சித்த வைத்திய அகராதி 11901 - 11950 மூலிகைச் சரக்குகள்
யீரவெங்காயம் - வெங்காயம்
யுகபத்திரிகை மரம் - அசோகுமரம்
யுகம்பாதிகமரம் - நெட்டிலிங்குமரம்
யுகவத்திரகமரம் - காட்டாத்திமரம்
யுகினிமரம் - புளியமரம்
யுத்திராப்பரிச்செடி - குதிரைக்குளம்படிச்செடி
யுத்தேயப்பூண்டு - குதிரைவாலிப்பூண்டு
யூதிகக்கொடி - காட்டுமல்லிகைக்கொடி
யூதிதாப்பாலை - வெப்பாலைமரம்
யூதிரச்செடி - முல்லைச்செடி
யூபசிமரம் - மலையாத்திமரம்
யூபம் - ஓமம்
யூவாப்பூ - சிறுநாகப்பூ
யெருமைக் கற்றாழை - கருங்கற்றாழை
யெருமைத்தக்காளி - பெருந்தக்காளிச்செடி
யெருமைப்புடோல் - பன்றிப்புடல்
யெவானிச்செடி - அசமதாகச்செடி
யோகசங்கப்பூ - சிறுநாகப்பூ
யோகசச்செடி - கொழுஞ்சிசெடி
யோகதீட்சைநீர் - கங்கைநீர்
யோகதூமச்செடி - செங்களாச்செடி
யோகநாலிக்கற்றாழை - செங்கற்றாழை
யோனிகாரம் - படிகாரம்
ரகதச்செடி - துத்திச்செடி
ரசகக்கொடி - பீர்க்குக்கொடி
ரசகம் - துத்தநாகம்
ரசகற்பூரம் - சூதகற்பூரம்
ரசபதங்கம் - வாலைரசம்
ரசபலமரம் - தெங்குமரம்
ரசிதம் - வெள்ளி
ரசுணப்பூண்டு - உள்ளிப்பூடு
ரணகாலிக்கொடி - பூனைக்காலிக் கொடி
ரணநாயகச்செடி - சதையொட்டிச்செடி
ரதிவீடு - பெண்குறி
ரத்தகற்பாசச்செடி - செம்பருத்திச்செடி
ரத்தக்கோவைக் கொடி - கோவைக்கொடி
ரத்தபாகமரம் - தேக்குமரம்
ரத்தபோளம் - இரத்தபோளம்
ரத்திராக்கீரை - அரைக்கீரை
ரஸ்தாளிக்கரும்பு - செங்கரும்புத் தட்டை
ரஸ்தாளிப்பழம் - உருசைதரும்பழம்
ரஸ்தாளிவாழை - இனிப்புவாழை
ரததிச்செடி - இலந்தைச்செடி
ரத்திராச்செடி - செந்தொட்டிச்செடி
ரப்பர்செடி - பால்ரப்பர்செடி
ரம்பைச்செடி - கெளரியச்சஞ்செடி
ரவி - சூரியன்
ரவிகதிக்கொடி - கேந்திரவல்லிக் கொடி
ரவிபுடம் - சூரியபுடம்
ரவிபாவிருட்சம் - சாயாவிருட்சம்
சித்த வைத்திய அகராதி 11901 - 11950 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal