சித்த வைத்திய அகராதி 10801 - 10850 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10801 - 10850 மூலிகைச் சரக்குகள்


மகாவின்பால் - ஆவின்பால்
மகிழம்பூமரம் - மகிழமரம்
மகிளிக்கீரை - மயிலிக்கீரை
மகீசனிச்செடி - ஐந்திலை நொச்சிச்செடி
மகோற்பலக்கொடி - தாமரைக் கொடி
மக்கிகாச்செடி - எருக்குச்செடி
மக்கிசாப்புகையிலை - நாசிப்பொடிப் புகையிலை
மக்கிச்செடி - சீனச்செடி
மக்குலிப்பூடு - ஒருதலை வெள்ளைப்பூடு
மங்கலகரப்புல் - அறுகம்புல்
மங்கலப்பயிர் - நெற்பயிர்
மங்கலவீரியக்கொடி - ஓடாங்கொடி
மங்கலாகரக்கொடி - நெடும் புடற்கொடி
மசுக்காமரம் - மூங்கில்மரம்
மசுக்ககாவிப்பாகற் கொடி - மிதிபாகற் கொடி
மசூரப்பூச்சி - மூட்டைப்பூச்சி
மச்சங்கொல்லிச்செடி - புகையிலைச் செடி
மச்சிக்கண்ணிச்செடி - பொன்னாங்கண்ணிச்செடி
மச்சிக்கொடி - பூனைக்காலிக் கொடி
மச்சியக்காய் - மிதுக்கங்காய்
மச்சியரோகணி - கடுகுரோகணி
மச்சியாகிதச்செடி - பொற்றலைக்கரிப்பான்செடி
மச்சியாங்கணிச் செடி - பொன்னாங்கண்ணிச் செடி
மக்சினேயப்புல் - கம்பம்புல்
மஞ்சட்கடம்பு - பொன்கடம்பு
மஞ்சட்கடாகக்கொடி - பொன்முசுட்டைக்கொடி
மஞ்சட்கடுக்காய் - வரிக்கடுக்காய்
மஞ்சட் கரிப்பான் -பொற்றலைக் கரிப்பான்
மஞ்சட்கனிச்சிமரம் - காஞ்சிரைமரம்
மஞ்சட்காசித்தும்பை - பொன்காசித்தும்பைச் செடி
மஞ்சட்காளான் - புற்றுக்காளான்
மஞ்சட்கிரிகமணி - பொற்குண்டுமணி
மஞ்சட்கிலுகிலுப்பை - பெருங்கிலுகிலுப்பைச்செடி
மஞ்சட் கிவேதகம் - பொற்றலைக்கரிப்பான்
மஞ்சட்கிழங்கு - குளிக்கு மஞ்சள்
மஞ்சட்குச்சி - மரமஞ்சள்
மஞ்சட்குண்டுமணி - பொற்குண்டுமணி
மஞ்சட்கூவாளி - மஞ்சளரளிமரம்
மஞ்சட்கொன்னை மரம் - கொன்றைமரம்
மஞ்சட்கோகினிப்பூ - மதனகாமப்பூ
மஞ்சட்கோங்கு மரம் - சடைக்கோங்குமரம்
மஞ்சட்சாரியிலை - மஞ்சள் வெற்றிலை
மஞ்சட்சித்தகத்தி மரம் - மஞ்சட்செம்பை மரம்
மஞ்சட்சித்தரப்பூ - செவ்வந்திப்பூ
மஞ்சட்சின்னி - பரிசின்னி
மஞ்சட்சீரிதப் பூ - மனோரஞ்சிதம்
மஞ்சட்செடி - விரலிமஞ்சட் செடி
மஞ்சட்செண்டரளிமரம் - மலையரளிமரம்
மஞ்சட்செவிகா வேம்பு - மதகிரி வேம்பு
மஞ்சட்செவ்வந்தி - செவ்வந்தி , சாமந்திப்பூ

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal