சித்த வைத்திய அகராதி 10751 - 10800 மூலிகைச் சரக்குகள்
போத்திரிச்செடி - வெள்ளரிசெடி
போந்துகமரம் - பனைமரம்
போந்துகாத்தினை - மஞ்சட்தினை
போந்துகாப்பீர்க்கு - நுரைப்பீர்க்கங்கொடி
போம்பறிச்செடி - நீர்க்கடம்பு
போம்பனிச்செடி - மருவுச்செடி
போல்மூங்கில்மரம் - குழாய்மூங்கில்மரம்
போளம் - கரியபோளம்
போற்குன்றிமணி - வரிக் குண்டுமணி
போற்றணிக்கொடி - நிலப்பூசணிக் கொடி
பௌண்டிரவக்கொடி - பாஞ்சாலிக்கொடி
பௌதிகமங்கைச்செடி - பொன்னாங்கண்ணிச் செடி
பௌத்தர தாமரை - குளிர்தாமரை
பௌத்திரத்தினை - மஞசட்தினை
பௌத்திரநெல்லிமரம் - அரிநெல்லிமரம்
பௌத்திரப்புல் - கருப்பைப்புல்
பௌத்திராபோளம் - வாளேந்திரபோளம்
பௌத்திராமுருங்கை - புனல்முருங்கைச்செடி
பௌத்திராயக் கொடி - செந்திராய்க் கொடி
பௌத்திராவச்செடி - ஊதளைச்செடி
மகரகந்தம் - வெண்காயம், ஈரவெங்காயம்
மகரசமரம் - மருதோன்றி மரம்
மகாசிதமரம் - கொன்னைமரம்
மகரதச்செடி - கொடுவேலிச்செடி
மகரந்தப்பூ - மனோரஞ்சிதப்பூ
மகரந்திகாமரம் - தேமாமரம்
மகரவாழை - மொந்தவாழை மரம்
மகரவீரிச்செடி - சேம்புச்செடி
மகரவேதிகவரிசி - வாலுளுவையரிசி
மகாதசமரம் - மாவுலிங்கமரம்
மகாதிம்பமரம் - பெருமரம்
மகாநங்கைச்செடி - மிளகாய்நங்கைச் செடி
மகாநாரிமரம் - ஈரபுன்னைமரம்
மகாநீலச்செடி - கையாந்தகரைச் செடி
மகாபலக்கொடி - தூதுவளைக் கொடி
மகாபலச்செடி - பேராமுட்டிச் செடி
மகாபலமரம் - கொழுமிச்சைமரம்
மகாபலிகக்கொடி - வெண்பூசணிக்கொடி
மகாபலைமரம் - வில்வமரம்
மகாபூசிதசீரம் - பெருஞ்சீரகம்
மகாபூசுரபிமரம் - புன்னைமரம்
மகாமகவிருட்சம் - கற்பகவிருட்சம்
மகாமேதைச்செடி - மருளுமத்தைச்செடி
மகாரசிதகாரம் - மிளகு
மகாரசிதமரம் - மாமரம்
மகாரவுப்பு - கல்லுப்பு
மகாவலிமரம் - வில்வமரம்
மகாவியவீழிமரம் - விருசுமரம்
மகாவிருத்தக்கள்ளி - சதுரக் கள்ளி
மகாவினிதச் செடி - பேராமுட்டிச்செடி
சித்த வைத்திய அகராதி 10751 - 10800 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal