சித்த வைத்திய அகராதி 11451 - 11500 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11451 - 11500 மூலிகைச் சரக்குகள்


மிறுதுபலாமரம் - நெல்லிமரம்
மிறுதுபலிகச்சீரகம் - பெருசீரகம்
மிறுதுபுட்பமரம் - வாகைமரம்
மிறுதுபூகக் குரும்பை - பெருங்குரும்பை
மிறுத்தாரிக்கற்றாழை - பெருங்கற்றாழை
மிறுத்தாலகமரம் - துவரைமரம்
மிறுத்தாவிக மரம் - பெருநாரத்தை மரம்
மிறுத்திகமரம் - குந்திரிமரம்
மிறுந்திகாமரம் - நெல்லிமரம்
மின்னிப்பயறு - காட்டுப்பயறு
மின்னொளியுப்பு - பூநீருப்பு
மீகைச்செடி - புலிதொடக்கிச் செடி
மீக்குகப்பருத்தி - பெரும் பருத்திச்செடி
மீக்குவமரம் - மருதுமரம்
மீச்சிதப்பாளை - வெள்ளாவிப் பாளை
மீதிகிச்செடி - கருஞ்சூரைச் செடி
மீதிராப்பட்டை - பெருலவங்கப்பட்டை
மீதிரைச்செடி - சூரஞ்செடி
மீதீந்தரத்தை - பேரரத்தை
மீதுந்துமரம் - நெல்லிமரம்
மீதுரைமூலம் - கஸ்தூரிமஞ்சள்
மீலனஞ்செடி - தொட்டாற்சிணுங்கிச் செடி
மீனாட்சிச்செடி - பொன்னாங்கண்ணிச் செடி
மீனாட்சிமைந்தன் - வீரவாஷாணம்
மீனார்ச்சிகச்செடி - மீன்கொல்லிச்செடி
மீனைமரம் - வசுவாசிமரம்
மீன்கொல்லிச்செடி - மச்சங்கொல்லிச் செடி
மீன்சிலாம்பு - கனைவாய்மீன் ஓடு (கடல் நுரை)
முகசோதிமரம் - எலுமிச்சை மரம்
முகந்திகாமரம் - முருங்கைமரம்
முகரிமரம் - தாழைமரம்
முகரேயக்கோவை - அப்பைக்கோவை
முகிழ்விரியாக்கத்திரி - கத்திரிப்பிஞ்சு
முகிளாகாக்கடலை - பொறிகடலை, சிறுகடலை
முகினிமரம் - புளியமரம்
முகுடப்பூண்டு - கோபுரப்பூண்டு
முக்கடுகு - சுக்கு, மிளகு, திப்பிலி
முக்கட்பிரான்செடி - சிவதுளசிச் செடி
முக்கண்ணன்காய் - தேங்காய்
முக்கண்ணன்பூ - தேங்காய்ப்பூ
முக்கண்ணிளையோன் - இளநீர்
முக்கண்பால் - தேங்காய்ப்பால்
முக்கரவேளை - முட்காவேளை
முக்கீரச்செடி - தைவயலிச்செடி
முக்குளிக்காரை - சதக்காரை
முக்குளிக்கீரை - பிண்ணாக்குக் கீரை
முக்குளிச்செடி - கோழிமுழையான்
முக்குறட்டைச் செடி - பூனைமுட்குறட்டை
முக்கூட்டுநெய் - மூன்று கூட்டு நெய்
முக்கோதலமரம் - தோதகத்திமரம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal