சித்த வைத்திய அகராதி 12051 - 12100 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 12051 - 12100 மூலிகைச் சரக்குகள்


வசந்ததரு - மாமரம்
வசம்பு - வசரக்கொடி
வசம்புகாக் கொடி - மலைவள்ளிக் கொடி
வசலிகாச்செடி - மல்லிகைச்செடி
வசலைக்கீரை - பசலைக்கீரை
வசனக்கொடி - தாமரைக்கொடி
வசிகரப்பூடு - வெள்ளைப்பூடு
வசிகரமருவு - மருவுச்செடி
வசிகரிச்செடி - காரௌளுச்செடி
வசிதம் - மிளகு
வசிரத்திப்பிலி - யானைத்திப்பிலி
வசிவாசிப்பூ - மீனைப்பூ
வசினிமரம் - வன்னிமரம்
வசுவாசிமரம் - மீனைமரம்
வச்சகம் - மலைமல்லிகைக்கொடி
வச்சதாகச்செடி - கருஞ்கொள்ளுச்செடி
வச்சினிக்கொம்பு - மஞ்சட்கொம்பு
வச்சினிச்சேம்பு - களற்சேம்புச் செடி
வச்சாதனிக்கொடி - சீந்திற்கொடி
வச்சிதண்ணீர் - இரத்தம் - உதிரம்
வச்சிரசலக்கிழங்கு - கோரைக்கிழங்கு
வச்சிரசீதக்கொடி - பேய்ச்சீந்திற்கொடி
வச்சிரநிம்பமரம் - கருவேம்பு மரம்
வச்சிரவீசகமரம் - கொடிப்புங்கு மரம்
வச்சிரபீசக்காய் - கழற்சிக்காய்
வச்சிரப்பால் - எருக்கம்பால், பிரண்டைச்சார்
வச்சிரப்பீலிகம் - வச்சிரம்
வச்சிரமூலி - பிரண்டை, எருக்கு
வச்சிரமேதிப்பால் - எருமைப்பால்
வச்சிரம் - சதுரக்கள்ளி, பிரண்டை எருக்குவச்சிரப்பீலீகம்
வச்சிரவல்லிக்கொடி - பிரண்டைக்கொடி
வச்சிரவிருக்கம் - புல்லுருவி
வச்சிரவேங்கை - மணிமுத்துவேங்கைமரம்
வச்சிராங்கதப்புஷ்பம் - எள்ளுப்பூ
வச்சிராங்கம் - சதுரக்கள்ளி
வச்சிராங்கிக் கொடி - மூக்குத்திக்காய்க் கொடி
வச்சிராங்கிப்பால - சதுரக்கள்ளிப்பால்
வச்சிராஞ்சிக்கொடி - பிரண்டைக்கொடி
வச்சிராயிலை - பிறவொட்டியிலை
வஞ்சிக்கொடி - குளவஞ்சிக்கொடி
வஞ்சிப்பால் - முலைப்பால்
வஞ்சிமரம் - சுவேதவஞ்சிமரம்
வஞ்சிமாலிக்கொடி - கொத்தான்க்கொடி
வஞ்சரிமரம் - விருசுமரம்
வஞ்சிராச்செடி - கொடுவேலிச்செடி
வஞ்சளமரம் - வேங்கைமரம்
வஞ்சூலிகச்செடி - சூரத்தாவரைச் செடி
வடகாதியமரம் - ஆலமரம்
வடகீலியச்செடி - சூரஞ்செடி
வடங்கன் - வெங்காயம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal