அகத்தியர் பன்னிருகாண்டம் 256 - 260 of 12000 பாடல்கள்


256. அழியாது முப்பூவின் அருமையப்பா
    அதிதமாம் வழலையது காரத்தாலே
குழிதனிலே நெடுங்கால மிருந்திட்டாலும்
    குற்றமொன்றும் வாராது தேகம்பொன்னாம்
வழியோடே காயத்தை நிறுத்தலாகும்
    நிறத்தாலும் ஆவியது நிலைநில்லாது
பழியான சடலமது பாரில்மண்ணாம்
    பலகால மிருந்தாலு மழியுந்தானே.
    
விளக்கவுரை :


257. தானான வழலையது காரசாரம்
    தாக்கான சரக்கெல்லாம் நீற்றும்பாரு
கோனான யெனதையர் கிருபையாலே
    கொற்றவனே பற்பத்தின் போக்குசொல்வேன்
பானான மனோன்மணியாள் கடாட்சத்தாலே
    பாச்சடா நவலோகந் தன்னிற்றானும்
வேனான பற்பமது யேமமாகும்
    மிக்கான மாற்றதுவுஞ் சொல்லொண்ணாதே.

விளக்கவுரை :


258. ஒண்ணாது யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன்
    வுத்தமனே புலஸ்தியரே சொல்லக்கேளும்
நண்ணமுடன் வடிவேலர் தம்மிடத்தில்
    நாட்டமுடன் வெகுகால மடுத்திருந்தேன்
கண்ணபிரான் பெற்றதுபோ லடியேன்றானும்
    காசினியி லுபதேசம் பெறவேவந்தேன்
வண்ணமுடன் நாதாந்த சித்துதாமும்
    வணக்கமுடன் வேலவரை கேட்டார்தாமே.

விளக்கவுரை :


259. கேட்டவுட னடியேன்மேல் மனதுவந்து
    கேள்வியின் வுத்தாரச் சொற்படிக்கி
நீட்டமுடன் ஞானோப தேசந்தன்னை
    நெடுங்காலம் போதிப்பே னென்றுசொல்லி
வாட்டமுடன் வடிவேலர் சந்தோடித்து
    வாகுடனே அகஸ்தியர்க்கு வுபதேசங்கள்
கூட்டமுட னந்தீசர் முன்னதாக
    கூறுவார் வுபதேசங் கூறுவாரே.

விளக்கவுரை :


260. கூறவே வடிவேலர் அகஸ்தியர்க்கு
    குறிப்புடனே அகஸ்தியரும் மனதுவந்து
ஆறவே சகலகலைக் கியானமெல்லாம்
    அவனிதனி லறிவதற்கு குருவுமாகி
மீறவே சகலநூல் கியானவானாய்
    மிக்கான நூல்களுக்கு முதல்வனாக
மாறவே அட்சரத்துக் குடையோனாக
    மகத்தான அகஸ்தியரு முன்னின்றாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 251 - 255 of 12000 பாடல்கள்


251. செப்பவென்றால் அண்டமென்ற கல்லைத்தானும்
          தெளிவுடனே நாதாக்கள் சொற்படிக்கி
ஒப்பமுடன் அண்டமென்ற கல்லைத்தானும்
          வுத்தமனே காரமென்ற செயநீர்தன்னால்
சிப்பியுட செயநீர்தான் கடுங்காரமாச்சு
           யிப்புவியி லாரறிவார் அண்டப்போக்கு
தப்பாமல் அண்டக்கல் காரமேற்றி
           தகைமையுடன் கெஜபுடத்தில் போட்டிடாயே.

விளக்கவுரை :


252. போடவே யண்டக்கல் சுண்ணாம்பாகி
          பொங்கமுடன் சுண்ணமென்ற நெடிதான்வீகம்
நீடவே சரக்குக்குக் காலனாகும்
          நெடிதான சத்துருவைக் கொல்லுமித்திரன்
சாடவே பாஷாண முப்பத்திரெண்டும்
          சாங்கமுடன் பொருமியது
தேடவே வழலையென்ற வண்டமுப்பை
          தெளிவுடனே சீசாவிற் பதனம்பண்ணே.

விளக்கவுரை :


253. பண்ணவே சுண்ணமதை கடுகளவுதானும்
           கருவான வெண்ணைதனில் கொண்டாயானால்
நண்ணமுடன் காயாதி கற்பமாகும்
           நாதாக்க ளுந்தனையும் நவிலுவார்கள
எண்ணமுடன் நாதாக்க ளும்மைத்தானும்
            யெழிலாக முப்பூவைக் கேட்டபோது
வண்ணமுடன் முப்பூவைக் கொடுக்க்கவேண்டாம்
            வளஞ்சொல்லி சித்தர்களுங் கேட்பார்தாமே.

விளக்கவுரை :


254. கேட்டவுடன் மனமகிழ்ந்து கொடுக்கவேண்டாம்
           கெடியான வார்த்தைக்கு அஞ்சவேண்டாம்
நீட்டமுடன் முப்பூவைக் கண்டபோது
           நீயுமொரு சித்தனாய் ஆகிவிட்டாய்
நாட்டமுடன் வழலைதனை அறிந்ததாலே
           நலமான அஷ்டசித்து மாடலாகும்
தாட்டிகமாய் பற்பமதை தேனிலுண்ண
          தாரணியில் வெகுகால மிருக்கலாமே.

விளக்கவுரை :


255. இருக்கலாம் கோடிவரை யுகாந்தகாலம்
    யெழிலுடனே நாலுயுகங் காணலாகும்
பொருக்கவே தேகமது கற்றூணாகும்
    பொங்கமுடன் சட்டையது தள்ளும்பாரு
வகுக்கவே தேகமது பொன்போல்வீசும்
    வளமான வாசியது கீழ்நோக்காகும்
இருக்கவே  கோடியுகம் சமாதிதன்னில்
    யெழிலாக தேகமது அழியாதென்றே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 246 - 250 of 12000 பாடல்கள்


246. பிசைந்துமே மூன்றுநாள் ரவியிற்போடு
    பிசகாமல் நான்காம்நாள் பின்னுமப்பா
இசைந்ததொரு பள்ளமதை சுத்தித்தேதான்
    யெழிலான சல்லாவை கீழேவைத்து
திசைமுகமுங் காணாமல் பிசைந்தமண்ணை
    திகழவே ரவைசல்லா மேலேகொட்டி
நசைந்ததொரு பிரிதீவா மண்ணுதன்னை
    நாட்டமுடன் போட்டுமல்லோ மூடிடாயே.

விளக்கவுரை :


247. மூடவே மூன்றாம்நாள் கதிரோன்முன்பு
    முனையான பரிபாஷை விதியதாக
சாடவே நீபோய் பார்க்கும்போது
    சட்டமுடன் பூநீறு சாண்தானப்பா
நீடவே பூமிதனில் வளர்ந்திருக்கும்
    நீசமான பூநீரை யெடுத்துபாலா
கூடவே மறுபடியுங் குழிதான்வெட்டி
    கொப்பெனவே பூனீறைபோடக்கேளே.

விளக்கவுரை :


248. கேளேதான் பூனீரை யெடுத்துமைந்தா
    கெணிதமுடன் குழிதனிலே பின்னும்போடு
தாளவே யதின்மேலே சல்லாவைத்தான்
    தகைமையுடன் மேல்பரப்பி மண்ணை மூடி
ஆளவே கெட்டணைகள் மிகவுஞ்செய்து
    அப்பனே மூன்றுதிங்கள் பொறுத்தபின்பு
மீளவே மண்ணதனைக் தோண்டிப்பார்க்க
    மிக்கான மண்ணதுவுங் கெட்டியாமே.

விளக்கவுரை :


249. கெட்டியாம் மண்ணதனை யுடைத்துப்பார்க்க
    கெடியான அண்டமென்னுங் கல்லுதானும்
கட்டியாய் யுருண்டுமல்லோ திரண்டுமேதான்
    கருவான பிண்டம்போ லிருக்கும்பாரு
மட்டியென்ற ஆனைக்கல் லென்றும்பேரு
    மகத்தான காரசார மானகல்லு
வட்டமுட னடுமைய மிருகடுங்கல்லு
    வளமான கல்லினது வேகம்பாரே.

விளக்கவுரை :


250. பாரேதான் அண்டமென்ற பிண்டக்கல்லை
    பாருலகில் யாரறிவார் சிவயோகிகாண்பான்
நேரேதான் புத்திவா னறிவான்பாரு
          நேர்மையுடன் விட்டகுறை யிருக்குமானால்
சீரேதான் வழலையென்ற மார்க்கமப்பா
          திறமுடனே லபிக்குமடா புண்ணியோர்க்கு
வேரேதான் பிண்டமென்ற கல்லைத்தானும்
          விருப்பமுடன் செய்யும்வகை செப்பக்கேளே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 241 - 245 of 12000 பாடல்கள்


241. விழலானார் பரிபாஷை பார்த்துமல்லோ
    விருதாவாய்த் தெரியாமல் மாண்டார்கோடி
வழலைமுகம் தானறியார் மாணாக்காளே
    வகண்டபரி பூரணத்தை மெய்யென்றெண்ணி
கழலவே யென்னூலில் ரோமபாஷை
    பரிவாகச் சொல்லிவிட்டேன் வைநூறுக்குள்
சுழலவே கண்டறிந்து காண்பானாகில்
    சுத்தமுள்ள சித்தனென்னும் பேருமாச்சே.

விளக்கவுரை :


242. ஆச்சப்பா ரோமரிடி பரிபாஷையப்பா
    வாச்சரிய லோகமதி லாருங்காணார்
பேச்சப்பா பேசுதற்கு இடமுமில்லை
    பேரான கைமறைப்பு யாதொன்றில்லை
வாச்சப்பா வழலையிட மார்க்கந்தன்னை
    வாகுடனே பாடிவைத்தேன் ரெண்டாங்காண்டம்
ஓச்சப்பா யாருந்தான் சொல்லக்கூடா
    யெழிலான தென்வாக்கு வுறுதியாமே.

விளக்கவுரை :


243. உறுதியா மிந்தபரி பாஷைதானும்
    வுத்தமனே சிவயோகி அறிவானப்பா
நிறுதிமொழி வார்த்தையினால் நிட்சயித்து
    நீடுழி காலம்வரை யென்னூல்பார்த்து
குறுதியுள்ள சூத்திரமும் பதினாறுபார்த்துக்
    குறிப்புடனே சோடசமு மிரண்டும்பார்த்து
அறுதியுடன் பரிபாஷை யறிந்துமேதான்
    அப்பனே முப்பூவை முடிப்பாய்தானே.

விளக்கவுரை :


244. முடிப்பதற்கு நாளுமது யெட்டில்பாரு
    முனையான கதிரோனும் சரியாய்நிற்பான்
துடிப்புடனே காவனத்திற் செல்லும்போது
    துறைபோல முறைபோல நீயுஞ்சென்று
குடிப்பழுது நேராமல் ரேசகத்தைப் பார்த்து
    குறிப்புடனே வேளையது யென்னூல்பார்த்து
அடிப்பறையில் பிரதிவியில் மண்ணைத்தோண்டி
    அப்பனே ரவிதனிலே காயப்போடே.

விளக்கவுரை :


245. போடையிலே மண்ணுமது கசுவுவாங்கி
    பொங்கமுடன் காற்றாறி யிருக்கும்போது
நீடமுடன் சல்லாவை மேலேபோட்டு
    நிஷ்களமாய் பணியதுவும் மேற்படாமல்
மூடவே மூன்று நாள்சென்றபின்பு
    முறைபோலென் பரிபாடை கையிலேந்தி
கூடயிலே கேணிநீர் கொண்டுவந்து
    குமுறவே சலமதனால் பிசைந்திடாயே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 236 - 240 of 12000 பாடல்கள்


236. தானேதான் விளைந்ததொரு சுக்கான்கல்லு
    தகைமையுள்ள கல்லதுவும் பிரமக்கல்லு
வேனேதான் குடுகுடுக்கல் சுக்கானாச்சு
    வேகமுடன் தான்வேளர்ந்த மட்டிக்கல்லு
மானேதான் வூமையென்ற ரத்தினக்கல்
    மகத்தான விஷபீசக் கல்லென்றும்பேர்
கோனேதான் குருசொன்ன கல்லுமாகும்
    கொடிதானே ரோமமென்ற கல்லுமாமே.

விளக்கவுரை :


237. கல்லான கல்லதுவும் கோரைக்கல்லு
    கருவான மட்டியென்ற கோரைக்கல்லு
புல்லான பாலைநிலம் தன்னில்மேவும்
    புகழான கல்லதுவும் பொருமல்கல்லாம்
கொல்லான சிவந்தக்கல் நாமக்கல்லாம்
    சுத்தமுள்ள சிவந்தநிறக் கல்லுமாகும்
வில்லான கல்லுமப்பா மேதினிக்குள்
    மேன்மையுடன் தான்வளர்ந்த பிண்டமாமே.

விளக்கவுரை :


238. பிண்டமாம் கல்லென்ற நாமமாச்சு
    பேறான பனியினால் விளைந்தக்கல்லாம்
அண்டமதில் விழுந்ததொரு கங்கையாலே
    அதிற்பிறந்த கல்லாச்சு யென்றுசொன்னீர்
தண்டமென்னும் பிரிதிவினால் விளைந்தகல்லு
    தன்மையுள்ள சூட்சமது மறைத்துப்போட்டீர்
கொண்டபடி மனக்குறைக ளதிகம்வைத்து
    கோளாறு வாகவேதான் பாடீனீரே.

விளக்கவுரை :


239. பாடியே பரிபாஷை தியக்கமாகப்
    பாருலகில் யாரேனுங் காண்பாருண்டோ
தேடியே கெட்டலைந்து சுட்டுமாண்டு
    தேசத்தில் சமுசாரி மாண்டாரப்பா
வாடியே முகம்வாடி நிதியும்போய்
    வண்மையுள்ள வுத்தியது மிகவுங்கெட்டு
கூடியே கும்பல்கும்ப லாகக்கூடி
    குவலயத்தில் கெட்டார்கள் கோடியாமே.

விளக்கவுரை :


240. கோடிபேர் பரிபாஷைப் பார்த்துமல்லோ
    குவலயத்தில் மாண்டார்கள் லக்கோயில்லை
நீடியே மறைத்துவைத்த வண்மையாலே
    நிலையான பொருளென்று நிர்ணயித்து
நாடியே சித்திராப் பருவந்தன்னில்
    நாட்டமுடன் பூவழலை யெடுப்பதற்கு
தேடியே காவனத்திற் சென்றுமல்லோ
    தேசத்தில் வெகுபேர்கள் விழலானாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 231 - 235 of 12000 பாடல்கள்


231. முப்பாலே வந்ததொரு வப்பூவாச்சு
    முதன்மையாம் பனிநீருஞ் சென்னீராச்சு
தப்பாமல் மழையினால் வந்தநீராம்
    தண்மையுள்ள குளிர்ச்சியினால் பனிநீராச்சு
ஒப்பான மேகமது தானழிந்து
    வுற்பனமாங் கெர்ச்சையுடன் வழலைதன்னில்
வெப்பமுடன் மழைசொரியும்போதுவல்லோ
    வேகமுடன் காற்றதுவும் மேவுங்காணே.

விளக்கவுரை :


232. காணவே சித்திரையாம் பருவந்தன்னில்
    களிப்புடனே மேகமது கர்ச்சித்தேதான்
தோணவே காற்றெழும்பி சுடர்போல்வீசி
    துப்புரவாய்ப் பூமிதனில் விழுகும்போது
ஈணவே மதியுப்பு காரசாரம்
    இயலான வுவருப்பு வதிலுண்டாச்சு
வேணவே பரிபாஷைத் திரட்டையெல்லாம்
    விருப்பமுடன் தான்படித்து மறைத்தீர்தாமே.

விளக்கவுரை :


233. மறைத்தொரு பூநீரைக் காரசாரம்
    மானிலத்தில் காட்டாத வண்மையெல்லாம்
திறைப்புடனே கண்டறிந்து திறலும்பார்த்து
    திறமான வழலையுட கணிதம்பார்த்து
புறையகற்றி வண்டக்கல் லிருக்கும்ஸ்தானம்
    புகலாத காரணத்தால் பாபமாச்சு
குறைப்படியே சாத்திரத்தைப் பிரட்டிப்பாடி
    கூர்மையுள்ளான் கண்டறிவா னென்றிட்டீரே.

விளக்கவுரை :


234. என்றீரே மேகத்தா லுற்பவித்த
    யெழிலான பனியதுவால் விளைந்தவுப்பு
வென்றீரே கதிரோனால் விளைந்தவுப்பு
    வேகமுள்ள வளர்தனிலே விளைந்தவுப்பு
தின்றதொரு வுப்பெல்லா மிதற்குள்ளாச்சு
    தீர்த்தகரை யாடிவந்த வுப்புமாச்சு
தென்றிசையின் கன்னியா குமரிதன்னில்
    தேர்ந்தெடுத்த வுப்பதுவுந் தெளிமைபாரே.

விளக்கவுரை :


235. பார்க்கையிலே வண்டபிண்ட மென்றுஞ்சொன்னீர்
    பாருலகில் நடுப்பிண்ட மிதுவுமாச்சு
தீர்க்கமுடன் தலைப்பிண்ட மிதுவுமாகும்
    திகழான கடைப்பிண்ட மிதுவுமன்றீர்
நீர்க்கமுடன் பிண்டக்கல் லென்றுசொல்லி
    நெடுநாளாய் வளர்ந்ததொரு கல்லுமென்றும்
மூர்க்கமுடன் வளர்ந்ததொரு கல்லுமென்று
    முக்கியமாய்த் தானுறைத்தீர் முதன்மைதானே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 226 - 230 of 12000 பாடல்கள்


226. சொன்னதொரு வழலைக்குக் கருமானத்தை
    சூட்சமுடன் சொல்லாமல் மறைத்துப்போட்டீர்
வின்னமுடன் அண்டமென்னும் விஷக்கல்தன்னை
    வெட்டவெளி யாகவல்லோ சொல்லாமல்தான்
நன்னயமாய் நாதாக்கள் மறைப்பைப்போல
    நலமாகத் தானுமல்லோ சொல்லிவிட்டீர்
சின்னமுள்ள பரிபாஷை வைநூறுந்தான்
    சிறப்பில்லை காசினியில் வியர்த்தந்தானே.
    
விளக்கவுரை :


227. வியர்த்தமாம் பரிபாஷை நூலையெல்லாம்
    விருதாவாய்த் துறைசொல்லி முறைசொல்லாமல்
நியர்த்தமுடன் சாத்திரத்தில் சாபஞ்சொல்லி
    நிலையான வழிதனையே காணாமற்றான்
தயர்த்தமுடன் நூலாதி நூல்களெல்லாம்
    சாங்கமுடன் பரிபாஷை மரவுசொல்லி
சுயர்த்தமுடன் அண்டமென்னும் விஷக்கல்தன்னை
    சூட்டியே போக்குவழி மறைத்தீர்தாமே.
   
  

விளக்கவுரை :


228. மறைத்ததொரு வண்மையெல்லாஞ் சொன்னார்பாரு
    மகத்தான சாத்திரத்தின் முப்புமார்க்கம்
குறைத்துமே தன்மனதின் போலேதானும்
    கூரான விஷக்கல்லு பிறந்தமார்க்கம்
நிறைத்ததெரு வேதைநெறி சாத்திரங்கள்
    நீடாழி யுலகத்தி லுறதிப்போக்கு
பறைத்ததொரு அண்டக்கல் விஷக்கல்லப்பா
    பாருலகில் சித்தருக்குள் பான்மையாமே.
                
விளக்கவுரை :


229. பான்மையாஞ் சித்தருட விஷக்கல்தன்னை
    பாரினிலே மறைத்துவைத்த தோஷத்தாலே
மேன்மையுடன் விஷக்கல்லு போக்குமார்க்கம்
    மெய்யான சித்தரெல்லாம் மறைத்துப்பேசி
கான்மையா மிருக்குமிட ஸ்தானங்கண்டு
    கருத்துடனே யறியாத படியினாலே
வான்மையுடன் யுகந்து பரிபாஷைதன்னில்
    வளமாகச் சொல்லாத தர்க்கம்பாரே.

விளக்கவுரை :


230. பாரேதான் கண்டவிட மார்க்கமெல்லாம்
    பரிவாகப் பூர்த்திருக்கும் பூவைக்கண்டீர்
நேரேதான் பூவல்லவென்றுசொன்னீர்
    நிலையான இடந்தோரு மிருக்கும்பாரு
ஊரேதான் பூபூர்த்தா லுலகழியும்
    வப்பல்லால் வேறொன்றுந் தப்போயில்லை
சீரான முப்பாலே வப்பூவாகும்
    சிறப்பான வப்பாலே முப்பூவாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 221 - 225 of 12000 பாடல்கள்


221. தானான புலஸ்தியரே சொல்லக்கேளும்
    தகைமையுள்ள பதினெண்பேர் சித்தர்தாமும்
கோனான சித்துமுனி கூட்டத்தோடு
    கொற்றேவ யென்முன்னே வாதுபேச
தேனான வவரவர்கள் செய்த நூலை
    திரட்டியே யான்செய்த நூலுக்காக
பானான காவியம் பன்னீராயிரத்தை
    பாரினிலே செய்ததொரு கற்பம்பாரே.

விளக்கவுரை :


222. பாரேதான் மடைக்கூட்டம் ரிடிகளோடு
    பாலகன வென்முன்னே யெதிர்த்துவந்து
நேரேதான் நானிருக்குஞ் சமாதிமுன்னே
    நேரான கல்லாலின் மரத்தின்கீழே
கூரேதான் கூட்டமிட்டு வாயிரம்பேர்
    குடித்தனமாம் பதினெண்பேர் வர்க்கத்தோர்கள்
சீரேதான் நூல்தனையே பெயத்துக்காட்டி
    சிறப்புடனே வாதுமுகங் கூறினாரே.

விளக்கவுரை :


223. கூறினார் அகஸ்தியனார் முன்னதாக
    குறிப்பான சாத்திரத்தின் தொகுப்பையெல்லாம்
மீறியதோர் கருமான முட்கருவையெல்லாம்
    மிக்கான மாணாக்க னறியவென்று
தூறியே மறைபொருளை வெளிதாக்கிய
    துப்புரவாய் செய்ததொரு தன்மையாலே
கோறியே நாங்களெல்லாங் கூட்டமிட்டு
    குருமுனியே நாங்களெல்லாம் வந்தோம்பாரே.

விளக்கவுரை :


224. வந்தோமே யென்றுசொல்ல சித்தர்தாமும்
    வளமையுள்ள கல்லாலின் மரத்தின்கீழே
அந்தமுடன் புஷ்கரணி தீர்த்தமுன்னே
    அகஸ்தியரும் யெல்லவர்க்கும் வரவுசொல்லி
சொந்தமுடன் வாதுமிகப் பேசிவெல்ல
    சுந்தரரைத் தானழைத்து வதிதம்பூண்டு
இந்ததொரு கல்லாலின் மரத்தின்கீழே
    இன்பமுடன் பேசியல்லோ கெலிப்போம்தாமே. 


விளக்கவுரை


225. கெலிக்கவே அகஸ்தியரும் வாதுபேசி
    கெடியான நூலெல்லாங் கேட்கும்போது
சொலிக்கவே ரோமரிடி யாரெழுத்து
    சொரூபமென்னும் அகஸ்தியர்முன் னெதிரதாக
கலிப்பான பரிபாஷை யானுஞ்செய்தேன்
    கருவான பரிபாஷைத் தாமுஞ்செய்தீர்
வலிப்பான வழலையென்ற வண்டந்தன்னை
    வாகுடனே மாறாட்டம் மிகச்சொன்னீரோ.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 216 - 220 of 12000 பாடல்கள்


216. தந்தாளே யின்னமொரு மார்க்கம்பாரு
    தாடாண்மை யாகவல்லோ காத்துறேன்கேள்
சிந்தனையாய் அகஸ்தியரும் புலஸ்தியருக்கு
    திறமுடனே தானிருந்த ஸ்தானபாரம்
சொந்தமுடன் தானுரைக்கும் வளமையாவும்
    சுந்தரருந் தான்கேட்டு மகிட்சிகொண்டு
தொந்தமுடன் நாதாக்கள் கூட்டத்தோடு
    துரையான அகஸ்தியரும் மலைசொன்னாரே.
    
விளக்கவுரை :


217. சொன்னாரே அகஸ்தியரும் மலைதானப்பா
    தோற்றமுடன் அதிசயங்கள் மெத்தவுண்டு
நன்னயமாய் அகஸ்தியனார் மலையோரத்தில்
    நடுவான மத்தியத்தில் சுனையொன் றுண்டு
மன்னவர்கள் தேவாதி ரிடிகள்தாமும்
    வருகுவதும் போகுவதும் மெத்தவுண்டு
பன்னயமாய் வுதகமொன்ற தங்கேயுண்டு
    பாரினிலே வெகுகோடி சித்தருண்டே.

விளக்கவுரை
 218. உண்டான வாயக்கால் மண்டபத்தில்
    உத்தமனே வெகுகோடி சித்தரப்பா
அண்டாத சேனையுடன் ரிடிக்கூட்டங்கள்
    அப்பனே தான்வருவார் மெத்தவுண்டு
திண்டான அசுவனியாந் தேவர்தன்னால்
    தீரமுடன் அகஸ்தியனார் சமாதியுண்டு
கண்டாரே புலஸ்தியரும் சமாதிகண்டு
    களிப்புடனே சிலகால மிருந்தார்காணே.

விளக்கவுரை :


219. இருந்தாரே சிலகாலம் புலஸ்தியருமப்பா
    யெழிலான சமாதியது பக்கல்தன்னில்
பொருந்தமுடன் சிவபூசை நமஸ்காரங்கள்
    புகழாக செய்துமல்லோ இருக்குங்காலம்
வருந்தியே சித்தரிடம் வருவாரப்பா
    வளம்பெரிய வாயக்கால் மண்டபத்தில்
குருந்தமென்னு மரமதிலே அகஸ்தியர்தாமும்
    கூட்டமுடன் எந்நேர மிருப்பார்தாமே.

விளக்கவுரை :


220. தாமான சித்தருடக் கூட்டத்தோடும்
    சாங்கமுடன் அகஸ்தியரு மிருப்பார்கண்டீர்
நாமான குகைக்குள்ளே முனிவர்தாமும்
    நாட்டமுடன் சிவயோகஞ் செய்யும்போது
பாமான ரிடிக்கூட்டம் முனிவர்தாமும்
    பக்கலிலே வந்து அஞ்சலிகள் செய்வார்
வேகமான வேதரிடிபோதரிடிதானும்
    வெகுக்கூட்ட மாகவேதான் இருந்தார்தானே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 211 - 215 of 12000 பாடல்கள்


211. கொண்டபின்பு காயாதி கற்பமாச்சு
    கோடான கோடிவரை யிருக்கலாகும்
கண்டவர்கள் யிப்பாகஞ் சொல்லமாட்டார்
    காசினியில் வெகுகோடி மாந்தரப்பா
விண்டபடி யாமுரைத்த நூலையெல்லாம்
    விருப்பமுடன் தான்மறைத்து குகைக்குள்வைத்து
மண்டலத்தில் நூலில்லை யென்றுசொல்லி
    மறைத்தாரே நாதாக்கள் சித்துதாமே.

விளக்கவுரை :


212. சித்தான யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன்
    சீரான புலஸ்தியனே சொல்லக்கேளும்
குத்தான செம்பதுவுஞ் சேர்தானொன்று
    குணமான செந்தூரங் களஞ்சியொன்று
வித்தான தங்கமது களஞ்சியொன்று
    விபரமுடன் றானுருக்கிக் குருவொன்றீய
முத்தான மணிபோலே யுருகியல்லோ
    முன்னூறு மாற்றதுவும் யிருக்கும்பாரே.

விளக்கவுரை :


213. பாரேதான் தங்கமது பிரிதீவாகும்
    பாரினிலே பிறவியென்ற தங்கமாச்சு
நேரேதான் தங்கமது மாற்றோமெத்த
    நெடிதான சுயத்தங்க மிதற்கொவ்வாது
சீரேதான் சிவயோகந் தனக்குதந்த
    சீர்மையுள்ள தங்கமது யிதுதானப்பா
கூரேதான் நாதாக்கள் சொன்னமார்க்கம்
    குறிப்பறிந்து பாடிவைத்த காண்டமாமே.  

விளக்கவுரை :


214. காண்டமாம் பனிரெண்டு காண்டந்தன்னில்
    கருத்துடனே பாடிவைத்தேன் முதற்காண்டத்தில்
தூண்டியதோர் கருமான முப்புமார்க்கம்
    சூட்சாதி சூட்சமெல்லா மிதிலடக்கம்
பூண்டதொரு காயாதி கற்பஞ்சொன்னேன்
    புகழான முப்பூவையெடுக்குமார்க்கம்
வேண்டியே வகைமான மிதிலேசொன்னேன்
    விருப்பமுடன் பாடிவைத்த காவியந்தானே.

விளக்கவுரை :


215. தானான காவியம் பன்னீராயிரத்தை
    தண்மையுடன் மாணாக்கள் பிழைக்கவென்று
கோனான வசுவனி தேவர்தானும்
    கொற்றவனார் கடாட்சத்தி னருளினாலே
தேனான காவியமாய்த் திரட்டியேதான்
    திறமான பனிரெண்டு காண்டஞ்சொன்னேன்
பானான பாராபரியாள் மெச்சியேதான்
    பரலோகங் காணவது வரந்தந்தாளே.

விளக்கவுரை :

Powered by Blogger.