சித்த வைத்திய அகராதி 10151 - 10200 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10151 - 10200 மூலிகைச் சரக்குகள்


புனற்காலிமரம் - பாதிரிமரம்
புனற்பாகம் - சுடுகஞ்சித்தண்ணீர்
புனற்பீலிகக்கொடி - சீயக்காய்க் கொடி
புனற்றண்டுக் கொடி - இண்டங்கொடி
புநூகு - புழுகு
புன்காலிமரம் - பாதிரிமரம்
புன்காவிக்கொட்டை - சாம்பிராவிதை
புன்கிரந்திச் செடி - கிரந்திநாயகச் செடி
புன்குமரம் - புங்கமரம்
புன்குரிப்பட்டை - புங்கம்பட்டை
புன்னறிவக்கொடி - சாரணைக்கொடி
புன்னாகிதம் - கடுகு
புன்னாசக்கீரை - கோழிக்கீரை
புன்னாசப்பட்டை - உதியம்பட்டை
புன்னாசமரம் - புன்னைமரம்
புன்னாசியமரம் - தானிக்காய்மரம்
புன்னியடாகிச்செடி - தகரைச்செடி
புன்னீர் - உதிரம்
புன்னைமரம் - சுரபுன்னைமரம்
புஷ்டி - வண்டல், அழுக்கு
பூககம்பச்செடி - நிலக்கடம்புச்செடி
பூகதியவரைக்கொடி - தம்பட்டையவரைக் கொடி
பூகமரம் - கூந்தற்பனைமரம்
பூகமாதிதமரம் - தமரத்தைமரம்
பூகரச்செடி - கையான் தகரைச்செடி
பூகரம் - நஞ்சு
பூங்கரும்புத் தட்டை - செங்கரும்புத் தட்டை
பூங்காரமரம் - காரைமரம்
பூங்காரைச்செடி - காரைச்செடி
பூங்காவி - செங்காவி
பூசிணிக்கொடி - பறங்கிக்கொடி
பூசிதயமரம் - கருந்துவரைமரம்
பூச்சாறு - பூநீறு
பூச்சிலக்கொன்னை - செம்மயிற்கொன்னை
பூஞ்சாந்துப்பட்டை - அபிற்சாந்துப்பட்டை
பூஞ்சாரிச்செடி - தைவேளைச் செடி
பூஞ்சிட்டி - மஞ்சிட்டி
பூட்கரம் - கோஷ்டம்
பூட்காரப்பட்டை - அக்காரப்பட்டை
பூட்பசீரம் - கருஞ்சீரகம்
பூதகாப்பான் மரம் - பூநாறிமரம்
பூதகிமரம் - அத்திமரம்
பூதகுமாஞ்சில் - சடாமாஞ்சில்
பூதகேசரமரம் - தமரத்தைமரம்
பூதகேசரிகா மரம் - வெட்பாலை மரம்
பூதகேசிகப்புல் - தரகம்புல்
பூதத்திகாமரம் - காஞ்சிரைமரம்
பூதத்திமரம் - காட்டத்தி மரம்
பூதத்துணர்மரம் - புனல்முருங்கைமரம்
பூதநாசன் மரம் - சேங்கொட்டைமரம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal