பத்திரகிரியார் பாடல்கள் 96 - 100 of 231
பாடல்கள்
96. ஆக வெளிக்குள்ளே அடங்காப் புரவி செல்ல
ஏக வெளியில் இருப்பது இனி எக்காலம்?
விளக்கவுரை :
97. பஞ்சரித்துப் பேசும்பல்கலைக்கு எட்டாப் பொருளில்
சஞ்சரித்து வாழ்ந்து தவம் பெறுவது
எக்காலம்?
விளக்கவுரை :
98. மலமும் சலமும்அற்று மாயை அற்று மானம் அற்று
நலமும் குலமும் அற்று நான் இருப்பது
எக்காலம்?
விளக்கவுரை :
99. ஓடாமல் ஓடி உலகை வலம் வந்து சுற்றித்
தேடாமல் என்னிடமாய்த் தெரிசிப்பது
எக்காலம்?
விளக்கவுரை :
100. அஞ்ஞானம் விட்டே, அருள் ஞானத்து எல்லைதொட்டு
மெய்ஞ்ஞான வீடுபெற்று வெளிப்படுவது
எக்காலம்?
விளக்கவுரை :