சித்த வைத்திய அகராதி 11101 - 11150 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11101 - 11150 மூலிகைச் சரக்குகள்


மராடமரம் - மருக்காரைமரம்
மராடிகக்குமிழ் - நிலக்குமிழ்செடி
மராட்டிமொக்கு - தோடு மொக்கு
மராமரம் - பிராமரம்
மராளக வாகை - நிலவாகைச் செடி
மராளமரம் - மாதளைமரம்
மரிகமரம் - முருங்கைமரம்
மரிசகசிசெடி - பிராப்பரக்கிச் செடி
மரிசம் - மிளகு
மரித்தவப்பாசி - கடற்பாசி
மரியங்காய் - சீனக்காய்
மரிசிகமரம் - கானல்மாமரம்
மருக்காரக்கொழுந்து - மருக்கொழுந்து
மருக்களங்காய் - சீனக்காய்
மருக்களங்கிச் செடி - நின்றுசிணுங்கிச்செடி
மருக்களங்கொடி - மயிர் மாணிக்கங்கொடி
மருக்காதிதவேம்பு - நிலவேம்புச்செடி
மருக்காதிநாறிமரம் - பீநாறிமரம்
மருக்காரை - மதுக்காரைச்செடி
மருக்கூவிகக் கடம்பு - நீர்க்கடம்பு மரம்
மருக்கொழுந்து - மரிக்கொழுந்துச் செடி
மருச்சகக்கொடி - கொம்மட்டிக் கொடி
மருஞ்சாகபூரம் - இரசநற்பூரம்
மருட்கற்றாழை - பீதக்கற்றாழை
மருட்கனி - எட்டிக்கனி
மருட்கிழங்குக் கற்றாழை - நாற்கிழங்குக்கற்றாழை
மருட்சாராயம் - பிராந்தி
மருட்சூலிமரம் - பெருஞ்சூலி மரம்
மருட்டிரச்செடி - பெருந்தும்பைச்செடி
மருதமரம் - மருதுமரம்
மருதாகினிக் கொடி - பீனிசமொச்சைக் கொடி
மருதாணிமரம் - மருதோணிமரம்
மருதுமேற் புல்லுருவி - சுரபிமேற் புல்லுருவி
மருதோகிகமரம் - மாலையம்பூமரம்
மருதோன்றிமரம் - தோன்றிமரம்
மருத்தாதிக்கொடி - சீந்திற்கொடி
மருத்திராச்செடி - நாயுருவிசெடி
மருத்தீண்டாமரம் - மராமரம்
மருபுகாமரம் - வாழைமரம்
மருபூலிகாக்கொடி - பீனிசவவரைக் கொடி
மருப்புக்கிழங்கு - இஞ்சி
மருமபீடம் - காணாத்தலம்
மருவகத்தி - தோதகத்தி
மருவகாநங்கைச்செடி - பெரியாணங்கைச்செடி
மருவகீதசிச்செடி - மதுக்காரைச்செடி
மருவலிமரம் - பாலைமரம்
மருவள்ளிக்கிழங்கு - வெற்றிலைவள்ளிக் கிழங்கு
மருவாரிகக் கொடி - பீர்க்கங்கொடி
மருவாரிப்பாலை - வெட்பாலை மரம்
மருவாலிகக்கொடி - பிரண்டைக் கொடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal