சித்த வைத்திய அகராதி 10701 - 10750 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10701 - 10750 மூலிகைச் சரக்குகள்


பொற்புரவிகச்செடி - பொன்னூமத்தைச்செடி
பொற்றலைப்பரணிச் செடி - சிற்றாமல்லிச்செடி
பொற்றாமரைக் கொடி - செந்தாமரைக்கொடி
பொற்றேவதாரிமரம் - மஞ்சட்தேவதாரிமரம்
பொன்தாழை - மஞ்சட்தாழை மரம்
பொன்தூரிகமரம் - மஞ்சணத்தி மரம்
பொன்முசுட்டை - மலைதாங்கிக் கொடி
பொன்மெழுகு - மஞ்சள்மெழுகு
பொன்னந்தி மல்லிகை - மஞ்சளந்திமல்லிகைச் செடி
பொன்னம்பலவிருட்சம் - தில்லைவிருட்சம்
பொன்னலரி - மஞ்சளாளிமரம்
பொன்னலாரிப்பூ - மதனகாமப்பூ
பொன்னாங்கண்ணி - கொடுப்பைச்செடி
பொன்னாங்காலிச்செடி - மஞ்சட்கரிப்பான் செடி
பொன்னாங்கொட்டை - பூவந்திக் கொட்டை
பொன்னாமிக்கொன்னை - மஞ்சட்கொன்னை மரம்
பொன்னாம்பழம் - நெங்க்கொட்டான் பழம்
பொன்னாம்பு - ஆவரஞ்செடி
பொன்னாவரை - பீத்ததாவரை
பொன்னிமிளை - தங்கநிமிளை
பொன்னிறவெற்றிலை - மஞ்சள் வெற்றிலை
பொன்னுருக்குங் காரம் - பொரிகாரம்
பொன்னூமத்தைச்செடி - மருளுமத்தைச்செடி
போகக்களஞ்சி - பாவை, பெண்
போகித்தும்பை - காசித்தும்பைச் செடி
போகிகதூரிதச்செடி - மணத்தக்காளிச்செடி
போகிவல்லியம் - சந்தனம்
போகிவாசமரம் - சந்தனமரம்
போசகிமரம் - அகத்திமரம்
போசரோகணி - கடுகுரோகணி
போசனகஸ்தூரி - நாரத்தம்பிஞ்சு
போசனகுரடாச்செடி - மிளகாய்ச் செடி
போஸ்துக்காய்ச் செடி - கசகசாச்செடி
போடசெமிக்கி - வயிறு
போடோபில்லிச்செடி - சீனத்துச்செடி
போதகாவண்டம் - பேரண்டம், தலையோடு
போதகிக்கொடி - பசளைக்கொடி
போதாகாசிகம் - மட்டிச் சாம்பிராணி
போதகாமரம் - காஞ்சிரைமரம்
போதகிமரம் - வேங்கைமரம்
போதகிராந்திச்செடி - விஷ்ணுகரந்தைச்செடி
போதயக்கடலை - பட்டாணிக்கடலை
போதனமூலி - பாதாளமூலி
போதிமமரம் - அரசமரம்
போதுளிமரம் - வெண்கடம்பு மரம்
போதைக்கஞ்சா - சடைக்கஞ்சா
போதைக் காஞ்சனமணி - மண்சாடிக்குண்டுமணி
போதைப்பத்திரி - சாதிப்பத்திரி
போதைப்புல் - காவட்டம்புல்
போதையூமத்தைச்செடி - மருளுமத்தைச்செடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal