அகத்தியர் பன்னிருகாண்டம் 91 - 95 of 12000 பாடல்கள்



91. கொதித்தவுடன் தானிறக்கி யெடுத்துப்பாரு
    கொற்றவனே பண்.... .... .............................
......... .......... .......... ........ ......... .............................
    .... .... ..... ..... .... ... .... ......................................
........... ...... .... ............ ... .......... .............................
    மாசற்ற தவளமது போலேயாகும்
கதிப்படியே பற்பத்தை யெடுத்துக்கொண்டு
    சாங்கமுடன் சிமிழ்தனிலே பதனம்பண்ணே.

விளக்கவுரை :


92. பண்ணவே சிலநாள்சென் றெடுத்துப்பாரு
    பாலகனே பற்பமது பூர்க்குங்காலம்
தண்ணமுடன் பற்பமதை யெடுத்துமைந்தா
    தகைமையுள்ள சரக்குகளில் கவசஞ்செய்து
உண்மையுடன் கனயெருவில் புடமேபோட்டால்
    வுத்தமனே சரக்கனைத்துங் கட்டும்பாரு
நண்மையுடன் சத்துரு மித்துருக்களெல்லாம்
    நளினமுடன் வழலைக்கு வணங்கும்பாரே.

விளக்கவுரை :


93. பார்க்கயிலே யின்னமொரு கருமானங்கேள்
    பாடுகிறேன் நாதாக்கள் ரிடிகள் வேதை
தீர்க்கமுடன் கருவதனா லெடுக்குமுப்பு
    திறமான வேதையிது சுளுக்குவேதை
ஆர்க்கமுடன் பரிபாஷை முப்புமார்க்கம்
    அப்பனே அனேகவழிக்கோடிபாதை
பார்க்கவே பாடிவைத்தார் சித்தர்தாமும்
    பண்பாக நாம்சொன்ன படிகாணோமே.  

விளக்கவுரை :


94. காணோமே சரக்குக்குச் சத்துருகாலன்
    கடிதான நரைதிரையும் மாற்றுங்காலன்
தோணவே முப்பூவிற் குன்றுவீதம்
    துறையோடும் முறையோடும் கொண்டாயானால்
பூணவே தேகமது கற்றூணாகும்
    பொங்கமுடன் வயததுவும் லக்கோயில்லை
வேணபடி யுபசார மிகநடக்கும்
    வேதமுடன் காயசித்திக் கிடங்கொள்வாயே.

விளக்கவுரை :


95. இடங்கொள்வாய்ப் புலஸ்தியனே மச்சகேந்திரா
    யெழிலான முப்பூவா லெல்லாஞ்சித்தி
திடங்கொண்ட காயமதை நிறுத்தலாகும்
    திரளான மனுக்களெல்லா முனக்கீடுண்டோ
தடங்கொண்ட சமாதியிலே யிருந்துகொண்டு
    தாரணியில் வெகுகோடி காலமப்பா
மடங்கண்டு தேகமதை நிறுத்திக்கொண்டு
    மானிலத்தில் சித்தனைப்போல் வாழுவாயே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 86 - 90 of 12000 பாடல்கள்



86. இன்னமுமே யாமுறைப்போம் யெளியவானே
    யென்மகனே யுந்தனுக்காய்க் கூறிவிட்டேன்
சொன்னபடி தப்பாது குருவாக்கப்பா
    சொற்பமென்று நினையாதே துரைமன்னாகேள்
வின்னமது நேராது சத்திமுப்பு
    விபரமுடன் சொல்லுகிறோம் வினையாய்க்கேளு
துன்னியமாய் முதற்பிண்டந் தலச்சனாக
    தகைமையுள்ள கல்லுரலில் போட்டுச்சாடே. 

விளக்கவுரை :


87. சாடவே கல்லுரலில் போட்டுமேதான்
    சாங்கமுடன் சுத்தசலம் விட்டுமைந்தா
நீலவே யுவர்ப்பூவும் கூடப்போட்டு
    நீண்மையுடன் றானிடித்து மைபோலாக்கி
கூடவே பாண்டமதிற் சுத்தசலம் விட்டுக்
    துப்புறவாய் யடுப்போற்றிக் கொதிக்கக்காய்ச்சு
போடவே யெண்ணையது கக்கிப் போகும்
    பொங்கமுடன் றானிருக்கு மெடுத்துக்கொள்ளே.

விளக்கவுரை :


88. கொள்ளவே முப்பூவை யெடுத்துக் கொண்டு
    குணமான குடுக்கைதனி லடைப்பாய்மைந்தா
விள்ளவே சிலகாலஞ் சென்றபின்பு
    விருப்பமுடன் முப்பூவை யெடுத்துப்பாரு
துள்ளவே முப்பவுந் தவளம்போலாம்
    துப்புறவாய் மலர்ந்துமல்லோ பூத்திருக்கும்
எள்ளளவும் பிசகதுதான் வாராதப்பா
    யெழிலான சத்தியென்னும் முப்புதானே.

விளக்கவுரை :


89. முப்பான முப்பதுவுஞ் சொல்லப்போமோ
    மூவுலகந் தான்மதிக்குஞ் சொர்ணமுப்பு
அப்பான முப்பதுவும் முதற்றரந்தான்
    அப்பனே துறையான முப்புமாச்சு
செப்பார்கள் சித்தர்முனி ரிடிகள்யாவும்
    சிறப்புடனே யுன்தமக்காய்ச் சொன்னேன்யானும்
துப்புரவாய் சிவராஜ ஞானிபோல
    துன்ப சாகரத்தைவிட்டுத் துலைவாய்நில்லே.

விளக்கவுரை :


90. நிற்கையிலே யின்னமொரு கருமானங்கேள்
    நேரான புலஸ்தியனே செப்பக்கேளும்
சொற்பமா மின்னமொரு முப்புசொல்வேன்
    சொர்ணமென்ற சிற்றண்டங் கொண்டுவந்து
அற்பமா யெண்ணாதே சவ்வுபோக்கி
    வப்பனே சவுக்கார காரத்தாலே
கற்பமுடன் செயநீரைப் பாண்டமிட்டு
    கருத்துடனே வோடதனைக் கொதிக்கவையே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 81 - 85 of 12000 பாடல்கள்



81.போடவே பனிநீரை யூத்திமைந்தா
    பொங்கமுடன் றானெரிப்பாய் புலஸ்தியாகேள்
நீடவே சுண்ணாம்பு போலேநிற்கும்
    நிலையான பூனீறு யென்னசொல்வேன்
கூடவே தான்கலக்கி தெளிவித்துக்
    கொற்றவனே மறுபடியுங் காச்சும்போது
மாடவே பூனீறு காரமேறி
    மாசற்ற பற்பமது சொல்லொண்ணாதே.
 
விளக்கவுரை :


82. ஒண்ணாது பற்பமது யெடுத்துக்கொண்டு
    உத்தமனே பரும்பீங்கான் றன்னில்வைக்க
நண்ணமுடன் மண்டலஞ்சென் றெடுத்துப்பாரு
    நலமான முப்பூவு மென்னசொல்வேன்
சுண்ணமுடன் பற்பத்தைப் பதனம்பண்ணு
    காட்டதே காமிகட்கும் பாவிகட்கும்
திண்ணமுடன் எப்போதும் பராபரியைத்தான்
    திருவடியைத் தான்வணங்கி செபத்தில்நில்லே.

விளக்கவுரை :


83. நிற்கையிலே வாணிவந்து நிர்த்தஞ்செய்வாள்
    நீணிலத்தில் நீயுமொரு சித்தனாவாய்
துற்கைமுதல் டாகினியு மிதற்கீடுண்டோ
    துரைராஜ பாலகனே புருஷயோகி
அற்பமென்று நினையாதே இந்தவுப்பு
    அவனியிலே யாருந்தான் சொல்லார்பாரு
விற்பனமாய்ச் செய்துகொள்வன் யோகியாவான்
    வேதாந்தத் தாயினது கிருபைபோற்றே.

விளக்கவுரை :


84. .....................மொரு கருமானங்கேள்
    பொங்கமுடன் புலஸ்.......................
மாற்றமுடன் சத்தியுப்பு சொல்வேன்பாரு
    ..... ... ..... ..... ......னார்தான் பண்டார்
சீற்றமுள்ள யுப்பதுவே யார்
    ..... ...... .....யாகி காண்பதல்லால் மற்றோர்காணார்
கூற்றனெ.... ..... .......ன் தான் சொன்னார்
    குனிப்படவே யாமுனக்குச்..........................
    
விளக்கவுரை :


85. ..........................................................
    ...............................................................
............................................................
    ..............................................................
....................................................................................
    ..... .....வழலைக்குக் காரமெத்த
கூரேதான் சிவமுப்பு சொல்லிவிட்டேன்
    கொற்றவனே சத்திமுப்பு யின்னங்கேளே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 76 - 80 of 12000 பாடல்கள்



76. ஊதவென்றால் சுண்ணாம்பைப் பதனம்பண்ணு
    உத்தமனே யிப்படியே மூன்றுமுறைதானும்
நீதமுடன் சுண்ணமதை ஊதும்போது
    நிலையான பேரண்டம் நிலைத்துநின்று
காதமுடன் அமுர்தமென்ற கல்லைத்தானும்
    கசடகற்றி சுண்ணம்பாய் நீற்றும்பாரு
கோதமுடன் சுண்ணம்பை நீற்றிக் கொண்டு
    துறையோடு முறாயோடுஞ் செப்பக்கேளே.  

விளக்கவுரை :


77. செப்பவென்றா லிப்பூவும் காரமெத்த
    செகத்தி லிதற்கீடு சொல்லப்போமோ
ஒப்பமுடன் சுண்ணமதால் வாதமாச்சு
    ஓகோகோ நாதாக்க ளதீதவித்தை
செப்பமுடன் செய்வதுவும் லேசேயென்றாகி
    தொல்லுலகில் முழுமக்கள் செய்வாறோசொல்
இப்பு....... ... ...குறையிருந்தால்
    யெழிலாகச் செய்வார்கள் திண்ணந்தானே.

விளக்கவுரை :


78. திண்ணமாம் புலஸ்தியனே செப்பக்கேளு
    .... ..... ....யார்தான் காண்பார்
வண்ணமப ..... ...மண்டலத்தில் யெ................
    ....யுடன் வண்டத்தை யெடுத்துக்கொண்டு
சுண்ணமு..................ட்டும் தான்
    கசடகற்றி யிருப்புலக்கை யாலேகு
..... ...ற் சாமமிடித்துத் தீருசட்டமுடன்
    ... ... ... ..... ..... .... ... ....................................

விளக்கவுரை :


79. .... ... ... ...... ....... ..... ...........................
    ........ ..... .... ... .... .....................................
... ... ........ ..... ...... .......................
    ...... ...... ...... ...அண்டமதுமை போலாகி
கானமுடன் காரமது மிகவுண்டாக
    கண்டுண்ட பனிநீரால் யெண்ணைகக்கு
பானமுடன் வெண்மைநிற மாகவல்லோ
    பார்வைக்கு மெழுகதுபோ லிருக்குந்தானே.

விளக்கவுரை :


80. தானான வெண்ணையது பில்லைதட்டித்
    தகைமையுடன் ரவிதனிலே காயவைத்து
வேனான மூசை தனிலே வைத்துவூத
    வென்மகனே சுண்ணமதை புகலப்போமோ
கோனான குருவருளால் சுண்ணமாகி
    கொற்றனே காரமது மிகவுண்டாகி
தேனான பற்பமது சொல்லப்போமோ
    தெளிவான பற்பமதை பாண்டம்போடே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 71 - 75 of 12000 பாடல்கள்



71. ஏற்றியே தானெரிப்பாய் சாமம்ரண்டு
    யெழிலுடனே யெண்ணையது கக்கிப்போகும்
மாற்றியே முப்புவது தவளம்போலாம்
    மகத்தான கைகண்ட முப்பூவாகும்
தேற்றமுடன்  முப்பூவைக் பதனம்பண்ணு
    தெளிவான ரேசக பூரகமுஞ்செய்து
போற்றியே யெப்போதும் பூசித்தேதான்
    பூவுலகில் நெடுநாளாம் வாழ்ந்திடாயே.
                         
விளக்கவுரை :


72. வாழவே முப்பூவைச் சுண்ணமாக்கே
    வகைசொல்வேன் புலஸ்தியனே சொல்லக்கேளு
நீழவே முப்பூவைக் கல்வமிட்டு
    நிலையான விந்துவினால ரைத்துமைந்தா
மாழவே பில்லைசெய்து ரவியுலர்த்தி
    மன்னனே புடம்போடப் பற்பமாகும்
ஆழவே பற்பமதை யென்னசொல்வேன்
    அப்பனே யதற்கீடு நவிலொணாதே. 
        
விளக்கவுரை :

73. சொல்லவென்றால் நாவில்லைப் பாவுமில்லை
    துரைராஜர் சுந்தரவர் செய்யுமார்க்கம்
பல்லவே விதற்கீடு புகலப்போமோ
    புகழான சுண்ணமதை பதனம்பண்ணு
வெல்லவே சுண்ணத்தால் கோடிபாதை
    யேகலாம் குறுக்குவழி யனந்தங்கோடி
நல்லவே பூர்வமுப்பு விதுதானாகும்
    நாயகனே புத்தியுள்ளான் செய்வான்பாரே.

விளக்கவுரை :


74. செய்யவே புலஸ்தியனே செப்பக்கேளும்
    செயலான விஷக்கல்லு யிருக்கும்ஸ்தானம்
உய்யவே கோரையெனும் ஸ்தானமப்பா
    உத்தமனே சிகரமது வளருங்கல்லு
துய்யவே லிங்கமென்ற கல்தானப்பா
    துரைராஜர் கொண்டாடுந் துந்துமிக்கல்
பையவே தானெடுத்துப் பதனம்பண்ணு
    பாருலகில் சித்துவிளை யாட்டுகேளே.

விளக்கவுரை :


75. கேளவென்றால் வமுர்தமென்னுங் கல்லையப்பா
    கெவனமுடன் சுண்ணமது செய்யக்கேளு
பாளவே பேரண்டம் சுண்ணம்பண்ணிப்
    பட்சமுடன் சுண்ணமதை மூசைசெய்து
தாளவே வமுர்தமென்ற கல்லையப்பா
    தகைமையுடன் மூசைக்கு ளடைத்துபாலா
வாளமுடன் சீலையது வலுவாய்ச்செய்து
    வளமைபெற உலையில்வைத்து வூதிடாயே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 66 - 70 of 12000 பாடல்கள்



66. கதையென்றால் சத்தியிடனாதமுப்பு
    கவிவாணர் கட்டுவித்த வழலைமுப்பு
விதையுடனே பூர்வமுப்பு சொல்வேன்பாரு
    எழிலான புலத்தியனே செப்பக்கேளும்
பதையாமல்     தலைப்பிண்டந் தன்னின்மேலே
    பாங்கான தேவதா முப்புசொல்வேன்
சதையான மேல்வளர்ந்த முப்பூவல்ல
    தகைமையுள்ள முப்பூவின் பெருமைபாரே.

விளக்கவுரை :


67. பாரேதான வனாலுங் கூறப்போமோ
    பாருலகி லெவராலுஞ் சொல்லொண்ணாது
நேரேதான் திரிமூர்த்தி யிருந்தமுப்பு
    நெடி தாகநடராசர் கூத்தாடுமுப்பு
சீரேதான் நாதத்தால் வந்தமுப்பூ
    செழுமையுடன் முப்பூவை யென்னசொல்வேன்
கூரேதான் வாதியிலே வந்தமுப்பூ
    கூறுவேன் கண்மணியே புகலக்கேளே.

விளக்கவுரை :


68. கேளேதான் வகாரத்தில் வளர்ந்தவுப்பு
    கெடியான மகாரத்தில் சரிந்தவுப்பு
பாளேதான் போகாத பிரமனுப்பு
    பாங்கான ருத்திரனார் கண்டவுப்பு
வீளேதான் ருத்திரனார் கண்டவுப்பு
    வியர்வான மூவர்களால் சமைந்தவுப்பு
நாளேதான் வளர்ந்துவரும் மண்கூறுப்பு
    மகத்தான பரமனிட வுப்புமாச்சே.

விளக்கவுரை :


69.ஆச்சப்பா தசவாய்வால் வளர்ந்தவுப்பு
    அப்பனே  மனோன்மணியாள் நின்றவுப்பு
வாச்சப்பா மணித்தாயாள் சமைந்தவுப்பு
    வாகான கமலமதில் வளருமுப்பூ
நீச்சப்பா கோடிவரை காரமான
    நெடிதான முப்பூவு மதீதமெத்த
மாச்சலுட னிந்தவுப்பு யார்தான் காண்பார்
    மகத்தான சிவயோகி காண்பான்பாரே.

விளக்கவுரை :


70. காண்பானே முப்பூவைக் கண்டபோது
    கசடகற்ற யெண்ணெய்தனை வாங்கமைந்தா
மாண்பான முப்பூவைக் கிளிபோல்கட்டி
    மயங்காமல் பாண்டமதில் தொங்கவிட்டு
சாண்பான சத்தசலம் பாண்டமிட்டு
    பாலகனே வதிற்போட மருந்துகேளு
நாண்பான யுவருப்பு வளையலுப்பு
    மார்க்கமுடன் றான்சேர்த்து அடுப்பிலேற்றே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 61 - 65 of 12000 பாடல்கள்



61.மூட்டுகையி லுந்தமக்குப் பழக்கமாகி
    முனையான கேசரத்தை மனதிற்பூட்டி
தாட்டிகமாய்க் கயாதி தேகந்தன்னை
    தகைமையுடன் நிலைநிறுத்திக் கொள்வதற்கு
பூட்டமுடன் பூவுலகில் வேணகோடிகாலம்
    புகழ்ச்சியாய்த் தாமிருந்து சமாதிகாண
வாட்டமுடன் தேகமதைக் கற்றூணாக்க
    வளமையுடன் சொல்லுகிறே னின்னங்கேளே.

விளக்கவுரை :


62.கேளடா புலஸ்தியனே சொல்லக்கேளாய்
    கெவனமுடன் முப்பூவின் மார்க்கஞ்சொல்வேன்
நாளடா கதிரவனால் பூர்க்கும்பூவாம்
    நலமான வழலையென்ற முப்புவப்பா
கோளடா வாராமல் முப்புதன்னை
    குணமுடனே முடிப்பதற்கு குறிகள்சொல்வேன்
மீளடா குருமுடிக்கும் வகையுஞ்சொல்வேன்
    மிக்கான வழலையிட மார்க்கம்பாரே.
          
விளக்கவுரை :


63. மார்க்கமா முப்புவென்றால் முறைகள் சொல்வேன்
    மயங்காதே உழமண்ணு முப்புவாமோ
தீர்க்கமுடன் மூலிகைக ளுப்பாமோசொல்
    தீர்மையுள்ள சிற்றண்டம் முப்பாமேசொல்
சேர்க்கவே பேரண்டம் முப்பாமோசொல்
    செம்மையுடன் சிங்கியது முப்பாமோசொல்
ஏர்க்கவே சாரமது முப்பாமோசொல்
    யெழிலான சவுக்கார முப்பாகாதே.

விளக்கவுரை :


64. ஆகாது சீனமது முப்பாமோசொல்
    அண்டபிண்டஞ் சேர்ந்தாலேமுப்பாமோசொல்
வேகாத சுண்ணாம்பு முப்பாமோசொல்
    வெடியான மதியுப்பு முப்பாமோசொல்
சாகாத தலைப்பிண்டம் முப்பாமோசொல்
    சட்டமுடன் கேசரியு முப்பாமோசொல்
தாகாத வமுரியது முப்பாமோசொல்
    தாரணியில் மூன்றுபடை முப்பொண்ணாதே.    
                       
விளக்கவுரை :


65.ஒண்ணாது முப்பினுட பெருமைசொல்வோம்
    ஓகோகோ நாதாக்கள் சொல்லவில்லை
அண்ணாந்து சாத்திரத்தை மிகவாராய்ந்து
    அலைகடலும் போய்த்திரிந்து முப்பைக்காணார்
சுண்ணாம்பில் தானிருக்குஞ் சூட்சம்போல
    சுடுவாதி யறியாமல் சுருண்டுபோனார்
மண்ணாளும் வேந்தரெல்லாம் முப்புவாலே
    மதிமயங்கிக் கெட்டதொரு கதையைக்கேளே.
   
விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 56 - 60 of 12000 பாடல்கள்



56. ஆச்சப்பா வெவ்வேறு கோணந்தன்னில்
    அஷ்டமா சித்திதன்னை யாடலாகும்
மூச்சப்பா தனையடக்கி சமாதிநின்றால்
    முனையான வாசிவழி தெறிக்கும்பாரு
பேச்சப்பா யில்லையது பிணம்போல்நிற்பார்
    பேருலகில் மவுனமென்ற சித்தனென்பார்
ஏச்சப்பா வாராமல் சமாதிபீடம்
    என்னாலு மிருப்பவனே சித்தனாமே.
           
விளக்கவுரை :


57. சித்தனாகும் பூரணத்தைக் கும்பகத்தில்வைத்து
    சிறப்பான வாசியைத்தான் மனதுமிகநாட்டி
பித்தனாய்க் கும்பகத்தைப் பின்கலையில்வாங்கி
    பேரான கண்மணியை யிடைகலையில்வாங்கி
சுத்தமுடன் மையமதில் நடுகலையினின்று
    சூரியனை வம்பரத்தில் வகையுடனேதாக்கி
நித்தமே இருகலையில் பூரகத்தைமாட்டி
    நேரான பின்கலையில் வடகலையைவாங்கே.


விளக்கவுரை :


58. வாங்கியே மூவாண்டு வழக்கஞ்செய்து
    வாசியைத்தா னெப்போதும் பழக்கம்பண்ணி
தூங்கியே திரியாதே புலஸ்தியாகேள
    துப்புறவாய்ப் பழகிவந்தா லெல்லாஞ்சித்தி
ஏங்கியே வாடாதே வாசியோகம்
    யென்மகனே செய்துவந்தால் பழக்கமாகும்
ஓங்கியே மகத்தான வாசிதன்னை
    உத்தமனே செய்துவந்தால் சித்தியாமே.

விளக்கவுரை :


59. ........ ........ ........புலஸ்தியாகேள்
    அப்பனே லகுவாக நட...........
...... ..... ..... .... .... ...... ...... ..................
    ......... ........ ...... ....... ........... ....... ..........
........ ........... .............. ............. ................
    ........ ........ ....... .......... ............ ...........
...... ...... ..... .... ஞ்செய்தால்
    நவதுவாரங் களெல்லா மடையும்பாரே.

விளக்கவுரை :


60. பாரேதான் நவவாசல் தானுமுண்டு
    பாலகனே வொன்பதுமே தானடைக்கும்
சீரேதான் வாசியை நீ நடத்தும்போது
    சீறலுடனுந்தனது கனல்தான்மீறும்
வேரேதான் சிந்தனைக ளொடுக்கமாகி
    வேதாந்தத் தாயுருவைக் காணவெண்ணி
கூரேதான் சின்மயத்தி லிருந்துகொண்டு
    குணமான வாசியைத்தான் மூட்டிப்பாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 51 - 55 of 12000 பாடல்கள்





51. பிழைக்கவே கும்பமுனி சொன்னவாக்கு
    பேருலகி லென்னாளுங் கீர்த்தியாகும்
மழைபோன்ற சோனைநீர் தன்னைப்போலும்
    மாசற்ற ஞான சாகரமுமாகும்
தழைபோல படர்ந்திருக்கும் நூல்கட்கெல்லாம்
    தாயான நூலிதுதான் குருநூலாகும்
மழைமதக் களிறதைப்போல் இதுவென்பார்கள்
    மானிலத்தில் மாந்தரெல்லாந் துதிப்பார்தாமே.

விளக்கவுரை :


52. துதிப்பாரே யின்னூலைக் கண்டபேர்கள்
    துறைகோடி முறைகோடி தொந்தங்கோடி
மதிப்பார்க ளின்னூலிற் சொன்னமார்க்கம்
    மானிலத்தில் ராசாதி ராஜரெல்லாம்
கதிப்புடனே முறையனைத்துங் கண்டுதேர்ந்து
    காசினியில் செய்துமல்லோ அதிதங்காண்பார்
கொதிப் பகற்றும் காயாதி கற்பந்தன்னை
    குறையாமல் முறையோடு காண்பார்பாரே.

விளக்கவுரை :


53. ......................................................
    ......................................................
................................................................
    ...................முறையுஞ் சொன்னேன்.
கூரேதான் மருந்துவகை யறியவென்றால்
    கொட்டினேன் சதகோடி வழலைமார்க்கம்
சீரேதான் செந்தூரப் பயன் அனைத்தும்
    சிறப்புடனே திரட்டிவைத்த துண்மையாமே.

விளக்கவுரை :


54. உண்மையாம் காயாதி கற்பமுண்டோர்
    உலகத்தில் மெத்தவுண்டு கேட்கப்போமோ
தண்மையுடன் வாசியோகந் தனிலிருந்து
    சாகரத்......................யிட்டொழித்த தன்மைபோலும்
நன்மைபெற வாசியைத்தான் மேலேநோக்கி
    நலமாகக் கும்பகத்தை கீழமர்த்தி
வெண்மையுடன் சமாதியினிலிருந்து கொண்டு
    வேகமுடன் வாசியைத்தான் பூட்டிக்கொள்ளே.

விளக்கவுரை :


55. பூட்டவென்றால் சின்மயத்தின் வாசல்தன்னை
    சிறப்புடனே தான்திறந்து பார்க்கும்போது
நீட்டமுடன் பதினாறு கோணந்தன்னில்
    நின்றுவிளை யாடுகின்ற பஞ்சகர்த்தாள்
கூட்டமுடன் நவகோணந் தனிலிருந்து
    கும்பகத்தின் மேலிருந்து வாசிபூட்டு
வாட்டமுடன் பஞ்சகர்த்தாள் ஆடுங்கூத்த
    வளமையுடன் அறுபதுவாங் கோணமாச்சே.
                       
விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 46 - 50 of 12000 பாடல்கள்


46. தானான புலஸ்தியனே சொல்லக்கேளும்
    தகைமையுள்ள ஆயுரு வேதந்தன்னை
பானான வடமொழியைப் பிரித்துப்பார்த்து
    பன்னிரெண்டு காண்டமதாய்ப் பாடிவைத்தேன்
தேனர்ன பன்னீராயிரந்தான் அப்பா
    தெளிவான காவியமு மிதுதானாகும்
கோனான ரிஷிமுனிவர் சித்தர்தாமும்
    கோரிக்கை கேட்டதினா லருளினேனே.

விளக்கவுரை :


47. அருளினேன் புலஸ்தியனே யிந்தநூலும்
    ஆருக்குங் கிட்டாது உனக்குக்கிட்டும்
பொருளறிந்த புண்ணியர்கள் விடுவாரோசொல்
    புத்தியுள்ள தவயோகி விடமாட்டான்பார்
இருளகற்றி ஞானியர்க ளிந்தநூலை
    யெழிலுடனே சதாகாலம் பூசிப்பார்கள்
தெருள்கலைக ளிதிலதிகம் உண்டாம்பாரீர்
தென்னவனே புலஸ்தியனே விரும்புவாரே.
        
விளக்கவுரை :


48. விரும்புவா ரிதன்பெருமை சொல்வேன்பாரு
    வீரமுடன்..................பல................சித்தர்தாமும்
கரும்பான நூலனைத்தும் பாடிவிட்டு
    கருவான பொருளையெல்லாம் மறைந்துப்போட்டார்
சுரும்புலவும் புகுந்துடையா.....................னங்கேளு
    சுருதிபொரு ளாராய்ந்து பார்ப்பதற்கு
அரும்பொருளை...............மவருக்கும் வுபயமாக
    அன்புடனே பாடிவிட்டார் வீணாய்தானே.

விளக்கவுரை :


49. வீணாகப் பாடிவிட்டு வியர்ப்பஞ்சொல்லி
    வேதாந்த நுட்பமதைக் காட்டாமற்றான்
தோணத சரக்கெல்லாம் வீணாகக் சொல்லி
    தொல்லுலகில் சுட்டலையப் பாடுதேடி
கோணாமல் முகம்வாழ இருக்காமற்றான்
    கொற்றவனே வுட்பொருளை சொல்லவில்லை
சாணான....................கைக்கண்ட தொருவாதம்போல்
    சட்டமுட னொன்றையுந்தான் காட்டார்பாரே.

விளக்கவுரை :


50. காட்டவில்லை கருவெல்லா மறைத்துப்போட்டார்
    காசினியில் சித்துமய மாகுமென்று
நீட்டமுடன் மறைத்தப் பொருளையெல்லாம்
    நிட்சயமா யென்னூலில் சொல்லிவிட்டேன்
வாட்டமுடன் பாடிவைத்த யிதிகாசத்தை
    வண்மைபெற லோகமெல்லாம் அறிவதற்கு
நாட்டமுடன் தழைத்தபெரும் ஆயுள்வேதம்
    நவின்றிட்டேன் வுலகத்தோர் பிழைக்கத்தானே.

விளக்கவுரை :

Powered by Blogger.