சித்த வைத்திய அகராதி 11951 - 12000 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11951 - 12000 மூலிகைச் சரக்குகள்


ராக்கசிச்சோளம் - கருஞ்சோளம்
ராங்குசம் - திரிகடுகு
ராசானிமரம் - எலுமிச்சைமரம்
ராசகாமியப்பூ - ரோஜாப்பூ
ராசசப்பூடு - வெங்காயப்பூடு
ராசவிருட்சம் - அரசமரம்
ரிசியாக்கொடி - பூனைக்காலிகொடி
ரிபுஞ்சகச்செடி - அந்திமல்லிகைச் செடி
ருக்குமச்செடி - பொன்னாவரைச் செடி
ருதந்திச்செடி - அழுகண்ணிசெடி
ருத்திரகோப மரம் - மருதோன்றிமரம்
ருத்திரசடைச்செடி - திருநீற்றுப்பச்சைச் செடி
ருத்திரபுட்பிச் செடி - செம்பருத்திச்செடி
ருத்திராட்சம் - உருத்திராக்கம்
ரூச்சிமல்லிகைக் கொடி - காட்டுமல்லிகைக் கொடி
ரூபி - இந்திரகோபப்பூச்சி
ரூமமஸ்தகிச்செடி - சீனச்செடி
ரேசித்தல் - வாசியையிழுத்துவிழுங்குதல்
ரேசிவள்ளிக்கொடி - ஆள்வள்ளிக கொடி
ரேசினிதிப்பிலி - யானைத் திப்பிலி
ரேவல்சின்னிக் கிழங்கு - பேதிக்கிழங்கு
ரைவதக்கொடி - அல்லிக்கொடி
ரைவதாகுறண்டி - பாற்குறண்டிச் செடி
ரொம்முகாக்குவளை - செங்குவளைகொடி
ரோகணி - கடுகுரோகணி
ரோசனம் - ஈயங்கொல்லி
ரோஜாப்பூ - சிற்றாமரைப்பூ
ரோஜாவலரிச்செடி - கஷ்தூரியலரிச்செடி
ரோசுக்கீரைத் தண்டு - கறிக்கீரைத்தண்டு
ரோசுத்துளசி - சிவப்புத்துளசி
ரோசுப்பொன்னாங்கண்ணி - சிவப்புப்பொன்னாங்கண்ணிச்செடி
ரோசுமுள்ளிக்கீரை - கறிமுள்ளிக்கீரை
ரோமமாணிக்கங்கொடி - மயிர்மாணிக்கங்கொடி
ரோமவிருட்சம் - உரோமவிருட்சம்
ரோமவேங்கைமரம் - சிகைவேங்கைமரம்
ரௌகாகுவளைக்கொடி - கருங்குவளைக் கொடி
ரௌகாவரசு - புண்ணியவரசு மரம்
லட்சகட்டைமரம் - இலட்சை கெட்டமரம்
லண்டன்பருத்தி - இலண்டன்பருத்தி
லம்பர்க்கொடி - பேய்ச்சுரைக்கொடி
லவங்கச்சாரம் - லவங்கத்திராவகம்
லவங்கப்பட்டை - சன்னலவங்கப்பட்டை
லவங்கப்பத்திரி - கிராம்புப்பத்திரி
லவங்கப்பூ - கிராம்பு
லவங்கப்பூரிதம் - கிராம்பு, சாதிப்பத்திரி
லவங்கமரம் - கிராம்புமரம்
லவணம் - உப்ப
லாகியாவாழை - கல்வாழை
லாகிரிப்பத்திரி - சாதிப்பத்திரி
லாக்கியவீரம் - கொச்சிவீரம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal