விளக்கவுரை :


212. சித்தான யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன்
    சீரான புலஸ்தியனே சொல்லக்கேளும்
குத்தான செம்பதுவுஞ் சேர்தானொன்று
    குணமான செந்தூரங் களஞ்சியொன்று
வித்தான தங்கமது களஞ்சியொன்று
    விபரமுடன் றானுருக்கிக் குருவொன்றீய
முத்தான மணிபோலே யுருகியல்லோ
    முன்னூறு மாற்றதுவும் யிருக்கும்பாரே.

விளக்கவுரை :


213. பாரேதான் தங்கமது பிரிதீவாகும்
    பாரினிலே பிறவியென்ற தங்கமாச்சு
நேரேதான் தங்கமது மாற்றோமெத்த
    நெடிதான சுயத்தங்க மிதற்கொவ்வாது
சீரேதான் சிவயோகந் தனக்குதந்த
    சீர்மையுள்ள தங்கமது யிதுதானப்பா
கூரேதான் நாதாக்கள் சொன்னமார்க்கம்
    குறிப்பறிந்து பாடிவைத்த காண்டமாமே.  

விளக்கவுரை :


214. காண்டமாம் பனிரெண்டு காண்டந்தன்னில்
    கருத்துடனே பாடிவைத்தேன் முதற்காண்டத்தில்
தூண்டியதோர் கருமான முப்புமார்க்கம்
    சூட்சாதி சூட்சமெல்லா மிதிலடக்கம்
பூண்டதொரு காயாதி கற்பஞ்சொன்னேன்
    புகழான முப்பூவையெடுக்குமார்க்கம்
வேண்டியே வகைமான மிதிலேசொன்னேன்
    விருப்பமுடன் பாடிவைத்த காவியந்தானே.

விளக்கவுரை :


215. தானான காவியம் பன்னீராயிரத்தை
    தண்மையுடன் மாணாக்கள் பிழைக்கவென்று
கோனான வசுவனி தேவர்தானும்
    கொற்றவனார் கடாட்சத்தி னருளினாலே
தேனான காவியமாய்த் திரட்டியேதான்
    திறமான பனிரெண்டு காண்டஞ்சொன்னேன்
பானான பாராபரியாள் மெச்சியேதான்
    பரலோகங் காணவது வரந்தந்தாளே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 206 - 210 of 12000 பாடல்கள்


206. கூறுவேன் தாம்பரமாந் தகடுதானுங்
    குறிப்பாகத் தானெடுத்துக் கொண்டுவந்து
சீறுடைய தாம்பரமுஞ் சேர்தான்பத்து
    சிறப்புடனே தகடதனை நெருப்பில்காச்சி
மாறுபடாத் தகடதனில் சூதந்தன்னை
    மயங்காமல் களஞ்சிதனை விட்டுப்பாரு
சேறுபோல் சூதமது வோடிப்பாயும்
    செம்மையுள்ள செம்பொன்னு சொல்லொண்ணாதே.

விளக்கவுரை :


207. ஒண்ணாது இவ்வேதை தாம்பிரவேதை
    ஓகோகோ நாதாக்கள் செய்யும்வேதை
அண்ணலார் ராஜாதி ராஜர்தாமும்
    ஆகாகா இவ்வேதை செய்வாரேபார்
நண்ணமுடன் மாணாக்கள் பிழைக்கவென்று
    நவின்றிட்டேன் புலஸ்தியனே உந்தனுக்காய்
வண்ணமுடன் யோதிவித்து வேதையாகும்
    மகத்தான வேதையிது தாம்பிரமாமே.

விளக்கவுரை :


208. தாம்பிரமாம் வேதையிது சொன்னேன்பாரு
    சுத்தமுடன் நாதாக்கள் செய்யும்வேதை
தாம்பரமாம் நவலோகந் தன்னிலீய
    தகைமையுள்ள லோகமெல்லாம் ஏமமாகும்
வேம்புடனே தயிலமது எடுத்துமைந்தா
    விருப்பமுடன் முப்பூவைக் கூடச்சேர்த்து
பாம்புடனே சூதமதைத் தாக்கினாக்கல்
    பார்த்திபனே சூறலது அற்றுப்போமே.

விளக்கவுரை :


209. அற்றதொரு நாகத்தை எடுத்துக்கொண்டு
    அப்பனே தங்கமது பத்துக்கொன்று
உற்றதொரு கெந்தியது நாலத்தொன்று
    வுகமையுடன் தான்சேர்த்து மைந்தாகேளு
கற்றபடி பொற்றலையின் சாற்றினாலே
    கருத்துடனே தானரைப்பாய் நாலுசாமம்
வெற்றிபெற பில்லையது லகுவாய்ச்செய்து
    வெயில்தனியே காயவைத்து செப்பக்கேளே.

விளக்கவுரை :


210. கேளப்பா ஓட்டிலிட்டுச் சீலைசெய்து
    கெவனமுடன் பத்தெருவிற் புடத்தைபோடு
நாளப்பா போகாமல் மற்றனாள்தான்
    நலமுடனே தானெடுத்துப் பிரித்துப்பார்த்து
மீளப்பா பீங்கானில் பதனம்பண்ணு
    மேன்மையுள்ள செந்தூரம் பூக்கும்பாரு
வீளப்பா செந்தூரந் தனையெடுத்து
    விருப்பமுடன் வெண்ணைதனில் கொண்டிடாயே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 201 - 205 of 12000 பாடல்கள்


201. பாரேதான் வேதைமுகம் இன்னஞ்சொல்வேன்
    பாலகனே புலஸ்தியா சொல்லக்கேளீர்
நேரேதான் முன்சொன்ன குருவாமுப்பை
    நெடிதாந ரவிதனிலே பத்துக்கொன்று
சீரேதான் கொடுத்துருக்கக் களங்கமாகும்
    சிறப்பான களங்கமதை எடுத்துக்கொண்டு
தீரேதான் செப்புதனை ஊதிப்போடு
    திறமான செம்பதும் ஏமமாமே.

விளக்கவுரை :


202. எமமென்ற செம்பதவுந் தங்கச்செம்பாம்
    எளிதான பொன்னதனை எடுத்துக்கொண்டு
வாமமென்ற பொன்னதனை ஆறுமாற்று
    வகையுடனே தானுருக்கி குருவொன்றீய
நேமமென்ற பொன்னதுவு மெட்டேகாலம்
    நேர்மையுடன் ஆணிக்குக் குறையாதப்பா
ஏமமென்ற பொன்னதுவும் மாற்றுமெத்த
    எழிலான பசுமையது சொல்லொண்ணாதே.

விளக்கவுரை :


203. சொல்லவென்றால் நாவில்லைப் பாவுமில்லை
    துரைராஜ சுந்தரர்க்கு வாய்க்கும்பாரு
வெல்லவே வறுமைவருங் காலத்தன்னில்
    மேதினியில் மாறியுண்ண வேதையாச்சு
புல்லவே இவ்வேதை பூதலத்தில்
    புகழுடனே யார்செய்வாள் சித்தர்தாமும்
நல்லதொரு நாதாக்கள் முனிவர்தாமும்
    நயம்பெறவே தாமுறைத்த வேதையாமே.

விளக்கவுரை :


204. வேதையா மின்னதொரு மார்க்கம்பாரு
    வேதாந்தத் தாயினது அருளினாலே
போதையாம் அசுவனியின் கடாட்சத்தாலும்
    பொலிவான சித்தர்முனி  கிருபையாலும்
பாதையாஞ் சமுசாரிக் கானபாதை
    பாரினிலே சொல்லுகிறேன் பண்பாய்க்கேளும்
சூதையாம் கவுனமென்ற சூதந்தன்னை
    துப்புரவாய் மூசையிலே களஞ்சிவாரே.

விளக்கவுரை :


205. வாரேதான் களஞ்சிரசந் தன்னைத்தானும்
    வண்மையுடன் முன்சொன்ன முப்புதன்னை
நேரேதான் சூதமிடை களஞ்சிசுண்ணம்
    நேர்புடனே தான்போட்டுக் கரிதான்கொட்டி
சீரேதான் நெருப்பென்ற அனல்தான்தாக்க
    சிறப்பான சூதமது வெண்மையாகும்
கூரேதான் வெண்ணையது பதனம்பண்ணு
    கொற்றவனே மேல்போக்குக் கூறுவேனே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 196 - 200 of 12000 பாடல்கள்


196. என்னவே பற்பமது குன்றியுண்ணு
    யெழிலான தேகமது கற்றூணாகும்
சொன்னபடி தப்பாமல் வனுபானத்தில்
    சுந்தரனே மண்டலந்தான் கொண்டாயானால்
நன்னயமாய் தேகமது யிறுகும்பாரு
    நலமான ரோகமெல்லா மகன் றுபோகும்
வின்னமில்லை ரோகமது பிணிகள்போகும்
    விருப்பமுடன் மண்டலந்தான் கொண்டுபாரே.

விளக்கவுரை :


197. கொள்ளவே காயாதி கற்பமாச்சு
    கோடிவரை யிருப்பதற்கு யிடமுமுண்டு
விள்ளவே பத்தியமு மொன்றுமில்லை
    விருப்பமுடன் யாதெதுங் கொள்ளலாகும்
எள்ளளவும் பிசகதுவும் நேராதப்பா
    யென்மகனே புலத்தியனே செப்பக்கேளும்
மெள்ளவே வாசியது கீழ்நோக்காகும்
    மேன்மையுடன் சின்னமயத்தி லிருக்கலாமே.

விளக்கவுரை :


198. இருக்கலாங் கோடிவரை யுகாந்தகாலம்
    எழிலான பூரணத்தி லிருந்துகொண்டு
பொருக்கவே முன்சொன்ன குருவைத்தானும்
    பொங்கமுடன் வேதையுஞ் சொல்வேன்பாரு
வருக்கமுடன் வெள்ளியது கழஞ்சியேழு
    வண்மையுள்ள செம்பதுங் களஞ்சிமூன்று
வருக்கியே குருவொன்று களஞ்சியாக
    உத்தமனே தான்கொடுத்து யெடுத்திடாயே.
            
விளக்கவுரை :


199. எடுத்துமே மூசைதனை உடைத்துப்பாரு
    எழிலான வெள்ளியது களங்குபோலாம்
தொடுத்ததொரு களங்குதனை எடுத்துமைந்தா
    துப்புரவாய் ஓட்டிலிட்டு ஊதிப்போடு
கொடுத்ததொரு செம்பதுவும் யேகிப்போகும்
    கெடியான வெள்ளியது மாற்றுகாணும்
விடுத்துமே வெள்ளியது பசுமையாகி
    விருப்பமுடன் மாற்றதுவு மெட்டதாமே.
    
விளக்கவுரை :


200. எட்டான வெள்ளியது யெடுத்துமைந்தா
    எழிலான மதிதனிலே நூற்றுக்கொன்று
திட்டமுடன் தானுருக்கிக் கொடுத்துப்பாரு
    திறமான வேதைமுகம் பரிசைவேதை
வட்டமுடன் சிவயோகிக் கானவேதை
    வளமையுடன் நாதாக்கள் செய்யும்வேதை
நட்டமென்ன சமுசாரிக் கானவேதை
    நயமுடனே இவ்வேதை சுருக்கம்பாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 191 - 195 of 12000 பாடல்கள்


191. வாங்கியே பூனீறு மொன்றேயாகும்
    மகத்தான சீனமது வொன்றேயாகும்
ஏங்கியே திரியாதே மதியுப்புதானும்
    யெழிலான கரியுப்பு இந்துப்பாகும்
தூங்கியே திரியாம லிதுவெல்லாந்தான்
    துறையோடும் முறையோடுந் தூய்மைகண்டு
சாங்கமுடன் வெண்கருவா லரைத்துமைந்தா
    சட்டமுடன் அண்டக்கல் கவசஞ்செய்யே.

விளக்கவுரை :


192. செய்யவே அண்டமென்ற சுண்ணக்கல்மேல்
    செம்மையுடன் கவசமது செய்துகொண்டு
வெய்யலெனும் ரவிதனிலே காயவைத்து
    வேகமுடன் சுண்ணாம்புச் சீலைசெய்து
துய்யமுடன் கனயெருவில் புடத்தைப்போடு
    துடியான புடமதுவு மாறிப்பாரு
பையவே சுண்ணமதை யென்னசொல்வேன்
    பாரினிலே கண்கொள்ள வேதையாமே.

விளக்கவுரை :


193. வேதையா மின்னமொரு வித்தைகேளு
    வேதாந்தத் தாயினது அருளினாலே
பேதையாம் வெகுகோடி முனிவர்தாமும்
    பிரியமுடன் செய்ததொரு வித்தையாகும்
காதையுடன் பற்பமது யென்னசொல்வேன்
    கடுங்கார மானதொரு வழலையாச்சு
பாதையாம் பற்பமது போக்குச்சொல்வேன்
    பாரினிலே சித்தருட மகிமைதானே.

விளக்கவுரை :


194. தானான பறப்மதைத் தானெடுத்துப்
    பாகமுடன் வேதைமுகம் சொல்வேன்பாரு
கோனான குருநாதர் சொற்படிக்கு
    குறிப்புடனே சரக்குக்குச் சத்துருவுமாச்சே
வேனான சரக்குகளைக் கொல்லுங்காலன்
    மிக்கான வழலையுட கூர்மையப்பா
தேனான பற்பமதை சரக்குபேரில்
    தேற்றமுடன் வுமிநீரால் மத்திப்பாயே.

விளக்கவுரை :


195. மத்தித்துக் கலசமது செய்துகொண்டு
    மயங்காமல் ரவிதனிலே காயவைத்து
சக்தியுடன் பூசையது மிகவாய்ச்செய்து
    சாற்புடனே ள..........யென்ற புடத்தைப்போடு
புத்தியிடனாறியபின் னெடுத்துப்பார்க்க
    புகழான சரக்கதுவு நீறிப்போகும்
புத்தியுடன் சீசாவில் பதனம்பண்ணி
    பாரினிலே சித்தர்களுக் காட்டாதென்னே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 186 - 190 of 12000 பாடல்கள்


186. பண்பான நாதாந்த வழலையப்பா
    பாங்கான சித்தர்முனி செய்யும்வேதை
நண்பான நாதாக்கள் செய்யுமார்க்கம்
    நாட்டினிலே யுந்தனுக்காய்ச் சொன்னேன்யானும்
திண்டான வழலைதனை யெடுத்துக்கொண்டு
    தேற்றமுடன் மண்பாண்டந் தன்னிற்கொட்டி
கண்டான பனிசலத்தை அதிலேகொட்டி
    கரைத்துநன்றாய்த் தெளிவிருக்க வளமைகேளே.

விளக்கவுரை :


187. கேளப்பா தெளிவிருத்து மறுபாண்டத்தில்
    கெட்டியாய் யுவருப்பு பூர்க்குமட்டும்
தாளப்பா காச்சியெடு கம்பியுப்பு
    தண்மையுடன் கசடதுவும் நீங்கியேதான்
வேளப்பா வுப்பதுவுந் தவளமாகும்
    வேனமென்ற காரமது மிகவேகயூறும்
தூளப்பா வுப்பதனை சுரண்டியேதான்
    துப்புரவாய் மறுபாண்டந் தன்னீற்போடே.

விளக்கவுரை :


188. போடையிலே பின்னுமே பனினீர்வாரு
    புகழுடனே தான்கலக்கி மறுபாண்டத்தில்
நீடவே சீலையது வேடுகட்டி
    நீதியுடன் மேற்பாண்டந் தன்னைமூடி
கூடவே தாமெரிப்பாய் சாமமட்டும்
    கொப்பெனவே தீயாறி சுண்டியேதான்
தேடவே தீயாறிப் பார்க்கும்போது
    தெளிவான வெண்மைநிற வுப்புமாச்சே.

விளக்கவுரை :


189. ஆச்சப்பா உப்பதனை இந்தபாகம்
    அப்பனே முப்பத்திரண்டு பாகமாக
காச்சப்பா கைமுறையாய் செய்வீரானால்
    பாலகனே யுப்பதுவுங் கெட்டியாகும்
காச்சலென்ற வுப்பதுவும் அரக்குபோலாம்
    கரிதனிலே உருக்கையிலே கண்விட்டாடும்
நீச்சடங்கி வுப்பதுவுந் தவளம்போலாம்
    நெடிதான வுப்பதனை பதனம்பண்ணே.  

விளக்கவுரை :


190. பண்ணவே முன்சொன்ன முப்புமார்க்கம்
    பதிவான யிடந்தனிலே யளவுசொல்வேன்
திண்ணமுட னோராளின் மத்திபத்தில்
    திறமுடனே மண்தோண்டிப் பார்க்கும்போது
சுண்ணமென்ற அண்டக்கல் நடுப்பிண்டந்தான்
    சுத்தமுடன் தானிருக்கு மதையெடுத்து
வண்ணமுடன் .....................பாக்குவகை சொல்வேன்கெளு
    வளமையுடன் முன்சொன்ன பூநீரைவாங்கே.
             
விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 181 - 185 of 12000 பாடல்கள்


181. செல்லுகையில் மனோன்மணியாள் முன்னேநிற்பாள்
    சுந்தரம் போலுந்தனுக்கு உருவந்தோன்றும்
வெல்லவே யம்பாளின் பாதம்தொட்டு
    விருப்பமுட னஞ்சலிகள் மிகவுஞ்செய்து
கொல்லவே யமனுக்கு விடங்கொடாமல்
    கொப்பெனவே முப்பூவைக் கண்டுதேறு
புல்லவே முப்பூவைக் கண்டபோது
    புகழான வஷ்டசித்தி கைக்குள்ளாச்சே.

விளக்கவுரை :


182. ஆச்சப்பா புலஸ்தியனே யின்னங்கேளு
    ஆகாகா நாதாக்கள் மார்க்கஞ்சொல்வேன்
பேச்சுமுன்னே முப்பூவைக் சொல்லிசொல்லி
    ........................காட்டகத்தைக் கொண்டுசென்று
மாச்சலுடன் முப்பூவைப் ................சொல்லி
    மறையநின்று பட்சமுடன் வார்த்தைபேசி
ஏச்சியே மு.............ன் கதிரையெல்லாம்
    யெழிலாக வாரியல்லோ போவார்தாமே.

விளக்கவுரை :


183. போவாரே சித்தர்முனி ரிடிகள்தாமும்
    பொங்கமுடனுந்தனுடன் நேதஞ்செய்து
சாவார்போல் தாமிருந்து வேடம்பூண்டு
    தாரணி வொன்றறியாச் சித்தன்போல
ஆவலுடன் காத்திருந்து கதைகள்பேசி
    அன்பாக யேவலுக்கு ஆளதாக்கி
நாவதனில் பிசகாத வார்த்தைகூறி
    ...............நன்மையுடன் வழிபேசி யேகுவாரே.

விளக்கவுரை :


184. ஏகவே சித்தருட மோசங்கண்டு
    யெழிலுடனே யவர்வலையிற் சிக்கவேண்டாம்
பாகமுடன் முன்சொன்ன பதத்தைப்போல
    பட்சமுடன் தானெடுத்து விதியறிந்து
சோகமுடன் வழலையது பூர்க்கும்போது
    சுத்தமுடன் நடுச்சாம வேளைதன்னில்
ஆகமங்கள் சொன்னபடி முறைதப்பாமல்
    அப்பனே முப்பூவை யெடுக்கநன்றே.   

விளக்கவுரை :


185. நன்றான முப்பூவை யெடுக்கும்போது
    நாதாந்த சித்தர்களு...................
.... ..... ...... .......மனதிற்பூண்டு
    பட்சமுடன் ...............யெடுக்கும்போது
தன்றான சித்தர்களு மொதிங்கிநிற்பார்
    சார்பான வழலைதனை யெடுத்துக்கொண்டு
பன்றான சீசாவில் பதனம்பண்ணு
    பக்குவமாய்ச் சொல்லுகிறேன் பண்பாய்க்கேளே.

விளக்கவுரை :

Powered by Blogger.