சித்த வைத்திய அகராதி 11001 - 11050 மூலிகைச் சரக்குகள்
மதுரமரம் - முந்திரிமரம்
மதுரம் - அதிமதுரம்
மதுரரசமரம் - பனைமரம்
மதுரவள்ளிக்கிழங்கு - சருக்கரைவள்ளிக்கிழங்கு
மதுரவேர் - அதிமதுரம்
மதூகமரம் - இலுப்பைமரம்
மதூகமலர் - இலுப்பைப்பூ
மதூலிகம் - அதிமதுரம்
மதூலிகாமரம் - மாமரம்
மதூலிகாரிகம் - தேன்பாக
மத்தகஜக்கொடி - கட்டுக்கொடி
மத்தங்காய்ப்புல் - மத்தம்புல்
மத்தங்கோரைப்புல் - பாய்க்கோரைப்புல்
மத்தச்செடி - ஊமத்தைச்செடி
மத்தப்புடற்கொடி - பன்றிப்புடற்கொடி
மத்தமேதிகமரம் - பலாவீழிமரம்
மத்தனிகாச்செடி - மருக்காரைச்செடி
மத்தனிகாச்செடி - மருக்காரைச்செடி
மத்தாகிக் கூடு - தேன்மெழுகு
மத்தாகிதம் - தேன்
மத்தாடிச்செடி - கருவூமத்தைச்செடி
மத்திகப்பூ - சிறுநாகப்பூ
மத்திகாமரம் - பருத்திமரம்
மத்திபகந்தமரம் - மாமரம்
மத்திமகூர்மை - திலாலவணம்
மந்தாரகமரம் - மந்தாரைமரம்
மந்தாரமஞ்சிகம் - சூதபாஷாணம்
மந்தாரிகமரம் - முள்முருங்கைமரம்
மந்தாரை மரம் - செம்மந் தாரைமரம்
மந்திஷ்டி - மஞசிஷ்டி
மந்திராய்ப்பூடு - கச்சந்திராய்ப்பூடு
மந்திரினி - கருமானம்
மந்திரினிமை - கருமானமை
மந்தைப்பெருச்சாளி - தூதுவளைக்கொடி
மந்தைவாசிவேர் - கருஞ்சிவதை வேர்
மமதையடக்குமூலி - கருந்தேன், பெண்மூலம்
மமதையுண்டாக்கு மூலி - வெள்ளைத்தேன், ஆண்மூலம்
மம்மத்திரிச்செடி - சிற்றாமுட்டிச்செடி
மம்மாதகிச்செடி - தேட்கொடுக்குச்செடி
மம்மாதிகம் - மாங்கிஷபேதி
மயானப்பூடு - அஸ்தி, எலும்பு
மயிடவிருட்சம் - எருமைவிருட்சம்
மயிர்மாணிக்கங்கொடி - அழகுக்கொடி
மயிலடிக்குருந்து - நூலாங்குருந்துமரம்
மயிலமேனிச்செடி - குப்பைமேனிச்செடி
மயிலாசகச்செடி - தொழுகண்ணிச்செடி
மயிலாடுக்குருந்து - மயிலாடிக்குருந்து
மயிலாத்திக் கொடி - இலாமிச்சைவேர்
மயிலியச்செடி - செம்பருத்திசெடி
மயிலைச்செடி - இருவாட்சிச்செடி
சித்த வைத்திய அகராதி 11001 - 11050 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal