சித்த வைத்திய அகராதி 11751 - 11800 மூலிகைச் சரக்குகள்
மேகசஞ்சாரிச்செடி - மேகநாதமூலி
மேகசஞ்சீவிச்செடி - மேகநாதமூலி
மேகசாரம் - கற்பூரம்
மேகநாதக்கீரை - சிறுகீரை
மேகநாதக்கோரை - உப்பங்கோரை
மேகநாதிக்கொடி - கட்டுக்கொடி
மேகநாதிப்புல் - சுணங்கப்புல்
மேகநிறத்தாமரை - நீலத்தாமரை
மேகமூலி - புல்லாமணக்குரு
மேகயோனிகம் - புகை
மேகராணிக்குருந்துமரம் - மயிடிக்குருந்துமரம்
மேகவண்டமரம் - மயிற்குருந்துமரம்
மேகவரணைச்செடி - அவுரிச்செடி
மேகவருணனைச்செடி - மேகநாதமூலி
மேகவர்ணச்செவ்வந்தி - நீலவர்ணச்செவ்வந்திச் செடி
மேகவிருளி - பித்து
மேசம் - வெள்ளாடு
மேடகச்செடி - ஆட்டுச்செவிக்கள்ளிச் செடி
மேடசிங்கி - புழுக்கொல்லிச்செடி
மேடசிருங்கி - ஆடுதின்னாப்பாளைக் கொடி
மேதகக்கொடி - சவுரிக்கொடி
மேதகவிருட்சம் - கணையெருமை விருட்சம்
மேதகிக்கற்றாழை - மருட்கற்றாழை
மேதாத்தாமரை - கற்றாமரை
மேதாப்புல்லுருவி - மருதுமேற்புல்லுருவி
மேதாவிருட்சம் - கற்பக விருட்சம்
மேதிக்காவிகமரம் - மருதமரம்
மேதைச்செடி - மகாமேதைச்செடி
மேதோகிகமரம் - கருவேல்மரம்
மேந்தியக்கொழுந்து - மரிக்கொழுந்து
மேந்தியம் - வெந்தயம்
மேரக்காலி - பேய்பிசாசு
மேற்காய்நெல்லிச் செடி - மேல்காய்நெல்லிச் செடி
மேற்கோலகிச் செடி - தட்டைப்பயற்றின் கொடி
மேனாட்டுக்கன்னி - பொன்னாங்கண்ணிச்செடி
மேனிநீர் - கங்கைநீர்
மேனியிலைச்செடி - குப்பைமேனிச் செடி
மேனோசகவிருட்சம் - திலகவிருட்சம்
மைக்கரிப்பான் - கருங்கரிப்பான்
மைக்காரிக்கொன்னை - சரக்கொன்னை
மைக்குண்டு மிளகாய் - கருங்குண்டுமிளகாய்
மைக்குருந்து - கருங்குருந்து மரம்
மைச்குரோகிதம் - மிளகு
மைக்குன்றிக்கொடி - கருங்குன்றிமணிக்கொடி
மைக்கொடு வேலி - கருங்கொடிவேலிச் செடி
மைக்கொன்னை - சரக்கொன்னை மரம்
மைசாட்சி - குக்கில்
மைச்சந்த பாஷாணம் - காச்சற்பாஷாணம்
மைச்சீரகம் - கருஞ்சீரகம்
மைச்சீரிடப்பாசி - வேப்பம்பாசி
சித்த வைத்திய அகராதி 11751 - 11800 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal