சித்த வைத்திய அகராதி 11151 - 11200 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11151 - 11200 மூலிகைச் சரக்குகள்


மருவாளிப்பூரம் - பச்சைக்கற்பூரம்
மருவுகாக்கொடி - புடற்கொடி
மருவுச்செடி - கமழ்மருவுச்செடி
மருவேகநீர் - புனற்பாகநீர்
மருவேம்பு - கறிவேம்புமரம்
மருளுமத்தைச்செடி - பேயூமத்தைச்செடி
மருளுவிகச்செடி - பேய்ப்பாக்குச் செடி
மருள் - மருட்கிழங்குக் கற்றாழை
மரைக்குளிரி - குளிரிச்செடி
மரைக்கொடி - தாமரைக் கொடி
மரைப்பூ - தாமரைப்பூ
மர்க்கடிக்கொடி - பூனைக்காலிக்கொடி
மர்க்கடிப்புனுகு - பூனைப்புனுகு
மர்க்கரச்செடி - கையான் தகரைச்செடி
மர்மவேதிமரம் - கல்லுசில்மரம்
மலாக்காசாம்பிராணி - பாற்சாம்பிராணி
மலாசுச்செடி - சிறுபூளைச்செடி
மலரமட்டிமரம் - இலுப்பைமரம்
மலைக்கட்டுக்கொடி - பெருங்கட்டுக்கொடி
மலைக்காக்கணத்திக் கொடி - காக்கணத்திக்கொடி
மலைக்காவகிச் செடி - பெருங்காகோளிச்செடி
மலைக்காளான் - பெருங்காளான்
மலைக்குண்டுமணிவேர் - அதிமதுரம்
மலைக்குறிஞ்சாச்செடி - பெருங்குறிஞ்சாச்செடி
மலைச்சுண்டை - வரைச்சுண்டை
மலைச்சூலிமரம் - பெருஞ்சூலிமரம்
மலைச்செந்தொட்டி - பெருஞ்செந்தொட்டி
மலைச்சேவிதக்கொடி - பெருமருந்துக் கொடி
மலைதாங்கிவேர் - கிரிதாங்கிவேர்
மலைத்தாரிகச்செடி - பெருஞ்செந்தொட்டிச் செடி
மலைத்துத்திமரம் - துத்திமரம்
மலைத்தும்பை மரம் - வரைத்தும்பை மரம்
மலைத்துவரை மரம் - வரைத்துவரை மரம்
மலைத்துவிகமரம் - பெருநாங்கில் மரம்
மலைத்துளசி - கற்றுளசி
மலைத்தூவிதக்கொன்னை - பெருங்கொன்னை மரம்
மலைத்தேனு - கொம்புத்தேன்
மலைநாதம் - கல்மதம்
மலைநாரத்தை - கிடாநாரத்தை மரம்
மலைநார் - கல்நார்
மலைநெல் - பேய்நெல்
மலைநெல்லரிசி - பெரியமட்டையரிசி
மலைநெல்லி - பெருநெல்லிமரம்
மலைநொச்சிமரம் - பச்சாளைமரம்
மலைப்பகாமுன்னை - பெருமுன்னை மரம்
மலைப்பச்சை - திரவியப்பச்சை
மலைப்பரிதிமரம் - எருக்கலைமரம்
மலைப்பருத்தி மரம் - வரைப்பருத்தி மரம்
மலைப்பாசி - கற்பாசி
மலைப்பாசிச்சத்து - கற்பூரசலாசத்து

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal