சித்த வைத்திய தொகையகராதி 1151 - 1200 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 1151 - 1200 மூலிகைச் சரக்குகள்


வெடியுப்புக்கு மித்துரு

காரியம்
சவுடு
சூடன்
வெள்ளீயம்
துருசு
வெள்ளி
இரும்பு
காந்தம்
வர்த்தம்
மனோசிலை
தொட்டிப்பாஷாணம்
கெந்தி
மிர்தார்சிங்கி
தீமுருகற்பாஷாணம்
அண்டோடு
சுரகெந்தி
பொட்டலை           ஆக 17

வெண்காரத்தின் சத்துரு

சிலாசித்து
கம்பளி
அண்டம்
சூடன்             ஆக 4

மற்றதெல்லாம் மித்துரு.

சீனத்திற்குமிதுவே சத்துரு மித்துருக்களாம்.

வெள்வங்க மித்துரு

காரியம்
சூதம்
துத்தம்             ஆக 3

மற்றதெல்லாம் சத்துரு.

சந்தனமரவகை

சந்தனமரம்
செஞ்சந்தனமரம்
அரிசந்தனமரம்
சிறுசந்தனமரம்           ஆக 4

சந்தனவகை


வெண்சந்தனம்
செஞ்சந்தனம்           ஆக 2

சம்பங்கிவகை


கொடிச்சம்பங்கி
நிலச்சம்பங்கி
அகச்சம்பங்கி           ஆக 3

சருக்கரைவகை

நாட்டுச்சருக்கரை
சீனிச்சருக்கரை    
அஷ்டகிராம்சருக்கரை
சீந்திற்சருக்கரை           ஆக 4

சவுக்குமரம்
சற்பாச்சிச்செடி 

சா

சாதம்வகை


பாற்சாதம்
மோர்ச்சாதம்
தயிற்சாதம்
நெய்ச்சாதம்
பருப்புச்சாதம்
அறுசுவைச்சாதம்          ஆக 6

சாமைத்தட்டைவகை

சிறுசாமை
பெருஞ்சாமை           ஆக 2

சாம்பிராணிவகை


மட்டிச்சாம்பிராணி
பாற்சாம்பிராணி
மலாக்காய்ச்சாம்பிராணி       ஆக 3

சாயாமரம்

சித்த வைத்திய தொகையகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya thogaiyagarathi, mooligai sarakkukal, siththarkal