சித்த வைத்திய அகராதி 11351 - 11400 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11351 - 11400 மூலிகைச் சரக்குகள்


மாமுனிகிச்செடி - நாயுருவிச்செடி
மாம்பழம் - மாவின்பழம்
மாயகாவிரை - வெள்ளரிவிரை
மாயோன்விந்து - வெள்ளி
மாய்கைமரம் - ஆச்சாமரம்
மாரண்டம் - பாம்புமுட்டை
மாரம் - கோடகசாலை
மாரனிடுக்கி - போகம், சேருதல்
மார்க்கசிச்செடி - கையாந்தகரைச்செடி
மார்ச்சாலம் - பூனை
மார்த்தாண்டச்செடி - எருச்கஞ்செடி
மாலதிமரம் - சிறுசெண்பகமரம்
மாலதீயமரம் - பேரிஞ்சமரம்
மாலமரம் - குங்குமமரம்
மாலயக்கொடி - மிளகுசாரணைக்கொடி
மாலுகமரம் - வேப்பமரம்
மாலூகமரம் - பொந்தம்புளி மரம்
மாலூங்கச்செடி - புளிமாதுளைச்செடி
மாலூரமரம் - வில்வமரம்
மாலூர்திக்கொடி - கருடன்கிழங்குக்கொடி
மாலையம்பூமரம் - உதிர்பன்னீர் மரம்
மால்கரந்தைச்செடி - விஷ்ணுகரந்தைச்செடி
மால்கொடைத்துளசி - செந்துளசிச் செடி
மால்சந்தனமரம் - அரிசந்தனமரம்
மால்தாயக்கிழங்கு - கருநெய்தற்கிழங்கு
மால்துயில்விருட்சம் - ஆலமரம்
மால்தேவி - அரிதாரம்
மால்பரிதி - சரிரக்கொழுப்பு
மாவகமரம் - இலுப்பைமரம்
மாவச்சமரம் - அச்சமரம்
மாவச்சிரமரம் - குங்குமமரம்
மரவள்ளிக்கிழங்கு - ஆள்வள்ளிக் கிழங்கு
மாவிதை - மாம்பருப்பு
மாவிலிமரம் - மாவுலிங்கமரம்
மாவிளமரம் - விலவமரம்
மாவின்காய் - மாங்காய்
மாவுலாதிகச்செடி - பொற்றலைக்கரிப்பான் செடி
மாவுலிங்கமரம் - பூந்தாதுமரம்
மானிகை - சாராயம்
மான்செவிக்கள்ளி - மான்காதுக்கள்ளிச்செடி
மான்சேவிகம் - கஸ்தூரி
மான்நாச்செடி - சீனச்செடி
மான்நாவிக்கிழங்கு - கலப்பைக் கிழங்கு
மான்முதமூரி - கஸ்தூரி
மான்மாதவச்செடி - மான்குளம்படிச்செடி
மிகுண்டக்கொடி - சாரணைக்கொடி
மிகுண்டாகிதம் - பெரும்பூனைக் காலிக்கொடி
மிகுத்திகாமரம் - வில்வமரம்
மிகுற்திராமூங்கில் - பெருமூங்கில் மரம்
மிகுந்திகிக்கிழங்கு - தண்ணீர்விட்டான் கிழங்கு

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal